என் மலர்
இது புதுசு
ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராஸ்ஸ், புதிய கோஸ்ட் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. 2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
எனினும், புதிய காரில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அதிகபட்ச சவுகரியத்தை வழங்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக கோஸ்ட் மாடல் 2009 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பின் 11 ஆண்டுகள் கழித்து கோஸ்ட் மாடல் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.

புதிய கோஸ்ட் மாடலில் முற்றிலும் புது என்ஜின், மேம்பட்ட சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. புதிய கோஸ்ட் மாடல் விலை ரூ. 6.95 கோடி, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடலில் 6.75 லிட்டர் ட்வின் டர்போ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 563 பிஹெச்பி பவர், 850 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மேம்பட்ட 4 வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் எக்ஸ்எம் (எஸ்) வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய நெக்சான் வேரியண்ட் விலை ரூ. 8.36 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் பெட்ரோல் எம்டி / ஏஎம்டி, டீசல் எம்டி / ஏஎம்டி என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது.

புதிய காரில் எக்ஸ்எம் வேரியண்ட்டில் உள்ள அம்சங்களுடன் கூடுதலாக எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப், ரெயின் சென்சிங் வைப்பர்கள் மற்றும் ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
பாதுகாப்பிற்கு டாடா நெக்சான் மாடலின் முன்புறம் இரண்டு ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி உள்ளிட்டவை வழங்ககப்பட்டு இருக்கின்றன. புதிய டாடா நெக்சான் எக்ஸ்எம் (எஸ்) டாப் எண்ட் மாடலான டீசல் ஏஎம்டி வெர்ஷன் விலை ரூ. 10.30 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய நெக்சான் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தைக்கென புதிய நெக்சான் எஸ்யிவி மாடல் டீசரை வெளியிட்டுள்ளது. டீசர்களில் நெக்சான் எஸ்யுவி மட்டும் காணப்படுகிறது. இத்துடன் இன்னும் இரு நாட்களில் அடுத்த கட்டத்திற்கு தயாராகுங்கள் எனும் வாசகம் இடம்பெற்று இருக்கின்றன.
அந்த வகையில் டாடா நெக்சான் புது அப்டேட் பெற இருப்பதும், விரைவில் இது அறிமுகமாகும் என்பதும் உறுதியாகி இருக்கிறது. புது அப்டேட் பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. எனினும், புதிய நெக்சான் மாடல் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இது உண்மையாகும் பட்சத்தில் புதிய டிரான்ஸ்மிஷன் யூனிட் பெறும் முதல் வாகனமாக டாடா நெக்சான் இருக்கும். இத்துடன் டாடா நெக்சான் புது வேரியண்ட் செப்டம்பர் 2 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
புதிய நெக்சான் டிசிடி வேரியண்ட் இந்திய சந்தையில் அதிக விற்பனையை ஈட்டிக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பிரிவில் மற்ற நிறுவனங்களின் போட்டி மாடல்களை எதிர்கொள்ள வழிசெய்யும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையின் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் டாடா நெக்சான் அதிக பிரபலமான மாடலாக இருக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட் மாடல் காரில் புதுவித டேஷ்போர்டு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட் மாடல் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் புதிய கார் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் இந்த கார் டேஷ்போர்டு விவரங்கள் வெளியாகி உள்ளன.
புதிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடலில் இலுமினேட் செய்யப்பட்ட டேஷ்போர்டு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது பியூரிட்டியை தழுவி போஸ்ட்- ஒபுலன்ட் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது 152 எல்இடிக்கள் கொண்டு இலுமினேஷன் செய்யப்படுகிறது.

இதில் கோஸ்ட் வாட்டர்மார்க் மற்றும் 850 ஸ்டார்கள் பயணிகள் பக்கம் இருக்கும் டேஷ்போர்டில் வழங்கப்படுகிறது. கார் ஆஃப் செய்யப்பட்ட நிலையில், இந்த டேஷ்போர்டு பயனர்களுக்கு தெரியாது. புதிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடலில் 6.75 லிட்டர் வி12 என்ஜின் வழங்கப்படுகிறது.
முன்னதாக புதிய கோஸ்ட் மாடல் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. புதிய கோஸ்ட் மாடல் டீசர் மூன்றே கோடுகளை கொண்டிருக்கிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் கோஸ்ட் மாடல் 2009 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களின் முன்பதிவு விவரங்களை பார்ப்போம்.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் புதிய ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்6 மாடல்களின் முன்பதிவை செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்கும் என தெரிவித்து இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள்கள் ஆன்லைன் அல்லது விற்பனை மையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்6 மாடல்களை பெறும் முதல் நாடாக இந்தியா இருக்கிறது. இதன் காரணமாக இரு மாடல்களின் சர்வதேச வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது.

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்கள் அதிகளவு விற்பனையாகி வந்தது. இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் இரு மாடல்கள் மட்டும் 85 சதவீத பங்குகளை கொண்டுள்ளன.
முன்னதாக பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்6 மாடல்கள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. அதன்படி புதிய மாடல்களில் காஸ்மெடிக் மாற்றம் செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக புதிய கூட்டணி ஒன்றை அமைத்து இருக்கிறது.
மஹிந்திரா மற்றும் இஸ்ரேலை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஆர்இஇ ஆட்டோடமோட்டிவ் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி இரு நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி பணிகளை மேற்கொள்ள இருக்கின்றன.
ஆர்இஇ ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன பிளாட்ஃபார்ம் மற்றும் தொழில்நுட்பங்களை மஹிந்திரா பயன்படுத்திக் கொள்ள இருக்கிறது. இந்த நிறுவனம் பவர்டிரெயின், சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டீரிங் உபகரணங்களை ஒருங்கிணைக்க புது கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறது.

இதுபோன்ற புதுவித கட்டமைப்பை கொண்டு வர்த்தக ரீதியிலான வாகனங்களை உருவாக்க முடியும். அந்த வகையில் இரு நிறுவனங்கள் கூட்டணியில் வர்த்தக ரீதியிலான எலெக்ட்ரிக் வாகனம் உற்பத்தி செய்யப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
மேலும் புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய எஸ் கிளாஸ் மாடலுக்கான வரைபடம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய எஸ் கிளாஸ் மாடல் வரைபடங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. டபிள்யூ223 என அழைக்கப்படும் புதிய எஸ் கிளாஸ் முற்றிலும் புதிய வடிவமைப்பை கொண்டிருக்கிறது. எனினும், வரைபடங்களின் படி புதிய கார் பெரும்பாலான அம்சங்கள் முந்தைய மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய மாடலில் பெரிய கிரில், லோவர் பம்ப்பரில் ஏர் இன்டேக் வழங்கப்படுகிறது. இத்துடன் ஹெட்லேம்ப் வடிவம் ப்ரோடோடைப் மாடலில் இருந்த அளவு மெல்லியதாக காட்சியளிக்கவில்லை. இத்துடன் பெரிய டையர்கள் வழங்கப்பட இருக்கின்றன.

எனினும், இது ஸ்டான்டர்டு மாடலில் வழங்கப்படாமல், ஏஎம்ஜி வெர்ஷனில் மட்டும் வழங்கப்படும் என தெரிகிறது. தற்போதைய தகவல்களின் படி புதிய எஸ் கிளாஸ் மாடல் அதிநவீன வடிவமைப்பு மற்றும் எதிர்கால அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
புதிய எஸ் கிளாஸ் மாடல் இரண்டு கதவுகள் கொண்ட கூப் அல்லது டிராப்-டாப் கன்வெர்டிபிள் ஆப்ஷன்களில் கிடைக்காது என கூறப்படுகிறது. இந்த மாடலின் இதர விவரங்கள் செப்டம்பர் 2 ஆம் தேதி சர்வதேச அறிமுக நிகழ்வின் போது தெரியும்.
ஹூண்டாய் நிறுவனம் புதிய கோனா மற்றும் கோனா என் லைன் மாடல்களுக்கான டீசர்களை வெளியிட்டு இருக்கிறது.
ஹூண்டாய் மோட்டார் கம்பெனி நிறுவனம் புதிய கோனா மற்றும் கோனா என் லைன் எஸ்யுவி மாடல்களுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. கோனா எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் முற்றிலும் புதிய வடிவமைப்பு பெற இருக்கிறது. கோனா என் லைன் மாடலில் ஸ்போர்ட் ஹைலைட்கள் மட்டுமின்றி ஏரோடைனமிக் டீடெயிலிங் பெறுகிறது.
என் லைன் பிரிவில் புதுவரவு மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் கோனா என் லைன் இணைய இருக்கிறது. டீசரின் படி புதிய ஹூண்டாய் கோனா அகலம் மற்றும் ஷார்க்கை தழுவியை வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் மேம்பட்ட டேடைம் ரன்னிங் லேம்ப்கள், ஹைடெக் தோற்றம் கொண்டிருக்கிறது.

இத்துடன் முன்புறம் புதிய வடிவமைப்பு கொண்ட ஸ்கிட் பிளேட் மற்றும் பம்ப்பர் உள்ளிட்டை வழங்கப்படுகிறது. என் லைன் மாடல் என் பிராண்டுக்கு துவக்கமாக அமைகிறது. மேலும் இது அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் நாட்களில் புதிய ஹூண்டாய் கோனா மற்றும் கோனா என் லைன் மாடல்கள் பற்றிய விவரங்கள் வெளியாகும் என தெரிகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது டான் கன்வெர்டிபில் மாடலின் இரண்டு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது. இந்த கார் மொத்தத்தில் 50 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
டான் சில்வர் புல்லட் கலெக்ஷன் என அழைக்கப்படும் புதிய கார் 1920 ரோட்ஸ்டர் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது வழக்கமான 4 பேர் அமரக்கூடிய இருக்கைகளுக்கு மாற்றாக இரண்டு இருக்கைகளை டைட்டானியம் மற்றும் மெட்டாலிக் சில்வர் பட்ரெசஸ்களை வழங்குகிறது.

காரின் உள்புறம் கார்பன் ஃபைபர் டேஷ்போர்டு, குவில்ட் செய்யப்பட்ட லெதர் சென்ட்டர் கன்சோலை சுற்றி வழங்கப்பட்டு இருக்கிறது. இது லெதர் ஜாக்கெட்களை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
புதிய சில்வர் புல்லட் எடிஷனில் 6.6 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி12 மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 571 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இது காரை மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5 நொடிகளில் செலுத்தும் திறன் கொண்டதாகும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
ஃபோர்ஸ் நிறுவனத்தின் புதிய குர்கா மாடல் ஆண்டு இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஃபோர்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை குர்கா மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஃபோர்ஸ் நிறுவன பிராண்டு மற்றும் எக்ஸ்பீரியன்ஸ் தொழில்நுட்ப பணிகளை டிவை வொர்க்ஸ்-இடம் வழங்கியதை அறிவிக்கும் போது இந்த தகவலை ஃபோர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
ஃபோர்ஸ் ஆஃப் ரோடு எஸ்.யு.வி. மாடலில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் 2020 குர்கா மாடலில் புதிய பம்ப்பர்கள், ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள், புதிய கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இதில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் குர்காவின் பாரம்பரிய ரக்கட் வடிவமைப்பை பரைசாற்றும் விதத்தில் அமைந்து இருக்கிறது. இத்துடன் இதில் புதிய 16 இன்ச் அலாய் வீல்கள் 245/70 டையர்கள் வழங்கப்படுகின்றன. இதன் வீல் ஆர்ச்கள் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றன.
காரின் உள்புறம் மேம்பட்ட அம்சங்களுடன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், MID டிஸ்ப்ளே, இரண்டாம் அடுக்கு இருக்கைகள் தனித்தனியே பொருத்தப்பட்டு, ஏ.சி. வென்ட்கள் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கின்றன.
ஹோண்டா நிறுவனத்தின் 2020 ஜாஸ் மாடல் கார் விற்பனையகம் வந்தடைந்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹோண்டா நிறுவனம் விரைவில் 2020 ஜாஸ் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. வரும் வாரங்களில் இதன் விற்பனை துவங்க இருக்கும் நிலையில், இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. புதிய 2020 ஜாஸ் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், புதிய ஜாஸ் மாடல் விற்பனையகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வீடியோவில் இருப்பது டாப் எண்ட் இசட்எக்ஸ் ட்ரிம் ஆகும். முன்னதாக இந்த கார் பெட்ரோல் வெர்ஷன் மட்டுமே விற்பனை செய்யப்படும் என ஹோண்டா அறிவித்து இருந்தது.

ஹோண்டா பிஎஸ்6 ஜாஸ் மாடலில் 1.2 லிட்டர் ஐ-விடிஇசி யூனிட் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 89 பிஹெச்பி பவர் மற்றும் 110 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
புதிய ஹோண்டா காரில் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள், சன்ரூஃப், குரூயிஸ் கண்ட்ரோல், பட்டன் ஸ்டார்ட், பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடல் மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் டாடா அல்ட்ரோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய 200சிசி மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விரைவில் புதிய மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் முற்றிலும் புதிய 200சிசி மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது சிபி ஹார்னெட் 200ஆர் வடிவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தற்போதைய தகவல்களின் படி புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 200ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் 160 ஆர் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

பிஎஸ்4 மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யும் போது வாகனங்களின் விலை உயர்வதால், ஹோண்டா 160 ஆர் பிஎஸ்4 மாடலுக்கு மாற்றாக புதிய பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக தெரிகிறது. முன்னதாக ஹோண்டா எக்ஸ்பிளேடு பிஎஸ்6 மாடல் விலை ரூ. 17 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது.
புதிய ஹோண்டா சிபி 200ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையிவ் பஜாஜ் பல்சர் என்எஸ்200, டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மற்றும் பல்வேறு இதர மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.






