என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஹோண்டா நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புதிய மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. 

    வெளியீட்டிற்கு முன் புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை ஹோண்டா வெளியிட்டு இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் பிரீமியம் மாடலாக இருக்கும் என்றும் இது 300 சிசி பிரிவில் வெளியாகும் என கூறப்படுகிறது. 

     ஹோண்டா

    இந்த மாடல் பிங்விங் விற்பனையகங்களின் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி புதிய மோட்டார்சைக்கிள் 300 முதல் 500 சிசி பிரிவில் குரூயிசர் மாடலாக இருக்கும் என தெரிகிறது. 

    இது ராயல் என்ஃபீல்டு மற்றும் ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஹோண்டா ரிபெல் 300 மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது.
    டொயோட்டா நிறுவனத்தின் புதிய அர்பன் குரூயிசர் மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் அர்பன் குரூயிசர் மோட்டார் செப்டம்பர் 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. முன்னதாக இந்த மாடலுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்கியது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய அர்பன் குரூயிசர் மாடல்- மிட், ஹை மற்றும் பிரீமியம் என மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது. டொயோட்டா மற்றும் சுசுகி நிறுவனங்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இரண்டாவது மாடலாக அர்பன் குரூயிசர் இருக்கிறது.

     டொயோட்டா அர்பன் குரூயிசர்

    அர்பன் குரூயிசர் மாடலின் முன்புறம் புதிய வடிவமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான அலாய் வீல்கள், டெயில் லேம்ப்கள், இன்டீரியர் தீம் வழங்கப்படும் என தெரிகிறது.

    இத்துடன் புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடலில் 105 பிஎஸ் பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்று் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம்.
    நிசான் நிறுவனத்தின் புதிய இசட் சீரிஸ் ப்ரோடோடைப் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    நிசான் நிறுவனம் தனது 400இசட் ஸ்போர்ட்ஸ்கார் மாடலை அடுத்த 12 மாதங்களுக்குள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நிசான் தனது 370இசட் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ப்ரோடோடைப்பை செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியிட இருக்கிறது.

    ப்ரோடோடைப் வெளியீட்டிற்கென நிசான் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் புதிய கார் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இதில் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி6 பவர்டிரெயின் யூனிட் வழங்கப்படலாம் என தெரிகிறது.

     நிசான் இசட் சீரிஸ் ப்ரோடோடைப்

    நிசான் இசட் ஸ்போர்ட்ஸ்காரில் இசட் வடிவ லோகோ, எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் பிரத்யேக அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. இதன் வெளியீடு 2021 வாக்கில் நடைபெற இருக்கிறது. இதன் உற்பத்தி வடிவம் 400இசட் எனும் பெயரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    லலம்போர்கினி நிறுவனத்தின் அவென்டேடார் மாடல் கார் உற்பத்தியில் புது மைல்கல் கடந்து இருக்கிறது.


    லம்போர்கினி நிறுவனம் தனது அவென்டேடார் மாடல் காரை 2011 ஆம் ஆண்டு அறிமுகம்  செய்தது. இந்த மாடல் மர்செலேகோ காரின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

    உற்பத்தி துவங்கிய ஒன்பது ஆண்டுகளில் லம்போர்கினி அவென்டேடார் மாடல் 10 ஆயிரம் யூனிட்கள் எனும் மைல்கல் கடந்துள்ளது. இதன் 10 ஆயிரத்து யூனிட் அவென்டேடார் எஸ்விஜெ ரோட்ஸ்டர் மாடல் ஆகும். இது கிரே மற்றும் ரெட் நிற பெயின்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

     லம்போர்கினி அவென்டேடார்

    இந்த மாடலின் இன்டீரியர் ரெட் மற்றும் பிளாக் என இருவித நிறங்களை கொண்டிருக்கிறது. இதற்கான கஸ்டமைசேஷன் பணிகளை லம்போர்கினியின் ஆட் பெர்சோனம் பிரிவு மேற்கொண்டது. 

    லம்போர்கினி அவென்டேடார் மாடல் இந்த மைல்கல் எட்ட ஒன்பது ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளது. தற்சமயம் லம்போர்கினி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் உருஸ் மாடல் இதே மைல்கல் சாதனையை வெறும் இரண்டே ஆண்டுகளில் கடந்துள்ளது.
    ஸ்கோடா நிறுவனத்தின் 2020 ரேபிட் புது வேரியண்ட் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
     

    ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேடிக் வேரியண்ட் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஏடி வேரியண்ட் வெளியீட்டு நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நடைபெற இருக்கிறது. 

    புதிய ரேபிட் ஏடி மாடல் முன்பதிவு ஆகஸ்ட் 27 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விநியோகம் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் துவங்குகிறது.

     ஸ்கோடா ரேபிட்

    ஸ்கோடா ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் 999சிசி மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 108 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய ஸ்கோடா ஆட்டோமேடிக் வெர்ஷன் லிட்டருக்கு 16.24 கிலோமீட்டர் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் தவிர புதிய செடான் மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. முன்னதாக ஸ்கோடா ரேபிட் 1.0 டிஎஸ்ஐ மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    டிரையம்ப் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராக்கெட் 3 ஜிடி மோட்டார்சைக்கிள் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய ராக்கெட் 3 ஜிடி மாடலை வெளியிட்டுள்ளது. புதிய வேரியண்ட் விலை ரூ. 18.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. 

    புதிய ராக்கெட் 3 ஜிடி மாடலில் 2500சிசி, இன்-லைன் 3 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 165 பிஹெச்பி பவர், 221 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

     டிரையம்ப் ராக்கெட் 3 ஜிடி

    புதிய ராக்கெட் 3 ஜிடி மாடலில் பெயரிய விண்ட்ஸ்கிரீன், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பில்லியன் ஃபூட் ரெஸ்ட்கள், ஹீட்டெட்க்ரிப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்த மாடலில் நான்கு ரைடு மோட், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், கார்னெரிங் ஏபிஎஸ், ஹில்-ஹோல்டு கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் ப்ளூடூத் வசதி கொண்ட ஃபுல் கலர் டிஎஃப்டி டேஷ், கோ ப்ரோ கண்ட்ரோல் வழங்கப்பட்டு உள்ளது.
    மசராட்டி எம்சி20 சூப்பர்கார் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    இத்தாலி நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பாளரான மசராட்டி சர்வதேச சந்தையில் எம்சி20 சூப்பர்கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய மசராட்டி எம்சி20 - மசராட்டி கோர்ஸ் 2020 என்ற விரிவாக்கம் கொண்டுள்ளது. இது மசராட்டி புது தலைமுறையில் களமிறங்குவதை குறிக்கிறது.

    புதிய எம்சி20 வடிவமைப்பு எம்சி12 மாடலை தழுவி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எம்சி20 மாடலில் புதிய வி6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் நியூடெனோ என அழைக்கப்படுகிறது. இது மொடெனாவில் உள்ள மசராட்டி மூலம் உருவாக்கப்பட்டது ஆகும்.

     மசராட்டி எம்சி20

    புதிய என்ஜின் காப்புரிமை பெறப்பட்ட எஃப்1 தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதில் பிரீ-கம்பஷன் சேம்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. 3.0 லிட்டர் என்ஜின் 622 பிஹெச்பி பவர், 730 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த சூப்பர்கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.9 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. மேலும் இது மணிக்கு 325 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
    ஆடி நிறுவனத்தின் புதிய கியூ2 மாடல் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.

    ஆடி இந்தியா நிறுவனம் தனது கியூ2 மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. புதிய ஆடி கியூ2 மாடல் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆடி வெளியிட்டுள்ள வீடியோவில் புதிய கியூ2 மாடலின் விவரங்கள் தெரியவந்துள்ளது.

    கியூ2 மாடல் எம்க்யூபி பளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதே பிளாட்பார்ம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அளவில் இந்த கார் 4191எம்எம் நீளம், 1794எம்எம் அகலம், 1508எம்எம் உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2601எம்எம் ஆக இருக்கிறது.

    ஆடி கியூ2

    இத்துடன் புதிய மாடலில் சிங்கில் பிரேம் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், சில்வர் ஸ்கிட் பிளேட்கள், பிளாக் பாடி கிளாடிங், பிளாக்டு அவுட் பி பில்லர், ஷார்க் பின் ஆன்டெனா, எல்இடி டெயில் லைட்கள் மற்றும் டூயல் டிப் எக்சாஸ்ட்கள் வழங்கப்படுகின்றன.

    ஆடி கியூ2 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    இந்தியாவில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் ஹெக்டார் எஸ்யுவி மாடலின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.

    எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் ஹெக்டார் மாடல் காரின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஹெக்டார் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    எம்ஜி ஹெக்டார் ஸ்பெஷல் எடிஷன் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 13.63 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    எம்ஜி ஹெக்டார் ஸ்பெஷல் எடிஷன்

    ஹெக்டார் சூப்பர் ட்ரிம் சார்ந்து ஸ்பெஷல் எடிஷன் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 10.3 இன்ச் ஹெச்டி தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங், ஏர் ப்யூரிபையர், மெட்க்ளின் கிட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஹெக்டார் ஸ்பெஷல் எடிஷன் மாடல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 140 பிஹெச்பி, 250 என்எம் டார்க் மற்றும் 173 பிஹெச்பி மற்றும் 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளன.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய இக்யூசி மாடல் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் கார் இக்யூசி எனும் பெயரில் அறிமுகமாகிறது. இந்தியாவில் இது மெர்சிடிஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மாடல் ஆகும்.

    இது ஜிஎல்சி கிராஸ்ஓவர் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. புதிய இக்யூசி மாடலில் 400 4மேடிக், 2 எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை 400 பிஹெச்பி பவர், 760 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.1 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.

     மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி

    மேலும் இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 471 கிலோமீட்டர் வரை செல்லும். மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி மாடல் 7.4 கிலோவாட் ஹோம் எலெக்ட்ரிக் கனெக்ஷன், 7.4 கிலோவாட் ஏசி வால் பாக்ஸ் மற்றும் 110 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் என மூன்றுவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி மாடலில் மல்டி-பீம் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், புதிய அலாய் வீல்கள், ஏசி வென்ட்கள், டூயல் ஸ்கிரீன் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் மாடலின் புது வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் எக்ஸ்டி பிளஸ் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய டாடா ஹேரியர் எஸ்யுவி விலை ரூ. 16.99 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 

    இது அறிமுக விலை என்றும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இது மாற்றப்பட்டு விடும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது. தற்சமயம் அறிவிக்கப்பட்டு இருக்கும் விலை செப்டம்பர் மாதத்தில் முன்பதிவு செய்து, டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் டெலிவரி எடுத்துக் கொள்வோருக்கு மட்டும் பொருந்தும்.

     டாடா ஹேரியர்

    புதிய ஹேரியர் எக்ஸ்டி பிளஸ் வேரியண்டடில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டூயல் ஃபன்ஷன் எல்இடி டிஆர்எல்கள், 17 இன்ச் அலாய் வீல்கள், 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    டாடா ஹேரியர் எக்ஸ்டி பிளஸ் மாடலிலும் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதுமட்டுமின்றி புதிய ஹேரியர் மாடலில் மற்ற வேரியண்ட்களை போன்றே 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது குளோஸ்டர் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது.


    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது குளோஸ்டர் எஸ்யுவி மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய குளோஸ்டர் இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் நான்காவது மாடல் ஆகும். 

    புதிய குளோஸ்டர் ஃபோர்டு என்டேவர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. டீசர் வீடியோவில் குளோஸ்டர் மாடலின் வெளிப்புற வடிவமைப்பை அம்பலப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. 

     எம்ஜி குளோஸ்டர்

    புதிய மாடல் இந்த பிரிவு வாகனங்களில் டிஸ்டன்ஸ் அசிஸ்ட், கொலிஷன் வார்னிங், ஆட்டோ பார்க் போன்ற வசதிகளை கொண்ட முதல் வாகனமாக இருக்கிறது. 
     
    புதிய எம்ஜி குளோஸ்டர் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. முன்னதாக எம்ஜி குளோஸ்டர் மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. மேலும் இது ரீபேட்ஜ் செய்யப்பட்ட மேக்சஸ் டி90 மாடல் ஆகும்.
    ×