என் மலர்
இது புதுசு
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய குளோஸ்டர் மாடல் முன்பதிவு துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
எம்ஜி குளோஸ்டர் மாடலுக்கான முன்பதிவு துவங்கி உள்ளது. புதிய குளோஸ்டர் மாடல் முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. எம்ஜி குளோஸ்டர் நான்கு வித ட்ரிம்களில் கிடைக்கிறது. இது ஆறு அல்லது ஏழு பேர் அமரக்கூடிய வகையில் கிடைக்கிறது.
புதிய குளோஸ்டர் எஸ்யுவி மாடலில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 215 பிஹெச்பி பவர், 480 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இந்த கார் 4 வீல் டிரைவ் சிஸ்டம் வசதியுடனும் வழங்கப்பட இருக்கிறது. இது எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் டெரைன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் மற்றும் பல்வேறு டிரைவிங் மோட்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
முன்னதாக குளோஸ்டர் எஸ்யுவி மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இது சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் மேக்சஸ் டி90 எஸ்யுவி-யை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 மாடல் லிட்டருக்கு 110 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் 110 சிசி மாடலான ஸ்போர்ட் அதிக மைலேஜ் கொண்ட மோட்டார்சைக்கிள் என்ற சாதனையை படைத்துள்ளது. இது லிட்டருக்கு 110.12 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
இதனை அங்கீகரிக்கும் வகையில் ஆசிய சாதனைகள் புத்தகத்தில் டிவிஎஸ் ஸ்போர்ட் 110 பிஎஸ்6 இடம்பிடித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இதன் பிஎஸ்4 மாடல் லிட்டருக்கு 76.40 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கியது முந்தைய சாதனையாக இருந்தது. தற்சமயம் டிவிஎஸ் நிறுவனம் ஏற்கனவே தான் படைத்த சாதனையை முறியடித்துள்ளது.

இந்த சாதனை பவித்ரா பத்ரோ என்பவர் படைத்தார். இவர் ஆகஸ்ட் 8 முதல் 13 ஆம் தேதி வரை யுனைட்டட் இந்தியா ரைடு சீரிசில் டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 மாடலை ஓட்டினார். மொத்தம் 1021.90 கிலோமீட்டர் தொலைவுக்கு 9.28 லிட்டர் பெட்ரோல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 மாடலில் 110 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 8.2 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூப் மாடல் காரை பிரீமியம் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூப் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய மெர்சிடிஸ் மாடல் விலை ரூ. 1.20 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி மாடல் அந்நிறுவனத்தின் புதிய தலைமுறை ஜிஎல்இ எஸ்யுவி-யை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது பழைய ஏஎம்ஜி ஜிஎல்இ 43 மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூப் மாடலில் புது அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 4மேடிக் பிளஸ் கூப் மாடலில் 3.0 லிட்டர் ட்வின் டர்போ 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 435 பிஹெச்பி பவர், 530 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்குகிறது.
இந்த என்ஜினுடன் 48 வோல்ட் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் எப்1 சார்ந்த இக்யூ பூஸ்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 22 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4மேடிக் பிளஸ் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் அர்பன் குரூயிசர் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அர்பன் குரூயிசர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இதன் துவக்க விலை ரூ. 8.40 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் புதிய அர்பன் குரூயிசர் மாடல் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்சான், ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யுவி300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடலில் 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 103 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய அர்பன் குரூயிசர் மாடல் ஒன்பது நிறங்களிலும், ஆறு ட்ரிம்களிலும் கிடைக்கிறது. இதில் எல்இடி ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி ஃபாக் லைட்கள், டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் டோன் நிறங்களை கொண்டுள்ளது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் ஹெக்டார் டூயல் டோன் வேரியண்ட்டை இந்தியாவில் வெளியிட்டு உள்ளது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஹெக்டார் டூயல் டோன் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இதன் துவக்க விலை ரூ. 16.84 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டூயல் டோன் வேரியண்ட் கிளேஸ் ரெட் மற்றும் கேண்டி வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.
எம்ஜி ஹெக்டார் டூயல் டோன் வேரியண்ட் விலை மோனோ-டோன் வேரியண்ட்டை விட ரூ. 20 ஆயிரம் வரை அதிகம் ஆகும். புதிய நிறம் தவிர ஹெக்டார் டூயல் டிலைட் மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்தியாவில் எம்ஜி ஹெக்டார் மாடல் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் ஹைப்ரிட் மோட்டார், 2.0 லிட்டர் டீசல் யூனிட் ஆகும்.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 2021 எம்3 மாடலுக்கான புதிய டீசரை வெளியிட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது 2021 எம்3 மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. இந்த கார் நாளை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
தற்போதைய டீசரின் படி புதிய பிஎம்டபிள்யூ எம்3 மாடல் ஐசில் ஆஃப் மேன்கிரீன் நிறத்தில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. 2021 பிஎம்டபிள்யூ எம்3 மாடலுடன் எம்4 கூப் மாடலும் அறிமுகமாகிறது. இந்த மாடல் சௌ பௌலோ எல்லோ நிறத்தில் உருவாகி இருக்கிறது.

2021 பிஎம்டபிள்யூ எம்3 மாடலில் பெரிய கிட்னி கிரில், ஏரோடைனமிக் ORVM-கள், கம்பீரமாக ரியர் பகுதி கொண்டிருக்கிறது. மேலும் இந்த மாடலில் பிரத்யேக ஹெட்லேம்ப் டிசைன், பிளாக்டு-அவுட் டிரீட்மென்ட் செய்யப்பட்டு சப்டைல் பேட்ஜிங் வழங்கப்படுகிறது.
புதிய பிஎம்டபிள்யூ மாடலில் 3.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட, இன்லைன் 6 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 472 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட உள்ளது.
ஸ்கோடா நிறுவனத்தின் விஷன் ஐஎன் ப்ரோடக்ஷன் வெர்ஷன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஸ்கோடா நிறுவனம் தனது விஷன் ஐஎன் ப்ரோடக்ஷன் வெர்ஷனை 2021 இரண்டாவது காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வெர்ஷன் க்ளிக் எனும் பெயரில் அழைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் இந்த மாடல் 2021 முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்கோடா விஷன் ஐஎன் காரில் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார் 150 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க், 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 195 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
ஸ்கோடா விஷன் ஐஎன் மாடல் இந்தியாவுக்கென பிரத்யேகமான MQB A0-IN பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் முதல் வாகனம் ஆகும்.
இந்திய சந்தையில் ஸ்கோடாவின் புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் ஆர்18 குரூயிசர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆர்18 குரூயிசர் மாடல் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டான்டர்டு மற்றும் பர்ஸ்ட் எடிஷன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இவற்றின் விலை முறையே ரூ. 18.90 லட்சம் மற்றும் ரூ. 21.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 மாடல் ஹார்லி டேவிட்சன் மற்றும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனங்களின் குரூயிசர் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இதன் வடிவமைப்பு 1965 பிஎம்டபிள்யூ ஆர்5 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது.
பிஎம்டபிள்யூ ஆர்18 மாடலில் பிஎம்டபிள்யூ உற்பத்தி செய்ததில் மிகப்பெரும் பாக்சர் ட்வின் மோட்டார் 1802சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 91 பிஹெச்பி பவர், 157 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஷாப்ட் டிரைவ் வழங்கப்பட்டு உள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் விரைவில் துவங்க இருக்கும் பீஜிங் மோட்டார் விழாவில் தனது எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் மாடல் சீனாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
தற்போதைய டீசர்களின் படி புதிய கார் ரெட்ரோ தீம் மற்றும் அதிநவீன எதிர்கால தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களில் வழக்கமாக காணப்படும் பிளான்க்-ஆப் கிரில் வழங்கப்பட இருக்கிறது.

இன்னும் பெயர் சூட்டப்படாத நிலையில், ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்கு உறுதி செய்யப்படாமல் உள்ளது. சீன சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில், புதிய ஹோண்டா கார் அதிக தூரம் செல்லும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
பீஜிங் மோட்டார் விழா செப்டம்ர் 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது. அந்த வகையில் ஹோண்டா எலெக்ட்ரிக் கார் விவரங்கள் அடுத்த வாரம் தெரியவரும்.
எம்ஜி ஹெக்டார் மாடல் டூயல் டோன் வேரியண்ட்களின் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் மாடலின் டூயல் டோன் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இதன் துவக்க விலை ரூ. 16.84 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய டூயல் டோன் வேரியண்ட் ஹெக்டார் டூயல் டிலைட் என அழைக்கப்படுகிறது. இது ஹெக்டார் டாப் எண்ட் மாடலான ஷார்ப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. டூயல் டோன் வேரியண்ட் விலை மோனோ-டோன் வேரியண்ட்டை விட ரூ. 20 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.

எம்ஜி ஹெக்டார் டூயல் டோன் வேரியண்ட் - கேண்டி வைட் மற்றும் ஸ்டேரி பிளாக், கிளேஸ் ரெட் மற்றும் ஸ்டேரி பிளாக் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய நிறம் தவிர ஹெக்டார் டூயல் டிலைட் மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்தியாவில் எம்ஜி ஹெக்டார் மாடல் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் ஹைப்ரிட் மோட்டார், 2.0 லிட்டர் டீசல் யூனிட் ஆகும்.
எம்ஜி குளோஸ்டர் மாடலில் அசத்தல் அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியா தனது குளோஸ்டர் மாடலின் புதிய டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய எம்ஜி குளோஸ்டர் இந்தியாவில் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என தெரிகிறது.
தற்போதைய டீசரின் படி புதிய குளோஸ்டர் மாடலில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் அம்சம் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இந்த டீசர் அந்நிறுவனத்தின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

எம்ஜி குளோஸ்டர் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டத்தின் அங்கமாக இந்த அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் கொலிஷன் வார்னிங் சிஸ்டம், பிலைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், ஆட்டோ பார்க் அசிஸ்ட் மற்றும் லேன் டிபாச்சர் வார்னிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய குளோஸ்டர் எஸ்யுவி மாடலில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 215 பிஹெச்பி பவர், 480 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் 4 வீல் டிரைவ் சிஸ்டம் வசதியுடனும் வழங்கப்பட இருக்கிறது. இது எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் டெரைன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் மற்றும் பல்வேறு டிரைவிங் மோட்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
ஃபோர்டு நிறுவனம் தனது புதிய என்டேவர் ஸ்போர்ட் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது.
ஃபோர்டு நிறுவனத்தின் என்டேவர் ஸ்போர்ட் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. புதிய என்டேவர் ஸ்போர்ட் மாடல் செப்டம்பர் 22 ஆம் தேதி அறிமுகமாகிறது. புதிய காருக்கான டீசர் அந்நிறுவனத்தின் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது.
புதிய ஸ்போர்ட் மாடல் தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது அதிக மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களின் படி என்டேவர் ஸ்போர்ட் மாடலை சுற்றி பிளாக் எலிமென்ட்கள் வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த எஸ்யுவி மாடல் பிளாக் கிரில், முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்களில் பிளாக் இன்சர்ட்கள் வழங்கப்படுகிறது.

இதன் டெயில்கேட் பகுதியில் ஸ்போர்ட் பேட்ஜ் மற்றும் பிளாக் ஸ்ட்ரிப் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் என்டேவர் ஸ்போர்ட் மாடலில் சைடு ஸ்டெப்கள், பிளாக் ORVMகள் மற்றும் பிளாக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
புதிய என்டேவர் ஸ்போர்ட் மாடலில் 2.0 லிட்டர் இகோபுளூ டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 10 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.






