என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஹோண்டா நிறுவனம் தனது இருசக்கர வாகனங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை துவங்கி உள்ளது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது வலைதளத்தில் ஆன்லைன் புக்கிங் சேவையை துவங்கி உள்ளது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ஹோண்டா ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் மாடல்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.  

    கொரோனா வைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக ஆன்லைனிலேயே ஹோண்டா இருசக்கர வாகனங்களை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என ஹோண்டா தெரிவித்து இருக்கிறது.

    ஹோண்டா டியோ

    வாடிக்கையாளர்கள் விரும்பும் வாகனத்தை தேர்வு செய்து பின், நிறம், வேரியண்ட் மற்றும் டெலிவரி எடுத்துக் கொள்ள விரும்பும் விற்பனையகம் உள்ளிட்டவற்றை பதிவிட்டால் புதிய ஹோண்டா வாகனத்தை பெற்று கொள்ள முடியும். 

    ஹோண்டா அதிகாரப்பூர்வ வலைதளம் சென்று ஆன்லைன் முன்பதிவு செய்த பின் வாடிக்கையாளர்கள் முடிவை மாற்றிக் கொண்டு முன்பதிவை திரும்ப பெற நினைத்தால், முன்பதிவு தொகை திரும்ப வழங்கப்படுவதாக ஹோண்டா தெரிவித்து இருக்கிறது. 
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்தியாவில் எஃப்900 ட்வின் மற்றும் எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிள் மாடல்கள் விரைவில் அறிமுகமாக இருப்பதாக டீசர் மூலம் தெரிவித்து இருந்தது. அந்த வகையில், பிஎம்டபிள்யூ எஃப்900 ட்வின் மோட்டார்சைக்கிள் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் இதே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக 2019 EICMA விழாவில் பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. 

    பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர்

    பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் மாடலில் வழங்கப்பட்டுள்ள இன்லைன்-4 என்ஜின் 165 பிஹெச்பி பவர், 114 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ட்வீக் செய்யப்பட்ட கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடலில் ஆன்டி-ஹாப்பிங் கிளட்ச், என்ஜின் டிராக் டார்க் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் புதிய பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிளில் டைனமிக் இஎஸ்ஏ, ரைடிங் மோட்ஸ் ப்ரோ, ஏபிஎஸ் ப்ரோ, டிடிசி, ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல் ப்ரோ மற்றும் ரெயின், ரோட், டைனமிக் மற்றும் டைனமிக் ப்ரோ என நான்கு டிரைவிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் 6.5 இன்ச் டிஎஃப்டி ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் கார் விற்பனையகம் வந்து இருப்பதை வெளிப்படுத்தும் வீடியோ லீக் ஆகி உள்ளது.
     

    ஹூண்டாய் நிறுவனம் விரைவில் டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில், புதிய கார் ஜூலை 14 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

    வெளியீட்டிற்கு முன் புதிய கார் விற்பனையகம் வந்திருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. காரை சுற்றி எடுக்கப்பட்டு இருக்கும் வீடியோவில் காரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அப்டேட்களை தெளிவாக காட்டுகிறது.

    ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட்

    புதிய மேம்பட்ட மாடல் டீசல் வேரியண்ட்டில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியும், சில காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன்படி புதிய கார் வெளிப்புறம் கேஸ்கேடிங் கிரில், புதுவடிவமைப்பு கொண்ட ஹெட்லைட்கள், டெயில் லைட்கள், முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்படுகின்றன.

    காரின் உள்புறம் புது டேஷ்போர்டு வடிவமைப்பு, ஃபிரீ-ஸ்டேன்டிங் 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் புளுலின்க் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜர், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது.
    ஆடி நிறுவனத்தின் 2021 கியூ4 ஸ்போர்ட்பேக் இ டிரான் கான்செப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஆடி நிறுவனம் 2019 ஜெனிவா மோட்டார் விழாவில் கியூ4 இ டிரான் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தியது. தற்சமயம் கியூ4 ஸ்போர்ட்பேக் இ டிரான் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

    புதிய கியூ4 உற்பத்தி விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. எனினும், இதன் உற்பத்தி அடுத்த ஆண்டு வாக்கில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஸ்போர்ட்பேக் மாடல் வழக்கமான கியூ4 இ டிரான் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய காரில் ஸ்வூப்பிங் கூப் ரூஃப்லைன் வழங்கப்படுகிறது. இது காரின் பின்புறம் நீண்டு பெரிய ஸ்பாயிலருடன் இணைகிறது. மற்றப்படி டெயில் லைட்கள் வழக்கமான கியூ4 மாடலில் உள்ளதை போன்றே இருக்கிறது. 

    2021 ஆடி கியூ4 ஸ்போர்ட்பேக் இ டிரான் கான்செப்ட்

    புதிய காரின் பின்புற பம்ப்பர் மற்றும் டிஃப்யூசர் பிரம்மாண்ட தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் வீல் ஆர்ச் மற்றும் 22 இன்ச் வீல்கள் இந்த காரின் முக்கிய அம்சமாக இருக்கிறது. முன்புறம் பெரிய கிரில் வழங்கப்பட்டுள்ளது. காரின் ஒட்டுமொத்த வடிவம் பார்க்க முந்தைய கியூ4 கான்செப்ட் போன்றே காட்சியளிக்கிறது.

    இதன் ஹெட்லேம்ப்கள் மெல்லியதாகவும், கியூ4 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இவை எல்இடி தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன. புதிய ஆடி காரில் பின்புறம் மற்றும் முன்புறம் என இரு மோட்டார்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இவை முறையே 204 பிஹெச்பி பவர், 310 என்எம் டார்க் செயல்திறன், 102 பிஹெச்பி, 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    ஆடி கியூ4 ஸ்போர்ட்பேக் இ டிரான் கான்செப்ட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என்றும் இதன் பேட்டரிகளை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்கள் தான் ஆகும் என கூறப்படுகிறது.
    லேண்ட் ரோவர் நிறுவனத்தின் இரண்டு பிஎஸ்6 கார் மாடல்கள் இந்தியாவில் விநியோகம் செய்யப்படுகின்றன.


    லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 பெட்ரோல் என்ஜின் கொண்ட டிஸ்கவரி ஸ்போர்ட் ஃபேஸ்லிப்ட் மற்றும் புதிய ரேன்ஜ் ரோவர் எவோக் மாடல்களை விநியோகம் செய்ய துவங்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

    இரு மாடல்களிலும் பெட்ரோல் என்ஜின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இவை எஸ் மற்றும் ஆர் டைனமிக் எஸ்இ என இரண்டு வேரியண்ட்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட டர்போ பெட்ரோல் யூனிட் ஆகும்.

     லேண்ட் ரோவர்

    இந்த என்ஜின் 250 பிஹெச்பி பவர், 365 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் வரும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் அதிக மைலேஜ் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    பிஎஸ்6 பெட்ரோல் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ் மாடல் விலை ரூ. 59.98 லட்சம் என்றும் ஆர் டைனமிக் எஸ்இ விலை ரூ. 63.32 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்6 பெட்ரோல் ரேன்ஜ் ரோவர் எவோக் மாடல் பேஸ் வேரியண்ட் ரூ. 58 லட்சம் என்றும் டாப் எண்ட் விலை ரூ. 61.94 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கார் அதிநவீன அம்சத்துடன் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் எஸ்யுவி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகமான நிலையில் புதிய கார் விரைவில் வெளியாக இருக்கிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடலில் இன்டெலிஜண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்பட இருப்பதாக கியா மோட்டார்ஸ் இந்தியா விற்பனை மற்றும் விளம்பர பிரிவு தலைவர் மனோகர் பட் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

    கியா சொனெட் ஸ்பை படம்

    இன்டெலிஜண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (ஐஎம்டி) என்பது பயனர் கியர்களை மாற்ற மேனுவல் கிளட்ச் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை போக்குகிறது. புதுவித டிரான்ஸ்மிஷன் தவிர கியா சொனெட் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது. 

    கியா சொனெட் மாடலில் ஹூண்டாய் வென்யூ காரில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சொனெட் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் உள்ளிட்ட என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    லம்போர்கினி நிறுவனத்தின் புதிய ஸ்போர்ட்ஸ் கார் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    இத்தாலி நாட்டை சேர்ந்த ஆடம்பர ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தியாளரான லம்போர்கினி நிறுவனம் முற்றிலும் புதிய மாடல் காரினை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது. 

    வெளியீட்டை அடுத்து புதிய கார் டீசரை லம்போர்கினி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. கிராஃபிக் படமாக வெளியாகி இருக்கும் புதிய கார் டீசரில், கார் வெளியீட்டு நிகழ்வு லம்போர்கினி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நேரலை செய்யப்படுகிறது.

    லம்போர்கினி சியன்

    புதிய லம்போர்கினி கார் அறிமுக நிகழ்வு ஜூலை 8 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் எந்த கார் வெளியாகும் என்ற தகவல் வெளியாகவில்லை. டீசர்களின்படி புதிய கார் முற்றிலும் புதிய மாடலாகவோ அல்லது கான்செப்ட் ரகமாகவோ இருக்கும் என தெரிகிறது.

    மேலும் இது லம்போர்கினி சியன் எஃப்கேபி 37 மாடலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த கார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுதவிர இந்த கார் சியன் எஃப்கேபி 37 ரோட்ஸ்டர் மாடலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
    கியோ மோட்டார்ஸ் நிறுவனம் 2021 கியா செல்டோஸ் கிராவிட்டி மாடல் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    கியா மோட்டார்ஸ் நிறுவனம் 2021 கியா செஸ்டோஸ் மாடலை கொரிய சந்தையில் அப்டேட் செய்து இருக்கிறது. புதிய மிட்சைஸ் எஸ்யுவி மாடல் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டிருப்பதோடு, இதன் புதிய டாப் எண்ட் மாடல் கிராவிட்டி என அழைக்கப்படுகிறது.
    கியா செல்டோஸ்  கிராவிட்டி,
    செல்டோஸ் கிராவிட்டி மாடலில் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் முன்புற கிரில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர 18 இன்ச் அளவில் டூயல் டோன் மெஷின்டு அலாய் வீல்களும் விங் மிரர், டோர் கார்னிங் மற்றும் பின்புறம் ஸ்கிட் பிளேட்களில் சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய கிராவிட்டி மாடலில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை முறையே 177 பிஹெச்பி மற்றும் 136 பிஹெச்பி பவர் வழங்குகின்றன. இவற்றுடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
    ஹோண்டா நிறுவனத்தின் டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட் மாடல் கார் மேம்பட்ட அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் புதிய ஹோண்டா கார் துவக்க விலை ரூ. 8.50 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட் மாடல் நான்கு வேரியண்ட்களில், ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது. புதிய காருக்கான முன்பதிவுகள் மார்ச் மாத வாக்கில் துவங்கப்பட்டது. இந்தியாவில் ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட் முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
    ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட்
    ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 88 பிஹெச்பி பவர், 110 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 98 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இதன் பெட்ரோல் என்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இதன் டீசல் என்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. 

    புதிய ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடல் பிரீமியம் ஆம்பர் மெட்டாலிக், லூனார் சில்வர் மெட்டாலிக், மாடன் ஸ்டீல் மெட்டாலிக், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், ரேடியண்ட் ரெட் மெட்டாலிக் மற்றும் பிளாட்டினம் வைட் பியல் நிறங்களில் கிடைக்கிறது. 
    பென்ட்லி நிறுவனத்தின் 2020 பென்ட்யகா ஃபேஸ்லிப்ட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    பென்ட்லி நிறுவனம் 2020 பென்ட்யகா ஃபேஸ்லிப்ட் மாடல் காரினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த கார் ஸ்பை படங்கள் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருந்தன.

    அந்த வரிசையில் இந்த கார் தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய கார் முன்புறம் ஓவல் வடிவ ஹெட்லேம்ப்கள், மேட்ரிக்ஸ் கிரில், கிரிஸ்டல் கிளாஸ்வேர், பக்கவாட்டில் 22 இன்ச் புதுவித அலாய் வீல்கள், பின்புறம் புதிய டெயில்கேட், பம்ப்பரில் நம்பர் பிளேட் ஹோல்டர், புதிய டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.
    2020 பென்ட்லி பென்ட்யகா ஃபேஸ்லிப்ட்
    காரின் உள்புறம் ஃபுலி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 10.9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட்கள், வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய பென்ட்யகா ஃபேஸ்லிப்ட் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 542 பிஹெச்பி பவர், 770 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.5 நொடிகளில் எட்டிவிடும்.
    மஹிந்திரா நிறுவனம் இதே நிதியாண்டில் மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மஹிந்திரா நிறுவனம் இந்த நிதியாண்டு முடிவதற்குள் மூன்று புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் தற்போதைய எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

    தற்போதைய தகவல்களின்படி மஹிந்திரா நிறுவனம் தனது வாகனங்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மஹிந்திரா நிறுவனம் ஆட்டம் எலெக்ட்ரிக் மற்றும் ட்ரியோ சோர் போன்ற வாகனங்களை வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
    ட்ரியோ
    வர்த்தக வாகனங்கள் மட்டுமின்றி இகேயுவி100 மாடலையும் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டு வருகிறது. இந்திய சந்தையில் அறிமுகமாகும் போது, இந்த மாடல் விலை குறைந்த எலெக்ட்ரிக் மாடல் என்ற பெருமையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    கடந்த ஆண்டு மட்டும் மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் சுமார் 14 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் பெரும்பாலான மாடல்கள் ட்ரியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா மாடல்கள் ஆகும். 

    ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்பட்டுள்ள உற்பத்தி குறைபாடு காலக்கட்டத்திலும் மஹிந்திரா எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. ட்ரியோ மாடலுக்கான வரவேற்பு அதிகரிக்க துவங்கியதால், மஹிந்திரா நிறுவனம் ட்ரியோ சோர் மாடல் மீதும் அதிக கவனம் செலுத்த துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

    நிசான் நிறுவனத்தின் ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    நிசான் நிறுவனம் இந்தியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு உள்ளிட்ட சந்தைகளுக்கான எதிர்கால திட்டங்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம், இபவர் மேம்பட்ட ஹைப்ரிட் வாகனங்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளிட்டவை இந்த சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

    இந்தியாவில் நிசான் எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் நிசான் நிறுவனம் நோட் இபவர் மாடலை இந்தியாவில் சோதனை செய்து வந்தது. அது எலெக்ட்ரிக் தொழில்நுட்பம் கொண்ட நிசான் நிறுவனத்தின் முதல் வாகனம் ஆகும்.
    நிசான் லீஃப்
    நோட் இபவர் மாடல் இங்கு அறிமுகம் செய்யப்படாத நிலையில், தாய்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற சந்தைகளில் கிக்ஸ் இபவர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய நிசான் முயற்சி செய்து வருகிறது. 

    எனினும், நிசான் எலெக்ட்ரிக் வாகனம் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
    ×