என் மலர்
இது புதுசு
ஆடி நிறுவனத்தின் புதிய கியூ5 ஃபேஸ்லிப்ட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஆடி நிறுவனத்தின் கியூ5 ஃபேஸ்லிப்ட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆடம்பர எஸ்யுவி மாடல் சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய காரில் ஆக்டாகோனல் கிரில், கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்போர்டி பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் உயர் ரக மாடல்களில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. காரின் பின்புறம் ட்வீக் செய்யப்பட்ட எல்இடி டெயில்லைட்கள் மற்றும் மேம்பட்ட பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.
காரின் உள்புறம் புதிய 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் விர்ச்சுவல் காக்பிட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அமேசான் அலெக்சா விர்ச்சுவல் அசிஸ்டண்ட் உடன் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ஆடி கியூ5 ஃபேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன் கொண்டிருக்கிரது. இது 245 பிஹெச்பி பவர், 370 என்எம் டார்க் செயல்திறன், 7 ஸ்பீடு எஸ் டிரானிக் டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன், குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
இந்தியாவில் புதிய ஆடி கியூ5 ஃபேஸ்லிப்ட் விலை ரூ. 55 லட்சம், எக்ஸ் ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் என்விடியா நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் தானியங்கி கார் தொழில்நுட்பம் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் என்விடியா நிறுவனங்கள் இடையே வியாபார ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இரு நிறுவனங்களும் கூட்டணி அமைத்து வாகனங்களுக்குள் கம்ப்யூட்டிங் சிஸ்டம்கள், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்ற இருப்பதாக கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு முதல் இந்த தானியங்கி கார் தொழில்நுட்பம் அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் வாகனங்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் ஆட்டோமொபைல் துறையில் இதுவரை இல்லாத அளவு அதிக சவால்மிக்க மற்றும் மேம்பட்ட கம்ப்யூட்டிங் தளத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கின்றன.

இரு நிறுவனங்கள் கூட்டணியில் தயாராகும் மென்பொருள் சார்ந்த தளம், என்விடியா டிரைவ் பிளாட்பார்மில் உருவாகிறது. இதன் முதற்கட்டமாக ஒரு முகவரியில் இருந்து மற்றொரு முகவரிக்கும் செல்லும் திறன் வழங்கப்படுகிறது. கூடுதலாக பல்வேறு பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை வழங்கும் அசங்கள் வழங்கப்படுகிறது.
மேலும் கார் பயன்பாடு முழுக்க மென்பொருள் செயலிகள் மற்றும் சந்தா சேவைகள் உள்ளிட்டவை ஓவர் தி ஏர் மென்பொருள் அப்டேட்களாக வழங்கப்பட இருக்கிறது.
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய டிஃபென்டர் மாடல் வெளியீட்டு திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபென்டர் ஆஃப் ரோடர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற 2019 பிரான்க்ப்ரூட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
சந்தையில் அறிமுகமானது முதல் புதிய கார் விலை அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகின் பல்வேறு சந்தைகளில் இந்த கார் வெளியிடப்பட்டது. பின் கொரோனா வைரஸ் பாதிப்பு குறுக்கிட லேண்ட் ரோவர் நிறுவனம் தனது புதிய வாகனத்தை வெளியிடும் திட்டங்களை மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு மூன்று கதவுகள் கொண்ட டிஃபென்டர் மாடலின் முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் மூத்த நிதி அலுவலர் அட்ரியன் மார்டெல் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் உற்பத்தி, விற்பனை என அனைத்து பணிகளையும் முழுமையாக இடையூறை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும், தற்போதைய காலக்கட்டத்திலும் புதிய டிஃபென்டர் மாடலை வாங்க சுமார் 21 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக மார்டெல் தெரிவித்து இருக்கிறார்.
பென்ட்லி நிறுவனத்தின் புதிய பென்ட்யகா ஃபேஸ்லிப்ட் மாடலின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
பென்ட்லி நிறுவனம் புத்தம் புதிய பென்ட்யகா ஃபேஸ்லிப்ட் மாடல் சர்வதேச சந்தையில் ஜூன் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய டீசர் வீடியோவில் புதிய மாடல் விவரங்கள் தெரியவந்துள்ளது.
டீசர் வீடியோவில் புதிய காரில் ஓவல் வடிவ ஹெட்லேம்ப்கள், அனலாக் கடிகாரம், ஸ்பீடோமீட்டர், ஸ்டீரிங் வீல், ஸ்பீக்கர், அலாய் வீல்கள், என்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய விவரங்களில் இதே அம்சங்கள் வழங்கப்படுவதாக கூறப்பட்டது.

புதிய பென்ட்யகா ஃபேஸ்லிப்ட் மாடலில் 3.0 லிட்டர் வி6 பிளக் இன் ஹைப்ரிட் யூனிட், 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 யூனிட், 6.0 லிட்டர் ட்வின் டர்போ டபிள்யூ12 யூனிட் உள்ளிட்ட என்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
முந்தைய ஸ்பை படங்களின் படி பென்ட்யகா ஃபேஸ்லிப்ட் மாடலில் ட்வீக் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள், ஓவல் வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் காரின் முன்புற பம்ப்பர் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் முன்புற குரோம் அம்சங்களில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் பின்புறம் ஸ்பை படங்களில் தெரியவில்லை. எனினும், பின்புறம் மேம்மபட்ட பம்ப்பர் மற்றும் புதுவித டெயில் லைட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் டார்க் எடியஷன் பிஎஸ்6 கார் இந்திய விநியோக விவரங்களை பார்ப்போம்.
டாடா ஹேரியர் டார்க் பிஎஸ்6 ஸ்பெஷல் எடிஷன் மாடலின் விநியோகம் இந்தியாவில் துவங்கியுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் பிஎஸ்6 வெளியீட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் விற்பனையகங்களுக்கு வந்தடைந்த டார்க் எடிஷன் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டில் இயங்கி வரும் விற்பனையகம் ஒன்று புதிய டார்க் எடிஷன் மாடலை வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. ஹேரியர் டார்க் எடிஷன் மாடல் எக்ஸ்இசட், எக்ஸ்இசட் பிளஸ், எக்ஸ்இசட்ஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ பிளஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

புதிய டாடா ஹேரியர் மாடலில் பாதுகாப்பிற்கு ஆறு ஏர்-பேக், ஏபிஎஸ் மற்றும் இபிடி, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளது.
டாடா ஹேரியர் மாடல் மேனுவல் வேரியண்ட் துவக்க விலை ரூ. 17.7 லட்சத்தில் துவங்குகிறது. இதன் ஆட்டோமேடிக் வேரியண்ட் விலை ரூ. 19 லட்சத்தில் துவங்குகிறது. ஹேரியர் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20.25 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2021 கார்னிவல் எம்பிவி கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2021 கார்னிவல் எம்பிவி கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2021 கியா கார்னிவல் நான்காம் தலைமுறை மாடல் ஆகும். 2021 கார்னிவல் மாடலில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கியா கார்னிவல் முன்புறம் டைகர்-நோஸ் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெல்லிய ஹெட்லேம்ப் யூனிட், புதிய எல்இடி டிஆர்எல்கள், ராப்-அரவுண்ட் எல்இடி இன்டிகேட்டர்கள், ஃபாக்ஸ் ஸ்கஃப் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. பின்புறம் புதிய எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கார்னிவல் எம்பிவி மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. புதிய 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் யூனிட் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.
தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் புதிய கார்னிவல் மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறை மாடலை தழுவி உருவாகி இருக்கிறது.
பிஎம்டபிள்யூ குழுமத்தின் புதிய லோகோ இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ குழுமம் இந்தியாவில் தனது புதிய லோகோவினை அறிமுகம் செய்துள்ளது. புதிய லோகோ ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தகவல் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது. இத்துடன் புதிய லோகோ நிறுவனத்தின் புதிய பிராண்டு வடிவமைப்பை பிரதிபலிக்கும் என கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் முக்கியத்துவத்தை பரைசாற்றும் வகையில் புதிய லோகோ வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தொழில்நுட்பத்த துறைக்கு மாறுவதை குறிக்கும் வகையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் வாடிக்கையாளர்களுடனான உறவை என்றும் கொண்டாடி இருக்கிறது. மேலும் பல்வேறு புதுமை மிக்க வாகனங்கள் மற்றும் சேவைகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வரிசையில் தற்சமயம் புதிய லோகோ வெளிப்படைத்தன்மை மற்றும் தெளிவான பார்வையை குறிக்கும் என பிஎம்டபிள்யூ இந்தியா குழுமத்தின் அர்லிண்டோ டெய்க்சிரா தெரிவித்தார்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 8 சீரிஸ் எடிஷன் கோல்டன் தண்டர் மாடல் வெளியீட்டு நிகழ்வுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.
ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் எடிஷன் கோல்டன் தண்டர் மாடலை அறிமுகம் செய்தது. இந்த கார் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய ஸ்பெஷல் எடிஷன் கார் மாடல்கள் ஜெர்மனியில் உள்ள டிங்கோல்ஃபிங் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கோல்டன் தண்டர் மாடலின் வெளிப்புறம் ஃபுரோசன் பிளாக் மெட்டாலிக் அல்லது சஃபையர் பிளாக் மெட்டாலிக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் எடிஷன் கோல்டு தண்டர் பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் அனைத்து வேரியண்ட் மற்றும் மாடல்களில் கிடைக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கிரான் கூப், பிஎம்டபிள்யூ 840ஐ, பிஎம்டபிள்யூ 840டி எக்ஸ்டிரைவ் உள்ளிட்டவைகளில் ஸ்பெஷல் எடிஷன் ஃபினிஷ் செய்து கொள்ள முடியும்.
இந்த ஸ்பெஷல் எடிஷன் வாகனங்களில் எம் ஸ்போர்ட்ஸ் பேக்கேஜ் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா காருக்கு மூன்றாம் தலைமுறை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
புத்தம் புதிய ஸ்கோடா ஆக்டேவியா காருக்கு புதிய தலைமுறை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இது 10 இன்ச் டிஸ்ப்ளே ஆகும். இந்த சிஸ்டம் காரின் செட்டிங்களை தொடுதிரை, ஜெஸ்ட்யூர் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை கொண்டு இயக்க முடியும்.
புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொலம்பஸ், ஸ்விங் மற்றும் பொலிரோ என மூன்று வகைகளில் கிடைக்கிறது. மூன்று சிஸ்டம்களும் 10 இன்ச் டிஸ்ப்ளே ஸ்கிரீன் கொண்டிருக்கின்றன. இதில் உள்ள ஐகான்ளை ஸ்மார்ட்போனில் மாற்றுவதை போன்றே மிக எளிமையாக மாற்ற முடியும்.

காரினுள் வால்யூம் மாற்றுவதற்கான கண்ட்ரோல் பட்டன்கள் ஸ்டீரிங் வீல் மற்றும் புதிய டச் ஸ்லைடர் உள்ளிட்டவற்றில் வழங்கப்பட்டு இருக்கிறது. ஒற்றை விரல் கொண்டு வால்யூம் மாற்ற முடியும். இரு விரல்களை கொண்டு நேவிகேஷன் மேப் அளவினை மாற்றிக் கொள்ளலாம்.
புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்கள் வயர்லெஸ் ஸ்மார்ட்லின்க் தொழில்நுட்பம் கொண்டு ஆப்பிள் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து கொள்கிறது. ஒருமுறை இணைக்கப்பட்டு விட்டால், அடுத்தமுறை காரினுள் சென்றதும் ஸ்மார்ட்போன் தானாக காருடன் இணைந்து கொள்ளும்.
ஆடி நிறுவனத்தின் புதிய கார் முன்பதிவு இந்திய சந்தையில் துவங்கப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஆடி நிறுவனம் தனது புத்தம் புதிய ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கார் வெளியீட்டை ஆடி ஏற்கனவே அறிவித்துவிட்டது.
அந்த வகையில் வெளியீட்டுக்கு முன் புதிய ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடலுக்கான முன்பதிவினை ஆடி நிறுவனம் துவங்கி இருக்கிறது. புதிய கார் முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனையகங்களில் நடைபெறுகிறது. ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரின் விநியோகம் ஆகஸ்ட் மாத வாக்கில் துவங்கும் என ஆடி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் புதிய காரை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.
ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 600 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.6 நொடிகளில் எட்டிவிடும்.
மெக்லாரென் நிறுவனம் தனது 720எஸ் மாடலின் லீ மேன்ஸ் ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது.
மெக்லாரென் நிறுவனம் லீ மேன்சில் 24 மணி நேர போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், 720எஸ் கூப் மாடலை தழுவி 720எஸ் லீ மேன்ஸ் ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் உலகில் மொத்தம் 50 யூனிட்களே விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
புதிய லீ மேன்ஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் லீ மேன்சில் மெக்லாரெனின் 25 ஆண்டுகளை சிறப்பிக்கும் லோகோ பொருத்தப்பட்டுள்ளது. புதிய காரின் VIN அனைத்தும் 298 எனும் எண்ணில் துவங்கும். புதிய ஸ்பெஷல் எடிஷனின் வெளிப்புறம் மெக்லாரென் ஆரஞ்சு மற்றும் சார்த் கிரே நிறங்களை கொண்டிருக்கின்றன.
இத்துடன் பக்கவாட்டில் மெக்லாரென் 25 ஆண்டுகள் லீ மேன்ஸ் லோகோ பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் கிளாஸ் பிளாக் ரூஃப் ஸ்கூப், கார்பன் ஃபைபர் லோவர் செய்யப்பட்ட முன்புற ஃபென்டர்கள், ஐந்து ஸ்போக் கொண்ட எல்எம் வீல்கள், கோல்டு நிற பிரேக் கேலிப்பர்கள் மற்றும் காண்டிராஸ்ட் கிளாஸ் பிளாக் பாடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மெக்லாரென் 720எஸ் லீ மேன்ஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 4.0 லிட்டர், ட்வின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 720 பிஹெச்பி பவர், 770 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடும்.
மெக்லாரென் 720எஸ் லீ மேஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் மெக்லாரென் எஃப்1 ஜிடிஆர் #59 மாடல் என்டியூரன்ஸ் பந்தயத்தில் வெற்றி பெற்றதன் 25 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த காரினை ஜெஜெ லெட்டோ, யானிக் டல்மாஸ் மற்றும் மசோன்ரி செக்யா ஆகியோர் ஓட்டினர். மற்ற மூன்று மெக்லாரென் எஃப்1 ஜிடிஆர் மாடல்கள் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பிடித்தன.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறை கியா கார்னிவல் எம்பிவி கார் மாடலின் டீசரை வெளியிட்டுள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய தலைமுறை கார்னிவல் எம்பிவி மாடலின் முதல் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புதிய கார்னிவல் எம்பிவி மாடல் பல்வேறு புதிய அப்டேட்களுடன், அதிநவீன அம்சங்கள் மற்றும் மாற்றங்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கார்னிவல் மாடலின் சர்வதேச வெளியீடு இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விற்பனை சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து துவங்கும் என கூறப்படுகிறது. புதிய கார் வடிவமைப்பு கூர்மையாகவும், அதிநவீன தோற்றம் கொண்டிருக்கும் என தெரிகிறது.

காரின் முன்புறம் மேம்பட்ட டைகர்-நோஸ் கிரில், இருபுறங்களிலும் எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்சமயம் விற்பனை செய்யப்படும் கியா கார்னிவல் மாடலில் 2.2 லிட்டர் வி.ஜி.டி. பி.எஸ்.6 டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 197 பி.ஹெச்.பி. பவர், 440 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஸ்போர்ட்மேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.






