என் மலர்tooltip icon

    இது புதுசு

    டுகாட்டி நிறுவனத்தின் சூப்பர்லெகரா வி4 மோட்டார்சைக்கிளின் உற்பத்தி பணிகளை துவங்கி உள்ளது.



    டுகாட்டி நிறுவனம் தனது சூப்பர்லெகரா வி4 மோட்டார்சைக்கிளின் உற்பத்தி பணிகளை துவங்கியது. புதிய வி4 மாடலின் முதல் யூனிட் இத்தாலியில் உள்ள போர்கோ பேனிகேல் ஆலையில் இருந்து வெளியாகி உள்ளது.

    உலகில் மொத்தமாக இந்த மோட்டார்சைக்கிள் 500 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் முதல் வாகனம் தான் தற்சமயம் உற்பத்தி ஆலையில் இருந்து வெளியாகி இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள்களின் சேசிஸ் நம்பருடன் ஒற்று போகும் புரோகிரெசிவ் எண் ஸ்டீரிங் ஹெட் மற்றும் இக்னிஷன் கீயில் தெரியும்.   

    டுகாட்டி சூப்பர்லெகரா வி4

    புதிய சூப்பர்லெகரா வி4 மோட்டார்சைக்கிளில் டெஸ்மோசெடிசி ஸ்டிரேடிள் வி4 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 224 பிஹெச்பி பவர், 115 என்எம் டார்க் செயல்திரன் வழங்குகிறது. இத்துடன் அக்ராபோவிக் ஃபுல் சிஸ்டம் எக்சாஸ்ட் இதன் திறனை 234 பிஹெச்பி செயல்திறனை வழங்குகிறது. 

    இதன் ரேசிங் கிட்- கார்பன் ஃபைபர் ஓபன் கிளட்ச் ஓவர், ஸ்விங் ஆம் கவர், ஹெட்லேம்ப் ரீபிளேஸ்மென்ட் கிட், டெயில் கிடி கிட், சைடு ஸ்டான்டு ரிமூவல் கிட், பிலெட் அலுமினியம் மிரர் ரீபிளேஸ்மென்ட் கேப், ரேசிங் ஃபியூயல் கேப், பிரேக் லீவர் ப்ரோடெக்டர்கள், மோட்டார்சைக்கிள் கவர் மற்றும் பேட்டரி சார்ஜர் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கிறது.
    டிரையம்ப் டைகர் 900 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.



    இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் டைகர் 900 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டைகர் 900 மோட்டார்சைக்கிள் துவக்க விலை ரூ. 13.7 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15.5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய டிரையம்ப் டைகர் 900 ரேலி வேரியண்ட் விலை ரூ. 14.35 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிரையம்ப் டைகர் 900 மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இவற்றுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    டிரையம்ப் டைகர் 900

    புதிய டைகர் 900 மாடலில் IMU சார்ந்த ஏபிஎஸ் சிஸ்டம், பை டைரெக்ஷனல் குவிக் ஷிஃப்டர், ரெயின், ரைடர், ரோட், ஸ்போர்ட், ஆஃப் ரோட் மற்றும் ஆஃப் ரோட் ப்ரோ என ஆறுவித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் மை டிரையம்ப் கனெக்டிவிட்டி மாட்யூல் கொண்டிருக்கிறது. 

    புதிய டைகர் 900 மோட்டார்சைக்கிளில் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் 888சிசி இன்லைன் 3 சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 94 பிஹெச்பி பவர், 87 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் 125 ஸ்ப்லிட் ஸ்டிரீட் வேரியண்ட் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
     


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது என்ட்ரி லெவல் பல்சர் 125 மோட்டார்சைக்கிளின் ஸ்ப்லிட் சீட் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 79,091, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    பஜாஜ் பல்சர் 125 ஸ்ப்லிட் சீட்

    புதிய மோட்டார்சைக்கிள் முன்புறம் டிஸ்க் பிரேக் கொண்டிருக்கிறது. இது ஸ்டான்டர்டு வேரியண்ட்டை விட ரூ. 3597 மற்றும் சிங்கிள் சீட் டிரம் பிரேக் வேரியண்ட்டை விட ரூ. 8096 அதிகம் ஆகும். புதிய வேரியண்ட் நியோன் கிரீன், மேட் சில்வர் மற்றும் பிளாக் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. 

    பஜாஜ் பல்சட் 125 ஸ்ப்லிட் சீட் வேரியண்ட்டிலும் 125சிசி பிஎஸ்6 டிடிஎஸ்-ஐ என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 11.6 பிஹெச்பி பவர், 10.8 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    ஜீப் இந்தியா நிறுவனம் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிப்ட் வெளியீட்டை தொடர்ந்து புதிய ஜீப் வேரியண்ட்டை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



    ஜீப் நிறுவனம் 2021 காம்பஸ் ஃபேஸ்லிப்ட் மாடலை சில தினங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் வெளியிட்டது. புதிய 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிப்ட் சில அப்டேட்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. புதிய காம்பஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏழு பேர் பயணிக்கக்கூடிய ஜீப், Low D 3-row எனும் குறியீட்டு பெயர் கொண்ட எஸ்யுவி மாடல் ஜீப் கிராண்ட் காம்பஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கார் இந்தியாவில் ஜீப் ஃபேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதும் வெளியாகும் என கூறப்படுகிறது.

    ஜீப் கிராண்ட் காம்பஸ்

    ஜீப் கிராண்ட் காம்பஸ் சாதாரண காம்பஸ் மாடலை விட நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வடிவமைப்பு பார்க்க காம்பஸ் ஃபேஸ்லிப்ட் மாடலை தழுவி இருக்கும் என கூறப்படுகிறது. புதிய காரில் மேம்பட்ட கிரில் வடிவமைப்பு, மேம்பட்ட ஹெட்லேம்ப் மற்றும் பம்ப்பர்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    புதிய ஜீப் கிராண்ட் காம்பஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் இதன் விற்பனை அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சமீபத்தில் ஜீப் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 ரக காம்பஸ் மாடல்களை ரூ. 16.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்தது. இத்துடன் ஸ்போர்ட் வேரியண்ட் விற்பனையை நிறுத்தியது. தற்சமயம் ஸ்போர்ட் பிளஸ் இந்த எஸ்யுவி மாடலின் புதிய பேஸ் வேரியண்ட் ஆகியுள்ளது.
    போர்ஷ் நிறுவனம் இந்திய சந்தையில் பனமெரா ஸ்பெஷல் எடிஷன் மாடலினை அறிமுகம் செய்துள்ளது.



    ஜெர்மன் நாட்டு ஸ்போர்ட் கார் உற்பத்தியாளரான போர்ஷ் இந்திய சந்தையில் பனமெரா ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய பனமெரா 4 10 Years எடிஷன் விலை இந்தியாவில் ரூ. 1.60 கோடி, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இது போர்ஷ் நிறுவனம் இந்திய சந்தையில் பத்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் பனமெரா 4 ஆல்-வீல்-டிரைவ் வெர்ஷனை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 21 இன்ச் அலாய் வீல்கள், பனமெரா 10 பேட்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

    போர்ஷ் பனமெரா 4

    போர்ஷ் பனமெரா 4 10 Years எடிஷன் மாடலில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், போர்ஷ் டைனமிக் லைட் சிஸ்டம் பிளஸ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ரியர்-வியூ கேமரா, பானரோமிக் சன்ரூஃப், போஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய காரில் 2.8 லிட்டர் வி6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 226 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

    இவைதவிர புதிய போர்ஷ் மாடலில் பல்வேறு அதிநவீன அம்சங்கள், உபகரணங்கள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
    ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ பிளக்ஸ் எடிஷன் மாடல் தென் கொரிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஹூண்டாய் நிறுவனம் வென்யூ காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் பிளக்ஸ் எடிஷனை தென் கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய வென்யூ பிளக்ஸ் எடிஷன் டூயல் டோன் கிரே/கிரீன் நிறத்தில் கிடைக்கிறது.

    காரின் வெளிப்புறம் ஹாட் ஸ்டாம்ப் கிரில் மற்றும் டைமண்ட் வடிவ குரோம் பேட்டன் கொண்டுள்ளது. இதன் முன்புற பம்ப்பர், ரூஃப், ORVM, பின்புறம் பம்ப்பர் மற்றும் பக்கவாட்டில் ஆசிட் கிரீன் இன்சர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் சி பில்லரில் வி வடிவ பேட்ஜ் கிரீன் அக்சென்ட்களுடன் வழங்கப்பட்டுள்ளது. 

    ஹூண்டாய் வென்யூ பிளக்ஸ் எடிஷன்

    புதிய பிளக்ஸ் எடிஷனில் 1.6 லிட்டர் ஸ்மார்ட்ஸ்டிரீம் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 123 பிஎஸ் பவர், 154 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் ஐவிடி கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வென்யூ மாடல் பிஎஸ்6 ரக 1.5 லிட்டர் CRDI டீசல், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    தென் கொரியாவில் ஹூண்டாய் வென்யூ பிளக்ஸ் எடிஷன் விலை இந்திய மதிப்பில் ரூ. 13.44 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இது முந்தைய மாடல்களை விட ரூ. 1.93 லட்சம் வரை அதிகம் ஆகும்.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை எக்ஸ்யுவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்களின் வெளியீடு திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



    மஹிந்திரா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை எக்ஸ்யுவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்களின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் அடுத்த தலைமுறை எக்ஸ்யுவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்கள் 2021-22 நிதியாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    புதிய தலைமுறை ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யுவி500 எஸ்யுவி மாடல்கள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. முன்னதாக இரு மாடல்களையும் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டு இருந்தது.

    மஹிந்திரா எக்ஸ்யுவி500

    எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அடுத்த தலைமுறை எக்ஸ்யுவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்களின் வெளியீட்டை மஹிந்திரா நிறுவனம் ஒத்திவைத்து இருக்கிறது. இதனை மஹிந்திரா நிறுவன நிர்வாக இயக்குனர் பவன் கோயன்கா நிதிநிலை அறிக்கை வெளியீட்டின் போது தெரிவித்தார்.
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்7 எம்50டி பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எக்ஸ்7 எஸ்யுவி மாடலின் டாப் எண்ட் டீசல் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எம்50டி மாடலின் துவக்க விலை ரூ. 1.63 கோடி, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய காரின் முன்புறம் பிரம்மாண்ட பம்ப்பர், பெரிய ஏர்-இன்டேக் புதிய மெஷ் கிரில், ஃபாக் லேம்ப்கள், பக்கவாட்டுகளில் எம் பேட்ஜ் கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்போர்டி எக்சாஸ்ட், 21 இன்ச் எம் ஸ்டைல் லைட்-அலாய் வீல்கள் மற்றும் 22 இன்ச் அலாய் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எம்50டி

    பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எம்50டி மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்களை கொண்டிருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை தற்போதைய மாடலில் இருந்ததை போன்றே இருக்கிறது. 

    காரின் உள்புறம் 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 12.3 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்டிருக்கிறது. 

    புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எம்50டி மாடலில் 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 395 பிஹெச்பி பவர், 760 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    எம்ஜி மோட்டார் நிறுவனம் அசத்தல் அம்சங்கள் நிறைந்த எம்ஜி ஜி10 காரினை சீன சந்தையில் அறிமுகம் செய்தது.



    எம்ஜி மோட்டார் நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் ஃபுல் சைஸ் எஸ்யுவி, எம்பிவி மற்றும் பல்வேறு மாடல்களை காட்சிப்படுத்தியது. இவற்றில் எம்ஜி ஜி10 மாடலும் அடங்கும். இதனை எம்ஜி நிறுவனம் சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 

    இதே மாடல் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன சந்தையில் எம்ஜி ஜி10 விலை இந்திய மதிப்பில் ரூ. 15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இதன் விலை சற்றே அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    எம்ஜி ஜி10

    எம்ஜி ஜி10 மாடல் கியா கார்னிவல் போன்றே பல்வேறு இருக்கை ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 223 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இத்துடன் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 162 பிஹெச்பி பவர், 375 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2021 சிஎல்எஸ் மாடல் காரினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2021 சிஎல்எஸ் மாடல் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2021 சிஎல்எஸ் மாடல்- மோஜேவ் சில்வர் மற்றும் சர்ரஸ் சில்வர் என இரண்டு புதிய நிறங்கள் மற்றும் புதிய பிளாக் அலாய் வீல்களுடன் கிடைக்கிறது. இதன் விங் மிரர்களும் கிளாஸ் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    காரினுள் MBUX இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் COMAND சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இத்துடன் பிரேக் அசிஸ்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    2021 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ்

    2021 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் மாடலில் 3.0 லிட்டர் இன்லைன், 6 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் மற்றும் இகியூ பூஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 358 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதுதவிர இதே என்ஜின் 425 பிஹெச்பி மற்றும் 581 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் டியூனிங்கிலும் கிடைக்கிறது.

    புதிய சிஎல்எஸ் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.4 நொடிகளில் எட்டிவிடும். இதன் 4 மேடிக் 4WD வேரியண்ட் இதே வேகத்தை 4.8 நொடிகளிலும், சாதாரன சிஎல்எஸ் மாடல் 5.1 நொடிகளில் எட்டும் திறன் கொண்டிருக்கின்றன.  
    ஜீப் நிறுவனத்தின் 2021 காம்பஸ் ஃபேஸ்லிப்ட் எஸ்யுவி மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஜீப் நிறுவனம் 2021 காம்பஸ் ஃபேஸ்லிப்ட் எஸ்யுவி மாடலினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது. புதிய ஜீப் காம்பஸ் மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிப்ட் மாடலை சுற்றி அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில், முன்புறம் புதிய ஹனிகொம்ப் மெஷ், ஏழு ஸ்லாட் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹெட்லேம்ப்களில் மாற்றம் செய்யப்பட்டு இன்டகிரேட் செய்யப்பட்ட டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    2021 ஜீப் காம்பஸ்

    மேலும் மேம்பட்ட முன்புறம் பம்ப்பர், ஃபாக் லேம்ப் ஹவுசிங், புதிய அலாய் வீல்கள், டெயில் லைட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. காரின் உள்புறம் முந்தைய மாடலை விட அதிக பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் 8.4 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 128 பிஹெச்பி மற்றும் 270 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
    டொயோட்டா நிறுவனம் 2021 ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிப்ட் மாடல் காரினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.



    டொயோட்டா நிறுவனம் 2021 ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிப்ட் மாடலினை தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது. புதிய டொயோட்டா ஃபார்ச்சுனர் ஃபேஸ்லிப்ட் மாடலில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலில் கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவம் கொண்ட எல்இடி டே-டைம் ரன்னிங் லைட்கள், முன்புறம் பெரிய கிரில், மேம்பட்ட முன்புற பம்ப்பர், எல்இடி ஃபாக் லேம்ப்கள், பெரிய ஏர் இன்டேக், ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    2021 டொயோட்டா ஃபார்ச்சூனர்

    காரின் உள்புறம் தற்போதைய மாடலில் உள்ள கேபின் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதில் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலில் 2.8 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே என்ஜின் தற்போதைய மாடலில் 177 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. எனினும், 2021 மாடலில் இந்த என்ஜின் 204 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. 
    ×