என் மலர்
இது புதுசு
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 450 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது ஜிஎல்இ எஸ்யுவி மாடலின் இரண்டு புதிய வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இவை ஜிஎல்இ 450 4மேடிக் மற்றும் ஜிஎல்இ 400டி 4மேடிக் என அழைக்கப்படுகிறது. இதில் டாப் எண்ட் மாடலான ஜிஎல்இ 450 4மேடிக் பெட்ரோல் மாடல் விலை ரூ. 88.80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 4டி 4மேடிக் டீசல் வேரியண்ட் டாப் எண்ட் ஜிஎல்இ 400டி ஹிப்-ஹாப் எடிஷனின் கீழ் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. புதிய ஜிஎல்இ 400டி விலை ரூ. 89.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதன் எலெக்ட்ரிக் மோட்டார் 22 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க் கூடுதல் செயல்திறன் வழங்குகிறது. ஹைப்ரிட் பவர்டிரெயினுடன் 9ஜி-டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அத்தியாவசியமாக இயக்கப்படும் 2 பேருந்துகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டுக்கு பணம் செலுத்தும் முறைக்கான சோதனை துவங்கியுள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவும் தடுப்பு நடவடிக்கையின் அங்கமாக மாநகர் போக்குவரத்து கழக பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நடத்துனரின் பாதுகாப்பு கருதி, டிக்கெட்டுக்கான பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேருந்தில் ஒட்டப்பட்டு இருக்கும் கியூஆர் கோடினை பயன்படுத்தி பேடிஎம் (Patym), கூகுள் பே (Google pay), போன் பே (Phone pe), அமேசான் பே (Amazon pay) போன்ற செயலிகள் மூலம் டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்த முடியும். டிக்கெட் கட்டணம் மாநகர போக்குவரத்து கழகத்தின் வங்கி கணக்குக்கு நேரடியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது மேம்பட்ட ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடலான 2020 ஜிஎல்எஸ் காரை இந்திய சந்தையில் ஜூன் 17 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் மார்டின் வென்க் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
புதிய ஆடம்பர எஸ்யுவி மாடலுக்கான டீசரை மெர்சிடிஸ் பென்ஸ் தனது வலைதளத்திலும் பதிவேற்றம் செய்திருக்கிறது. தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய மாடலில் அதிக இடவசதி மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் மாடல் முந்தைய மாடலை விட 77எம்எம் நீளமாகவும், 22 எம்எம் அகலமாகவும் இருக்கிறது. இத்துடன் புதிய காரின் வீல்பேஸ் பழைய மாடலை விட நீளமாக இருக்கிறது. இதனால் காரின் இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு இருக்கைகளில் அமர்வோருக்கு அதிக இடவசதி கிடைக்கும் என தெரிகிறது.

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரில் 3.0 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் 285 பிஹெச்பி பவர், 600 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 3.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் 366 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட்டின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஸ்கோடா நிறுவனம் தனது ரேபிட் டிஎஸ்ஐ மாடலில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியை இந்திய சந்தையில் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் ரேபிட் டிஎஸ்ஐ டாப் ண்ட் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய ரேபிட் டிஎஸ்ஐ மாடலில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே யூனிட் ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு பிராண்டுகளும் உபகரணங்களை மாற்றி பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.

புதிய செடான் மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில்லைட்கள், 16 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளை கொண்டிருக்கிறது.
ஒலா நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஒலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் நெதர்லாந்தை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான எடெர்கோ பிவி-யை கையகப்படுத்தி இருக்கிறது. மேலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியா மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் 2021 ஆண்டு வாக்கில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எடெர்கோ நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் வாகனமாக ஆப்ஸ்கூட்டரை உருவாக்கி இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் உலகம் முழுக்க பல்வேறு விருதுகளை வென்று இருக்கிறது. 2019 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் இந்த ஸ்கூட்டர் அதன் வடிவமைப்பு மற்றும் பொறியியல் திறனுக்காக புகழ்பெற்றது.

இவற்றை முழுமையாக சார்ஜ் செய்ய 2 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். ஆப்ஸ்கூட்டரில் மொத்தம் மூன்று பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் 80 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
மெர்சிடிஸ் நிறுவனத்தின் 2020 ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2020 ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடல் துவக்க விலை ரூ. 2.48 கோடி, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடலில் புதிய ஹெட்லேம்ப்கள், மேம்பட்ட பம்ப்பர் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய 2020 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடல் முந்தைய மாடலை விட எடை குறைவாக இருக்கிறது.
சிறு மாற்றங்கள் தவிர 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் காரில் முந்தைய மாடலில் உள்ள அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி புதிய காரில் பேன்-அமெரிக்கா கிரில், 20 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடல் கேபினில் விர்ச்சுவல் காக்பிட், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்ட்டெட் தொழில்நுட்பம் மற்றும் இதர அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.
2020 ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடலில் 4.0 லிட்டர் பை-டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 577 பிஹெச்பி பவர், 700 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது மணிக்கு அதிகபட்சமாக 317 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஏஎம்ஜி சி63 கூப் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஒருவழியாக ஏஎம்ஜி சி63 கூப் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் கிடைக்கும் சி சீரிஸ் மாடல்களில் புதிய ஏஎம்ஜி சி63 டாப் எண்ட் மாடல் ஆகும். முன்னதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடலை அறிமுகம் செய்தது. இரு மாடல்களும் டிஜிட்டல் முறையில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன,
மேலும் புதிய மாடல்கள் ஊரடங்கு காலகட்டத்தில் மெர்சிடிஸ் அறிமுகம் செய்துள்ள முதற்கட்ட வாகனங்கள் ஆகும். புதிய சி கிளாஸ் மாடலில் பேனமெரிக்கா கிரில், ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டிஆர்எல்கள், மஸ்குலர் பொனெட், புதிய முன்புற பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

காரின் உள்புறம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்போர்ட்டி பிளாக் மற்றும் ரெட் லெதர் ரேஸ்-ஸ்டைல் பக்கெட் சீட்கள், ஃபிளாட்-பாட்டம் ஸ்டீரிங் வீல், கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட சென்ட்ரல் கன்சோல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய மெர்சிடிஸ் ஃபிளாக்ஷிப் மாடலில் மொத்தம் ஆறு வெவ்வேறு டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய காரில் பிஎஸ்6 ரக 4.0 லிட்டர் பை-டர்போ வி8 என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 469 பிஹெச்பி பவர், 650 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஏஎம்ஜி ஸ்பீடுஷிஃப்ட் 9 ஜி டிரானிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடலின் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் ஊரடங்கு நிறைவுற்றதும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹூண்டாய் நிறுவன தலைவர் தருன் கார்க் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் புதிய டக்சன் ஃபேஸ்லிப்ட் இந்தியாவில் ஊரடங்கு நிறைவுற்றதும் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தார். மேலும் புதிய எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.
புதிய ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் டக்சன் மாடலின் வெளிப்புறம் பம்ப்பர்கள் ட்வீக் செய்யப்பட்டு, பென்டா எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லைட் யூனிட்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், 18 இன்ச் டைமண்ட் கட் வீல்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
2020 ஹூண்டாய் டக்சன் காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 182 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 150 பிஹெச்பி பவர், 192 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. எந்த வேரியண்ட்டிலும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படவில்லை.
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாகன ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் காலாவதியான வாகன ஆவணங்களுக்கான வேலிடிட்டி நீட்டிக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு மற்றும் சரிபார்ப்பு சான்று போன்றவை அடங்கும்.
அனைத்து விதமான வாகன ஆவணங்களுக்கான வேலிடிட்டி ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பின் காலாவதியான ஆவணங்களுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட நாடுதழுவிய ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ஆவணங்களுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்களை புதுப்பிக்க வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துடன் அரசு அறிக்கையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக ஏற்கனவே ஒருமுறை வாகன ஆவணங்களின் வேலிடிட்டி ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரெனால்ட் நிறுவனத்தின் 2020 கேப்டூர் மாடல் ரஷ்ய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
2020 ரெனால்ட் கேப்டூர் கார் ரஷ்ய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் இந்த ஆண்டு வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 2020 கேப்டூர் மாடலின் வெளிப்புறம், உள்புறம் மற்றும் என்ஜின் அம்சங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 2020 கேப்டூர் மாடல் காரில் புதிய குரோம் கிரில், புதுவித அலாய் வீல்கள், டூயல் டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் பார்க்க ஃபேஸ்லிப்ட் மாடலை போன்று காட்சியளிக்கிறது. காரின் உள்புறத்தில் 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல் டிசைன், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

இத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் ரெனால்ட் நிறுவனத்தின் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. கிளாஸ் பிளாக் சென்ட்ரல் பேனல், பிரீமியம் போஸ் ஆடியோ சிஸ்டம், ஆம்பியன்ட் மூட் லைட்னிங் உள்ளிட்ட வசதிகளும் புதிய கேப்டூர் மாடலில் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்கு புதிய கேப்டூர் மாடலில் 360 டிகிரி கேமரா, பிளைன்ட் ஸ்பாட் மாணிட்டரிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி, வேகமாக செல்லும் போது எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரஷ்யாவில் அறிமுகமாகி இருக்கும் கேப்டூர் மாடலில் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களும் முறையே 113 பிஹெச்பி பவர் மற்றும் 154 பிஹெச்பி பவர் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பெட்ரோல் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மாருதி சுசுகி நிறுவனம் தனது உற்பத்தி ஆலை மற்றும் விற்பனை மைய பணிகளை துவங்கியுள்ளது. மெல்ல வியாபாரத்தை துவங்கியுள்ள மாருதி சுசுகி விரைவில் பிஎஸ்6 ரக எஸ் கிராஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

முன்னதாக புதிய எஸ் கிராஸ் மாடலின் டீசர்களை மாருதி சுசுகி வெளியிட்டிருந்தது. 2020 மாருதி எஸ் கிராஸ் மாடல் நெக்சா விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் இந்தியாவில் ஜூன் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்ய்படும் என தெரிகிறது.
இதற்கான முன்பதிவுகள் தேர்வு செய்யப்பட்ட சில விற்பனையகங்களில் துவங்கப்பட்டுள்ளது. புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புகிய கார் அறிமுகம் செய்யப்பட்டதும் அதன் விநியோகம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கொரோனா பாதிப்பிலும் முந்தைய திட்டப்படி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கியா சொனெட் மாடல் கார் இந்தியாவில் திட்டமிட்டப்படி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சந்தையில் கியா சொனெட் மாடல் இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. எனினும், கியா சொனெட் மாடல் திட்டமிட்டப்படி அறிமுகம் செய்யப்படும் என கியா மோட்டார்ஸ் இந்தியா விற்பனை மற்றும் விளம்பர பிரிவு தலைவர் மனோகர் பட் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். எனினும், நாடு தழுவிய ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால், இதன் அறிமுகம் தள்ளிபோகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

புதிய மாடலை அறிமுகம் செய்வதன் மூலம் ஊரடங்கு நிறைவுற்றதும் கியா நிறுவனம் வாடிக்கையாளர்களை விற்பனை மையங்களுக்கு வரவழைக்க முயற்சிக்கிறது. மேலும் பண்டிகை காலத்தில் புதிய வாகனத்தை அறிமுகம் செய்வதன் மூலம் விற்பனையை ஊக்குவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
வெளியீட்டிற்கு முன் கியா சொனெட் மாடல் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கான்செப்ட் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதுதவிர புதிய சொனெட் மாடல் இந்தியாவில் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.






