என் மலர்
கார்
நிசான் இந்தியாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கிக்ஸ் எஸ்.யு.வி. காரின் வீடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. #Nissan #NissanKicks
நிசான் இந்தியாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கிக்ஸ் எஸ்.யு.வி. கார் புதிய வீடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. தற்போதைய டெரானோ மாடலுக்கு மாற்றாக அமையலாம் என கூறப்படுகிறது.
புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலின் தயாரிப்பு பணிகள் சென்னையில் இயங்கி வரும் ஆலையில் ஏற்கனவே துவங்கி விட்டது. தற்சமயம் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் வீடியோவில் நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலில் வி-மோஷன் கிரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்., 17-இன்ச் 5-ஸ்போக் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது.
புதிய நிசான் கிக்ஸ் ஒரு மாதத்திற்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நிசான் விற்பனை எதிர்பார்த்த அளவு அதிகமாக இல்லாத நிலையில், புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. மூலம் நிசான் தனது விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

நிசான் கிக்ஸ் மாடல் 4834எம்.எம். நீளமாகவும், 1813 எம்.எம். அகலமாகவும், 1656எம்.எம். உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2,673 எம்.எம். அளவில் சிறப்பான இன்டீரியர் இடவசதியை வழங்குகிறது. கூடுதலாக புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. பிரத்யேக கிராஃபீன் பாடி கொண்டிருக்கிறது.
ஐந்து பேர் அமரக்கூடிய எஸ்.யு.வி. மாடலில் அரவுன்ட் வியூ மானிட்டர் என அழைக்கப்படும் 360-டிகிரி கேமரா அருகில் உள்ள அசையும் பொருட்களை கண்டறியும் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்திற்கென காரை சுற்றி மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அம்சம் நிசான் கிக்ஸ் சர்வதேச மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களுடன் நிசான் கிக்ஸ் கிடைக்கிறது. இதன் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுல் அல்லது CVT கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
இந்தியாவில் புதிய நிசான் கிக்ஸ் கார் ஹூன்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 உள்ளிட்ட மாடல்களுககு போட்டியாக அமையும்.
புதிய நிசான் கிக்ஸ் வீடியோ டீசர்:
மாருதி சுசுகி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மேம்படுத்தப்பட்ட எர்டிகா கார் ஒரே வாரத்தில் சுமார் 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #MarutiSuzuki #Ertiga
மாருதி சுசுகி நிறுவனத்தின் 2018 எர்டிகா கார் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் பல்வேறு புதிய மாற்றங்களுடன் அறிமுகமான புதிய எர்டிகா கார் முன்பதிவு அறிமுக தினத்தன்றே துவங்கியது. பயனர்கள் ரூ.11,000 கட்டணம் செலுத்தி புதிய காரை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் முன்பதிவு துவங்கிய ஒரே வாரத்தில் புதிய 2018 எர்டிகா காரை சுமார் 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய எர்டிகா முன்பதிவு செய்வோர் தங்களது காரை பெற இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க இயங்கி வரும் பல்வேறு விற்பனையாளர்கள் மாருதி சுசுகி 2018 எர்டிகா கார் பெட்ரோல் வேரியன்ட் டீசல் வேரியன்ட்டை விட அதிகளவு முன்பதிவு செய்யப்படுவதாக தெபிவித்துள்ளனர். பெட்ரோல் வேரியன்ட்டில் ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் மாருதி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய எர்டிகா முந்தைய மாடல்களைவிட நீளமாகவும், அகலமாகவும், எடை குறைவாகவும் இருக்கிறது. ஒட்டுமொத்த எர்டிகா கார் 4,395எம்.எம். நீளமாகவும், 1,735 எம்.எம். அகலமாகவும், 1,690 எம்.எம். உயரமாகவும் இருக்கிறது.

முற்றிலும் புதிய வடிவமைப்புடன், முந்தைய மாடல்களை விட அதிக உபகரணங்களை கொண்டுள்ளது. காரின் முன்பக்கம் ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், கிரில் டிசைன், ஸ்போர்ட் பம்ப்பர்கள், ஃபாக் லேம்ப்களும், பக்கவாட்டில் 16-இன்ச் அலாய் வீல்கள், ஸ்விஃப்ட் மாடலில் உள்ளதை போன்றே கோடுகள் இடம்பெற்றிருக்கிறது.
புதிய மாருதி எர்டிகா மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்கள்: 1.5 லிட்டர் பெட்ரோல், 1.3 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் முன்னதாக மேம்படுத்தப்பட்ட சியாஸ் செடான் மாடலில் வழங்கப்பட்டு இருந்தது. புதிய பெட்ரோல் என்ஜின் 1.3 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
டீசல் என்ஜின் 1.3 லிட்டர் DDiS யூனிட் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
புதிய எர்டிகா எம்.பி.வி. மாடல் புதிய பியல் மெட்டாலிக் ஆபன் ரெட், மெட்டாலிக் மேக்மா கிரே, பியல் மெட்டாலிக் ஆக்ஸ்ஃபோர்டு புளு, பியல் ஆர்க்டிக் வைட் மற்றும் மெட்டாலிக் சில்க்கி கிரே என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
வால்வோ ஆட்டோ இந்தியா நிறுவனம் எக்ஸ்.சி.90 வேரியன்ட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் மாடலை அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் தயாரிக்க இருக்கிறது. #VolvoXC90 #Volvo
வால்வோ ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது எக்ஸ்.சி.90 மாடலின் எலெக்ட்ரிக் வேரியன்ட் 2019ம் ஆண்டின் இறுதியில் தயாரிப்பு பணிகள் துவங்கும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டின் துவக்கத்தில் ஹைப்ரிட் வேரியன்ட் மாடலை அறிமுகம் செய்தது. இதன் தற்போதைய விலை ரூ.1.25 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வோல்வோ நிறுவனம் எக்ஸ்.சி.90 கார் மாடலை 2017ம் ஆண்டு முதல் தயாரித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து எஸ்90 மாடலை பெங்களூருவில் உள்ள ஆலையில் தயாரித்தது. செப்டம்பர் மாதத்தில் எக்ஸ்.சி.60 மாடல் அதிகம் விற்பனையாவதாக தெரிவித்தது.
போல்ஸ்டாரின் முதல் எலெக்ட்ரிக் கார் வெளியான பின் வால்வோ XC40 EV (எலெக்ட்ரிக் மாடல்) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வால்வோ XC40 EV மற்றும் XC90 என இரண்டு எஸ்.யு.வி. மாடல்களும் அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் உள்ள தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படுகிறது.

எக்ஸ்.சி.90 டி8 இன்ஸ்க்ரிப்ஷன் மாடலில் 2.0-லிட்டர், டைரக்ட் இன்ஜெக்ஷன், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 320 பி.ஹெச்.பி. பவர், 240என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும். எலெக்ட்ரிக் மோட்டாருடன் எக்ஸ்.சி.90 டி8 இன்ஸ்க்ரிப்ஷன் மாடல் 398 பி.ஹெச்.பி. பவர், 640 என்.எம். டார்கியூ வழங்கும்.
இந்த என்ஜின் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், காரின் பின்புற சக்கரங்களில் எலெக்ட்ரிக் மோட்டாரும், முன்பக்க சக்கரங்களுக்கு பெட்ரோல் என்ஜின் மூலம் இயங்குகிறது. எலெக்ட்ரிக் மோட்டாருடன் எக்ஸ்.சி.90 டி8 இன்ஸ்க்ரிப்ஷன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 32 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும், மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6 நொடிகளில் கடக்கும் என தெரிகிறது.
மஹிந்திரா நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் அல்டுராஸ் ஜி4 காரின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #AlturasG4 #Mahindra
மஹிந்திரா நிறுவனம் அல்டுராஸ் ஜி4 எஸ்.யு.வி. கார் மாடலை இந்தியாவில் நவம்பர் 24ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய எஸ்.யு.வி. காரின் விவரங்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக இந்த கார் யு400 எஸ்.யு.வி. என்ற பெயரில் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய அல்டுராஸ் ஜி4 மஹிந்திரா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலாக இருக்கிறது. மேலும் இது மஹிந்திரா பேட்ஜிங் கொண்ட சங்யோங் ரெக்ஸ்டான் நான்காம் தலைமுறை மாடல் ஆகும்.
காரின் வெளிப்புற வடிவமைப்பின் படி ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், 18-இன்ச் 5-ஸ்போக் அலாய் வீல்கள், மஹிந்திரா லோகோ கொண்ட கிரில் கொண்டிருக்கிறது.
மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உயர் ரக 4WD மாடலில் டூயல் சோன் கிளைமேட் கன்ட்ரோல் வசதி, டூயல் டோன் இன்டீரியர், குவில்டெட் நேப்பா லெதர், பவர் டிரைவர்சீட், மெமரி அம்சம், 7-இன்ச் TFT டிஸ்ப்ளே, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காரினுள் 8-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருக்கிறது.

இத்துடன் ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதி, 360 டிகிரி கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. இந்த எஸ்.யு.வி. இரண்டு வேரியன்ட்களில், ஐந்து வித நிறங்களில் வெளியிடப்படுகிறது.
புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. / 420 என்.எம். டார்கியூ செயல்தின் மற்றும் 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய எஸ்.யு.வி. 2WD மற்றும் 4WD என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்.யு.வி. மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு என்டேவர் மற்றும் ஹோன்டா சி.ஆர்.-வி. உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய அல்டுராஸ் ஜி4 கார் இந்தியாவின் சக்கன் தயாரிப்பு ஆலையில் அசம்பிள் செய்யப்படுகிறது. #AlturasG4 #Mahindra

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது மராசோ கார் விலையை மாற்றியமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. #Mahindra #Marazzo
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது மராசோ கார் மாடலின் விலையை மாற்றியமைக்க இருக்கிறது. அதன்படி புதிய மராசோ விலை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை அதிகரிக்கப்படுகிறது. புதிய விலை மாற்றம் ஜனவரி 1, 2019 முதல் அமலாகும் என மஹிந்திரா அறிவித்துள்ளது.
மராசோ கார் அறிமுகம் செய்யப்படும் போதே புதிய காரின் விலை அறிமுக சலுகை தான் என மஹிந்திரா & மஹிந்திரா அறிவித்து இருந்தது. விற்பனை துவங்கிய நான்கு மாதங்களில், மராசோ கார் விலை ஜனவரி 1, 2019 முதல் அதிகரிக்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் மஹிந்திரா மராசோ கார் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பேஸ் வேரியன்ட் மாடலான M2 விலை ரூ.9.99 லட்சம் என்றும் டாப்-என்ட் M8 வேரியன்ட் ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் ஒரே மாதத்தில் 10,000 முன்பதிவுகளை பெற்று இருக்கிறது. சமீபத்தில் மராசோ மாடலில் ஆப்பிள் கார் பிளே சிஸ்டம் வழங்கப்படுகிறது. புதிய மராசோ மாடல் ஏழு மற்றும் எட்டு பேர் அமரக்கூடிய வேரியன்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் பின்புறம் ஏ.சி. வென்ட்கள் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா மராசோ மாடலில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு நான்கு-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 128 பி.ஹெச்.பி. பவர். 320 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மராசோ காரின் பெட்ரோல் வெர்ஷன் மற்றும் AMT வேரியன்ட் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் மூன்றாம் தலைமுறை சி.எல்.எஸ். 4-டோர் கூப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #MercedesBenz
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய சி.எல்.எஸ். 4-டோர் கூப் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆடம்பர கார் மாடலின் துவக்க விலை ரூ.84.7 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்குகிறது.
புதிய பென்ஸ் சி.எல்.எஸ். கார் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஆடியோ ஏ7, பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் கிரான் கூப் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெல்லிய வடிவமைப்பில் கவர்ச்சிகர நான்கு கதவுகள் கொண்ட கூப் மாடலில் ஸ்லோப்பிங் ரூஃப்லைன், ஃபிரேம்லெஸ் கதவுகள் வழங்கப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் சி.எல்.எஸ். மாடலில் புதுவித ஹெட்லேம்ப்கள் மற்றும் முற்றிலும் புதிய கிரில் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. பின்புறம் டெயில் லேம்ப் கிளஸ்டர், கிடைமட்டமாக வைக்கப்பட்ட டெயில் லேம்ப்கள் மற்றும் சிறிய ஸ்டபி பூட் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 5-ஸ்போக் 18 இன்ச் வீல்கள் சில்வர் நிற ஷேட் கொண்டிருக்கிறது.

காரின் உள்புற கேபினில் அழகிய வடிவமைப்பு மற்றும் உயர் ரக மரத்தாலான டேஷ்போர்டு, நான்கு ஜெட் டர்பைன் ஏ.சி. வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பெரிய ஸ்கிரீன்களில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று டிஜிட்டல் டேஷ்போர்டு போன்று செயல்படுகிறது.
புதிய சி.எல்.எஸ். ஐந்து பேர் அமரக்கூடிய வாகனம் என்றாலும், நான்கு பேர் வரை பயணிக்கக்கூடியதாக இருக்கிறது. பொனெட்டில் புதிய சி.எல்.எஸ். மாடலில் பி.எஸ். VI ரக 2.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 242 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 9-ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
இந்த கார் 6.2 நொடிகளில் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும், அதிகபட்சம் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஸ்கார்பியோ எஸ்9 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்ப்போம். #Mahindra #Scorpio
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ எஸ்9 வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கார்பியோ வேரியன்ட் இந்தியாவில் டாப் என்ட் வேரின்ட்டான எஸ்11 மாடலுக்கு கீழ் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் புதிய காரில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்9 வேரியன்ட் விலை ரூ.13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கார்பியோ இந்தியா முழுக்க அனைத்து மஹிந்திரா விற்பனை மையங்களிலும் துவங்கியது.
புதிய ஸ்கார்பியோ எஸ்9 மாடலில் ஸ்டாடிக் பென்டிங் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், முன்பக்கம் ஃபாக் லேம்ப்கள், எல்.இ.டி. கைடு லைட்கள், ஹைட்ராலிக் அசிஸ்ட் செய்யப்பட்ட பொனெட், இன்டெலிபார்க் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட டர்ன் இன்டிகேட்டர்களுடன் ORVMகள் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்கார்பியோ எஸ்9 மாடலின் உள்புறம் 5.9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபடெயின்மென்ட் சிஸ்டம், 10 மொழிகளில் ஜி.பி.எஸ். நேவிகேஷன், வாய்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் டெம்ப்பரேச்சர் கன்ட்ரோல், ஸ்டீரிங் வீலில் ஆடியோ மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்9 வேரியன்ட்டில் 2.2 லிட்டர் டர்போ டீசல் எம்ஹாக் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர், 320 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ்., ஆன்டி-தெஃப்ட் வார்னிங், பேனிக்-பிரேக் இன்டிகேஷன் மற்றும் என்ஜின் இம்மொபைலைசர் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் தற்சமயம் விற்பனையாகும் கார்களில் ரூ.10 லட்சம் விலையில் கிடைக்கும் பாதுகாப்பான கார்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம். #Car
சாலை போக்குவரத்தின் முக்கிய அம்சமாக கார் மாறிவிட்டது. தனி நபர் போக்குவரத்திலும் காரின் பங்களிப்பு அவசியமான ஒன்றாகி இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும் தங்களது குடும்பத்துடன் பயணிக்க கார் ஏதுவானதாக இருக்கிறது. எளிய மாத தவணைத் திட்டம், குறைந்த விலை உள்ளிட்டவை பலரின் கார் வாங்கும் கனவை நனவாக்கி இருக்கிறது.
தற்சமயம் நெடுஞ்சாலைப் பயணம் சவாலானதாக மாறி வருகிறது. வாகன பெருக்கத்தால், பலரது கவனமும் பாதுகாப்பான கார்களை நோக்கி திரும்பி இருக்கிறது. இப்போது ஆரம்ப நிலை கார்களிலேயே ‘குறைந்தபட்சம் 2 ஏர் பேக்குகள் கட்டாயம்’ இருக்க வேண்டும் என அரசு கொள்கை வகுத்துள்ளது.
கார் தயாரிப்பு நிறுவனங்களும் பாதுகாப்பான வாகனங்களை தயாரிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. கார்களின் பாதுகாப்பு தன்மை குறித்து சர்வதேச கிராஷ் டெஸ்ட் நிறுவனம் (என்.சி.ஏ.பி.) சோதித்து சான்றளித்து வருகிறது. கிராஷ் டெஸ்ட் என்பது குறிப்பிட்ட காரை தானியங்கி முறையில் வேகமாக இயக்கி தடுப்பு ஒன்றின் மீது மோதச்செய்வார்கள்.

அந்தக்காரில் மனிதர்கள், குழந்தைகள் போன்ற, சென்சார்கள் பொருத்தப்பட்ட பொம்மை உருவம் இருக்கும். விபத்து சோதனைக்குப்பின் காரின் பாகங்கள் ஆராயப்படும். அதில் பயணம் செய்த மனித பொம்மைகளுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று பரிசோதிக்கப்படும். இதன் அடிப்படையில் அந்த காரின் பாதுகாப்பு தன்மை குறித்து சான்று அளிக்கப்படும்.
அந்த வகையில் இந்தியாவில் தற்போது விற்பனையாகும் கார்களில் கிராஷ் டெஸ்ட் சோதனையில் அதிகபட்ச சான்றுகள் பெற்ற கார்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை பற்றிய விவரத்தை பார்க்கலாம்.
ஃபோக்ஸ்வேகன் போலோ:
ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன் போலோ இந்தியாவில் முதலில் தயாரிக்கப்பட்ட போது, ஏர் பேக் இல்லாமல் வந்தது. கிராஷ் டெஸ்ட் சோதனையின் அடிப்படை அம்சங்கள் எதையும் அது பூர்த்தி செய்யவில்லை. பின்னர் இதில் முன்புறத்தில் 2 ஏர் பேக்குடன் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அப்போது, பெரியவர்களின் பாதுகாப்புக்கு 17 மதிப்பெண்ணுக்கு 12.54 மதிப்பெண் எடுத்து 3 நட்சத்திரமும், குழந்தைகள் பாதுகாப்பில் 49 மதிப்பெண்ணுக்கு 29.91 மதிப்பெண் எடுத்து மூன்று நட்சத்திரமும் பெற்றது. பின்னர் இந்த காரில் ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்பட்டது. இதன் விலை ரூ. 5.42 லட்சத்தில் துவங்குகிறது.

டொயோடா இடியோஸ் லிவா:
டொயோடா நிறுவனத்தின் லிவா ஹேட்ச்பேக் மாடல் ஆகும். இது கிராஷ் டெஸ்ட் சோதனையில் நான்கு நட்சத்திரக் குறியீட்டைப் பெற்றுள்ளது. பெரியவர்களின் பாதுகாப்புக்கு 16 மதிப்பெண்ணுக்கு 13 மதிப்பெண்களை எடுத்து நான்கு நட்சத்திரங்களை பெற்றுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பில் 49 மதிப்பெண்ணுக்கு 20.02 மதிப்பெண் எடுத்து இது இரண்டு நட்சத்திரத்தை மட்டுமே பெற்றுள்ளது. பின்னர், கிராஷ் டெஸ்ட் சோதனையின் அடிப்படையில் சில பாதுகாப்பு அம்சங்களை இந்நிறுவனம் தனது கார்களில் சேர்த்துள்ளது. அதில் ஏ.பி.எஸ்., இ.பி.டி., ஐசோபிக்ஸ் முக்கியமானவையாகும். முன்பகுதியில் இரண்டு ஏர் பேக்குகள் மற்றும் சீட் பெல்ட் பிரீடென்சனர் வசதியையும் சேர்த்துள்ளது.
டாடா செஸ்ட்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பு செஸ்ட். காம்பாக்ட் செடான் பிரிவில் வந்திருக்கும் இந்த கார் 2016-ல் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. அப்போது இதற்கு பூஜ்ஜியம் நட்சத்திரம் தான் கிடைத்தது. பிறகு டாடா நிறுவனம் தேவையான மாற்றங்களைச் செய்து மீண்டும் சோதனைக்கு அனுப்பியது. அப்போது இது பெரியவர்கள் பாதுகாப்பில் 17 மதிப்பெண்ணுக்கு 11.15 மதிப்பெண் எடுத்து நான்கு நட்சத்திரங்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 49 மதிப்பெண்ணுக்கு 15.52 மதிப்பெண் எடுத்து 2 நட்சத்திரங்களையும் பெற்றது. இந்த கார் முன்புறத்தில் 2 ஏர் பேக்குடன் வந்துள்ளது. டிரைவருக்கு சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் ஏ.பி.எஸ்., இ.பி.டி. வசதிகள் மற்றும் கார்னர் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் வசதியுடன் வந்துள்ளது. இதன் விலை ரூ. 5.48 லட்சத்தில் தொடங்குகிறது.

டாடா நெக்சான்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாடல்களில் எஸ்.யு.வி. மாடல் இது. டாடா நெக்சான் கிராஷ் டெஸ்டில் நான்கு நட்சத்திரங்களை பெற்றுள்ளது. பெரியவர்கள் பாதுகாப்பில் 17 மதிப்பெண்ணுக்கு 13.56 மதிப்பெண்களைப் பெற்று 4 நட்சத்திரங்களைப் பெற்ற இந்த கார், குழந்தைகள் பாதுகாப்பில் 49 மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்களை எடுத்து 3 நட்சத்திரங்களை மட்டுமே பெற்றுள்ளது.
இந்த காரின் மேற்கூடு (ஷெல்) ஸ்திரமாக இருப்பதாகவும், இந்தக் காரில் பயணம் செய்த மனித பொம்மைகளின் கழுத்து, தலைப்பகுதி மற்றும் கால்கள் சேதமின்றி இருந்ததாகவும், சோதனை நடத்திய என்.சி.ஏ.பி. அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த மாடலில் அனைத்து நெக்சான் கார்களும் 2 ஏர் பேக்குகளைக் கொண்டதாக வந்துள்ளது. இதன் பேஸ் மாடல் கார் விலை ரூ. 5.99 லட்சத்தில் தொடங்குகிறது.
மாருதி விடாரா பிரெஸ்ஸா:
மாருதி சுசுகி நிறுவனத்தின் காம்பாக்ட் எஸ்.யு.வி. விடாரா பிரெஸ்ஸா. இந்த கார் கிராஷ் டெஸ்ட் சோதனையில் பெரியவர்கள் பாதுகாப்பில் 17 மதிப்பெண்ணுக்கு 12.51 மதிப்பெண் எடுத்து நான்கு நட்சத்திரங்களை வென்றுள்ளது. விடாரா பிரீஸாவின் அனைத்து மாடலிலும் 2 ஏர் பேக்குகள், ஏ.பி.எஸ்., இ.பி.டி., முன்புற சீட் பெல்ட் பிரீடென்சனர்ஸ் வசதிகளோடும், டிரைவருக்கு சீட் பெல்ட் ரிமைண்டருடனும் வந்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்புக்கு இதில் ஐசோபிக்ஸ் வசதியும் உள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ கார் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. #Marasso
மஹிந்திரா நிறுவனத்தின் சமீபத்திய மராசோ காரின் இந்திய விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிய மராசோ விற்பனை மராது சுசுகி நிறுவனத்தின் எர்டிகாவை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது.
அக்டோபர் 2018ல் மராசோ கார் மொத்தம் 3,810 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதே மாதத்தில் எர்டிகா கார் வெறும் 1,387 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கிறது. இந்தியாவில் மஹிந்திரா மராசோ கார் சில மாதங்களுக்கு முன் தான் அறிமுகம் செய்யப்பட்டது.
அறிமுகமான முதல் மாதத்திலேயே மஹிந்திரா மராசோ சுமார் 10,000 அதிகமான முன்பதிவுகளை பெற்று இருந்தது. மஹிந்திரா மராசோ கார் சமீபத்தில் ஆப்பிள் கார் பிளே வசதியுடன் அப்டேட் செய்யப்பட்டது. முன்னதாக இந்த காரில் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி மட்டும் வழங்கப்பட்டு இருந்தது.

தற்சமயம் ஆப்பிள் கார் பிளே வசதி கொண்ட முதல் மஹிந்திரா வாகனமாக மராசோ இருக்கிறது. இந்தியாவில் ஏழு மற்றும் எட்டு பேர் வரை பயணிக்கக்கூடிய வகையில இரண்டு வேரியன்ட்களில் மராசோ கிடைக்கிறது. மஹிந்திரா மராசோ பேஸ் வேரியன்ட் விலை ரூ.9.99 லட்சத்தில் துவங்குகிறது.
புதிய மராசோ மாடலில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா மராசோ லிட்டருக்கு 17.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொனஅ பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியாக் கார் விலை ஒரு லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. #Skoda #Kodiaq
இந்தியாவில் ஸ்கோடா கோடியாக் விலை ஒரு லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. கோடியாக் ஸ்டைல் வேரியன்ட் தற்போதைய விலை ரூ.33.83 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கிறது. இந்த விலை குறைப்பு குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கோடா நிறுவனம் சமீபத்தில் லாரின் மற்றும் லெமன்ட் டாப் என்ட் கோடியாக் வேரியன்ட் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.35.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டது. புதிய ஸ்கோடா கோடியாக் லாரின் மற்றும் லெமன்ட் வேரியன்ட் பல்வேறு புதியஅம்சங்கள் மற்றும் உள்புறங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்கோடா கோடியாக் ஸ்டைல் மாடலில் ஃபுல்-எல்.இ.டி. ஹெட்லைட்கள், அடாப்டிவ் ஃபிரன்ட்லைட் சிஸ்டம், எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள், எலெக்ட்ரிக் டெயில்கேட், 18 இன்ச் அலாய் வீல் மற்றும் ஆட்டோமேடிக் வைப்பர்கள் வழங்கப்பட்டுள்ளது.

உள்புறம் டூயல்-டோன் தீம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10-ஸ்பீக்கர் கான்டன் ஆடியோ சிஸ்டம், பானரோமிக் சன்ரூஃப் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
கோடியக் எஸ்.யு.வி. 2.0 லிட்டர் TDI டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 143bhp மற்றும் 320Nm டார்கியூ கொண்டுள்ளது. இதன் பெட்ரோல் மாடல் தற்சமயம் அறிமுகம் செய்யப்படாது என்றே கூறப்படுகிறது. ஆக்டேவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் போன்ற மாடல்களிலும் இதே போன்ற இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் கொண்டுள்ள எஸ்.யு.வி. மாடலில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் கொண்டுள்ளது. இத்துடன் ஆக்டேவியா மாடலில் வழங்கப்பட்டுள்ளதை போன்ற பார்கிகிங் சிஸ்டம் கொண்டுள்ளது.
மாருதி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2018 எர்டிகா கார் அறிமுக தேதி மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Maruti #Ertiga
மாருதி சுசுகி நிறுவனம் சமீத்தில் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்சமயம், மாருதி நிறுவனம் புதிய எர்டிகா 2018 ஃபேஸ்லிஃப்ட் மாடலை நவம்பர் 21ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தசரா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செயய்ப்படலாம் என தெரிகிறது. பண்டிகை காலத்தில் புதிய வாகனம் விரும்புவோருக்கு எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் நல்ல தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எர்டிகா ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய எர்டிகா நெக்சா பிரீமியம் விற்பனை மையங்கள் இன்றி, அரீனா விற்பனை நெட்வொர்க் மூலம் விற்பனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய மாடல் வெளியாக இருக்கும் நிலையில், முதல் தலைமுறை எர்டிகா மாடல் தொடர்ந்து டூர் பேட்ஜிங் உடன் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

வெளிப்புறத்தில் மாருதி எர்டிகா மாடலில் முன்புறம் புதிய கிரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக புதிய எர்டிகா பிரீமியம் தோற்றத்தில் தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது அழகாக காட்சியளிக்கிறது.
பக்கவாட்டில் மிதப்பது போன்ற ரூஃப் வடிவமைப்பு மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. புதிய எர்டிகா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் சியாஸ் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டீசல் மாடலில் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் பிரபலமாக இருக்கும் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மின்சார கார் உற்பத்தியில் கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றன. #electriccars
நெடுந்தூர பயணங்களை மேற்கொள்வோர் சவுகரியமாக பயணம் செய்ய ஆரம்பக்கட்டத்தில் நிலக்கரியில் இயங்கிய நீராவி என்ஜின் பொருத்திய ரெயில்களில் பயணம் செய்தோம். நீராவி என்ஜின் கொண்ட ரெயில்கள் அதிகளவு கரித்துகள்களை வெளியிட்டதில் இருந்து டீசல் என்ஜின்கள் நம்மை மீட்டெடுத்தன. டீசல் என்ஜினிலும் சுற்றுச்சூழல் மாசு இருப்பது தெரியவர, அதற்கு மாற்றாக மின்சார ரெயில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்பக் காலத்தில், சென்னை நகரில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது மாநிலம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ரெயில்களின் வேகம் அதிகரித்து இருப்பதோடு, சுற்றுச்சூழல் மாசு கொஞ்சம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
எனினும், புவி வெப்பநிலை அபாய அளவை நெருங்கிக்கொண்டு இருப்பதால், சாலைப்போக்குவரத்திலும் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சாரம் மூலம் வாகனங்களை இயக்குவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க முடியும். மேலும், எரிபொருள் இறக்குமதியை குறைத்து அன்னிய செலாவணியையும் மிச்சப்படுத்த முடியும் என்று அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு 2030-ம் ஆண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இப்போதே மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வேலையைத் தொடங்கி விட்டன. ஹூண்டாய், ரெனால்ட், டொயோட்டா, சுசுகி, மஹிந்திரா, டாடா போன்ற நிறுவனங்கள் 2020-ம் ஆண்டுக்குள் மின்சார கார்களை அறிமுகப்படுத்தும் வகையில் தயாரிப்பு பணியில் இறங்கியுள்ளன.
டொயோட்டாவும், சுசுகியும் இணைந்து இந்தியாவுக்கான மின்சார கார்களை தயார் செய்கின்றன. இதற்கான தொழில்நுட்பத்தை டொயோட்டா வழங்க, சுசுகி நிறுவனம் கார்களை வடிவமைக்கும் பணிகளை ஏற்று இருக்கிறது.
ரெனால்ட் நிறுவனம் சீனச்சந்தையில் விற்பதற்காக குறைந்த விலையிலான மின்சார கார்களை தயாரித்து வருகிறது. ‘ரெனால்ட் க்விட்’ எனப்படும் இந்த காருக்கு சீனச்சந்தையில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் இது ஏற்றுமதி செய்யப்படும்.

மஹிந்திரா நிறுவனம் KUV100 மாடலின் எலெக்ட்ரிக் பதிப்பை உருவாக்கி வருகிறது. இதன் பரிசோதனைகள் முடிந்து இந்த ஆண்டே கார் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு இது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து, ‘XUV500’ என்ற மாடல் எலெக்ட்ரிக் காரையும் மஹிந்திரா தயாரிக்கிறது.
டாடா நிறுவனம், டாடா டிகோர், டாடா டியாகோ ஆகிய இரு மாடல் மின்சார கார்களை உற்பத்தி செய்கிறது. இவை அடுத்த ஆண்டுக்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் மின்சார கார் (ஹுண்டாய் கோனா) பல்வேறு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு இதை விற்பனைக்கு கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இவை எல்லாம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் தேவை வெகுவாக குறைந்து விடும். மேலும் அவற்றின் விலை உயர்வு குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. #electriccars