என் மலர்
கார்
இந்தியாவில் பல ஆண்டுகளாக பிரபல கார் மாடல்களில் ஒன்றாக இருக்கும் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆம்னி கார் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #MarutiOmni
இந்தியாவில் மாருதி ஆம்னி கார் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 2020ம் ஆண்டில் இருந்து பி.எஸ். IV ரக கார்களுக்கு அனுமதி கிடையாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதைத் தொடர்ந்து மாருதி நிறுவனம் இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் வரயிருக்கும் சில பாதுகாப்பு விதிமுறைகளை சில மாடல்கள் பின்பற்ற முடியாத சூழல் ஏற்படும், இதில் மாருதி ஆம்னி கார் மாடலும் ஒன்றாக இருக்கும் என மாருதி சுசுகி நிறுவன தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்தார். மாருதி 800 போன்றே மாருதி ஆம்னி மாடலையும் நிறுத்தலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
மாருதி ஆம்னி மாடலின் முன்பக்கம் மட்டமாக இருப்பதால், பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு உடன்படாது. விபத்தின் போது காரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. இதனால் மாருதி நிறுவனம் ஆம்னி மாடலை நிறுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மாருதி ஆம்னி போன்றே மாருதி இகோ, ஆல்டோ 800 போன்ற மாடல்களும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு பொருந்தாது. இரண்டு கார்களையும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்த திட்டமிடப்படுவதாக பார்கவா தெரிவித்தார். மேலும் இரண்டு மாடல்களின் பாதுகாப்பை அதிகப்படுத்த பெருமளவு மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மாருதி ஆம்னி மாடலில் 796சிசி, 3-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 34 பி.ஹெச்.பி. பவர் 59 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மாருதி ஆம்னி கார் 1984ம் ஆணஅடு அறிமுகம் செய்யப்பட்டு பின் 1998 மற்றும் 2005ம் ஆண்டுகளில் அப்டேட் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. என்ற பெயரில் புதிய கார்களை அறிமுகம் செய்துள்ளது. #TigorJTP #TiagoJTP
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய கார்களை அறிமுகம் செய்துள்ளது. டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. என அழைக்கப்படும் புதிய கார் மாடல்களின் விலை முறையே ரூ.6.39 லட்சம் மற்றும் ரூ.7.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஜெ.டி.பி. என்பது ஜெயம் டாடா பெர்ஃபார்மன்ஸ் என்ற விரிவாக்கம் கொண்டுள்ளது. இது டாடா மோட்டார்ஸ் மற்றும் கோயமுத்தூரை சென்ற ஜெயம் ஆட்டோமேட்டிவ்ஸ் நிறுவனங்கள் இணைந்து புதிய கார் மாடல்களை வெளியிட்டுள்ளன. இந்த கார் மாடல்கள் ஜெயம் டாட்டா ஸ்பெஷல் வெஹிகில்ஸ் (JTSV - Jayem Tata Special Vehicles) என அழைக்கப்படுகிறது.

புதிய டாடா டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்கள் முன்னதாக ஆட்டோ எக்ஸ்போ 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டாடா டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வடிவமைப்பை பொருத்த வரை காரின் முன்பக்கம் அதரடி தோற்றம் கொண்ட பம்ப்பர், டூயல்-சேம்பர் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், பொனேட்டில் ஏர் ஸ்கூப் மற்றும் முன்பக்க கிரிலின் மீது ஜெ.டி.பி. பிரான்டிங் செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டில் இரு ஜெ.டி.பி. மாடல்களிலும் 15-இன்ச் டைமன்ட் கட் டூயல்-டோன் அலாய் வீல்கள், முன்பக்க ஃபென்டர் வென்ட்கள், சைடு ஸ்கர்ட்களில் ஜெ.டி.பி. பேட்ஜ் கொண்டிருக்கிறது.
காரின் பின்புறம் கிளாஸ் பிளாக் ஸ்பாயிலர், எல்.இ.டி. டெயில் லைட் கிளஸ்டர், டுவின் பேரெல் எக்சாஸ்ட் மற்றும் ஜெ.டி.பி. பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கிளாஸ் பிளாக் ரூஃப் கொண்டிருப்பதோடு காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பு பார்க்க ஸ்டான்டர்டு மாடல் போன்றே காட்சியளிக்கிறது.

உள்புறத்தில் டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்களில் முழுமையான பிளாக் தீம், சிவப்பு நிற அக்சென்ட் செய்யப்பட்டுள்ளது. சீட்களிலும் ஸ்போர்ட் ஹெக்சாகோனல் கிராஃபிக்ஸ் மற்றும் சிவப்பு நிற ஸ்டிட்ச்சிங் செய்யப்பட்டுள்ளது. காரின் ஸ்போர்ட் தன்மையை அதிகப்படுத்த உள்புறத்தில் மெஷின்டு அலுமினியம் பெடல்கள் வழங்கப்பட்டுள்ளது.
கேபினில் கனெக்ட்நெக்ஸ்ட் (ConnectNext) இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, 8-ஸ்பீக்கர் ஹார்மன் மியூசிக் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
டாடா டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்களில் 1.2-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 112 பி.ஹெச்.பி. பவர், 150 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. #Tatamotors #TigorJTP #TiagoJTP
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பிரீமியம் கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் சாதனையை படைத்திருக்கிறது. #MarutiSuzuki #scross
இந்திய சந்தையில் மாருதி எஸ் கிராஸ் கார் ஒரு லட்சம் விற்பனையை கடந்து இருக்கிறது. இதில் எஸ் கிராஸ் பழைய மற்றும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எஸ்-கிராஸ் பிரீமியம் கிராஸ் ஓவர் மாடல்களும் அடங்கும்.
மாருதி எஸ் கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் 2017ல் அறிமுகம் செய்யப்பட்டது. செப்டம்பர் 2018ல் எஸ் கிராஸ் மாடலில் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டது. மாருதி சுசுகி நெக்சா பிரீமியம் நெட்வொர்க்கின் முதல் மாடலாக எஸ் கிராஸ் இருக்கிறது. கிராஸ் ஓவர் எஸ் கிராஸ் மாடலின் விற்பனையில் 36 சதவிகிதம் நெக்சா புளு நிற வேரியன்ட் இருக்கிறது.
தற்சமயம் இந்தியா முழுக்க 186 நகரங்களில் 329 நெக்சா விற்பனையகங்கள் இயங்கி வருகின்றன. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாருதி எஸ் கிராஸ் மாடலின் முன்பக்கம் புதிய குரோம் கிரில், புதிய வடிவமைப்பு கொண்ட ஹெட்லேம்ப்கள், மஸ்குலர் பம்ப்பர் மற்றும் ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாருதி எஸ் கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உள்புறம் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்டவையும், சென்டர் கன்சோல், ஏ.சி. வென்ட்களில் குரோம் அக்சென்ட்கள், சாஃப்ட்-டச் டேஷ்போர்டு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
மாருதி எஸ் கிராஸ் மாடலில் 1.3 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் என்ஜின், 88.5 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்கியூ செயல்திறன், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் டீசல் என்ஜினுடன் சுசுகியின் ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஹூன்டாய் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்த புத்தம் புதிய சான்ட்ரோ கார் 23,000க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். #HyundaiSantro
ஹூன்டாய் இந்தியா நிறுவனத்தின் புதிய சான்ட்ரோ சமீபத்தில் இந்தியாவில் வெளியிட்டது. புதிய ஹூன்டாய் சான்ட்ரோ ரூ.3.89 லட்சம் எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், டாப்-என்ட் வேரியன்ட் விலை ரூ.5.45 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அக்டோபர் 10ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் புத்தம் புதிய சான்ட்ரோ கார் இதுவரை 23,500க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் புதிய ஹூன்டாய் சான்ட்ரோ வாங்குவோர் மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கும் புதிய சான்ட்ரோ மாடல்களில் 30 சதவிகிதம் AMT வேரியன்ட் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்ட்ரோவின் AMT வேரின்ட் மிட்-ரேஞ்ச் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் வேரின்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய காரின் மீது எழுந்துள்ள வரவேற்பை வைத்து பார்க்கும் போது காத்திருப்பு காலம் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.
புதிய ஹூன்டாய் சான்ட்ரோ 2018 மாடலில் முந்தைய சான்ட்ரோ கார் போன்ற டால்பாய் வடிவமைப்பைத் தழுவி முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. காரின் முன்பக்கம் கேஸ்கேடிங் கிரில், குரோம் இன்சர்ட், ஸ்பெவ்ப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள், முன்பக்கம் கிரில், ஃபாக் லேம்ப்கள் மற்றும் புதிய பம்ப்பரை சுற்றி கருப்பு நிற பிளாஸ்டிக் கொண்டுள்ளது.

புதிய சானட்ரோ கார் டைஃபூன் சில்வர், போலார் வைட், ஸ்டார்டஸ்ட், இம்பீரியல் பெய்க், மரீனா புளுஷ ஃபியரி ரெட் மற்றும் டையானா கிரீன் என ஏழு வித நிறங்களில் கிடைக்கிறது. 2018 சான்ட்ரோ காரின் டேஷ்போர்டு மற்றும் கதவுகளில் பிளாக் மற்றும் பெய்க் என டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
ஹூன்டாய் சான்ட்ரோ காரில் 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் மிரர்லின்க் போன்ற வசதிகள் வழங்கப்ட்டுள்ளன. இத்துடன் மின்சார முறையில் மாற்றக்கூடிய ORVMகள், மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, யு.எஸ்.பி. போர்ட், மடிக்கக்கூடிய பின்புற இருக்கைகள், பின்புற வைப்பர் மற்றும் வாஷர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஹூன்டாய் சான்ட்ரோ 2018 மாடலில் டிரைவர் ஏர்பேக், ABS, EBD மற்றும் என்ஜின் இம்மொபைலைசர் வழங்கப்பட்டுள்ளது. சான்ட்ரோ டாப்-என்ட் மாடலில் பாசென்ஜர் ஏர்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், கேமரா, ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக், சென்ட்ரல் லாக்கிங் மற்றும் பின்புற டீஃபாகர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
சான்ட்ரோ மாடலில் 1.1 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர், 99 என்.எம். டார்கியூ செயல்திறன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் ஹூன்டாய் முதல் முறையாக வழங்கி இருக்கிறது. இத்துடன் புதிய சான்ட்ரோ CNG வசதியும் கொண்டுள்ளது.
ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான டீசர் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. #BMW
ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. விற்பனை செய்த டீசல் கார்களின் எக்சாஸ்ட் சிஸ்டத்தில் கோளாறு இருப்பதை கண்டறிந்ததும், சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான கார்களை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த கோளாறு தீவிரமாகும் பட்சத்தில் கார் தீப்பிடிக்கும் அபாயம் அதிகம் ஆகும்.
சில டீசல் வாகனங்களில் எக்சாஸ்ட் கியாஸ் கூலரில் இருக்கும் கிளைக்கால் கூலிங் எனும் திரவம் லீக் ஆகிறது, இது பேராபத்தை ஏற்படுத்தக் கூடியது என பி.எம்.டபுள்யூ. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்களை சரி செய்து கொடுக்கும் நோக்கில் பி.எம்.டபுள்யூ. சார்பில் விற்பனையாளர்களுக்கு தொடர்ந்து தகவல் வழங்கப்படுகிறது. விற்பனையாளர்கள் தரப்பில் இருந்து வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, அவர்களது வாகனங்கள் சரி செய்யப்படும் என பி.எம்.டபுள்யூ. தெரிவித்துள்ளது.

திரும்பப்பெறப்படும் கார்களின் எக்சாஸ்ட் சிஸ்டம் சரிபார்க்கப்பட்டு, கோளாறு இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்களின் கார் சரி செய்து வழங்கப்படும் என பி.எம்.டபுள்யூ. தெரிவித்துள்ளது.
முன்னதாக ஆகஸ்டு மாதத்தில் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் சுமார் 4,80,000 வாகனங்கள் இதேபோன்ற பிரச்சனைகளால் திரும்பப்பெறப்பட்டது. ஏற்கனவே தென்கொரியாவில் 30 கார்கள் எரிந்து போனதற்கு பி.எம்.டபுள்யூ. மன்னிப்பு கோரியிருந்தது.
தற்போதைய கோளாறு காரணமாக பி.எம்.டபுள்யூ. நிறுவனம் சுமார் 16 லட்சம் கார்களை உலகம் முழுவதிலும் இருந்து திரும்பப்பெறுகிறது.
இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா மராசோ கார் இதுவரை சுமார் 10,000-க்கும் அதிகம் பேர் முன்பதிவு செய்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #Marazzo
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மராசோ கார் செப்டம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், அறிமுகமான ஒரே மாதத்திற்குள் மஹிந்திரா மராசோ சுமார் 10,000-க்கும் அதிக முன்பதிவுகளை கடந்து இருப்பதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.
இந்தியாவில் M2, M4, M6 மற்றும் M8 என நான்கு வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் மராசோவின் முழு வடிவமைப்பு சுறாவை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய மராசோ காரில் ட்வின்-சேம்பர் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள், சுறா பற்களை போன்ற முன்பக்க கிரில், ஃபாக் லேம்ப்க்ள், அதரடியான பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஃபாக் லேம்ப் ஹவுசிங் பிளாஸ்டிக் அக்சென்ட் செய்யப்பட்டுள்ளது.
பக்கவாட்டில் 17 இன்ச் அலாய் வீல்கள், ORVM, இன்டகிரேட் செய்யப்பட்ட சிக்னல் இன்டிகேட்டர்கள், பின்புறம் ஷார்க் போன்ற எல்.இ.டி. டெயில் லைட்கள், ஹை ஸ்டாப் லேம்ப் மற்றும் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட பம்ப்பர் கொண்டுள்ளது. உள்புறம் சுத்தமான, அழகிய டேஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் அனைத்தும் கருப்பு நிறம் செய்யப்பட்டு, இருக்கைகள் மற்றும் டோர் ட்ரிம்களில் பெய்க் நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏசி வென்ட்கள், எம்.பி.வி. மாடல்களில் முதல் முறையாக சரவுன்ட் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் கேபினில் டூயல்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 3-ஸ்போக் ஸ்டீரிங் வீல் மற்றும் விமானங்களில் உள்ளதை போன்ற ஹேன்ட்பிரேக் லீவர் வழங்கப்பட்டுள்ளது.
ஏழு மற்றும் எட்டு பேர் அமரக்கூடிய வகையில் இருவிதங்களில் கிடைக்கும் மராசோ வீல்-மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.
புதிய மராசோ மாடலில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா மராசோ லிட்டருக்கு 17.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொனஅ பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய மராசோ மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கி, டாப்-என்ட் மாடலின் விலை ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான கார்களில் ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் கார்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம். #cars
ஒரு காலத்தில் பணக்காரர்கள் தங்களின் அந்தஸ்தை பறைசாற்ற மட்டுமே பயன்படுத்திய கார்கள் இன்று நவீன போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. நடுத்தர பிரிவினரும், மாதாந்திர சம்பளதாரர்களும் வாங்கும் வகையில் கார்கள் இன்று உற்பத்தியாகின்றன.
டாடா நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய்க்கு நானோ காரை தயாரிக்கத் தொடங்கி, அதுவும் ரூ. 2 லட்சம் வரை சென்றுவிட்டது. தற்போது நானோ கார் உற்பத்தியும் நின்று போய்விட்டது. ஆனால் மாருதி நிறுவனம் உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் ரூ. 5 லட்சத்திற்குள் வசதியான கார்களை தயாரித்து அளிக்கின்றன.
அவரவர் வசதி, தேவை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு கார்களை வாங்கி பயன்படுத்தலாம். இன்னும் சில கார்கள் ரூ.5 லட்சம் விலையில் உள்ளன. புதிய கார்களும் இதே விலைப் பிரிவில் அறிமுகமாக உள்ளன.

ரெனால்ட் க்விட்
பிரான்ஸைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் சென்னை ஒரகடத்தில் ஆலை அமைத்துள்ளது.இந்நிறுவனத்தின் குறைந்த விலை கார் க்விட். இது ரூ. 2.78 லட்சம் விலையில் கிடைக்கிறது. குறைந்த விலை பிரிவு கார்களில் இது மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது. இதில் பிரீமியம் மாடல் விலை ரூ. 4.71 லட்சமாகும். இது 799 சி.சி. திறன் கொண்டது. இது சோதனை ஓட்டத்தில் 25 கி.மீ. தூரம் ஓடியது. இதில் பெட்ரோல் மாடல் மட்டுமே கிடைக்கிறது.
மாருதி ஆல்டோ 800
மாருதி ஆல்டோ 800, இந்த கார் மாருதி நிறுவனம் நீண்ட காலமாக தயாரித்து வந்த மாருதி 800 மாடலுக்கு மாற்றாக வந்தது. இதன் விலை ரூ 2.72 லட்சமாகும். ஒரு டீசன்ட்டான கார் வாங்க விரும்புவோர், குறைந்த பட்ஜெட்டில் வேண்டுமாயின் இந்தக் கார் நிச்சயம் அவர்களுக்கு போதுமானதாக இருக்கும். பேஸ் மாடல் விலை ரூ. 2.72 லட்சமாகும், டாப் என்ட் மாடல் விலை ரூ. 4.01 லட்சம் வரை கிடைக்கிறது.

டாடா டியாகோ
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே தனது பிரபல மாடலான இண்டிகா கார் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக அறிவித்துவிட்டது. இந்நிலையில் டியாகோ மாடலைத்தான் டாடா பெரிதும் நம்பியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 3.48 லட்சமாகும். இது 1047 சி.சி. திறன் கொண்டது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் இது கிடைக்கிறது.
மாருதி வேகன் ஆர்
மாருதி வேகன் ஆர் மாடலின் பேஸ் மாடல் விலை ரூ. 4.37 லட்சமாகும். இது 998 சி.சி. திறன் கொண்டது. இது சோதனை ஓட்டத்தில் லிட்டருக்கு 26 கி.மீ. தூரம் ஓடியதாக நிறுவனம் தெரிவிக்கிறது. இதிலும் பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி.யில் (நிலைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) இயங்கும் மாடல்கள் வந்துள்ளன. இதில் பிரீமியம் மாடல் விலை ரூ. 5.49 லட்சமாகும்.

மாருதி இக்னிஸ்
இந்நிறுவனத்தின் பிரபல கார்களில் இதுவும் ஒன்று. இதன் ஆரம்ப விலை ரூ. 4.79 லட்சமாகும். இது 1197 சி.சி. திறன் கொண்டது. இது சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 26 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. டீசல் மாடல் கார் உற்பத்தியை சமீபத்தில்தான் இந்நிறுவனம் முற்றிலுமாக நிறுத்தியது. இப்போதைக்கு பெட்ரோல் மாடல் மட்டுமே கிடைக்கிறது.
டட்சன் கோ
சிறிய ரகக் கார்களில் மக்களால் பெரிதும் விரும்பப்படுவது. டட்சன் கோ காரின் ஆரம்ப விலை ரூ. 3.50 லட்சமாகும். இதில் 799 சி.சி. என்ஜின் உள்ளது. இதில் இன்னொரு மாடல் 999 சி.சி.யிலும் வெளி வந்துள்ளது.
மாருதி ஸ்விப்ட்
இது 1197 சி.சி. திறன் கொண்டது. ஐந்து பேர் சவுகரியமாக அமர்ந்து செல்லும் வகையில் இட வசதி கொண்டது. பெட்ரோல், டீசல் ஆகிய இரு மாடல்களிலும் இவை வெளி வந்துள்ளன. இதன் ஆரம்ப விலை ரூ. 4.99 லட்சமாகும். சோதனை ஓட்டத்தில் இது லிட்டருக்கு 28 கி.மீ. தூரம் ஓடியுள்ளது.
ஹூன்டாய் இந்தியா நிறுவனம் புதிய சான்ட்ரோ மாடல் காரை விரைவில் வெளியிட இருக்கும் நிலையில், இதன் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Hyundai #Santro
ஹூன்டாய் இந்தியா நிறுவனம் புதிய சான்ட்ரோ மாடல் காரை இந்தியாவில் வெளியிட இருக்கிறது. புதிய 2018 ஹூன்டாய் சான்ட்ரோ மாடல் இந்தியாவில் அக்டோபர் 23-ம் தேதி வெளியாக இருக்கிறது.
அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் புதிய சான்ட்ரோ மாடலின் விலை இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன் படி புதிய சான்ட்ரோ பேஸ் வேரியன்ட் விலை ரூ.3.87 லட்சம் துவங்கி, டாப் என்ட் மாடலின் விலை ரூ.5.29 லட்சம் என நிர்ணயம் செய்யப்படுகிறது.
புதிய சான்ட்ரோ 2018 மாடலில் 1.1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 98 பி.ஹெச்.பி. பவர், 99 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. AMT கியர்பாக்ஸ் சான்ட்ரோ பெறும் முதல் ஹூன்டாய் கார் மாடலாக இருக்கிறது.

புகைப்படம் நன்றி: Gaadiwaadi.Com
ஹூன்டாய் நிறுவனம் 1.1 இன்ஜினில் புதிய சான்ட்ரோ CNG வேரியன்ட் வழங்கப்படுகிறது. சான்ட்ரோ CNG வேரியன்ட் செயல்திறன் சற்று குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சான்ட்ரோ CNG வேரியன்ட் 58 பி.ஹெச்.பி. பவர், 84 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.
புதிய சான்ட்ரோ பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.3 கிலோமீட்டர், CNG வேரியன்ட் 30.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. காரின் உள்புறத்தில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, மிரர் லின்க் மற்றும் குரல் அங்கீகார வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் காருக்கான முன்பதிவுகளை விரைவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Tatamotors #Harrier
டாடா ஹேரியர் மாடலுக்கான முன்பதிவுகள் அக்டோபர் 15-ம் தேதி துவங்க இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய எஸ்.யு.வி. மாடலுக்கு ரூ.30,000 முன்பதிவு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் டாடா ஹேரியர் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் 2019 ஜனவரி மாத வாத்தில் அறிமுகமாகி ஒரு மாதத்திற்குள் ஹேரியர் மாடலுக்கான விநியோகம் துவங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவர் எஸ்.என். பர்மேன் கூறும் போது, "புத்தம் புதிய ஹேரியர் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ.30,000 ஆகும். ஹேரியர் காருக்கான துவக்க விலை நிர்ணயம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம் மேலும் கார் அறிமுகமான ஒரு மாதத்திற்குள் விநியோக பணிகளை துவங்க திட்டமிட்டுள்ளோம்" என தெரிவித்தார்.

இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்றாக டாடா ஹேரியர் இருக்கிறது. இந்தியாவில் டாடா ஹேரியர் சோதனை செய்யும் படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகியுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலாக இது இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா ஹேரியர் மாடலில் புதிய 2.0 க்ரியோடெக் இன்ஜின் வழங்கப்படும் என்றும் இது பி.எஸ். VI ரக 4-சிலிண்டர் யூனிட் கொண்டிருக்கும் என டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தெரிவித்தது. இந்த இன்ஜின் ஐந்து பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 140 பி.ஹெச்.பி. பவர் மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 170 பி.ஹெச்.பி. பவர் கொண்டிருக்கும்.
ஹோன்டா நிறுவனத்தின் 2018 சி.ஆர்.வி. கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #AllNewCRV #HondaCRV
ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய 2018 சி.ஆர்.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2018 ஹோன்டா சி.ஆர்.வி. மாடலின் துவக்க விலை ரூ.28.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2018 ஹோன்டா சி.ஆர்.வி. மாடலின் வெளிப்புறம் அப்டேட் செய்யப்பட்டு புதிய வடிவமைப்பும், புதிய டீசல் இன்ஜின் மற்றும் ஏழு-பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2018 ஹோன்டா சி.ஆர்.வி. மாடலின் டாப்-என்ட் மாடல் விலை ரூ.32.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய 2018 ஹோன்டா சி.ஆர்.வி. மாடலில் புதிய ஷார்ப் மற்றும் ஆங்குலர் வடிவமைப்பு கொண்டுள்ளது. காரின் முன்பக்கம் க்ரோம் பார், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், பகலில் எரியும் லைட்கள், எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள், சில்வர் ஸ்கிட் பிளேட் மற்றும் மஸ்குலர் பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது.
காரின் பக்கவாட்டில் புதிய ஹோன்டா சி.ஆர்.வி. மாடலில் புதிய டைமன்ட் கட், 3-ஸ்போக், 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. காரின் பின்புறம் மேம்படுத்தப்பட்ட டெயில் லைட் கிளஸ்டர், க்ரோம் பார், ஷார்க்-ஃபின் ஆன்டெனா மற்றும் ஸ்கிட் பிளேட் கொண்டுள்ளது.

புதிய ஹோன்டா சி.ஆர்.வி. மாடல்: வைட் ஆர்ச்சிட் பியல், ரேடியன்ட் ரெட், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், மாடன் ஸ்டீல் மெட்டாலிக் மற்றும் லூனார் சில்வர் மெட்டாலிக் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
புதிய 2018 ஹோன்டா சி.ஆர்.வி. மாடலின் உள்புறம் ஆடம்பரமாகவு்ம, பிரீமியம் தோற்றத்துடன் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுள்ளது. புதிய சி.ஆர்.வி. மாடலில் 7 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, டி.எஃப்.டி. எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், யு.எஸ்.பி. போர்ட், ஹெச்.டி.எம்.ஐ. போர்ட் மற்றும் எட்டு-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் லெதர் இருக்கைகள், டூயல்-சோன் கிளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்கள், பின்புற ஏ.சி. வென்ட்கள், எட்டு-வழி பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் மற்றும் டேஷ்போர்டு மற்றும் கதவுகளில் பிரீமியம் வுட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
2018 ஹோன்டா சி.ஆர்.வி. காரின் பெட்ரோல் வேரியன்ட் 2-லிட்டர் 4-சிலிண்டர், i-VTEC இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 151 பி.ஹெச்.பி. பவர், 189 என்.எம். டார்கியூ செயல்திறன், CVT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய காரில் புதிய 1.6 லிட்டர், 4-சிலிண்டர், o-DTEC டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 118 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன், 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஹூன்டாய் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் புதிய சான்ட்ரோ காரின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Hyundai #Santro
ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய சான்ட்ரோ கார் அக்டோபர் 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து இதன் வெளியீடு அக்டோபர் 26-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் புதிய காரின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இம்முறை லீக் ஆகியிருக்கும் புகைப்படங்களில் காரின் வெளிப்புறம் மற்றும் உள்புற வடிவமைப்பு சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
புதிய ஹூன்டாய் சான்ட்ரோ முன்பக்கம் புதிய வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெரிய கருப்பு நிற கிரில், க்ரோம் சரவுன்டு, ஃபாக் லேம்ப்கள், கிரில், ஃபாக் லேம்ப்கள் மற்றும் ஸ்போர்ட் பம்ப்பரை சுற்றி கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங் கொண்டுள்ளது. காரின் முன்பக்கம் ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது.
பின்புறம் முற்றிலும் புதிய டெயில் லைட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. பின்புற பம்ப்பர் சோதனைக்காக மறைக்கப்பட்டு இருக்கிறது. சான்ட்ரோவின் பெரிய வின்ட்ஷீல்டின் மேல் ஸ்டாப் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. புதிய சான்ட்ரோவின் ஒட்டுமொத்த வடிவமைப்பு அதிநவீன முறையில் செய்யப்பட்டுள்ளது.

புகைப்படம் நன்றி: MYNEWCAR
காரின் உள்புறம் புதிய சான்ட்ரோ பிரீமியம் தோற்றம் பெற்றிருக்கிறது. டாப்-என்ட் மாடலில் அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கேபின் டூயல்-டோன் தீம் கொண்டுள்ளதோடு 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர புதிய ஹூன்டாய் சான்ட்ரோவில் பின்புற ஏ.சி. வென்ட்கள் டாப்-என்ட் வேரியன்ட்டில் வழங்கப்படுகிறது. புதிய சான்ட்ரோவில் வழக்கமான பாதுகாப்பு அம்சங்களான ஏர்-பேக், ஏ.பி.எஸ்., ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு அலெர்ட் வார்னிங் மற்று்ம முன்பக்க சீட்பெல்ட் ரிமைன்டர் போன்றவை வழங்கப்படுகிறது. மேலும் டாப்-என்ட் வேரியன்ட்டில் டூயல் ஏர்-பேக், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்றவை வழங்கப்படுகிறது.
புதிய சான்ட்ரோ மாடலில் 1.1 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர், 99 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்று்ம 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. புதிய சான்ட்ரோவில் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Hyundai #Santro
இந்நிலையில் புதிய காரின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இம்முறை லீக் ஆகியிருக்கும் புகைப்படங்களில் காரின் வெளிப்புறம் மற்றும் உள்புற வடிவமைப்பு சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
புதிய ஹூன்டாய் சான்ட்ரோ முன்பக்கம் புதிய வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெரிய கருப்பு நிற கிரில், க்ரோம் சரவுன்டு, ஃபாக் லேம்ப்கள், கிரில், ஃபாக் லேம்ப்கள் மற்றும் ஸ்போர்ட் பம்ப்பரை சுற்றி கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங் கொண்டுள்ளது. காரின் முன்பக்கம் ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது.
பின்புறம் முற்றிலும் புதிய டெயில் லைட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. பின்புற பம்ப்பர் சோதனைக்காக மறைக்கப்பட்டு இருக்கிறது. சான்ட்ரோவின் பெரிய வின்ட்ஷீல்டின் மேல் ஸ்டாப் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. புதிய சான்ட்ரோவின் ஒட்டுமொத்த வடிவமைப்பு அதிநவீன முறையில் செய்யப்பட்டுள்ளது.

காரின் உள்புறம் புதிய சான்ட்ரோ பிரீமியம் தோற்றம் பெற்றிருக்கிறது. டாப்-என்ட் மாடலில் அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கேபின் டூயல்-டோன் தீம் கொண்டுள்ளதோடு 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர புதிய ஹூன்டாய் சான்ட்ரோவில் பின்புற ஏ.சி. வென்ட்கள் டாப்-என்ட் வேரியன்ட்டில் வழங்கப்படுகிறது. புதிய சான்ட்ரோவில் வழக்கமான பாதுகாப்பு அம்சங்களான ஏர்-பேக், ஏ.பி.எஸ்., ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு அலெர்ட் வார்னிங் மற்று்ம முன்பக்க சீட்பெல்ட் ரிமைன்டர் போன்றவை வழங்கப்படுகிறது. மேலும் டாப்-என்ட் வேரியன்ட்டில் டூயல் ஏர்-பேக், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்றவை வழங்கப்படுகிறது.
புதிய சான்ட்ரோ மாடலில் 1.1 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர், 99 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்று்ம 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. புதிய சான்ட்ரோவில் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Hyundai #Santro
ஹூன்டாய் நிறுவனம் புதிய சன்ட்ரோ மாடலை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் அந்நிறுவனத்தின் புதிய கிரான்ட் i10 காரின் அறிமுக விவரங்கள் வெளியாகியுள்ளது. #Hyundai
தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூன்டாய் இந்தியாவில் புதிய சான்ட்ரோ காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய சான்ட்ரோ மாடல் அக்டோபர் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்நிலையில் அடுத்த தலைமுறை ஹூன்டாய் கிரான்ட் i10 கார் இந்தியாவில் அக்டோபர் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹூன்டாய் சான்ட்ரோ போன்றே, அடுத்த தலைமுறை கிரான்ட் i10 கார் தற்சமயம் விற்பனையாகும் காரை விட பிரீமியம் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய கிரான்ட் i10 பின்புறம் அமரும் வாடிக்கையாளர்களும் சவுகரிய அனுபவம் வழங்கும் படி வடிவமைக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் புதிய ஹூன்டாய் கிரான்ட் i10 இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. முற்றிலும் மறைக்கப்பட்ட நிலையில், சோதனை செய்யப்படும் கிரான்ட் i10 மாடல் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கலாம் என்றும் இதன் முன்பக்கம் அழகிய கிரில் காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக முன்பக்கம் ஸ்வெப்ட்-பேக் ஹெட்லேம்ப்கள் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது. காரின் பக்கவாட்டில் மேம்படுத்தப்பட்ட புதிய வடிவமைப்பு கொண்ட பெரிய ஜன்னல்கள் உள்புற கேபினில் காற்றோட்டத்திற்கு ஏதுவாக இருக்கின்றன.
பின்புறம் புதிய வடிவமைப்பு கொண்ட டெயில் லேம்ப் கிளஸ்டர் ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது. கிரான்ட் i10 பாடி அம்சங்கள் தற்போதைய மாடலில் உள்ளதை போன்று இருக்கும் என கூறப்படுகிறது.
கிரான்ட் i10 மாடலின் உள்புறம் டூயல்-டோன் நிறம், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் மின்முறையில் மாற்றக்கூடிய ORVM-கள் வழங்கப்பட்டுள்ளன.






