என் மலர்tooltip icon

    கார்

    இந்தியாவில் மாருதி சுசுகி புதிய வேகன் ஆர் மாடலின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #WagonR
    மாருதி நிறுவனத்தின் புதிய வேகன் ஆர் கார் இந்தியாவில் பலமுறை சோதனை செய்யப்படும் நிலையில் இதன் வெளியீட்டு விவரம் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய வேகன் ஆர் மாடல் இந்தியாவில் 2019-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் கூறப்படுகிறது.

    புதிய வேகன் ஆர் மாடல் எர்டிகா மாடலின் கீழ் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கார் குறித்து மாருதி சுசுகி எவ்வித தகவலும் வழங்காத நிலையில், புதிய வேகன் ஆர் மாடலில் ஏழு பேர் வரை அமரக்கூடிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

    இந்திய சோதனையின் போது எடுக்கப்பட்ட படங்களில் காரின் விவரங்கள் வெளியானது. அதன்படி புதிய தலைமுறை சுசுகி சோலியோ ஏற்கனவே ஜப்பானில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரில் புதிய ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ மற்றும் புதிய தலைமுறை எர்டிகா மாடல்களில் வழங்கப்பட்ட ஹார்டெக்ட் பிளாட்ஃபார்ம் வழங்கப்பட்டுள்ளது.



    காரின் முன்பக்கம் ஜப்பான் நாட்டு வழக்கப்படி காட்சியளிக்கிறது. சிறிய பொனெட், தடித்த க்ரோம் ஸ்லாட் க்ரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஸ்லைடர் கதவுகள் வழங்கப்பட்டுள்ளது. சோலியோ மாடலில் ஐந்து பேர் பயணம் செய்ய முடியும். உள்புறமும், வெளிப்புறத்தை போன்றே மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி உள்புறத்தின் மத்தியில் சென்டர் கன்சோலில் மவுன்ட் செய்யப்பட்ட கியர் ஸ்டிக் கொண்டிருக்கிறது. தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டாப் என்ட் வேரியன்ட்-இல் வழங்கப்படும் என தெரிகிறது.

    புதிய சோலியா மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை AMT மற்றும் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. #WagonR
    ரோல்ஸ் ராய்ஸ் கலினன் எஸ்.யு.வி. மாடலின் இந்திய வெளியீட்டு தகவல்கள் வெளியாகியுள்ளது. #Rollsroyce



    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்.யு.வி. மாடலான கலினன் இந்திய வெளியீடு இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

    புதிய கலினன் எஸ்.யு.வி. மாடல் 1905-ம் ஆண்டு எடுக்கப்பட்ட தென் ஆப்பிரிக்கவை சேர்ந்த 3106 கேரட் வைரத்தின் பெயரை தழுவி பெயரிடப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய எஸ்யுவி சார்ந்த புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் கசிந்திருந்த நிலையில், தற்சமயம் புதிய கலினன் ஒருவழியாக வெளியிடப்பட்டுள்ளது. 

    வடிவமைப்பை பொருத்த வரை புதிய கலினன் முன்பக்கம் பார்க்க ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் போன்றே காட்சியளிக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் மாடலின் கவர்ச்சிகர அம்சமான ஸ்டெயின்லெஸ்-ஸ்டீல் பாந்தியன் கிரில் புதிய மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. கிரிலுடன் மேம்படுத்தப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    முன்பக்க பம்ப்பரில் க்ரோம் அம்சங்கள் காரின் தோற்றத்தை கவர்ச்சிகரமாக்குகிறது. ஐந்து பேர் அமர்ந்து செல்லக்கூடிய புதிய எஸ்யுவி 22 இன்ச் சக்கரங்களை கொண்டுள்ளது. மற்ற வீல் டிசைன் மற்றும் அளவுகளை வாடிக்கையாளர்களே தேர்வு செய்து கொள்ள முடியும். ரோல்ஸ் ராய்ஸ் என்பதால் கஸ்டமைசேஷன் அம்சங்களில் வாடிக்கையாளர்கள் விரும்பும் அம்சங்களை தேர்வு செய்து கொள்ள முடியும்.

    சமீபத்திய ரோல்ஸ் ராய்ஸ் மாடல்களை போன்றே புதிய கலினன் மாடலும் உச்சக்கட்ட ஆடம்பர அனுபவத்தை வழங்க அலுமினியம் பிளாட்ஃபார்ம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டுகளில் கலினன் மாடலின் கண்ணாடிகளில் க்ரோம் டீடெயிலிங் செய்யப்பட்டு, ஹேன்டில் மற்றும் டோர் சில்களை மறைக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. 



    புதிய ரோல்ஸ் ராய்ஸ் மாடல் சூசைடு டோர்களை பெறும் முதல் எஸ்யுவி மாடலாக அமைந்துள்ளது. பின்புறம் கலினன் மாடல் பார்க்க 1930 காலத்து ரோல்ஸ் ராய்ஸ் போன்ற டி-பேக் கொண்டுள்ளது. இந்த மாடல்களில் பின்புறம் பயணமூட்டைகளை வைக்கும் இடவசதிகளை கொண்டிருந்தது. 

    உள்புறம் எஸ்யுவி மாடலை கஸ்டமைஸ் செய்யும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுழ்ளளது. மற்ற ரோல்ஸ் ராய்ஸ் மாடல்களை போன்று புதிய மாடலிலும் தலைசிறந்த வடிவமைப்பு கொண்டுள்ளது. ஐந்து பேர் அமரக்கூடிய மாடலை ஒற்றை சீட் வடிவமைப்பில் நான்கு பேர் அமரக்கூடியதாக மாற்ற முடியும். இம்மாதிரியான வடிவமைப்பு அதிக சவுகரியத்தை வழங்கும்.

    இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மாடலில் 6.75 லிட்டர் ட்வின்-டர்போ V12 பெட்ரோல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. பேன்டம் மாடலிலும் இதே இன்ஜின் வழங்கப்பட்டுள்ள நிலையில், கலினன் மாடலில் இன்ஜின் ரீ-டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 571 பிஹெச்பி பவர், 650 என்எம் டார்கியூ @1600 ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது.
     
    அதிநவீன இன்ஜின் வழங்கப்பட்டிருக்கும் புதிய ரோல்ஸ் ராய்ஸ் மாடல் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் மாடலில் முதல் முறையாக ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் புதிய கலினன் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறுது. 

    புதிய ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மாடல் பேன்டம் மற்றும் கோஸ்ட் மாடல்களுக்கு மத்தியில் நிறுத்தப்பட இருக்கும் நிலையில் இதன் விலை ரூ.5 முதல் ரூ.8 கோடி (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ லிமிட்டெட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #baleno



    மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ லிமிட்டெட் எடிஷன் கார் பண்டிகை காலத்திற்கு முன்னதாகவே இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    பலேனோ லிமிட்டெட் எடிஷன் காரில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட பாடி கிட் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இக்னிஸ் லிமிட்டெட் எடிஷன் காரை மாருதி சுசுகி இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    வெளிப்புறத்தில் மாருதி பலேனோ லிமிட்டெட் எடிஷனின் முன்பக்கம், பின்புறம் மற்றும் பக்கவாட்டுகளில் மரத்தாலான ஸ்கிர்டிங் செய்யப்பட்டுள்ளது. கருப்பு நிறம் கொண்ட புதிய பிளாஸ்டிக் மோல்டிங் காருக்கு பிரீமியம் ஹேட்ச்பேக் போன்று ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது.



    இதுதவிர புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலின் வெளிப்புறங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. பலேனோ லிமிட்டெட் எடிஷன் மாடலின் உள்புறம் கார்பன் ஹைலைட் செய்யப்பட்ட கருப்பு நிற சீட் கவர்கள், இலுமினேட் செய்யப்பட்ட டோர் சில் கார்டு மற்றும் 3D கால்மிதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஸ்மார்ட் கீ ஃபைன்டர், நெக்சா கீ ரிங், பிரீமியம் மெத்தைகள் மற்றும் பிரீமியம் டிஷ்யூ பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பலேனோ லிமிட்டெட் எடிஷன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் இதன் விலை ரூ.30,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.



    முன்னதாக ஸ்விஃப்ட் லிமிட்டெட் எடிஷன் மாடலிலும் இதேபோன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தது. மாருதி பலேனோ லிமிட்டெட் எடிஷன் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

    இதன் பெட்ரோல் இன்ஜின் 82 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்கியூ செயல்திறனும் டீசல் இன்ஜின் 74 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. பெட்ரோல் இன்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் மற்றும் டீசல் இன்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ காரில் விரைவில் AMT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #MahindraMarazzo
    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ கார் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் கிடைக்கும் மராசோ காரில் பி.எஸ்.-VI எமிஷன் அமலானதும் பெட்ரோல் வேரியன்ட் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

    தற்சமயம் மஹிந்திரா மராசோ மாடலில் விரைவில் 6-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் மேக்னெட்டி மரெல்லியுடன் இணைந்து புதிய AMT கியர்பாக்ஸ் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் மஹிந்திரா நிறுவனம் பெட்ரோல் இன்ஜினுடன் AMT கியர்பாக்ஸ் வழங்கலாம் என கூறப்படுகிறது.

    மஹிந்திரா மராசோ மாடலில் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் மராசோ பெட்ரோல் வேரியன்ட் மாடல் அறிமுகம் செய்வதை மஹிந்திரா உறுதி செய்துள்ளது.



    புதிய மராசோ காரில் ட்வின்-சேம்பர் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள், சுறா பற்களை போன்ற முன்பக்க கிரில், ஃபாக் லேம்ப்க்ள், அதரடியான பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஃபாக் லேம்ப் ஹவுசிங் பிளாஸ்டிக் அக்சென்ட் செய்யப்பட்டுள்ளது.

    பக்கவாட்டில் 17 இன்ச் அலாய் வீல்கள், ORVM, இன்டகிரேட் செய்யப்பட்ட சிக்னல் இன்டிகேட்டர்கள், பின்புறம் ஷார்க் போன்ற எல்.இ.டி. டெயில் லைட்கள், ஹை ஸ்டாப் லேம்ப் மற்றும் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட பம்ப்பர் கொண்டுள்ளது. உள்புறம் சுத்தமான, அழகிய டேஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் அனைத்தும் கருப்பு நிறம் செய்யப்பட்டு, இருக்கைகள் மற்றும் டோர் ட்ரிம்களில் பெய்க் நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    இத்துடன் 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏசி வென்ட்கள், எம்.பி.வி. மாடல்களில் முதல் முறையாக சரவுன்ட் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் கேபினில் டூயல்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 3-ஸ்போக் ஸ்டீரிங் வீல் மற்றும் விமானங்களில் உள்ளதை போன்ற ஹேன்ட்பிரேக் லீவர் வழங்கப்பட்டுள்ளது.



    ஏழு மற்றும் எட்டு பேர் அமரக்கூடிய வகையில் இருவிதங்களில் கிடைக்கும் மராசோ வீல்-மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

    பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் டூயல் ஏர்பேக்ஸ், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்கள், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ISOFIX உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப்-என்ட் மாடல்களில் பின்புறம் பார்க்கிங் சென்சார்கள் மற்று் கேமரா, கார்னரிங் லேம்ப்கள் மற்றும் எமெர்ஜென்சி கால் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய மராசோ மாடலில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா மராசோ லிட்டருக்கு 17.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #MahindraMarazzo
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Tatamotors



    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹேரியர் எஸ்.யு.வி. மாடல் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் வெளியிட இருக்கிறது. புதிய ஹேரியர் எஸ்.யு.வி. மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 

    அந்த வகையில் ரஷ்லேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் டாடா மோட்டார்ஸ் விற்பனையாளர்கள் புதிய ஹேரியர் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.50,000 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய முடியும் என கூறப்படுகிறது. முன்பதிவை ரத்து செய்வோருக்கு முன்பணம் திரும்ப வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் டாடா மோட்டார்ஸ் செய்தி தொடர்பாளர், "டாடா ஹேரியர் மாடலுக்கு அதிகளவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. குறிப்பிட்ட விற்பனையாளரை வாடிக்கையாளர் வற்புறுத்தி முன்பணத்தை ஏற்றுக் கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறார்."

    "டாடா பிரான்டு மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் டாடா ஹேரியர் 2019 துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும். புதிய ஹேரியர் முன்பதிவு துவங்கும் போது பெரியளவில் விளம்பரப்படுத்துவோம். அதிகாரப்பூர்வ முன்பதிவு துவங்கப்படவில்லை என்பதால், வாடிக்கையாளர் செலுத்தி முழு பணத்தை திரும்ப வழங்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது." என அவர் மேலும் தெரிவித்தார்.


    புகைப்படம் நன்றி: Carwale

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹேரியர் காரில் தற்காலிக முகப்பு விலக்குகள் மற்றும் டெயில் லைட்களஅ வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று முன்பக்கம் இன்டிகேட்டர்கள் மற்றும் பின்புற மின்விலக்குகளும் தற்காலிகமானதாகவே வழங்கப்பட்டுள்ளது. 

    டாடா எஸ்.யு.வி.யில் இம்முறை ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் மற்றும் ஸ்டாப் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. டாடா ஃபியாட் நிறுவனத்தின் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும், புதிய காரில் ஹூன்டாயின் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என நம்பப்படுகிறது. 

    இந்த கியர்பாக்ஸ் ஃபியாட் க்ரிஸ்லரின் 140 பி.ஹெச்.பி. 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜினுக்கு ஏற்றதாக இருக்கும். மேலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் விலையும் குறைவு என்பதால், டாடா இதை வழங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    டாடா ஹேரியர் எஸ்.யு.வி. அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய காரில் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமின்றி, 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய காரில் டாடா உருவாக்கிய ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சன் எஸ்.யு.வி. மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. #nexon_hit



    டாடா நெக்சன் காம்பாக்ட் எஸ்.யு.வி. ரக மாடல் இந்தியாவில் 50,000 யூனிட்களை கடந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தினமும் 136 யூனிட்கள் என மாதம் 4,088 யூனிட்களை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. 

    இந்தியாவில் செப்டம்பர் 21, 2017-இல் அறிமுகமான டாடா நெக்சன் இந்தியாவில் 2.5 மாதங்களுக்குள் 10,000 யூனிட்கள் விற்பனையை கடந்தது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 25,000-வது யூனிட்டை வெளியிட்டது. இந்த யூனிட் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பூனே ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது.

    டாடா நெக்சன் XZ+ ட்ரிம் மாடலில் பகலில் எரியும் எல்இடி மின்விளக்குகள், டூயல்-டோன் ரூஃப் விரும்புபவர்கள் தேர்வு செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது. இந்தியாவில் தற்சமயம் நெக்சன் முன்பதிவு செய்வோர் குறைந்த பட்சம் எட்டு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

    இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை டாடா நெக்சன் மாடலில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு ரெவோடிரான் பெட்ரோல் மோட்டார் மற்றும் புதிதாய் உருவாக்கப்பட்டுள்ள 1.5 லிட்டர் ரெவோடார்க் நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் யூனிட் டர்போசார்ஜ்டு மோட்டார் டியாகோ மற்றும் டிகோர் மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது. 



    இந்த இன்ஜின்களில் 108 bhp, 5000 rpm செயல்திறன் மற்றும் 170 Nm டார்கியூ மற்றும் 2000-4000 rpm கொண்டுள்ளது. இதன் டீசல் மோட்டார் 108 bhp, 3750 rpm மற்றும் 260 Nm டார்கியூ மற்றும் 1500-2750 rpm செயல்திறன் கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

    நெக்சன் மாடலில் 6.5 இன்ச் எச்டி ஸ்கிரீன் மற்றும் புத்தம் புதிய நெக்சன் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் ரக ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. இதன் டேஷ்போர்டு டூயல் டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் டாடா நெக்சன் விலை ரூ.6.23 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) துவங்குகிறது. மாருது சுசுகி விடாரா பிரெசா மற்றும் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஃபோர்டு இகோஸ்போர்ட் மாடல்களுக்கு புதிய நெக்சன் போட்டியாக அமைந்துள்ளது. 
    மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பலேனோ மாடல் காரின் உற்பத்தி எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. #MarutiSuzuki #baleno
    இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி தனது பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான பலேனோவை அக்டோபர் 2015-இல் அறிமுகம் செய்தது.

    இந்நிலையில், மாருதி சுசுகி பலேனோ உற்பத்தி எண்ணிக்கையை அதிகப்படுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் அறிமுகமானது முதல் மாருதி சுசுகி விற்பனையில் பலேனோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இதுவரை பலேனோ மாடல் மட்டும் அறிமுகமான மூன்றே ஆண்டுகளில் சுமார் நான்கு லட்சத்துக்கும் அதிக கார்களை விற்பனை செய்திருப்பதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது. இத்தகைய மைல்கல் சாதனையை படைக்கும் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக மாருதி பலேனோ இருக்கிறது.

    நெக்சா பிரீமியம் விற்பனையகங்களின் வெற்றிக்கு மாருதி பலேனோ முக்கிய பங்கு வகித்திருக்கிறது. இத்துடன் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாகவும் பலேனோ இருக்கிறது.



    உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், ஐரோப்பா மற்றும் லத்தின் அமெரிக்கா போன்ற நாடுகளில் மாருதி பலேனோ ஏற்றுமதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி பலேனோ ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    ஜப்பானில் ஏப்ரல் 2018 காலக்கட்டத்தில் மட்டும் மாருதி பலேனோ சுமார் 20,000-க்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. சமீபத்தில் அறிமுகமான புதிய தலைமுறை ஸ்விஃப்ட் பலேனோவுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை எதுவும் செய்யமுடியாத சூழல் நிலவி வருகிறது.

    இந்தியாவில் பலேனோ விற்பனைக்கு முக்கிய காரணமாக இதன் விலை கவர்ச்சிகர வடிவமைப்பு உள்ளிட்டவை இருக்கின்றன. மாருதி பலேனோ மாடலின் வடிவமைப்பு இளைஞர்களை கவரும் வகையில் ஸ்போர்ட் மற்றும் கூர்மையான தோற்றம் கொண்டிருக்கிறது.

    மாருதி பலேனோ ஆரம்ப விலை ரூ.5.35 லட்சத்தில் துவங்கி, டாப் என்ட் மாடல் ரூ.8.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. #MarutiSuzuki #baleno
    சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகமாகி, இந்த ஆண்டு இந்தியா வந்திருக்கும் லம்போர்கினி உருஸ் முதல் கார் இந்தியாவில் வினியோகம் செய்யப்பட்டது. #Lamborghini #Urus



    லம்போர்கினி உருஸ் சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகமாகி, இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து இந்தியாவில் முதல் லம்போர்கினி உருஸ் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் வசிக்கும் வாடிக்கையாளர் ஒருவர் புதிய லம்போர்கினி உருஸ் மாடலை முன்பதிவு செய்திருக்கிறார்.

    இந்தியா வந்திருக்கும் புதிய உருஸ் மாடலில் ரோஸோ ஆன்டிரோஸ் ஃபினிஷ் செய்யப்பட்டு, 22-இன்ச் டைமன்ட் ஃபினிஷ் நேத் வீல்களை கொண்டுள்ளது. இத்துடன் கிளாஸ் பிளாக் வெளிப்புறம், க்ரோம் ஃபினிஷ் உள்ளிட்டவை காரின் தோற்றத்தை அழகாக வெளிப்படுத்துகிறது. 
     
    உள்புறம் ஐந்து லெதர்-கிளாட் சீட் மற்றும் மூன்று பெரிய TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு டிஸ்ப்ளே ஸ்டீரிங் வீல் பின்புறம் வழங்கப்பட்டு வழக்கமான இன்ஸ்ட்ரூமென்ட் பினாக்கிள் மாற்றாக அமைந்துள்ளது. மற்ற இரண்டு டிஸ்ப்லேக்கள் சென்டர் கன்சோல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டத்தை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.



    லம்போர்கினி நிறுவனத்தின் இரண்டாவது எஸ்.யு.வி. மாடலாக உருஸ் அமைந்துள்ள உருஸ் மாடலில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போ வி8 ரக இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 641 பி.எச்.பி. பவர் 6000 ஆர்.பி.எம். மற்றும் 850 என்.எம். டார்கியூ 2250-4500 ஆர்.பி.எம். பவர் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த இன்ஜின் 0-100 கிலோமீட்டர் வேகத்தை 3.6 விநாடிகளில் செல்லும் என்றும் 12.8 விநாடிகளில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். புதிய உருஸ் மாடலின் உச்ச வேகம் மணிக்கு 305 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆறு வெவ்வேறு டிரைவிங் மோட்: ஸ்டிராடா (ஸ்டிரீட்), ஸ்போர்ட், கோர்சா (டிராக்) மற்றும் ஆஃப்ரோடிங் செய்ய சபியா (சாணட்), டெரா (கிராவல்) மற்றும் நெவ் (ஸ்னோ) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் லம்போர்கினி உருஸ் விலை ரூ.3 கோடி (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, எனினும் இதன் விலை ரூ.4 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் எலெக்ட்ரிக் வெர்ஷன் வெளியீட்டு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #MarutiSuzuki
    மாருதி சுசுகி நிறுவனம் புது டெல்லியில் எலெக்ட்ரிக் மாடலின் ப்ரோடோடைப் வெர்ஷனை அறிமுகம் செய்தது. புதிய மாடலின் பெயரை அறிவிக்கா நிலையில், புதிய மாடல் ப்ரோடோடைப் இ.வி. என அழைக்கப்படுகிறது. இது பார்க்க ஜப்பானில் விற்பனையாகி வரும் வேகன் ஆர் போன்று காட்சியளிக்கிறது.

    இந்த மாடலின் வடிவமைப்பு ஜப்பானில் விற்பனை செய்யப்படும் வேகன் ஆர் ஸ்டான்டர்டு மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஜப்பானில் ஸ்டான்டர்டு வேரியன்ட் வேகன் ஆர் 2017 ஜனவரி முதல் விற்பனை செய்யப்படுகிறது. வேகன் ஆர் இ.வி. மாடலில் ஸ்பில்ட் ஹெட்லேம்ப்கள், பெரிய கிரில் இடம்பெற்றிருக்கிறது.


    முன்பக்க பம்ப்பரில் பெரிய கிரில் பகுதி இடம்பெற்றுள்ளது. பக்கவாட்டுகளில் சிறப்பான வடிவமைப்பு அம்சங்கள் புதிய பி=பில்லர் காரின் தோற்றத்தை வித்தியாசப்படுத்துகிறது. இதன் விங் மிரர் இம்முறை கதவில் பொருத்தப்பட்டுள்ளது. பின்புறம் டெயில்கேட் சன்கென் டெயில்-லேம்ப்களுடன் பின்புற பம்ப்பரின் மேல் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்தியாவில் புதிய வேகன் ஆர் இ.வி. மாடல் ஏப்ரல் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்திய மாடலின் சிறப்பம்சங்கள் சார்ந்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் காரில் எம்.ஆர்.எஃப். டையர்கள் கொண்டிருக்கிறது. #MarutiSuzuki 
    இந்தியாவில் ஆகஸ்டு 2018 நிலவரப்படி அதிகம் விற்பனையாகும் கார் மாடல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #MarutiSuzuki #Car



    இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஆகஸ்டு 2018 மாதத்தில் அதிகம் விற்பனையான காராக மாரு ஆல்டோ இருக்கிறது. 

    அந்த வகையில் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமான மாருதி சுசுகி டிசையர் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகமானது முதல் அதிகம் விற்பனையாகும் கார்களில் முதலிடம் பிடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    மாருதி டிசையர் நுகர்வோர் மற்றும் வணிக ரீதியில் கால் டாக்சி போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படுகிறது. முதலிடத்தை இழந்து இருந்தாலும், அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் செடான் மாடலாக இறுக்கிறது. இதுதவிர அறிமுகமானது முதல் ஆகஸ்டு மாதத்தில் மிக குறைந்த விற்பனையை பதிவு செய்திருக்கிறது.

    விற்பனை சரிவுக்கு முக்கிய காரணமாக ஹோன்டா அமேஸ் இருப்பதாக கூறப்படுகிறது. புதிய மாடலின் உள்புறம் அதிகம் மேம்படுத்தப்பட்டு, அதிக சவுகரியமாக இருக்கிறது. இரண்டாம் தலைமுறை அமேஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    விலையை பொருத்த வரை மாருதி டிசையர் ரூ.5.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹோன்டா அமேஸ் மாடலின் பேஸ் வேரியன்ட் விலை ரூ.5.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் கார் வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது. #Ertiga



    மாருதி சுசுகி நிறுவனம் சமீத்தில் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்சமயம், மாருதி நிறுவனம் புதிய எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அக்டோபர் மாத கடைசி வாரத்தில் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தசரா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செயய்ப்படலாம் என தெரிகிறது. பண்டிகை காலத்தில் புதிய வாகனம் விரும்புவோருக்கு எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் நல்ல தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எர்டிகா ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய எர்டிகா நெக்சா பிரீமியம் விற்பனை மையங்கள் இன்றி, அரீனா விற்பனை நெட்வொர்க் மூலம் விற்பனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய மாடல் வெளியாக இருக்கும் நிலையில், முதல் தலைமுறை எர்டிகா மாடல் தொடர்ந்து டூர் பேட்ஜிங் உடன் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.



    வெளிப்புறத்தில் மாருதி எர்டிகா மாடலில் முன்புறம் புதிய கிரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக புதிய எர்டிகா பிரீமியம் தோற்றத்தில் தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது அழகாக காட்சியளிக்கிறது.

    பக்கவாட்டில் மிதப்பது போன்ற ரூஃப் வடிவமைப்பு மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. புதிய எர்டிகா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் சியாஸ் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டீசல் மாடலில் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    கார் பயன்படுத்துவோர் அதனை எப்போதும் புதிது போன்று ஜெலிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
    கார் வாங்க வேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ளது. கார் வாங்கிய பிறகு அதை சிலர் சரியாக பராமரிப்பதுண்டு. சிலர் பராமரிப்பில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள்.

    ‘கார் வாங்கி ஓராண்டு ஆகிறது’ என்று கூறினாலும் நம்புவதற்கே கடினமாக இருக்கும் அளவுக்கு புத்தம் புதிய கார் போல பராமரிப்பவர்களும் உள்ளனர். அதுபோல, ‘கார் வாங்கி 6 மாதம்தான் ஆகிறதா?, பார்த்தால் 6 ஆண்டுகள் பழைய கார் போல இருக்கிறதே’ என்று நமக்கு ஷாக் கொடுப்பவர்களும் உண்டு.

    காரை வெறும் இயந்திரம்தானே என்று பார்ப்பவர்கள் இரண்டாவது ரகத்தினர். அவர்கள் பயணிக்க ஒரு வாகனம் என்ற அளவில்தான் அவர்களது எண்ணமும் செயலும் இருக்கும். கார் மீது சிறு கீறல் விழுந்தால் கூட துடித்துப் போகும் அளவுக்கு கார் காதலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் காரைப் பராமரிக்கும் அழகே தனி.

    சரி, நம்மால் பராமரிக்க முடியவில்லை, காரை பார்க்க பளபளவென வைத்திருந்தால்தானே மதிப்பு என்று நினைப்பவர்களுக்கு உதவ பல கார் பராமரிப்பு நிறுவனங்கள் வந்துள்ளன.

    பொதுவாக கார்களை வாங்கிய பின் அதற்கு வாட்டர் வாஷ் மற்றும் இயந்திரங்களில் பழுது நீக்குதல் போன்ற தேவைகளுக்காக விற்பனைக்கு பிந்தைய சேவை மையங்களில் காரை விடுபவர்கள்தான் ஏராளம். ஆனால் கார் பராமரிப்பு மையங்கள் என்பவை காருக்கு புது பொலிவு தருபவை. இவை பெரும்பாலும் காரின் வெளிப்புறத் தோற்றத்தை ஜொலிக்கச் செய்பவை.



    பொதுவாக விலை உயர்ந்த மாடல் கார்களை வைத்திருப்பவர்கள்தான், தங்கள் கார் எப்போதும் புதிது போல பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பாலிஷ் செய்து கொள்வது வழக்கம். ஆனால் இப்போது சிறிய ரகக் கார்கள் வைத்திருப்பவர்களும் தங்கள் காருக்கும் பாலிஷ் போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

    கார் எப்போதும் புதிது போன்று ஜொலிக்க, அதனை அவ்வப்போது சரியாக சுத்தம் செய்ய வேண்டும். வெளிப்புறங்களில் சுத்தம் செய்ய ஷாம்பு பயன்படுத்தலாம்.

    மெழுகு மற்றும் பாலிஷ் செய்யும் போது, சரியானதை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது சில வகை பெயின்ட்கள் அனைத்து பாலிஷ் மற்றும் மெழுகு போன்றவற்றுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதனால் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பெயின்ட் வகையை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற பாலிஷ் அல்லது மெழுகு பயன்படுத்தலாம்.

    சமீபத்தில் காருக்கு பெயின்ட் அடித்திருந்தாலோ அல்லது புதிய கார் வாங்கியிருந்தாலோ பெயின்ட் கன்டிஷனர் பயன்படுத்தலாம். கன்டிஷனர் பயன்படுத்தும் போது அதனுடன் வழங்கப்படும் வழிமுறைகளை சரியாக பின்பற்றுவது அவசியமாகும்.

    காரின் வெளிப்புறத்தில் பாலிஷ் மற்றும் வேக்சிங் செய்வது சிறப்பான தோற்றத்தை வழங்கினாலும், அவற்றை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க அன்டர்கோட்டிங் அல்லது ரஸ்ட்-ப்ரூஃபிங் செய்ய வேண்டியது அவிசயம் ஆகும். இவ்வாறு செய்யும் போது காரில் துரு பிடிக்காது.
    ×