என் மலர்

  செய்திகள்

  ரோல்ஸ் ராய்ஸ் கலினன் இந்திய வெளியீட்டு விவரம்
  X

  ரோல்ஸ் ராய்ஸ் கலினன் இந்திய வெளியீட்டு விவரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரோல்ஸ் ராய்ஸ் கலினன் எஸ்.யு.வி. மாடலின் இந்திய வெளியீட்டு தகவல்கள் வெளியாகியுள்ளது. #Rollsroyce  ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்.யு.வி. மாடலான கலினன் இந்திய வெளியீடு இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

  புதிய கலினன் எஸ்.யு.வி. மாடல் 1905-ம் ஆண்டு எடுக்கப்பட்ட தென் ஆப்பிரிக்கவை சேர்ந்த 3106 கேரட் வைரத்தின் பெயரை தழுவி பெயரிடப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய எஸ்யுவி சார்ந்த புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் கசிந்திருந்த நிலையில், தற்சமயம் புதிய கலினன் ஒருவழியாக வெளியிடப்பட்டுள்ளது. 

  வடிவமைப்பை பொருத்த வரை புதிய கலினன் முன்பக்கம் பார்க்க ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் போன்றே காட்சியளிக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் மாடலின் கவர்ச்சிகர அம்சமான ஸ்டெயின்லெஸ்-ஸ்டீல் பாந்தியன் கிரில் புதிய மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. கிரிலுடன் மேம்படுத்தப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. 

  முன்பக்க பம்ப்பரில் க்ரோம் அம்சங்கள் காரின் தோற்றத்தை கவர்ச்சிகரமாக்குகிறது. ஐந்து பேர் அமர்ந்து செல்லக்கூடிய புதிய எஸ்யுவி 22 இன்ச் சக்கரங்களை கொண்டுள்ளது. மற்ற வீல் டிசைன் மற்றும் அளவுகளை வாடிக்கையாளர்களே தேர்வு செய்து கொள்ள முடியும். ரோல்ஸ் ராய்ஸ் என்பதால் கஸ்டமைசேஷன் அம்சங்களில் வாடிக்கையாளர்கள் விரும்பும் அம்சங்களை தேர்வு செய்து கொள்ள முடியும்.

  சமீபத்திய ரோல்ஸ் ராய்ஸ் மாடல்களை போன்றே புதிய கலினன் மாடலும் உச்சக்கட்ட ஆடம்பர அனுபவத்தை வழங்க அலுமினியம் பிளாட்ஃபார்ம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டுகளில் கலினன் மாடலின் கண்ணாடிகளில் க்ரோம் டீடெயிலிங் செய்யப்பட்டு, ஹேன்டில் மற்றும் டோர் சில்களை மறைக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.   புதிய ரோல்ஸ் ராய்ஸ் மாடல் சூசைடு டோர்களை பெறும் முதல் எஸ்யுவி மாடலாக அமைந்துள்ளது. பின்புறம் கலினன் மாடல் பார்க்க 1930 காலத்து ரோல்ஸ் ராய்ஸ் போன்ற டி-பேக் கொண்டுள்ளது. இந்த மாடல்களில் பின்புறம் பயணமூட்டைகளை வைக்கும் இடவசதிகளை கொண்டிருந்தது. 

  உள்புறம் எஸ்யுவி மாடலை கஸ்டமைஸ் செய்யும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுழ்ளளது. மற்ற ரோல்ஸ் ராய்ஸ் மாடல்களை போன்று புதிய மாடலிலும் தலைசிறந்த வடிவமைப்பு கொண்டுள்ளது. ஐந்து பேர் அமரக்கூடிய மாடலை ஒற்றை சீட் வடிவமைப்பில் நான்கு பேர் அமரக்கூடியதாக மாற்ற முடியும். இம்மாதிரியான வடிவமைப்பு அதிக சவுகரியத்தை வழங்கும்.

  இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மாடலில் 6.75 லிட்டர் ட்வின்-டர்போ V12 பெட்ரோல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. பேன்டம் மாடலிலும் இதே இன்ஜின் வழங்கப்பட்டுள்ள நிலையில், கலினன் மாடலில் இன்ஜின் ரீ-டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 571 பிஹெச்பி பவர், 650 என்எம் டார்கியூ @1600 ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது.
   
  அதிநவீன இன்ஜின் வழங்கப்பட்டிருக்கும் புதிய ரோல்ஸ் ராய்ஸ் மாடல் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் மாடலில் முதல் முறையாக ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் புதிய கலினன் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறுது. 

  புதிய ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மாடல் பேன்டம் மற்றும் கோஸ்ட் மாடல்களுக்கு மத்தியில் நிறுத்தப்பட இருக்கும் நிலையில் இதன் விலை ரூ.5 முதல் ரூ.8 கோடி (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×