என் மலர்tooltip icon

    கார்

    சவுதி அரேபியாவில் முதல் முறையாக எலெக்ட்ரிக் கார் பந்தயம் நடைபெற இருக்கிறது. 2018 மற்றும் 2019-ம் ஆண்டிற்கான எலெக்ட்ரிக் கார் பந்தயத்தின் முதல் சுற்று போட்டிகள் ரியாத்தில் நடைபெறுகிறது. #ElectricCar



    கச்சா எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. உலகின் பெருமளவிலான பெட்ரோல், டீசல் தேவையைப் பூர்த்தி செய்பவையே வளைகுடா நாடுகள்தான். அப்படிப்பட்ட சூழலில் சவுதி அரேபியாவிலேயே எலெக்ட்ரிக் கார் பந்தயம் முதல் முறையாக நடத்தப்பட உள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    2018 மற்றும் 2019-ம் ஆண்டிற்கான எலெக்ட்ரிக் கார் பந்தயத்தின் முதல் சுற்று போட்டிகள் ரியாத்தில் உள்ள அட் ரியாத் எனுமிடத்தில் நடைபெற உள்ளது. இப்பகுதியானது தலைநகரை ஒட்டிய புறநகர் பகுதியாகும். இங்குதான் எலெக்ட்ரிக் கார் பந்தய போட்டிகளை நடத்த சவுதி அரேபியா அரசருடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். 

    இதற்காக அரச குடும்பத்தினர் நடத்தும் ஜெனரல் ஸ்போர்ட்ஸ் அத்தாரிடி மற்றும் தேசிய மோட்டார் சம்மேளனத்துடன் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்திற்கு பின்னால், அத்தியாவசியமான காரணமும் ஒளிந்திருக்கிறது. 

    அடுத்த 50 ஆண்டுகளில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், அதற்கு மாற்றான எரிபொருளுக்கு பழக்கப்படுத்தி வருகிறார்கள். அதில் மின்சார வாகனங்களே முன்னிலை பெறுகின்றன. மின்சக்தியில் இயங்கும் கார்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை என்பதால் மின்சார கார்களும், பஸ்களும் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.



    குறிப்பாக சவுதி அரேபியாவில் பிரபலமாக நடைபெற்று வரும் பார்முலா 1 பந்தய கார்களையும், எலெக்ட்ரிக் கார்களாக மாற்றி பந்தயம் நடத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இத்தகைய எலெக்ட்ரிக் கார் பந்தயங்களே வருங்காலத்தை ஆட்சி செய்ய இருக்கின்றன என்பதை உணர்ந்தே இந்த அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருவதாக சவுதி இளவரசர் அப்துல் அஜிஸ் பின் துர்கி அல் பைசல் அல் சவுத் தெரிவித்துள்ளார்.

    இ-ரேஸ் சாம்பியன் போட்டிக்கான முதல் சுற்று ரியாத்தில் நடத்துவதன் மூலம் இதேபோன்று அடுத்தடுத்த போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. எலெக்ட்ரிக் கார் பந்தயம் போன்று பிற விளையாட்டு போட்டிகளும் சவுதி அரேபியாவில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளன.

    எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜாகுவார், ரெனால்ட், ஆடி, சிட்ரோயன், பி.எம்.டபிள்யூ., மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனங்களின் பேட்டரி ரேஸ் கார்களும் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளன. இது பந்தய ஆர்வலர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஹூன்டாய் நிறுவனத்தின் AH2 கார் இந்தியாவில் பல மாதங்களாக சோதனை செய்யப்பட்ட நிலையில், இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Hyundai



    ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக் மாடலின் வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது. புதிய ஹூன்டாய் கார் AH2 என்ற பெயரில் பல மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், அக்டோபர் 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய ஹூன்டாய் AH2 கார் சான்ட்ரோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் அதிக பிரபலமான பிரான்டாக விளங்கிய சான்ட்ரோ கார் புதிய அம்சங்களுடன் மீண்டும் வெளியிடப்படலாம் என்றும், இந்த கார் மாருதி சுசுகி ஆல்டோ K10, ரெனால்ட் க்விட், டாடா டியாகோ மற்றும் மாருதி சுசுகி செலரியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

    ஹூன்டாயின் புதிய கார் கிரான்ட் i10 மாடலுக்கு கீழ் நிலைநிறுத்தப்பட்டு, தற்போதைய இயான் மாடலுக்கு மாற்றாக அமையும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த காரின் வரைபடத்தை ஹூன்டாய் வெளியிட்டது, அதன்படி கார் கூர்மையான வடிவமைப்பு மற்றும் சற்றே வளைந்திருக்கும் ரூஃப்லைன் மற்றும் கம்பீரமான ஷோல்டர் லைன் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.



    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ஹூனடாய் சான்ட்ரோ மாடல் அறிமுகமாகும் பட்சத்தில் புதிய ஹேட்ச்பேக் இயான் மாடலுக்கு மாற்றாக அமையும் என கூறப்படுகிறது. புதிய காரின் கேபின் பல்வேறு அம்சங்களுடன் பிரீமியம் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. புதிய சான்ட்ரோ மாடலில் 1.1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் BS-VI எமிஷன் மற்றும் AMT யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    உள்புறம் ஹூன்டாய் மாடலில் டூயல்-டோன் வடிவமைப்பு மற்றும் தலைசிறந்த உபகரணங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய காரில் வசதியான இருக்கைகள், கால் வைக்கும் வசதி மற்றும் ஹெட்ரூம் வழங்கப்படுகிறது. இதன் டாப்-என்ட் மாடலின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மல்டி-இன்ஃபர்மேஷன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட இருக்கிறது. #Hyundai
    புகாட்டி நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன் ஹைப்பர்கார் டிவோ என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. #BUGATTIDivo


    பிரான்ஸ் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான புகாட்டி தனது லிமிட்டெட் எடிஷன் ஹைப்பர்காரை அறிமுகம் செய்துள்ளது. புகாட்டி டிவோ என்ற பெயரிலி அறிமுகமாகி இருக்கும் டிவோ பல்வேறு கார் பந்தையங்களில் வெற்றி பெற்ற புகழ்பெற்ற கார் பந்தைய வீரர் ஆட்பெர்ட் டிவோ பெயரைத் தழுவி சூட்டப்பட்டுள்ளது.

    உலகம் முழுக்க 40 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. உண்மையில் புதிய புகாட்டி டிவோ சிரோன் மாடலை விட சற்று வேகம் குறைவாக செல்லும். தோற்றத்தில் இருந்து புதிய புகாட்டி கார் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. வழக்கமான சி வடிவம் கொண்ட சில்ஹௌட் உடன் தலைசிறந்த ஏரோடைனமிக் அம்சங்கள் கொண்டிருக்கிறது.



    காரின் பெரும்பாலான பாகங்கள் கார்பன் ஃபைபர் மூலம் உருவாக்கப்பட்டு, கார் முழுக்க எடை குறைக்கும் வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிரான் மாடலை விட புதிய கார் எடை 35 கிலோ வரை குறைந்திருக்கிறது. இத்துடன் டைட்டானியம் லிக்விட் சில்வர் பெயின்ட் நிறம் ஹைப்பர்காரின் ஒவ்வொரு அம்சத்தையும் தெளிவாக காண்பிக்கிறது. காரின் முன்பக்க ஸ்ப்லிட்டர் மட்டும் டிவோ ரேசிங் புளு ஷேட் செய்யப்பட்டுள்ளது.

    புதிய புகாட்டி லிமிட்டெட் எடிஷன் மாடலில் 8.0 லிட்டர் குவாட்-டர்போசார்ஜ்டு W16 இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 1479 பி.ஹெச்.பி. பவர், 1600 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இது புதிய ரேஸ்-டிரைவ் செய்யப்பட்ட டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது.  

    புகாட்டி டிவோ லிமிட்டெட் எடிஷன் மணிக்கு அதிகபட்சம் 380 கிலோமீட்டர் வரை செல்லும் படி லாக் செய்யப்பட்டுள்ளது. புகாட்டி சிரான் மணிக்கு 420 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
    ஹோன்டா அமேஸ் புதிய கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மூன்றே மாதங்களில் விற்பனையில் புதிய மைல்கல் கடந்திருக்கிறது. #HondaAmaze


    ஹோன்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை அமேஸ் கார் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் புதிய அமேஸ் விலை ரூ.5.59 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில் இதன் விலை சில தினங்களுக்கு மாற்றப்பட்டு தற்சமயம் ரூ.5.81 லட்சம் ஆக அதிகரிக்கப்பட்டது.

    இந்நிலையில் புதிய அமேஸ் விற்பனை துவங்கிய மூன்றே மாதங்களில் 30,000 யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 20 வருட ஹோன்டா விற்பனையில் இது புதிய மைல்கல் சாதனையாக அமைந்துள்ளது. 

    புதிய தலைமுறை அமேஸ் மாடல்களின் விலை அதன் வேரியன்ட்களுக்கு ஏற்ப ரூ.11,000 முதல் ரூ.31,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய அமேஸ் செடான் மாடலுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஜூலை 2018-இல் மட்டும் சுமார் 10,180 அமேஸ் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

    இது ஹோன்டா கார் விற்பனையில் மிக சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஜூன் 2018-இல் ஹோன்டா நிறுவனம் 9,103 அமேஸ் யூனிட்களும், மே மாதத்தில் 9,879 யூனிட்கள் விற்பனை செய்திருந்தது. ஹோன்டா சிட்டி மாடலுக்கு மாற்றாக புதிய அமேஸ் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது.

    2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை அமேஸ் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. 
    #Honda #automobile
    இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் மாடல்களின் விலை மாற்றப்படுகிறது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MercedesBenz


    இந்தியாவின் பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமாக அறியப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்துகிறது.

    நிர்வாக கட்டண செலவீனங்கள் அதிகரித்திருப்பதே திடீர் விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களில் யூரோவுக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஐந்து சதவிகிதம் வரை குறைந்திருப்பதும், ரெபோ கட்டணம் கடந்த சில மாதங்களில் 0.5 சதவிகிதம் வரை அதிகரித்து இருக்கிறது.

    இவை அனைத்தும் மெர்சிடிஸ் இந்தியா தனது வாகனங்களின் விலையை உயர்த்த காரணமாக தெரிவித்துள்ளது. 

    செலவீன கட்டணங்கள் விலை உயர்வு மற்றும் ஃபோரெக்ஸ் கட்டணங்கள் எதிர்பார்த்தபடி இல்லாதது போன்றவை விலை உயர்வுக்கு காரணமாக அமைந்து விட்டது என மெர்சிடிஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ரோலாண்ட் ஃபோல்ஜர் தெரிவித்தார்.

    இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் எங்களுக்கு குறைவான நடவடிக்கைகளில் நிலைமையை கட்டுக்குள் வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் மாடல்களின் விலை மாற்றம் செய்வதே தீர்வாக இருக்கும் என மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனம் மராசோ காரின் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #mahindrau321


    மஹேந்திரா நிறுவனத்தின் மராசோ எம்.பி.வி. காரை சமீபத்தில் அறிமுகம் செய்த நிலையில், செப்டம்பர் 3-ம் தேதி இந்தியாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பண்டிகை காலத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மராசோ கார் சற்று முன்னதாகவே அறிமுகம் செய்யப்படுகிறது.

    மஹேந்திரா மராசோ கார் ஏழு அல்லது எட்டு பேர் அமரக்கூடிய வெர்ஷன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மராசோ என்ற வார்த்தைக்கு ஸ்பெயின் மொழியில் ஷார்க் என அர்த்தமாகும். இந்த ஷார்க் உருவத்தை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. 

    புதிய கார் தற்போதைய மஹிந்திரா மாடல்களுக்கு மாற்றாக அமையாமல், புதிய காராக வெளியாகிறது. மராசோ தோற்றம் சார்ந்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், டேஷ்போர்டு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தற்சமயம் கிடைத்திருக்கும் புகைப்படங்களின் படி மஹிந்திரா மராசோ மாடலில் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்படுகிறது.



    இதன் உள்புறங்களில் XUV மாடலை போன்ற அம்சங்கள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிட்ஸம், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், பியானோ பிளாக் பேனலிங் மற்றும் புதிய ஸ்டீரிங் வீல் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா மராசோ மாடலின் இருக்கைகளில் பிரீமியம் லெதர் டிராப்களால் செய்யப்படுகிறது. இன்னோவா க்ரிஸ்டாவுக்கு போட்டியாகும் என்பதால், மிகவும் சவுகரியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மற்ற மஹிந்திரா வாகனங்களை விட அதிகளவு இடவசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. #mahindrau321
    நிசான் நிறுவனத்தின் மைக்ரா மற்றும் மைக்ரா ஆக்டிவ் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய கார்களின் விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Nissan #micra


    2018 நிசான் மைக்ரா மற்றும் மைக்ரா ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகமானது. புதிய ஹேட்ச்பேக் மாடல்களில் அதிக சவுகரியமாகவும், பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. நிசான் மைக்ரா மாடலில் டூயல் ஏர்பேக் அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்டேன்டர்டு அம்சமாக இருக்கிறது, எனினும் பேஸ் வேரியன்ட்-இல் ஏ.பி.எஸ். அம்சம் வழங்கப்படவில்லை.

    இத்துடன் பின்புறம் பார்க்கிங் சென்சார்களுடன் கூடிய கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 2018 நிசான் மைக்ரா மாடலில் 6.2 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மிரர்லின்க் வழங்கப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை, 2018 நிசான் மைக்ரா மாடலில் இன்டிகேட்டர்களில் ORVM சேர்க்கப்பட்டு இருப்பதை தவிர எவ்வித அப்டேட்களும் செய்யப்படவில்லை.

    2018 நிசான் மைக்ரா ஆக்டிவ் மாடலில் ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்கள், ரெயின்-சென்சிங் வைப்பர்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் கீலெஸ் என்ட்ரி, உயரத்தை மாற்றியமைக்கக்கூடிய ஓட்டுனர் இருக்கை, ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன.



    புதிய நிசான் மைக்ரா மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 76 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 104 என்.எம். டார்கியூ செயல்திறனும், பெட்ரோல் மோட்டார் 63 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 160 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இவற்றின் டிரான்ஸ்மிஷன்கள் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

    2018 நிசான் மைக்ரா ஆக்டிவ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 104 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 2018 நிசான் மைக்ரா மற்றும் மைக்ரா ஆக்டிவ் மாடல்களின் விலை முறையே ரூ.6.19 லட்சம் மற்றும் ரூ.5.03 லட்சம் முதல் துவங்குகிறது. #Nissan #micra
    மாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனையில் காரின் மேலும் சில விவரங்கள் தெரியவந்துள்ளது. #Maruti


    மாருதி சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் சோதனை செய்யும் படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகிவந்த நிலையில், காரின் உள்புறம் மற்றும் வெளிப்புறம் சார்ந்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய செடான் மாடல் ஆகஸ்டு 20-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 
     
    நெக்சா விற்பனையகங்களில் புதிய சியாஸ் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளன, அதன்படி பயனர்கள் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை செலுத்தி புதிய செடான் மாடலை முன்பதிவு செய்யலாம். இத்துடன் புதிய கார் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

    அதன்படி புதிய சியாஸ் மாடல் மேக்னம் கிரே நிறத்தில் கிடைக்கும் என்றும் மெஷின் ஃபினிஷ் செய்யப்பட்ட 16-இன்ச் அலாய் வீல்கள் ஆல்ஃபா வேரியன்ட்-லும், டெல்டா மாடலில் 15-இன்ச் வீல்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய சியாஸ் மாடல்: சிக்மா, டெல்டா, சீட்டா மற்றும் ஆல்ஃபா என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.



    மற்ற அம்சங்களை பொருத்த வரை 7 இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், லெதர் இருக்கைகள், ஆட்டோ டிமமிங் IRVM வசிதகளும், ஸ்டீரிங் வீலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி அனைத்து வேரியன்ட்களுக்கும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    சியாஸ் மாடல் 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஹைப்ரிட் அல்லது மைல்டு ஹைப்ரிட் காம்பினேஷன்களில் வெளியிடப்படலாம் என்றும் டீசல் மோட்டார் புதிய 1.5 லிட்டர் யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டீசல் இன்ஜினும் புதிதாய் உருவாக்கப்பட்ட 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்சமயம் விற்பனையாகும் சியாஸ் டீசல் மாடலில் உள்ளதை போன்ற SHVS ஸ்மார்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பம் இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த SHVS சிஸ்டம் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டரை பயன்படுத்துகிறது. #Maruti #automobile
    ஹூன்டாய் நிறுவனம் இந்தியாவில் தனது இயான் ஹேட்ச்பேக் விற்பனையை நிறுத்த முடிவு செய்திருப்பதாகவும், இதற்கு மாற்றாக புதிய கார் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. #Hyundai #automobile


    ஹூன்டாய் நிறுவனம் இந்தியாவில் இயான் ஹேட்ச்பேக் மாடலின் விற்பனையை நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயான் காருக்கு மாற்றாக ஹூன்டாய் சில மாதங்களாக சோதனை செய்து வரும் புதிய ஹேட்ச்பேக் மாடலை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. புதிய ஹேட்ச்பேக் AH2 என்ற குறியீட்டு பெயரில் உற்பத்தி செய்யப்படுகிறது. 

    புதிய AH2 கார் அறிமுகமானதும், ஹூன்டாய் இயான் மற்றும் கிரான்ட் i10 விற்பனை படிப்படியாக நிறுத்தப்படும் என கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு முதல் இயான் விற்பனை வெகுவாக குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2020 எமிஷனின் படி புதிய விதிமுறைகள் அமாலகும் போது, ஹூன்டாயின் புதிய ஹேட்ச்பேக் சந்தையில் புதுவரவு காராக இருக்கும். புதிய ஹேட்ச்பேக் i10 மாடலின் பிளாட்ஃபார்மையே பயன்படுத்தும் என கூறப்படுகிறது. புதிய ஹூன்டாய் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை வெளியாகி இருக்கிறது. 



    இந்த காருக்கான பெயர் இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், அடுத்த மாத வாக்கில் ஹூன்டாய் நிறுவனம் போட்டி ஒன்றை நடத்தவிருக்கிறது. இதில் வாடிக்கையாளர்களிடம் புதிய காரின் பெயரை வழங்கலாம். ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த கார் புதிய பொலிவுடன் சான்ட்ரோ பிரான்டிங் கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது. 

    இந்தியாவில் சான்ட்ரோ பிரான்டு அதிகம் பிரபலமான மாடலாக இருந்தது. 2000 ஆண்டுகளின் துவக்கத்தில் அதிக பிரபலமாக இருந்த சான்ட்ரோ, பின்னர் ஹூன்டாய் i10 மாடல் அறிமுகமானதும் சான்ட்ரோ விற்பனை குறைந்தது குறிப்பிடத்தக்கது.
    ஹோன்டா நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட புதிய தலைமுறை அமேஸ் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. #Honda


    ஹோன்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை அமேஸ் கார் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் புதிய அமேஸ் விலை ரூ.5.59 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில் இதன் விலை மாற்றப்பட்டு தற்சமயம் ரூ.5.81 லட்சம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    புதிய தலைமுறை அமேஸ் மாடல்களின் விலை அதன் வேரியன்ட்களுக்கு ஏற்ப ரூ.11,000 முதல் ரூ.31,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய அமேஸ் செடான் மாடலுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஜூலை 2018-இல் மட்டும் சுமார் 10,180 அமேஸ் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

    இது ஹோன்டா கார் விற்பனையில் மிக சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஜூன் 2018-இல் ஹோன்டா நிறுவனம் 9,103 அமேஸ் யூனிட்களும், மே மாதத்தில் 9,879 யூனிட்கள் விற்பனை செய்திருந்தது. ஹோன்டா சிட்டி மாடலுக்கு மாற்றாக புதிய அமேஸ் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது.

    புதிய விலை மாற்றத்தைத் தொடர்ந்து ஹோன்டா அமேஸ் மாருதி சுசுகி டிசையர் மாடலை விலை அதிகமாகி உள்ளது. மாருதி சுசுகி டிசையர் விலை ரூ.5.56 லட்சம் முதல் துவங்கி டாப்-எனஅட் டீசல் வேரியன்ட் விலை ரூ.9.43 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #Honda #automobile
    ஹூன்டாய் கிரெட்டா 2018 எஸ்.யு.வி. இரண்டே மாதங்களில் சுமார் 40,000-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Hyundai


    இந்தியாவில் 2015-ம் ஆண்டு அறிமுகமான ஹூன்டாய் கிரெட்டா எஸ்.யு.வி. மிகவும் பிரபலமான மாடலாக அறியப்படுகிறது. இதன் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட 2018 கிரெட்டா வெர்ஷன் இந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் புதிய கிரெட்டா மாடல் சுமார் 40,000-க்கும் அதிமானோர் முன்பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய கிரெட்டா காரில் முன்பக்கம் பெரிய கேஸ்கேட் கிரில், முன்பக்க பம்ப்பரில் ஃபாக் லேம்ப் சேர்க்கப்பட்டுள்ளது. பின்புற பம்ப்பர்கள் மற்றும் டெயில்லேம்ப்களில் புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வெளிப்புறத்தில் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு  பின்புறம் முற்றிலும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. 

    உள்புறத்தின் ஹூன்டாய் கிரெட்டா 2018 மாடலில் அதிக மாற்றங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில், டாப் என்ட் மாடலில் மட்டும் சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. பேஸ் இ வேரியன்ட் மாடலில் ஓட்டுனர் இருக்கை உயரத்தை மாற்றும் வசதி வழங்கப்படுகிறது. டாப்-என்ட் SX (O) மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ஓட்டுனர் இருக்கையை ஆறு விதங்களில் மாற்றும் வசதி, ஸ்மார்ட் கீ பேன்ட், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆறு ஏர்-பேக் வழங்கப்பட்டுள்ளது.
     


    ஹூன்டாய் கிரெட்டா 2018 மாடலில் 1.4 லிட்டர் டீசல், 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 1.54 லிட்டர் டீசல் இன்ஜின் 88.7 பிஹெச்பி பவர், 1.6 லிட்டர் பெட்ரோல் யூனிட் 121 பிஹெச்பி பவர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் யூனிட் 126 பிஹெச்பி பவர் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    1.4 லிட்டர் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 1.6 லிட்டர் இன்ஜின்கள் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளன. டாப்-என்ட் SX (O) வேரியன்ட் மாடலில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் அம்சம் வழங்கப்படவில்லை.

    இந்தியாவில் ஹூன்டாய் கிரெட்டா 2018 பேஸ் வேரியன்ட் விலை ரூ.9.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) துவங்கி டாப் என்ட் வேரியன்ட் விலை ரூ.15.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கிரெட்டா 2018 வைட், ஆரஞ்சு, பிளாக், சில்வர் புளு, ரெட், வைட்/பிளாக் (டூயல்-டோன் ) மற்றும் ஆரஞ்சு/பிளாக் (டூயல்-டோன்) என மொத்தம் ஏழு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது. #Hyundai
    இந்தியாவில் மாருதி சுசுகி நெக்சா விற்பனையாளர்கள் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளனர். அதன்படி புதிய கார் விரைவில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. #Ciaz


    மாருதி சுசுகி நெக்சா விற்பனையாளர்கள் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளனர். ரூ.11,000-இல் துவங்கி ரூ.21,000 வரை என ஒவ்வொரு விற்பனையாளரிடமும் முன்பதிவு கட்டணம் வேறுபடுகிறது. முன்பதிவு குறித்து மாருதி தரப்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், விற்பனையாளர்கள் தரப்பில் தற்சமயம் முன்பதிவு செய்யப்படுகிறது. 

    இந்தியாவில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் ஆகஸ்டு மாத முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது பாதியில் வெளியாக இருக்கிறது.

    புதிய கார் அறிமுகம் தாமதமாக நாடு முழுக்க இயங்கி வரும் நெக்சா விற்பனை மையங்கள் தற்போதைய சியாஸ் செடான் மாடல் காரினை விற்று தீர்க்க முடியும் என கூறப்படுகிறது. அனைத்து யூனிட்களையும் விற்றுத்தீர்க்க பல்வேறு விற்பனையாளர்கள் செடான் மாடலுக்கு குறைந்தபட்சம் ரூ.75,000 முதல் ரூ.1.3 லட்சம் வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன.

    மேம்படுத்தப்பட்ட சியாஸ் கார் ஹோன்டா சிட்டி, ஹூன்டாய் வெர்னா மற்றும் டொயோட்டா யாரிஸ் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சியாஸ் மாடலில் புதிய அம்சங்கள், உயர் ரக இன்டீரியர் அம்சங்கள் மற்றும் தலைசிறந்த செயல்திறன் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், டெயில்-லேம்ப் இன்சர்ட்கள், டேடைம் ரன்னிங் லைட்களை மாருதி புதிய காரில் வழங்கலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய அலாய் வீல்கள் மற்றும் கிரில் உள்ளிட்டவை காரின் தோற்றத்தை புதிதாக வெளிப்படும் என்றும் இது தற்சமயம் இந்தோனேஷியாவில் விற்பனையாகும் புத்தம் புதிய எர்டிகா மாடலை போன்று இருக்கும் என கூறப்படுகிறது.

    சியாஸ் மாடல் 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஹைப்ரிட் அல்லது மைல்டு ஹைப்ரிட் காம்பினேஷன்களில் வெளியிடப்படலாம் என்றும் டீசல் மோட்டார் புதிய 1.5 லிட்டர் யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டீசல் இன்ஜினும் புதிதாய் உருவாக்கப்பட்ட 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்சமயம் விற்பனையாகும் சியாஸ் டீசல் மாடலில் உள்ளதை போன்ற SHVS ஸ்மார்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பம் இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த SHVS சிஸ்டம் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டரை பயன்படுத்துகிறது. #MarutiSuzuki  #Ciaz
    ×