என் மலர்
கார்
ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய காரின் பெயர் அக்டோபர் 4-ம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Hyundai #Santro
ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய கார் விரைவில் வெளியாக இருக்கிறது. அதன்படி அக்டோபர் 4-ம் தேதி அந்நிறுவனத்தின் சிறிய ஹேட்ச்பேக் பெயர் அறிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அக்டோபர் மாத இறுதியில் இந்த கார் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
ஹூன்டாய் நிறுவனம் தனது சான்ட்ரோ மாடலை புதுப்பொழிவுடன் மீண்டும் அறிமுகம் செய்யலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய கார் சான்ட்ரோ என பெயரிடப்பட்டு கூடுதலாக முந்தைய மாடல்களை போன்றே சிங் என்ற வார்த்தை சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் அடுத்த மாத வாக்கில் ஹூன்டாய் நிறுவனம் போட்டி ஒன்றை நடத்தவிருக்கிறது. இதில் வாடிக்கையாளர்களிடம் புதிய காரின் பெயரை வழங்கலாம். இந்தியாவில் சான்ட்ரோ பிரான்டு அதிகம் பிரபலமான மாடலாக இருந்தது. 2000 ஆண்டுகளின் துவக்கத்தில் அதிக பிரபலமாக இருந்த சான்ட்ரோ, பின்னர் ஹூன்டாய் i10 மாடல் அறிமுகமானதும் சான்ட்ரோ விற்பனை குறைந்தது.

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ஹூனடாய் சான்ட்ரோ மாடல் அறிமுகமாகும் பட்சத்தில் புதிய ஹேட்ச்பேக் இயான் மாடலுக்கு மாற்றாக அமையும் என கூறப்படுகிறது. புதிய காரின் கேபின் பல்வேறு அம்சங்களுடன் பிரீமியம் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. புதிய சான்ட்ரோ மாடலில் 1.1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் BS-VI எமிஷன் மற்றும் AMT யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
உள்புறம் ஹூன்டாய் மாடலில் டூயல்-டோன் வடிவமைப்பு மற்றும் தலைசிறந்த உபகரணங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய காரில் வசதியான இருக்கைகள், கால் வைக்கும் வசதி மற்றும் ஹெட்ரூம் வழங்கப்படுகிறது. இதன் டாப்-என்ட் மாடலின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மல்டி-இன்ஃபர்மேஷன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட இருக்கிறது. #Hyundai #Santro
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்கள் திரும்ப பெறப்படுகிறது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MarutiSuzuki #Dzire
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்கள் திரும்பப் பெறப்படுகின்றன. இரண்டு மாடல்களும் ஏர்பேக் பிழை காரணமாக திரும்ப பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 7 முதல் ஜூலை 5 வரை உற்பத்தி செய்யப்பட்ட 566 சுசுகி ஸ்விஃப்ட் யூனிட்களும், 713 டிசையர் யூனிட்கள் என மொத்தம் 1279 யூனிட்கள் திரும்பப் பெறப்பட்டன.
பாதிக்கப்பட்ட மாடல்களை பயன்படுத்துவோரை மாருதி சுசுகி விற்பனையாளர்கள் மூலம் ஜூலை 25-ம் தேதி முதல் தொடர்பு கொள்ளப்படுவர். இதன் பின் அவை ஆய்வு செய்யப்பட்டு, கோளாறு இருப்பின் இலவசமாக சரி செய்து தரப்படும்.
பயனர்கள் அவர்களாகவும் மாருதி சுசுகி வலைத்தளம் சென்று தங்களது வாகனத்தில் கோளாறு இருக்கிறதா என்பதை சேசிஸ் நம்பரை பதிவிட்டு தெரிந்து கொள்ள முடியும். மேலும் பயனர்கள் தங்களது விற்பனையாளரை நேரடியாக சென்றும் வாகன கோளாறு குறித்த விவரம் அறிந்து அதனை சரி செய்து கொள்ள முடியும்.

புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடல் திரும்ப பெறப்படுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக மே மாதத்தில் பிரேக் வாக்யூம் ஹோஸ் கோளாறு காரணமாக 52,000 வாகனங்களை திரும்ப பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் பிப்ரவரி 2018-இல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் செடான் மாடலாக டிசையர் இருக்கிறது. மேலும் வெளியான ஐந்தே மாதங்களில் டிசையர் விற்பனை ஒரு லட்சம் யூனிட்களை கடந்திருந்தது.
மாருதி நிறுவனத்தின் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வெளியீடு தாமதமாவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய காரின் வெளியீடு குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MarutiSuzuki #Ciaz
மாருதி சுசுகியின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் மாடல் ஆகஸ்டு மாத முதல் வாரத்தில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியான நிலையில், இதன் அறிமுகம் மேலும் தாமதமாகியிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி புதிய காரின் அறிமுக நிகழ்வு ஆகஸ்டு மாத இறுதியில் நடைபெறலாம் என கூறப்படுகிறது.
புதிய கார் அறிமுகம் தாமதமாலதா நாடு முழுக்க இயங்கி வரும் நெக்சா விற்பனை மையங்கள் தற்போதைய சியாஸ் செடான் மாடல் காரினை விற்று தீர்க்க முடியும் என கூறப்படுகிறது. அனைத்து யூனிட்களையும் விற்றுத்தீர்க்க பல்வேறு விற்பனையாளர்கள் செடான் மாடலுக்கு குறைந்தபட்சம் ரூ.75,000 முதல் ரூ.1.3 லட்சம் வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன.
மேம்படுத்தப்பட்ட சியாஸ் கார் ஹோன்டா சிட்டி, ஹூன்டாய் வெர்னா மற்றும் டொயோட்டா யாரிஸ் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சியாஸ் மாடலில் புதிய அம்சங்கள், உயர் ரக இன்டீரியர் அம்சங்கள் மற்றும் தலைசிறந்த செயல்திறன் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்பு படம்
இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், டெயில்-லேம்ப் இன்சர்ட்கள், டேடைம் ரன்னிங் லைட்களை மாருதி புதிய காரில் வழங்கலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய அலாய் வீல்கள் மற்றும் கிரில் உள்ளிட்டவை காரின் தோற்றத்தை புதிதாக வெளிப்படும் என்றும் இது தற்சமயம் இந்தோனேஷியாவில் விற்பனையாகும் புத்தம் புதிய எர்டிகா மாடலை போன்று இருக்கும் என கூறப்படுகிறது.
சியாஸ் மாடல் 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஹைப்ரிட் அல்லது மைல்டு ஹைப்ரிட் காம்பினேஷன்களில் வெளியிடப்படலாம் என்றும் டீசல் மோட்டார் புதிய 1.5 லிட்டர் யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டீசல் இன்ஜினும் புதிதாய் உருவாக்கப்பட்ட 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் விற்பனையாகும் சியாஸ் டீசல் மாடலில் உள்ளதை போன்ற SHVS ஸ்மார்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பம் இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த SHVS சிஸ்டம் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டரை பயன்படுத்துகிறது. #MarutiSuzuki #Ciaz
இந்தியாவில் ஹோன்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய 2018 ஜாஸ் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Honda #Jazz
இந்தியாவில் 2018 ஹோன்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய 2018 ஜாஸ் வெளிப்புறம் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. எனினும் தற்போதைய மாடலை விட 2018 ஜாஸ் மாடலில் சில உபகரணங்கள் மற்றும் அம்சங்கள் கூடுதலாக வழங்கப்படுகின்றது.
என்ட்ரி-லெவல் எஸ் ட்ரிம் வேரியன்ட் டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ். (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்), 4-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் மவுன்ட் கன்ட்ரோல்கள், ORVM, எல்இடி டெயில் லேம்ப், பின்புறம் டீஃபாகர், சென்ட்ரல் ஆம்ரெஸ்ட், பின்புறம் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீட் சென்சிங் டோர் லாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
மிட்-ரேன்ஜ் வி வேரியன்ட் மாடலில் 15-இன்ச் அலாய் வீல்கள், 5-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, ஃபாக் லேம்ப்கள், பின்புறம் வைப்பர் மற்றும் பெய்க் இன்டீரியர்கள் வழங்கப்பட்டுள்ளது.

டாப்-என்ட் VX வேரியன்ட் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் நேவிகேஷன், மின்னணு முறையில் மாற்றக்கூடிய ORVM-கள், இன்டகிரேட் செய்யப்பட்ட இன்டிகேட்டர்கள், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல் மற்றும் கியர் நாப் வழங்கப்பட்டுள்ளது.
ஹோன்டா ஜாஸ் 2018 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 110 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.5 லிட்டர் i-DTEC டீசல் இன்ஜின் 98 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த இன்ஜின்கில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் பெட்ரோல் வேரியன்ட்-இல் CVT ஆப்ஷன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் டீசல் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ஹோன்டா ஜாஸ் 2018 மாடலின் விலை ரூ.7.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது. புதிய 2018 ஹோன்டா ஜாஸ் ஐந்து வித வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Honda #Jazz
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சன் XMA பெட்ரோல் வேரியன்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடலின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #tatamotors #nexon
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சன் XMA பெட்ரோல் வேரின்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நெக்சன் AMT வேரியன்ட் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது, எனினும் நெக்சன் XZA+ வேரின்ட் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
புதிய XMA வேரியன்ட் அறிமுகமாகி இருக்கும் நிலையில், டாடா நெக்சன் AMT விலை மேலும் குறைந்திருக்கிறது. நெக்சன் AMT மாடலில் இகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது.
நெக்சன் XMA புதிதாக 'ஐவரி வைட்' ரூஃப் கலர் ஆப்ஷனில் கிடைக்கிறது. இதனால் காரின் தோற்றம் மேலும் அழகாகிறது. நெக்சன் AMT அறிமுகத்தை தொடர்ந்து மிட்-ரேஞ்ச் AMT மாடலும் XMA மற்றும் XZA+ வேரியன்ட்களில் கிடைக்கிறது.

புதிய XMA வேரியன்ட் கனெக்ட்நெக்ஸ்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல், ORVM-கள், ரிமோட் கன்ட்ரோல் லாக்கிங், பவர் டெயில்கேட் மற்றும் ஃபாளோ-மி ஹெட்லேம்ப் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
டாடா நெக்சன் XMA வேரியன்ட் மாடலில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட ரெவோடிரான் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்கியூ மற்றும் டீசல் வேரியன்ட் 108 பி.ஹெச்.பி. பவர், 260 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.
இந்தியாவில் டாடா நெக்சன் XMA பெட்ரோல் வேரின்ட் விலை ரூ.7.50 லட்சம் மற்றும் டீசல் வேரின்ட் விலை ரூ.8.53 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #tatamotors #nexon
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட 2018 சியாஸ் கார் வெளியீடு குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. #MarutiSuzuki
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் கார் இந்திய வெளியீடு அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் வெளியீட்டு தேதி சார்ந்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
அந்த வகையில் சிக்வீல்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் 2018 சியாஸ் கார் ஆகஸ்டு 6-ம் தேதி வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் சில காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்கள் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
2018 மாருதி சியாஸ் மாடல் பார்க்க தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலை போன்று காட்சியளிக்கும் என்றும் வெளிப்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் முன்பக்கம் புதிய பம்ப்பர், மேம்படுத்தப்பட்ட கிரில் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த செடான் மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட ஹெட்லேம்ப்கள், பகலிலும் எரியும் எல்இடி மின்விளக்குகள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்கவாட்டில் அதிகம் மாற்றப்படாமல் புதிதாக அலாய் வீல்கள் மட்டும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

கோப்பு படம்
இதன் பின்புறம் புதிய டெயில் லைட் கிளஸ்டர், அழகிய எல்இடி உள்ளிட்டவை கொண்டிருக்கும் என்றும் தற்போதைய மாடலை விட அழகிய ஸ்போர்ட் தோற்றம் பெறும் என கூறப்படுகிறது. 2018 சியாஸ் மாடலின் உள்புறம் அதிகப்படியான மாற்றங்கள் இன்றி தற்போதைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. அதன்படி மரத்தாலான டேஷ்போர்டு, 7 இனஅச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், லெதர் சீட் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் வழங்கப்படுகிறது.
சியாஸ் மாடல் 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஹைப்ரிட் அல்லது மைல்டு ஹைப்ரிட் காம்பினேஷன்களில் வெளியிடப்படலாம் என்றும் டீசல் மோட்டார் புதிய 1.5 லிட்டர் யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இதன் 1.5 லிட்டர் யூனிட் 103 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. டீசல் இன்ஜினும் புதிதாய் உருவாக்கப்பட்ட 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் 45X மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்கள் வெளியாகி உள்ளது. #TataMotors
இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான 45X காரை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், இந்த கார் 2019 பண்டிகை காலத்தில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இம்பேக்ட் டிசைன் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் டாடா 45X கான்செப்ட் மாடல் எதிர்கால வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்தியாவில் புதிய டாடா 45X மாருதி நிறுவனத்தின் பலேனோ மற்றும் ஹூன்டாய் எலைட் i20 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல்ஃபா என டாடா மோட்டார்ஸ் அழைக்கும் புதிய மேம்படுத்தப்பட்ட மாட்யூலர் பிளாட்ஃபார்ம் சார்ந்து டாடா 45X உருவாக்கப்படுகிறது. டாடா நெக்சானில் வழங்கப்பட்டு இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களே புதிய மாடலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் டாடா 45X மாடலில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் யூனிட் வழங்கப்படலாம். இந்த இன்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 170 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும். இதன் டீசல் வேரியன்ட் 1.5 லிட்டர் இன்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்த இன்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 260 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும் என்றும் டாடா 45X மாடல் இந்திய சந்தையில் மிகவும் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் 6-ஸ்பீடு மேனுவர் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
டாடா 45X மாடலின் உள்புறம் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் இருக்கைகளில் உயர் ரக லெதர் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு வசதிகளுடன் சந்தையில் நிலவும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
வால்வோ நிறுவனத்தின் XC40 எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வால்வோவின் விலை குறைந்த மாடலாக இந்த எஸ்.யு.வி. இருக்கிறது.
வால்வோ நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இது இந்தியாவில் வால்வோ நிறுவனத்தின் விலை குறைந்த மாடலாக வால்வோ XC40 அமைந்திருக்கிறது.
மே 2016-இல் அறிமுகம் செய்யப்பட்ட 40 சீரிஸ் கான்செப்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ள புதிய எஸ்.யு.வி. முன்பக்க கிரில் பார்க்க வால்வோ சமீபத்தில் அறிமுகம் செய்த XC60 போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் எல்இடி ஹெட்லைட் மற்றும் பகலில் எரியும் தார் வடிவிலான மின்விளக்குகள் இடம்பெற்றிருக்கிறது.
பின்புறம் ரேக்டு ரியர் விண்ட்ஷீல்டு, இன்டகிரேடெட் ரூஃப் ஸ்பாயிலர், டூயல் டோன் ரியர் பம்ப்பர் மற்றும் ட்வின் க்ரோம் எக்சாஸ்ட், L-வடிவிலான டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகிறது. உள்புறம் 3-ஸ்போக் ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் வழங்கப்படுகிறது. சென்டர் கன்சோலில் க்ரோம் ட்ரிம் மற்றும் செங்குத்தான ஏ.சி. வென்ட் மற்றும் செங்குத்தான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் வால்வோ XC40 மாடலில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 190 பி.எச்.பி. பவர், 400 என்.எம். டார்கியூ செயல்திறன், 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், மற்றும் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கிறது. வால்வோ நிறுவனத்தின் காம்பேக்ட் மாட்யூலர் ஆர்கிடெக்ச்சர் தளம் சார்ந்து வெளியாகும் முதல் மாடலாக XC40 இருக்கிறது.
வால்வோவின் சிறிய எஸ்.யு.வி. மாடல் என்ற வகையில் இந்த மாடல் அதிகளவு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வால்வோ XC40 விலை ரூ.39.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே புதிய காரின் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டது. வால்வோ XC40 காரை முன்பதிவு செய்வோர் ரூ.5 லட்சம் முன்பணமாக செலுத்த வேண்டும்.
மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா இந்திய விற்பனையில் புதிய மைல்கல் படைத்திருக்கிறது. இது குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா மூன்று லட்சம் யூனிட் விற்பனையாகி இருக்கிறது. இந்தியாவின் அதிக விற்பனையாகும் எஸ்.யு.வி. மாடலாக விடாரா பிரெஸ்ஸா இருக்கிறது. இந்தியாவில் வெளியிடப்பட்டு 28 மாதங்களில் இந்த மைல்கல் சாதனையை கடந்திருக்கிறது.
இந்தியாவில் 2016-ம் ஆண்டு வாக்கில் விடாரா பிரெஸ்ஸா வெளியிடப்பட்டது. சமீபத்தில் பிரெஸ்ஸா காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வசதி வழங்கப்பட்ட பிரெஸ்ஸா மாடல் மே 2018-இல் மட்டும் 23% விற்பனையாகியிருந்தது.
கடந்த ஐந்து மாதங்களாக விடாரா பிரெஸ்ஸா எஸ்.யு.வி. மாதம் 12,600 யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. இது கடந்த ஆண்டை விட 25 சதவிகிதம் அதிகம் ஆகும். இதன் டாப் என்ட் Z மற்றும் Z+ வேரியன்ட்கள் இணைந்து மொத்த விற்பனையில் 56 சதவிகித பங்கு பெற்றிருக்கிறது.

விடாரா பிரெஸ்ஸா விற்பனையின் மூலம் மாருதி சுசுகி விற்பனையில் மஹேந்திரா நிறுவனத்தை கடக்க உதவியது. 2018 நிதியாண்டில் மாருதி நிறுவனம் 2,53,759 யூனிட் எஸ்.யு.வி. மாடல்களை விற்பனை செய்துள்ளது. இதனால் விடாரா பிரெஸ்ஸா பங்குகள் சந்தையில் 25.69% இல் இருந்து 27.53% ஆக அதிகரித்து இருக்கிறது.
ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் புதிய மாடலில் AGS கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. புதிய பிரெஸ்ஸா மாடல்களின் விலை ரூ.8.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்கி டாப் என்ட் மாடலின் விலை ரூ.10.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வால்வோ நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன் போல்ஸ்டார் இன்ஜினீர்டு வெர்ஷன் மாடல் விற்பனை துவங்கிய 39 நிமிடங்களில் விற்று தீர்ந்தது.
வால்வோ நிறுவனத்தின் புதிய எஸ்60 செடான் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட லிமிட்டெட் எடிஷன் போல்ஸ்டார் இன்ஜினீர்டு வெர்ஷன் மொத்தம் 20 யூனிட்கள் தயாரிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், அமெரிக்காவில் முன்பதிவு துவங்கிய 39 நிமிடங்களில் லிமிட்டெட் எடிஷன் கார் முழுமையாக விற்று தீர்ந்து விட்டதாக வால்வோ அறிவித்துள்ளது.
புதிய வால்வோ எஸ்60 போல்ஸ்டார் இன்ஜினீர்டு லிமிட்டெட் எடிஷன் மாடலின் முன்பதிவுகள் கேர் பை வால்வோ செயலியில் மட்டுமே நடைபெற்றது. 415 பி.ஹெச்பி. பவர், 669 என்.எம். டார்கியூ, ஓலின்ஸ் சஸ்பென்ஷன், பிரெம்போ பிரேக்கள் மற்றும் இதர அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
2019 எஸ்60 டி8 போல்ஸ்டார் இன்ஜினீர்டு வெர்ஷன் வால்வோ மற்றும் போல்ஸ்டார் இணைந்து உருவாக்கிய தலைசிறந்த வடிவமைப்பு, செயல்திறன் மற்றும் எலெக்ட்ரிஃபிகேஷன் செய்யப்பட்டிருக்கிறது.

விற்பனை குறித்த அறிவிப்பை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் வால்வோ, அதன் வாடிக்கையாளர்களுக்கு போல்ஸ்டார் இன்ஜின் மென்பொருள் ஆப்டிமைசேஷன் அப்கிரேடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் திராட்டிள் ரெஸ்பான்ஸ், ஷிஃப்ட் ஸ்பீடு, கியர் ஹோல்டு மற்றும் மிட்ரேஞ்ச் இன்ஜின் செயல்திறன் மேம்படுத்தப்படுகிறது.
புதிய எஸ்60 டி6 AWD மொமன்டம் சேவையில் கேர் பை வால்வோ செயலி மற்றும் ஆன்லைனில் சந்தாதாரர் ஆக முடியும். கேர் பை வால்வோ திட்டம் வால்வோ கார்கள் சந்தாதாரர் திட்டம் ஆகும். இதில் கார் கட்டணம், இன்சூரன்ஸ், பராமரிப்பு மற்றும் இதர சேவைகளை இரண்டு ஆண்டுகளுக்கு பெற முடியும்.
சுசுகி நிறுவனம் புதிய சிட்டி கார் கான்செப்ட்-ஐ ஆகஸ்டு மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கைகின்டோ இந்தோனேஷிய ஆட்டோ விழாவில் சுசுகி நிறுவனம் வித்தியாச அறிவிப்புகளை வழங்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு ஆட்டோ விழா ஆகஸ்டு 2-ம் தேதி துவங்க இருக்கிறது. இவ்விழாவில் சுசுகி விரைவில் உற்பத்தி செய்ய இருக்கும் கான்செப்ட் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சுசுகியின் புதிய கான்செப்ட் சிட்டி கார் என்றும், இது இந்தோனேஷியாவில் மட்டும் விற்பனை செய்யப்பட இறுக்கும் புதிய சப்-பிரான்டு வாகனமாக இருக்கும் என இந்தோனேஷிய செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியில் உற்பத்தி மற்றும் விளம்பர ஆராய்ச்சி பிரிவு தலைவர் ஹரோல்டு டொனெல் தெரிவித்தார்.
இளம் தலைமுறையினரை குறிவைத்து இந்த சிட்டி கார் எதிர்காலத்தில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் தெரிவி்த்தார். இந்தோனேஷிய சந்தையில் இந்த கார் சுசுகி நிறுவனத்துக்கு புதிய அடையாளத்தை பெற்று தரும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆடி நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. பெட்ரோல் வேரியன்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான ஆடி தனது இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் இன்ஜின் கொண்ட கியூ5 மட்டும் அறிமுகமான நிலையில், ஆடி கியூ5 பெட்ரோல் வேரியன்ட் இன்று இந்தியாவில் அறிமுகமாக செய்யப்பட்டது.
ஏற்கனவே ஆடி கியூ7 பெட்ரோல் வேரியன்ட் 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 2020-ம் ஆண்டு வாக்கில் அதிக பெட்ரோல் கார்களை விற்பனை செய்ய ஆடி திட்டமிட்டிருக்கிறது. இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. ஆடி 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்த முதல் தலைமுறை மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய ஆடி கியூ 5 டீசல் வேரியன்ட் 2.0 லிட்டர் TFSI பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜின் 248 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்கியூ மற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
முந்தைய மாடலை விட பெரிதாக காட்சியளிக்கும் புதிய ஆடி கியூ5 உள்புறத்தில் 12.3 இனஅச் டி.எஃப்டி டிஸ்ப்ளே, 8.3 இன்ச் டிஸ்ப்ளே டேஷ்போர்டில் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் இருக்கைகள் பெய்க்-நிறத்திலான லெதர் மற்றும் பெரிய பானாரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் டைனமிக், ஆட்டோ, கம்ஃபர்ட், இன்டிவிடுவல் மற்றும் ஆஃப்ரோடு போன்ற டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. புதிய மாடலில் அடாப்டிவ் சஸ்பென்ஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டும் போது ஹேன்ட்லிங் மற்றும் அனுபவத்தை சிறப்பாக வழங்கும்.
இந்தியாவில் ஆடி கியூ5 பெட்ரோல் வேரியன்ட் விலை ரூ.55.27 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






