search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விற்பனையில் புதிய மைல்கல் கடந்த விடாரா பிரெஸ்ஸா
    X

    விற்பனையில் புதிய மைல்கல் கடந்த விடாரா பிரெஸ்ஸா

    மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா இந்திய விற்பனையில் புதிய மைல்கல் படைத்திருக்கிறது. இது குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

     

    இந்தியாவில் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா மூன்று லட்சம் யூனிட் விற்பனையாகி இருக்கிறது. இந்தியாவின் அதிக விற்பனையாகும் எஸ்.யு.வி. மாடலாக விடாரா பிரெஸ்ஸா இருக்கிறது. இந்தியாவில் வெளியிடப்பட்டு 28 மாதங்களில் இந்த மைல்கல் சாதனையை கடந்திருக்கிறது.

    இந்தியாவில் 2016-ம் ஆண்டு வாக்கில் விடாரா பிரெஸ்ஸா வெளியிடப்பட்டது. சமீபத்தில் பிரெஸ்ஸா காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வசதி வழங்கப்பட்ட பிரெஸ்ஸா மாடல் மே 2018-இல் மட்டும் 23% விற்பனையாகியிருந்தது.

    கடந்த ஐந்து மாதங்களாக விடாரா பிரெஸ்ஸா எஸ்.யு.வி. மாதம் 12,600 யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. இது கடந்த ஆண்டை விட 25 சதவிகிதம் அதிகம் ஆகும். இதன் டாப் என்ட் Z  மற்றும் Z+ வேரியன்ட்கள் இணைந்து மொத்த விற்பனையில் 56 சதவிகித பங்கு பெற்றிருக்கிறது.



    விடாரா பிரெஸ்ஸா விற்பனையின் மூலம் மாருதி சுசுகி விற்பனையில் மஹேந்திரா நிறுவனத்தை கடக்க உதவியது. 2018 நிதியாண்டில் மாருதி நிறுவனம் 2,53,759 யூனிட் எஸ்.யு.வி. மாடல்களை விற்பனை செய்துள்ளது. இதனால் விடாரா பிரெஸ்ஸா பங்குகள் சந்தையில் 25.69% இல் இருந்து 27.53% ஆக அதிகரித்து இருக்கிறது.

    ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் புதிய மாடலில் AGS கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. புதிய பிரெஸ்ஸா மாடல்களின் விலை ரூ.8.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்கி டாப் என்ட் மாடலின் விலை ரூ.10.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×