என் மலர்tooltip icon

    கார்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ ஹேட்ச்பேக் கார் விற்பனையில் புதிய மைல்கல் சாதனையை படைத்திருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.





    இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி தனது பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான பலேனோவை அக்டோபர் 2015-இல் அறிமுகம் செய்தது.

    அறிமுகமானது முதல் மாருதி சுசுகி விற்பனையில் பலேனோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்சமயம் பலேனோ மாடல் அறிமுகமான மூன்றே ஆண்டுகளில் சுமார் நான்கு லட்சத்துக்கும் அதிக கார்களை விற்பனை செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மைல்கல் சாதனையை படைக்கும் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக மாருதி பலேனோ இருக்கிறது.

    நெக்சா பிரீமியம் விற்பனையகங்களின் வெற்றிக்கு மாருதி பலேனோ முக்கிய பங்கு வகித்திருக்கிறது. இத்துடன் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாகவும் பலேனோ இருக்கிறது. 



    உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், ஐரோப்பா மற்றும் லத்தின் அமெரிக்கா போன்ற நாடுகளில் மாருதி பலேனோ ஏற்றுமதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி பலேனோ ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    ஜப்பானில் ஏப்ரல் 2018 காலக்கட்டத்தில் மட்டும் மாருதி பலேனோ சுமார் 20,000-க்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. சமீபத்தில் அறிமுகமான புதிய தலைமுறை ஸ்விஃப்ட் பலேனோவுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை எதுவும் செய்யமுடியாத சூழல் நிலவி வருகிறது. 

    இந்தியாவில் பலேனோ விற்பனைக்கு முக்கிய காரணமாக இதன் விலை கவர்ச்சிகர வடிவமைப்பு உள்ளிட்டவை இருக்கின்றன. மாருதி பலேனோ மாடலின் வடிவமைப்பு இளைஞர்களை கவரும் வகையில் ஸ்போர்ட் மற்றும் கூர்மையான தோற்றம் கொண்டிருக்கிறது.

    மாருதி பலேனோ ஆரம்ப விலை ரூ.5.35 லட்சத்தில் துவங்கி, டாப் என்ட் மாடல் ரூ.8.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
    பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் 6-சீரிஸ் கிரான் டூரிஸ்மோ டீசல் வேரியன்ட் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.





    பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் 6-சீரிஸ் கிரான் டூரிஸ்மோ டீசல் வேரியன்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய 6-சீரிஸ் ஜிடி மாடல் லக்சரி லைன் மற்றும் எம்-ஸ்போர்ட் என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. தற்சமயம் பிஎம்டபுள்யூ 6-சீரிஸ் ஜிடி பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    பெட்ரோல் வேரியன்ட் கிரான் டூரிஸ்மோ 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது, பிஎம்டபுள்யூ 6-சீரிஸ் ஜிடி டீசல் வேரியன்ட் இந்தியா முழுக்க அனைத்து விற்பனையகங்களிலும் கிடைக்கும்.

    பிஎம்டபுள்யூ 630d GT சென்னையில் உள்ள தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படுகிறது. புதிய 6-சீரிஸ் மாடல் பிஎம்டபுள்யூ 5-சீரிஸ் GT மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகி உள்ளது. மினரல் வைட், கிளேசியர் சில்வர், மெடிட்டரேனியன் புளு மற்றும் பர்கன்டி ரெட் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

    இத்துடன் இரண்டு மெட்டாலிக் பெயின்ட் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. எனினும் இந்த ஆப்ஷன் எம்-ஸ்போர்ட் வேரியன்ட்-இல் மட்டுமே கிடைக்கிறது. மெட்டாலிக் பெயின்ட் ஆப்ஷனில் கார்பன் பிளாக் மற்றும் புளுஸ்டோன் என இரண்டு நிறங்களில் கிடைக்கின்றன.



    பிஎம்டபுள்யூ 6-சீரிஸ் லக்சரி வேரியன்ட் க்ரோம் ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. இத்துடன் சிக்னேச்சர் கிட்னி கிரில், முன்பக்கம் கிரில், பம்ப்பர், ரியர் அப்ரான் மற்றும் டெயில்பைப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    எம்-ஸ்போர்ட் வேரியன்ட் M பெர்ஃபார்மன்ஸ் பேக்கேஜ் உடன் கிடைக்கிறது. இந்த பேக்கேஜ் பிரத்யேக ஸ்கர்ட்கள், ரியர் அப்ரான், பெரிய முன்பக்க ஏர்-இன்டேக் மற்றும் M-ஸ்போர்ட் பிரேக் வழங்கப்படுகிறது. M லோகோ காரின் பக்கவாட்டுகள், டோர் சில்கள், கார் சாவி மற்றும் அலாய் வீல்களில் பொறிக்கப்பட்டுள்ளது.

    உள்புறம் லக்சரி லைன் மாடலில் இரண்டு பானாரோமிக் கிளாஸ் ரூஃப், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ரியர் சீட்கள், சவுகரியமான குஷன் ஹேன்ட்ரெஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்த வரை பிஎம்டபுள்யூ 6-சீரிஸ் லச்கரி லைன் மாடலில் ஆம்பியன்ட் லைட்டிங், தேர்வு செய்யக்கூடிய ஆறு வித லைட் வடிவமைப்புகள், மரத்தாலான உள்பறம், பியல் க்ரோம் நிறத்தில் ட்ரிம் ஃபினிஷன் செய்யப்பட்டுள்ளது.

    M-ஸ்போர்ட் வேரியன்ட் உள்புறம் முழுக்க நப்பா லெதர் இருக்கைகள், கான்ட்ராஸ்ட் ஸ்டிட்ச்சிங் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சவுகரியமான இருக்கைகள், மெமரி அம்சம், சாஃப்ட் க்ளாஸ் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.



    பிஎம்டபுள்யூ 6-சீரிஸ் மற்ற அம்சங்களை பொருத்த வரை 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, ரியர்-சீட் என்டர்டெயின்மென்ட், 10.2 இன்ச் ஸ்கிரீன், பிஎம்டபுள்யூ நேவிகேஷன், பிஎம்டபுள்யூ கனெக்ட்டெட் டிரைவ் மற்றும் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை பிஎம்டபுள்யூ 6-சீரிஸ் ஜிடி மாடலில் பார்க்கிங் அசிஸ்ட், பார்க் டிஸ்டன்ஸ் கன்ட்ரோல், சரவுன்ட் வியூ கேமரா, ரிமோட் கன்ட்ரோல் இன்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப், சரவுன்ட் வியூ, ஆறு ஏர்பேக், ஏபிஎஸ் மற்றும் பிரேக் அசிஸ்ட், டைனமிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், கார்னெரிங் பிரேக் கன்ட்ரோல் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. 

    பிஎம்டபுள்யூ 630d GT மாடலில் ட்வின்பவர் டர்போ 3.0 லிட்டர், 6-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 265 பிஹெச்பி பவர், 620 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 8-ஸ்பீடு ஸ்டெப்டிரானிங் ஸ்போர்ட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் புதிய பிஎம்டபுள்யூ 6-சீரிஸ் லக்சரி லைன் விலை ரூ.66.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என்றும் M-ஸ்போர்ட் வேரியன்ட் விலை ரூ.73.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் புத்தம் புதிய ஆல்டோ வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    மாருதி சுசுகி நிறுவனத்தின் புத்தம் புதிய ஆல்டோ இந்தியாவில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய தலைமுறை ஆல்டோ ஹேட்ச்பேக் தற்சமயம் விற்பனையாகும் ஆல்டோவிற்கு மாற்றாக அறிமுகமாகிறது. 

    மாருதி சுசுகி ஆல்டோ இந்தியாவில் அறிமுகமானது முதல் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடல் இதுவரை சுமார் 35 லட்சத்துக்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

    புதிய ஆல்டோ ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் போது பாரதிய புதிய வாகன பாதுகாப்பு திட்டத்தின் (BNVSAP) கீழ் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அந்நிறுவனம் தான் தயாரிக்கும் அனைத்து கார்களுக்கும் நட்சத்திர குறியீடுகளை வழங்குகிறது. இவை வாகனத்தின் பாதுகாப்பு அம்சத்தை வைத்து கடுமையான சோதனைகளுக்கு பின் வழங்கப்படுகிறது.



    பாதுகாப்பு அம்சங்கள் தவிர, புதிய கார் பிஎஸ்-IV ரக எமிஷன்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஆல்டோ தற்போதைய மாடலை விட முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் இது ஜப்பானில் விற்பனை செய்யப்படும் மாடலை தழுவி உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் இதன் வடிவமைப்பு கான்செப்ட் ஃபியூச்சர் எஸ் சார்ந்து இருக்கும் என்றும் கூறப்பட்டது.

    மாருதி சுசுகி நிறுவனம் கான்செப்ட் ஃபியூச்சர் எஸ் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வடிவமைப்பு தவிர இதில் முற்றிலும் புதிய வடிவமைப்பு தவிர, பல்வேறு வசதிகள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி இதில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் பவர் விண்டோஸ், எலெக்ட்ரிக் ORVM உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

    புதிய மாருதி சுசுகி ஆல்டோ மாடலில் 1.0 லிட்டர் இன்ஜின் வழங்கப்படலாம். இந்த இன்ஜின் 1.0-லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் யூனிட் 67 பிஹெச்பி, 91 என்எம் டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிவேக எஸ்-கிளாஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    இந்தியாவில் அதிவேக எஸ்-கிளாஸ் மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது. மெர்சிடிஸ் AMG S 63 கூப் என அழைக்கப்படும் புதிய மாடல் ஸ்போர்ட் தோற்றம், அதிவேக செயல்திறன், பெஸ்போக் லக்சரி அம்சங்களை கொண்டுள்ளது. 

    இதே போன்ற அம்சங்கள் நிறைந்த பென்ட்லி அல்லது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்களின் விலை உயர்ந்த மாடல்களுக்கு மாற்றாக புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை தேர்வு செய்யலாம். இந்தியாவில் ரூ.2.55 கோடி முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதே விலைக்கு கிடைக்கும் மாடல்களுடன் ஒப்பிடும் போது புதிய பென்ஸ் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த மோட்டார் முந்தைய இன்ஜின்களை விட 35 பிஹெச்பி வரை கூடுதல் திறன் கொண்டிருக்கிறது. 4-வீல் டிரைவ் மற்றும் 9 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருப்பதால், வழக்கமான பென்ஸ் AMG கார்களை விட அதிவேகமாக செல்லும் திறன் பெற்றிருக்கிறது. 



    சூப்பர்கார் போன்று புதிய பென்ஸ் மணிக்கு சுமார் 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் படி லாக் செய்யப்பட்டுள்ளது. லாக் செய்யப்படாத பட்சத்தில் டியூனிங்-க்கு ஏற்ப மேலும் அதிவேகமாக செல்லும்.

    இத்துடன் AMG சிலிண்டர் மேனேஜ்மென்ட் சிலிண்டர் டி-ஆக்டிவேஷன் சிஸ்டம், AMG ஸ்பீடு சென்சிட்டிவ் ஸ்டீரிங், AMG ரைடு கன்ட்ரோல் பிளஸ் சஸ்பென்ஷன் மற்றும் வேரியபிள் டேம்ப்பர் கன்ட்ரோல், AMG டைனமிக் செலக் டிரைவிங் மோட்கள்: கம்ஃபர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ் மற்றும் இன்டிவிஜூவல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ஏர்பேக்ஸ், ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல், இஎஸ்பி மற்றும் ரேடர் சார்ந்த லேன் ஹோல்டு, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பிளைன்ட் ஸ்பாட் வாரனிங் அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் AMG S 63 கூப் மாடலில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா தனது AMG S 63 கூப் மாடலை ஜூன் 18-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. 2018-ம் ஆண்டில் மட்டும் மெர்சிடிஸ் அறிமுகம் செய்யும் நான்காவது மாடலாக இது அமைகிறது.

    புதிய AMG S 63  கூப் மாடலில் செயல்திறன் மற்றும் கவர்ச்சிகர தோற்றம் கொண்டிருக்கிறது. மெர்சிடிஸ் AMG S 63 கூப் மாடலின் முன்பக்கம் புதிய வடிவமைப்பு, பேனமெரிக்கானா ரேடியேட்டர் கிரில், AMG 4.0 லிட்டர் வி8 பை-டர்போ இன்ஜின் கொண்டிருக்கிறது. இத்துடன் 4MATIC+ AMG  செயல்திறன் கொண்ட 4-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படகிறது.

    மெர்சிடிஸ் எஸ் கிளாஸ் மாடலில் AMG S 63 சார்ந்த கேப்ரியோலெட் வெர்ஷன் ஒன்றும் அறிமுகமாக இருக்கிறது. எனினும் இந்த மாடல் வெளியாக சில காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேனமெரிக்கானா ரேடியேட்டர் கிரில் V-வடிவில் குளிர்ந்த காற்றை உள்புறம் எடுத்துக் கொள்கிறது.

    இத்துடன் ஹெட்லேம்ப் கோடுகள் க்ரோம் செய்யப்பட்டு, செங்குத்தாக ஸ்ட்ரட்களை கொண்டிருக்கிறது. முக்கோண வடிவில் முன்பக்க ஸ்ப்லிட்டர் முன்பக்கம் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருப்பதால், அப்லிஃர்ட் மற்றும் முன்பக்க ஆக்சிலை குறைக்கிறது. எஸ் கிளாஸ் மாடல்களில் பிரபலமான பெரிய அலாய் வீல்கள், புதிய AMG S 63 மாடலிலும் 19-இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது.



    மெர்சிடிஸ் AMG S 63  கூப் மாடலின் உள்புறத்தில் ஆடம்பரம் கலந்த சவுகரியம் கிடைக்கிறது. இத்துடன் மெமரி அம்சம் கொண்ட AMG ஸ்போர்ட் சீட் மற்றும் சீட் ஹீட்டிங் வசதியும் கொண்டுள்ளது. இத்துடன் நப்பா லெதர் மற்றும் AMG பேட்ஜிங் சீட் பேக்ரெஸ்ட்களின் இருபுறங்களில் வைக்கப்பட்டிருக்கிறது.

    இத்துடன் ஸ்போர்ட்ஸ் ஸ்டீரிங் வீல், 12 மணியை குறிக்கும் மார்க்கிங் கொண்டுள்ளது. இத்துடன் டேஷ்போர்டு, பெல்ட்லைன், சென்டர் டோர் பேனல்கள், ஆர்ம்ரெஸ்ட்கள், சென்டர் கன்சோல், கால்மிதி உள்ளிட்டவற்றில் மஞ்சள் நிற அக்சென்ட் செய்யப்பட்டுள்ளது.

    மெர்சிடிஸ் AMG S 63 கூப் மாடலில் AMG 4.0 லிட்டர் வி-8 பை-டர்போ இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சம் 612 பிஹெச்பி பவர், 900 என்எம் டார்கியூ கொண்டுள்ளது. இந்த இன்ஜின் AMG ஸ்பீட்ஷிஃப்ட் MCT 9G டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.5 நொடிகளில் செல்லும் என்றும், மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வரை செல்லும் படி கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

    இந்தியாவில் மெர்சிடிஸ் AMG S 63 CBU ரூட் மூலம் வெளியாகும் என்றும் இதன் விலை ரூ.2.5 முதல் ரூ. 3 கோடி வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    மாருதி சுசுகி நிறுவனம் சமீபத்திய ஸ்விஃப்ட் மாடல் விற்பனை துவங்கிய 145 நாட்களில் ஒரு லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
    புதுடெல்லி:

    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் விற்பனை துவங்கிய 145 நாட்களில் ஒரு லட்சம் யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. இது இந்தியாவில் அதிவேக விற்பனையை பதிவு செய்த முதல் கார் ஆகும். 2005-ம் ஆண்டில் மாருதி சுசுகி நிறுவனம் முதல் தலைமுறை ஸ்விஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

    அறிமுகமானது முதல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரபல கார்களில் ஒன்றாக மாருதி சுசுகி ஸ்விஃப்ட் இருந்து வருகிறது. 2005-ம் ஆண்டு முதல் ஸ்விஃப்ட் மாடல் 1.89 கோடி யூனிட்கள் விற்பனையாகியிருக்கிறது. 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் ஸ்விஃப்ட் 2018 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் விற்பனை இருபது லட்சங்களை விரைவில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்விஃப்ட் மாடல் புதிய ஹார்டெக்ட் பிளாட்ஃபார்ம்  சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு புதிய அம்சங்களை ஸ்விஃப்ட் கொண்டுள்ளது.

    சமீபத்தில் மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் 20 லட்சம் கார்களை தயாரித்து புதிய மைல்கல் சாதனையை படைத்தது. 20 லட்சமாவது யூனிட் ஆக ஸ்விஃப்ட் ஹேட்ச்பேர் பிரைட் ரெட் மாடல் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    1.2 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் ரக இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 82 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்கியூவும், 1.3 லிட்டர் DDiS டீசல் இன்ஜின் 74 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்கியூ மற்றும் இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் ஸ்பெஷல் எடிஷன் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    டாடா டிகோர் புஸ் (BUZZ) எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய ஸ்பெஷல் எடிஷன் டிகோர் மாடலின் முதல் ஆண்டு விழாவை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லிமிட்டெட் எடிஷன் டிகோர் மாடல் XT ட்ரிம் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்டேன்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது புதிய ஸ்பெஷல் எடிஷன் வேரியன்ட் ஏழு பிரத்யேக அம்சங்களை கொண்டிருக்கிறது. கிளாஸ் பிளாக் ரூஃப், பியானோ பிளாக் ORVM, டூயல்-டோன் வீல் கவர்கள், முன்பக்க கிரில் ரெட் டீடெயிலிங் மற்றும் புஸ் (BUZZ) பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது.

    உள்புறத்தில் பெரி ரெட் அக்சென்ட்கள், பிரீமியம் ஃபுல்-ஃபேப்ரிக் சீட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டேஷ்போர்டு மற்றும் ஸ்டீரிங் வீல்களில் பியானோ பிளாக் டீடெயிலிங் செய்யப்பட்டுள்ளது. இவை இன்டீரியர் அம்சங்களை மேலும் அழகாக்குகின்றன.



    இந்தியாவில் விற்பனையாகும் செடான் மாடல்களில் டாடா டிகோர் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. டிகோர் மாடலில் ABS+EBD, கார்னர் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல், டாடாவின் கனெக்ட் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி ஆப்ஷன் மற்றும் ஹார்மன் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை காரின் விற்பனைக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

    டாடா டிகோர் புஸ் (BUZZ) எடிஷன் பெட்ரோல் வேரியன்ட் விலை ரூ.5.68 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என்றும் டீசல் வேரியன்ட் விலை ரூ.6.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் X3 xடிரைவ்30i பெட்ரோல் வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பிஎம்டபுள்யூ X3 xடிரைவ்30i பெட்ரோல் வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பிஎம்டபுள்யூ X3 டீசல் வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    2018 பிஎம்டபுள்யூ X3 xடிரைவ்30i மாடலில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் தற்போதைய 3 மற்றும் 5-சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே காட்சியளிக்கிறது. 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 252 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 8-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த இன்ஜின் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.3 நொடிகளில் செல்லும் என பிஎம்டபுள்யூ தெரிவித்துள்ளது. புதிய பிஎம்டபுள்யூ X3 55 கிலோ வரை எடை குறைவாக இருக்கிறது. மற்ற வடிவமைப்புகள் முந்தைய தலைமுறை மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே இருக்கிறது. புதிய மாடலின் வீல்பேஸ் பெரியதாகவும், அதிக கேபின் ஸ்பேஸ் கிடைக்கிறது.



    பிஎம்டபுள்யூ 5-சீரிஸ் மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே புதிய X3 மாடலின் உள்புறமும் வழங்கப்பட்டு இருக்கிறது. தொடுதிரை மற்றும் ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் iடிரைவ் 10.25 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல், ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 360 கோண கேமரா, 40:20:40 ஸ்ப்லிட் ரியர் சீட்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய பிஎம்டபுள்யூ X3 xடிரைவ்30i 'லக்சரி லைன்' எனும் ஒற்றை வேரியன்ட்-இல் மட்டுமே கிடைக்கிறது. 

    இந்தியாவில் புதிய பிஎம்டபுள்யூ X3 xடிரைவ்30i மாடலின் விலை ரூ.56.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) எனி நிரர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    நிசான் மோட்டார் கம்பெனி நிறுவனம் ஒவ்வொரு ஆறு மாதங்களில் புதிய வாகனங்களை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.
    சென்னை:

    பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான நிசான் மோட்டார் கம்பெனி ஒவ்வொரு ஆறு மாதங்களில் புதிய வாகனங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் 2022-ம் ஆண்டு வாக்கில் ஐந்து சதவிகித பங்குகளை அடையும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிசான் மற்றும் டேட்சன் பிரான்டுகளின் புதிய வாகனங்கள் இந்த பண்டிகை காலம் முதல் வெளியிடப்பட இருக்கிறது. இந்தியாவின் ஊரக பகுதிதளை குறிவைத்து ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் வெளியிட நிசான் திட்டமிட்டுள்ளது. இதுதவிர எஸ்யுவி மாடல் மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் ஒன்றை வெளியிட இருக்கிறது.

    2022-ம் ஆண்டு வாக்கில் எட்டக்கூடிய இலக்கு என அந்நிறுவனத்தின் குஹல் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்டோமொபைல் சந்தையில் நிசான் மாடல் 1.6 சதவிகிதமாக இருக்கிறது. வரும் 12 முதல் 18 மாத காலத்தில் மேலும் ஒரு சதவிகித வரை அதிகரிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய தயாரிப்பில் புதிய சாதனை படைத்திருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் 20 லட்சம் கார்களை தயாரித்து புதிய மைல்கல் சாதனையை படைத்திருக்கிறது. 20 லட்சமாவது யூனிட் ஆக ஸ்விஃப்ட் ஹேட்ச்பேர் பிரைட் ரெட் மாடல் அமைந்தது.

    1983-ம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் முதன்முறையாக தயாரிப்பை துவங்கிய மாருதி சுசுகி புதிய மைல்கல் சாதனையை 34 ஆண்டுகள் ஐந்து மாதங்களில் அடைந்திருக்கிறது. 20 லட்சமாவது யூனிட் ஆன ஸ்விஃப்ட் ரெட் மாடல் குஜராத்-இல் உள்ள சனந்த் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்பட்டது.

    ஜப்பானுக்கு அடுத்தபடி இந்தியாவில் மாருதி சுசுகி இந்த மைல்கல் சாதனையை படைத்திருக்கிறது. எனினும் இந்த சாதனையை படைக்க இந்தியா எடுத்துக் கொண்ட நேரம் ஜப்பானை விட குறைவு ஆகும். ஜப்பானில் இந்த மைல்கல் சாதனையை படைக்க மாருதி சுசுகி 45 ஆண்டுகளை எடுத்துக் கொண்டது.



    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 லட்சம் யூனிட்களில் ஆல்டோ அதிகபட்சமாக 31.7 லட்சம் யூனிட்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் மாருதி 800 சுமார் 29.1 லட்சம் யூனிட்களும், வேகன் ஆர் மாடல் 21.6 லட்சம் யூனிட்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 1983-ம் ஆண்டு சுசுகி மோட்டார்ஸ் இந்தியாவில் தனது தயாரிப்பை துவங்கியது. முதல் மாடலான மாருதி 800 மாருதி உத்யோக் மூலம் தயாரிக்கப்பட்டது. மாருதி உத்யோக் நிறுவனம் தற்போதைய மாருதி சுசுகியின் முந்தைய நிறுவனம் ஆகும். அன்று முதல் இந்திய சந்தையில் நிலவும் போட்டி மற்றும் அதிகளவு தேவையை பொருத்து தயாரிக்கப்படும் யூனிட்கள் மற்றும் மாடல்கள் அதிகரிக்கப்பட்டன.

    மாருதி சுசுகி நிறுவனம் முதல் முறையாக பத்து லட்சம் யூனிட்களை 1994, மார்ச் மாத வாக்கில் கடந்தது. பின் ஐந்து லட்சம் யூனிட்களை ஏப்ரல் 2005-ம் ஆண்டிலும், பத்து லட்சம் மற்றும் 15 லட்சம் யூனிட்களை முறையே மார்ச் 2001 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் கடந்தது. இம்முறை 20 லட்சம் யூனிட்களை கடக்க மாருதி வெறும் மூன்று ஆண்டுகளை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளது.
    ஹூன்டாய் இந்தியா கடந்த மாதம் அறிமுகம் செய்த கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் இந்திய முன்பதிவுகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஹூன்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா இதுவரை விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. சர்வதேச சந்தையில் இதுவரை சுமார் நான்கு லட்சத்தக்கும் அதிக வாடிக்கையாளர்களை கிரெட்டா பெற்றிருக்கிறது.

    அதீத வரவேற்பை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்கள கொண்டிருக்கிறது. புதிய கிரெட்டா காரில் முன்பக்கம் பெரிய கேஸ்கேட் கிரில், முன்பக்க பம்ப்பரில் ஃபாக் லேம்ப் சேர்க்கப்பட்டுள்ளது. பின்புற பம்ப்பர்கள் மற்றும் டெயில்லேம்ப்களில் புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வெளிப்புறத்தில் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு  பின்புறம் முற்றிலும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது.
     
    இதுவரை சுமார் 70,000-க்கும் அதிகமானோர் விசாரித்துள்ள நிலையில், 14,366-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக ஹூன்டாய் தெரிவித்துள்ளது.


    உள்புறத்தின் ஹூன்டாய் கிரெட்டா 2018 மாடலில் அதிக மாற்றங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில், டாப் என்ட் மாடலில் மட்டும் சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. பேஸ் இ வேரியன்ட் மாடலில் ஓட்டுனர் இருக்கை உயரத்தை மாற்றும் வசதி வழங்கப்படுகிறது. டாப்-என்ட் SX (O) மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ஓட்டுனர் இருக்கையை ஆறு விதங்களில் மாற்றும் வசதி, ஸ்மார்ட் கீ பேன்ட், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆறு ஏர்-பேக் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஹூன்டாய் கிரெட்டா 2018 பேஸ் வேரியன்ட் விலை ரூ.9.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) துவங்கி டாப் என்ட் வேரியன்ட் விலை ரூ.15.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கிரெட்டா 2018 வைட், ஆரஞ்சு, பிளாக், சில்வர் புளு, ரெட், வைட்/பிளாக் (டூயல்-டோன் ) மற்றும் ஆரஞ்சு/பிளாக் (டூயல்-டோன்) என மொத்தம் ஏழு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது.
    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான ஏஎம்டி வசதி கொண்ட மாடல்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் இதுவரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான ஏஎம்டி (AMT) வசதி கொண்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

    2014-ம் ஆண்டு மாருதி சுசுகி அறிமுகம் செய்த மாருதி செலரியோ மாடலில் முதல் முறையாக ஏஎம்டி தொழில்நுட்பம் வழங்கப்பட்டது. தற்சமயம் வரை மாருதி சுசுகி நிறுவனம் ஏழு மாடல்களில் ஏஎம்டி வசதியை வழங்குகிறது. 

    மாருதி சுசுகி ஆல்டோ K10, வேகன்ஆர், செலரியோ, ஸ்விஃப்ட், இக்னிஸ், டிசையர் மற்றும் சமீபத்தில் அறிமுகமான விடாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட மாடல்களில் மாருதி ஏஎம்டி வசதியை வழங்குகிறது.


    கோப்பு படம்

    ஏஎம்டி கியர்பாக்ஸ் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. இதுவரை விற்பனையானதில் சுமார் 43 சதவிகித செலரியோ மாடல்கள் ஏஎம்டி வசதி கொண்டிருக்கிறது. இதேபோன்று இக்னிஸ் மற்றும் டிசையர் மாடல்களில் முறையே 28 சதவிகிதம் மற்றும் 17 சதவிகிதம் ஏஎம்டி வசதி கொண்ட மாடல்கள் ஆகும்.

    இத்துடன் 2014-15 ஆண்டுடன் ஒப்பிடும் போது ஏஎம்டி மாடல்கள் அறிமுகமானதில் இருந்து மாருதி சுசுகியின் மொத்த விற்பனை 2017-18 நிதியாண்டு காலக்கட்டத்தில் மும்மடங்கு அதிகரித்துள்ளதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. 2018-19 நிதியாண்டு காலக்கட்டத்தில் சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ஏஎம்டி மாடல்களை விற்பனை செய்ய மாருதி சுசுகி திட்டமிட்டுள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது முதல், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு இதர நிறுவனங்களும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கி வருகின்றன. அந்த வகையில் டாடா, மஹேந்திரா, ரெனால்ட் மற்றும் நிசான் உள்ளிட்டவை தங்களது மாடல்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்குகின்றன.
    ×