search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெர்சிடிஸ் AMG S 63 கூப் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள்
    X

    மெர்சிடிஸ் AMG S 63 கூப் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள்

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் AMG S 63 கூப் மாடலில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா தனது AMG S 63 கூப் மாடலை ஜூன் 18-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. 2018-ம் ஆண்டில் மட்டும் மெர்சிடிஸ் அறிமுகம் செய்யும் நான்காவது மாடலாக இது அமைகிறது.

    புதிய AMG S 63  கூப் மாடலில் செயல்திறன் மற்றும் கவர்ச்சிகர தோற்றம் கொண்டிருக்கிறது. மெர்சிடிஸ் AMG S 63 கூப் மாடலின் முன்பக்கம் புதிய வடிவமைப்பு, பேனமெரிக்கானா ரேடியேட்டர் கிரில், AMG 4.0 லிட்டர் வி8 பை-டர்போ இன்ஜின் கொண்டிருக்கிறது. இத்துடன் 4MATIC+ AMG  செயல்திறன் கொண்ட 4-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படகிறது.

    மெர்சிடிஸ் எஸ் கிளாஸ் மாடலில் AMG S 63 சார்ந்த கேப்ரியோலெட் வெர்ஷன் ஒன்றும் அறிமுகமாக இருக்கிறது. எனினும் இந்த மாடல் வெளியாக சில காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேனமெரிக்கானா ரேடியேட்டர் கிரில் V-வடிவில் குளிர்ந்த காற்றை உள்புறம் எடுத்துக் கொள்கிறது.

    இத்துடன் ஹெட்லேம்ப் கோடுகள் க்ரோம் செய்யப்பட்டு, செங்குத்தாக ஸ்ட்ரட்களை கொண்டிருக்கிறது. முக்கோண வடிவில் முன்பக்க ஸ்ப்லிட்டர் முன்பக்கம் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருப்பதால், அப்லிஃர்ட் மற்றும் முன்பக்க ஆக்சிலை குறைக்கிறது. எஸ் கிளாஸ் மாடல்களில் பிரபலமான பெரிய அலாய் வீல்கள், புதிய AMG S 63 மாடலிலும் 19-இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது.



    மெர்சிடிஸ் AMG S 63  கூப் மாடலின் உள்புறத்தில் ஆடம்பரம் கலந்த சவுகரியம் கிடைக்கிறது. இத்துடன் மெமரி அம்சம் கொண்ட AMG ஸ்போர்ட் சீட் மற்றும் சீட் ஹீட்டிங் வசதியும் கொண்டுள்ளது. இத்துடன் நப்பா லெதர் மற்றும் AMG பேட்ஜிங் சீட் பேக்ரெஸ்ட்களின் இருபுறங்களில் வைக்கப்பட்டிருக்கிறது.

    இத்துடன் ஸ்போர்ட்ஸ் ஸ்டீரிங் வீல், 12 மணியை குறிக்கும் மார்க்கிங் கொண்டுள்ளது. இத்துடன் டேஷ்போர்டு, பெல்ட்லைன், சென்டர் டோர் பேனல்கள், ஆர்ம்ரெஸ்ட்கள், சென்டர் கன்சோல், கால்மிதி உள்ளிட்டவற்றில் மஞ்சள் நிற அக்சென்ட் செய்யப்பட்டுள்ளது.

    மெர்சிடிஸ் AMG S 63 கூப் மாடலில் AMG 4.0 லிட்டர் வி-8 பை-டர்போ இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சம் 612 பிஹெச்பி பவர், 900 என்எம் டார்கியூ கொண்டுள்ளது. இந்த இன்ஜின் AMG ஸ்பீட்ஷிஃப்ட் MCT 9G டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.5 நொடிகளில் செல்லும் என்றும், மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வரை செல்லும் படி கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

    இந்தியாவில் மெர்சிடிஸ் AMG S 63 CBU ரூட் மூலம் வெளியாகும் என்றும் இதன் விலை ரூ.2.5 முதல் ரூ. 3 கோடி வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×