என் மலர்
கார்
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் மே மாத இந்திய விற்பனையில் 20% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
புதுடெல்லி:
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் மே மாத விற்பனையில் 20% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மே மாதம் மாட்டும் டொயோட்டா நிறுவனம் 13,940 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதில் 13,113 யூனிட்கள் இந்தியாவிலும், 827 யூனிட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு டொயோட்டா நிறுவனம் 10,914 யூனிட்களை உள்நாட்டிலும் 1,425 யூனிட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. அந்த வகையில் இந்நிறுவனம் 20% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
"மே 2018 மாதத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா மாடல்களை தொடர்ந்து யாரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டொயோட்டா வாகனங்கள் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் தொடர் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்." என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன நிர்வாக இயக்குனர் என். ராஜா தெரிவித்தார்.

இந்தியாவில் மே மாத துவக்கத்தில் டொயோட்டா நிறுவனம் தனது யாரிஸ் எனும் புதிய செடான் மாடலை அறிமுகம் செய்தது. மே மாத இறுதி வரை மட்டும் டொயோட்டா நிறுவனம் 4000 யாரிஸ் யூனிட்களை விநியோகம் செய்துள்ளது. புதிய டொயோட்டா யாரிஸ் செடான் வடிவமைப்பு கூர்மையாக உள்ளது.
இதன் மெல்லிய ஹெட்லைட், டெயில்லைட், அகலமான கிரில் மற்றும் பின்ச் ரூஃப்லைன் உள்ளிட்டவை புதிய கொரோல்லா மற்றும் கேம்ரி மாடல்களில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது.
உள்புற கேபின் பெரிய இன்ஸ்ட்ரூமென்டேஷன் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் செடான் விலை ரூ.8.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆடி நிறுவனத்தின் கியூ8 எஸ்யுவி மாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் எஸ்யுவி ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதுடெல்லி:
ஆடி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடல் ஷாங்காய் நகரில் ஜூன் 5-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் ஆடி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் மாடலின் டீசரை வெளியிட்டிருக்கிறது. ஆடி கியூ5 புதிய டீசர் இரண்டு வரைப்படங்களில் மாடலின் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ஏற்கனவே வெளியான ஸ்பை தகவல்களில் இடம்பெறவில்லை.
புதிய வரைப்படங்களில் ஆடி கியூ8 முன்புறமும், பின்புறமும் காட்சியளிக்கிறது. இதன் முன்பக்கம் ஹூட் கிரீஸ் மற்றும் ஹெக்சாகோனல் கிரில் மற்றும் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கும் க்ரோம் ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட்களும் பின்புறம் ஹேட்ச் மற்றும் டெயில் லைட்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

கிரீஸ் செய்யப்பட்ட ஃபென்டர்கள் சக்கரங்களின் மேல் வழங்கப்பட்டிருப்பதோடு புதிய டிரேப்சாய்ட எக்சாஸ்ட் காரின் தோற்றத்தை மாற்றுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் கியூ சீரிஸ் மாடல்களை போன்று இல்லாமல் புதிய ஆடி கியூ8 வித்தியாச தோற்றம் பெற்றிருக்கிறது.
புதிய ஆடி கியூ8 ஆடம்பர கூப் மற்றும் ஸ்போர்ட் கூப் மாடல்களை சேர்த்ததாக இருக்கும். ஆடி கியூ8 மாடல் 2017 டெட்ராயிட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது.
வால்வோ கார்ஸ் இந்தியா புதிய XC40 காரின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. மேலும் இதற்கான முன்பதிவுகளும் துவங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் XC40 மாடலை ஜூலை 4-ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் புதிய காரின் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய வால்வோ காரை முன்பதிவு செய்வோர் ரூ.5 லட்சம் முன்பணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் வெளியீட்டு முந்தைய முன்பதிவுகள் முதல் 200 யூனிட்களுக்கு மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வால்வோ XC40 மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு வால்வோ நிறுவனத்தின் XC60 மற்றும் XC90 மாடல்களை தழுவி உருவாக்கப்படுகிறது.
இந்தியாவில் வால்வோ XC40 இரண்டு வித இன்ஜின்கள்: 188 பி.எச்.பி. பவர், 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் மற்றும் 245 பி.எச்.பி. பவர், 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் யுனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இரண்டு வித இன்ஜின்களும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், மற்றும் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வால்வோ நிறுவனத்தின் காம்பேக்ட் மாட்யூலர் ஆர்கிடெக்ச்சர் தளம் சார்ந்து வெளியாகும் முதல் மாடலாக XC40 இருக்கும்.

மே 2016-இல் அறிமுகம் செய்யப்பட்ட 40 சீரிஸ் கான்செப்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ள புதிய எஸ்.யு.வி. முன்பக்க கிரில் பார்க்க வால்வோ சமீபத்தில் அறிமுகம் செய்த XC60 போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் எல்இடி ஹெட்லைட் மற்றும் பகலில் எரியும் தார் வடிவிலான மின்விளக்குகள் இடம்பெற்றிருக்கிறது.
பின்புறம் ரேக்டு ரியர் விண்ட்ஷீல்டு, இன்டகிரேடெட் ரூஃப் ஸ்பாயிலர், டூயல் டோன் ரியர் பம்ப்பர் மற்றும் ட்வின் க்ரோம் எக்சாஸ்ட், L-வடிவிலான டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகிறது. உள்புறம் 3-ஸ்போக் ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் வழங்கப்படுகிறது. சென்டர் கன்சோலில் க்ரோம் ட்ரிம் மற்றும் செங்குத்தான ஏ.சி. வென்ட் மற்றும் செங்குத்தான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
புதிய வால்வோ XC40 டீசல் D4 மொமன்டம் மற்றும் இன்ஸ்க்ரிப்ஷன் வேரியன்ட்களிலும், பெட்ரோல் T5 சிங்கிள் ட்ரிம், R-டிசைன் வேரியன்ட்களில் கிடைக்கும். இந்த எஸ்.யு.வி. மாடலில் ABS, EBD, ஏர்பேக், ரேடார் சார்ந்த பாதுகாப்பு அம்சங்களான சிட்டி சேஃப்டி, பைலட் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், நேவிகேஷன் மற்றும் பிளைன்ட் ஸ்பாட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
சுசுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் ஹேட்ச்பேக் மாடலின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் 2017 ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விரைவில் இந்த கார் ஐரோப்பிய சந்தைகளிலும் அதன் பின் மற்ற நாடுகளில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலில் டர்போ சார்ஜ்டு இன்ஜின் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறை ஹேட்ச்பேக் மாடல்களில் 1.6 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்ட நிலையில் இம்முறை 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் 8.1 நொடிகளில் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என சுசுகி தெரிவித்துள்ளது.

1.4 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் 138bhp மற்றும் 5,500rpm செயல்திறன் 230Nm இல் 2,500-3,500rpm செயல்திறன் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜினில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய சுசுகி ஸ்விஃப்ட் முந்தைய மாடலை விட 80 கிலோ எடை குறைவாகவும், வழக்கமான ஸ்விஃப்ட் மாடல்களை விட 50 மில்லிமீட்டர் நீளமாகவும் உள்ளது.
இதன் வீல்பேஸ் அகலம் 20 மில்லிமீட்டர் மற்றும் 40 மில்லிமீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலில் புதிய சஸ்பென்ஷன் மற்றும் ரிவர்ஸ்டு முன்பக்க பம்ப்பர், புதிய கிரில் மற்றும் முன்பக்க ஸ்ப்லிட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலில் 17-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல் மற்றும் ஸ்போர்டி பிளாக் டிஃப்யூசர், எக்சாஸ்ட் பைப்கள் வழங்கப்பட்டுள்ளன.
உள்புறங்களில் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலில் ஸ்போர்ட்ஸ் சீட் மற்றும் சிவப்பு நிற ஸ்டிட்ச், லெதர் ராப்டு ஃபிளாட்-பாட்டம் ஸ்டீரிங் வீ்ல், மற்றும் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
டொயோட்டா இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த யாரிஸ் செடான் மாடல் ஒரே மாத முன்பதிவில் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது.
புதுடெல்லி:
டொயோட்டா இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த யாரிஸ் செடான் மாடல் கார் முன்பதிவு துவங்கிய ஒரே மாத காலத்தில் 5,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய செடான் மாடல் காரின் விலை கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் விற்பனை கடந்த வாரம் துவங்கியது.
இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் மாடல் ஹோன்டா சிட்டி மற்றும் ஹீன்டாய் வெர்னா உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. புதிய காரின் முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டுள்ள நிலையில், மே மாதம் முதல் விநியோகம் செய்யப்படுகின்றன.
புதிய டொயோட்டா யாரிஸ் செடான் வடிவமைப்பு கூர்மையாக உள்ளது. இதன் மெல்லிய ஹெட்லைட், டெயில்லைட், அகலமான கிரில் மற்றும் பின்ச் ரூஃப்லைன் உள்ளிட்டவை புதிய கொரோல்லா மற்றும் கேம்ரி மாடல்களில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது.
உள்புற கேபின் பெரிய இன்ஸ்ட்ரூமென்டேஷன் செய்யப்பட்டுள்ளது.

இதில் அனலாக் கடிகாரங்கள், 4.2 இன்ச் MID, 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் கொண்ட டேஷ், போல்ஸ்டெர் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், மெல்லிய ஏ.சி. வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டையர் பிரெஷர் மானிட்டரிங் சிஸ்டம், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய நெக் ரெஸ்டிரெயின்ட்கள் இடம்பெற்றிருக்கின்றன.
பாதுகாப்பை பொருத்த வரை யாரிஸ் மாடலில் ஏழு ஏர்பேக், ஏபிஎஸ், இபிஎஸ், இஎஸ்பி மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. டொயோட்டா யாரிஸ் மாடலில் 1.5 லிட்டர் VVT-i பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 107 பிஎஸ், 140 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.
இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் செடான் விலை ரூ.8.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹூன்டாய் நிறுவனத்தின் எலைட் i20 CVT மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஹூன்டாய் நிறுவனத்தின் எலைட் i20 CVT இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய ஆட்டோமேடிக் வேரியன்ட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே கொண்டுள்ளது.
ஹூன்டாய் எலைட் i20 CVT ஆட்டோமேடிக் மாடல் மேக்னா மற்றும் ஆஸ்டா என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. புதிய i20 எலைட் கார் முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய ஹூன்டாய் எலைட் i20 மாருதி பலேனோ மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எலைட் i20 மாடலில் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் வழக்கமான பாதுகாப்பு அம்சங்கள் (டூயல் ஏர்-பேக்) மற்றும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.
ஹூன்டாய் எலைட் i20 CVT ஆட்டோமேடிக் மாடலில் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 83 பி.ஹெச்.பி. பவர் @6000 ஆர்.பி.எம். 114 என்.எம். டார்கியூ @4000 ஆர்.பி.எம். பவர் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஹூன்டாய் எலைட் i20 டீசல் மாடலில் 1.4 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர் @4000 ஆர்.பி.எம்., 220 என்.எம். டார்கியூ @1500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு, கூர்மையான ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டி.ஆர்.எல். வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்த வரை புதிய 2018 எலைட் i20 மாடலில் இரண்டு டெயில் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 இன்ச் அலாய் வீல், ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் மூன்று நிறங்கள் டூயல் டோன் செய்யப்பட்டிருக்கிறது.
உள்புற அம்சங்களை பொருத்த வரை புதிய i20 மாடலில் டூயல் டோன் பிளாக் மற்றும் பெய்க் தீம் செய்யப்பட்டுள்ளது. இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதியும், 8 ஸ்பீக்கர் ஆடியோ செட்டப் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை புதிய எலைட் i20 மாடலில் 2 ஏர்பேக், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) உள்ளிட்டவையும், டாப் எண்ட் மாடலில் 6 ஏர்பேக் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3 ஆண்டுகள் / ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி வழங்கப்படுகிறது.
எலைட் i20 CVT மேக்னா விலை ரூ.7.04 லட்சமும், டாப் என்ட் ஆஸ்டா வேரியன்ட் விலை ரூ.8.16 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிக விற்பனையான இரண்டு கார் மாடல்களின் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டது.
புதுடெல்லி:
டாடா இன்டிகா மற்றும் இன்டிகோ மாடல்களின் தயாரிப்பை நிறுத்திக் கொள்வதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்பட்டுள்ள பலத்த போட்டி காரணமாக இரண்டு மாடல்களின் விற்பனை கடந்த சில மாதங்களில் குறைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்சமயம் இரண்டு மாடல்களின் தயாரிப்பு மட்டும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இவற்றை பயன்படுத்துவோருக்கு தொடர்ந்து சர்வீஸ் சார்ந்த ஒத்துழைப்பு டாடா சார்பில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டாடா விற்பனை மையங்களில் மீதம் இருக்கும் கடைசி யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்களில் ஏப்ரல் 2018 முதல் டாடா இன்டிகா மற்றும் இன்டிகோ மாடல்களின் விற்பனை மற்றும் தயாரிப்பு எண்ணிக்கை அளவில் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 முதல் நிதியாண்டு வரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2583 டாடா இன்டிகா யூனிட்களையும், 1756 டாடா இன்டிகோ யூனிட்களையும் விற்பனை செய்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் 2018 முதல் இரண்டு மாடல்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
கடந்த நிதியாண்டு விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 22 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணங்களாக டாடா நெக்சன், ஹெக்சா மற்றும் டியாகோ உள்ளிட்ட மாடல்களின் விற்பனை முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. ஏப்ரல் 2018-இல் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1,86,321 யூனிட்களை மொத்தமாக விற்பனை செய்துள்ளது.
இந்தியாவில் டாடா இன்டிகோ மாடல் 2002-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதிக இடவசதி கொண்டிருந்த இன்டிகோ இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட டாடா இன்டிகா மாடலும் இந்தியாவில் அமோக வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹூன்டாய் கிரெட்டா 2018 வெளியிடப்பட்டது. புதிய கிரெட்டா விலை மற்றும் இதர தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்தியாவில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டா 2018 காரினை ஹூன்டாய் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியாகி இருக்கும் புதிய கிரெட்டா ஐந்து ட்ரிம் மற்றும் மூன்று வித இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய கிரெட்டா காரில் முன்பக்கம் பெரிய கேஸ்கேட் கிரில், முன்பக்க பம்ப்பரில் ஃபாக் லேம்ப் சேர்க்கப்பட்டுள்ளது. பின்புற பம்ப்பர்கள் மற்றும் டெயில்லேம்ப்களில் புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வெளிப்புறத்தில் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு பின்புறம் முற்றிலும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது.
உள்புறத்தின் ஹூன்டாய் கிரெட்டா 2018 மாடலில் அதிக மாற்றங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில், டாப் என்ட் மாடலில் மட்டும் சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. பேஸ் இ வேரியன்ட் மாடலில் ஓட்டுனர் இருக்கை உயரத்தை மாற்றும் வசதி வழங்கப்படுகிறது. டாப்-என்ட் SX (O) மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ஓட்டுனர் இருக்கையை ஆறு விதங்களில் மாற்றும் வசதி, ஸ்மார்ட் கீ பேன்ட், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆறு ஏர்-பேக் வழங்கப்பட்டுள்ளது.

ஹூன்டாய் கிரெட்டா 2018 மாடலில் 1.4 லிட்டர் டீசல், 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 1.54 லிட்டர் டீசல் இன்ஜின் 88.7 பிஹெச்பி பவர், 1.6 லிட்டர் பெட்ரோல் யூனிட் 121 பிஹெச்பி பவர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் யூனிட் 126 பிஹெச்பி பவர் வழங்கும் திறன் கொண்டுள்ளது.
1.4 லிட்டர் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 1.6 லிட்டர் இன்ஜின்கள் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளன. டாப்-என்ட் SX (O) வேரியன்ட் மாடலில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் அம்சம் வழங்கப்படவில்லை.

இந்தியாவில் ஹூன்டாய் கிரெட்டா 2018 பேஸ் வேரியன்ட் விலை ரூ.9.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) துவங்கி டாப் என்ட் வேரியன்ட் விலை ரூ.15.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கிரெட்டா 2018 வைட், ஆரஞ்சு, பிளாக், சில்வர் புளு, ரெட், வைட்/பிளாக் (டூயல்-டோன் ) மற்றும் ஆரஞ்சு/பிளாக் (டூயல்-டோன்) என மொத்தம் ஏழு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது.
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூன்டாய் கிரெட்டா 2018 ஜீப் காம்பஸ், ரெனால்ட் கேப்டூர், டாடா ஹெக்சா மற்றும் மஹேந்திரா எக்ஸ்யுவி500 உள்ளிட்ட மாடல்களுடன் அடுத்த சில ஆண்டுகளில் வெளியாக இருக்கும் சில மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் காரின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் கார் சில மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் தலைமுறை சியாஸ் மாடல் 2020-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் புதிய காரின் சில விவரங்கள் தெரியவந்துள்ளது.
புதிய சியாஸ் கார் பிஎஸ் VI ரக எமிஷன் கொண்டிருக்கும் என்றும் பெட்ரோல்-ஹைப்ரிட் மற்றும் டர்போ-சார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய சியாஸ் மாடல் மாருதி சுசுகியின் குஜராத் தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. தற்சமயம் இந்த ஆலையில் 2018 ஸ்விஃப்ட் மாடல்கள் தயாரிக்கப்படுகின்றன.
சியாஸ் புதிய மாடல் தற்போதைய மாடலை தழுவி உருவாக்கப்பட்டாலும், இதில் பல்வேறு புதிய அம்சங்கள், உயர் ரக இன்டீரியர் அம்சங்கள் மற்றும் தலைசிறந்த செயல்திறன் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சற்றே அதிக விலை கொண்ட புதிய சியாஸ் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சோதனை செய்யும் பணிகள் துவங்கலாம்.

கோப்பு படம்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் மாடல் இந்த ஆண்டு ஆகஸ்டு மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை புதிய சியாஸ் மாடலில் ட்வின் ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. டாப்-என்ட் மாடலில் 6 ஏர்பேக் மற்றும் இதர பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுகின்றன.
சியாஸ் மாடல் 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஹைப்ரிட் அல்லது மைல்டு ஹைப்ரிட் காம்பினேஷன்களில் வெளியிடப்படலாம் என்றும் டீசல் மோட்டார் புதிய 1.5 லிட்டர் யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டீசல் இன்ஜினும் புதிதாய் உருவாக்கப்பட்ட 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூன்டாய் இந்தியா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட கிரெட்டா எஸ்யுவி வெளியீட்டு தேதி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
ஹூன்டாய் இந்தியா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட கிரெட்டா எஸ்யுவி மாடல் மே 21-ம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட கிரெட்டா புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியான நிலையில், இந்த எஸ்யுவி விற்பனையாளர்களிடம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் 2018 ஹூன்டாய் கிரெட்டா விலை மே 21-ம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே புதிய கிரெட்டா மாடலுக்கான முன்பதிவுகளை விற்பனையாளர்கள் துவங்கிவிட்ட நிலையில், இதன் விநியோகம் இம்மாத இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட ஹூன்டாய் கிரெட்டா மாடலில் காஸ்மெடிக் அப்டேட்கள் மட்டும் செய்யப்பட்டு மெக்கானிக்கல் அம்சங்கள் முந்தைய மாடலை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

புகைப்படம்: நன்றி RushLane
புதிய கிரெட்டா காரில் முன்பக்கம் க்ரோம் ட்ரிம் செய்யப்பட்ட ஹெக்சாகோனல் கிரில், முன்பக்க பம்ப்பரில் ஃபாக் லேம்ப் சேர்க்கப்பட்டுள்ளது. பின்புற பம்ப்பர்கள் மற்றும் டெயில்லேம்ப்களில் புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் தற்போதைய வடிவமைப்புக்கு மாற்றாக வழங்கப்படுகின்றன.
புதிய தலைமுறை ஹூன்டாய் எலைட் i20 மாடலில் வழங்கப்பட்டதை போன்ற மென்மையான, கிரே-தீம் செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டா இன்ஜின் அம்சங்களில் 1.4 லிட்டர் டீசல் (90PS, 220 Nm), 1.6 லிட்டர் டீசல் (128PS, 220Nm) மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் (123PS, 151Nm) வழங்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின்கள் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களை கொண்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் ஹூன்டாய் கிரெட்டா விற்பனை சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதிய அப்டேட் மூலம் ஹூன்டாய் இந்த நிலையை தக்க வைக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் ஹூன்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஜீப் காம்பஸ், ரெனால்ட் கேப்டூர், டாடா ஹெக்சா மற்றும் மஹேந்திரா எக்ஸ்யுவி500 உள்ளிட்ட மாடல்களுடன் அடுத்த சில ஆண்டுகளில் வெளியாக இருக்கும் சில மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
ஹோன்டா நிறுவனத்தின் அமேஸ் 2018 கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய காரின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஹோன்டா நிறுவனத்தின் அமேஸ் 2018 கார் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட அமேஸ் 2018 கார் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் புதிய அம்சங்களை கொண்டுள்ளது.
ஹோன்டா அமேஸ் 2018 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 89 பிஹெச்பி @6000 ஆர்பிஎம், 110 என்எம் டார்கியூ @4800 ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் மோட்டார் 99 பிஹெச்பி @3600 ஆர்பிஎம், 200 என்எம் டார்கியூ @1500 ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. இரு இன்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
புதிய ஹோன்டா CVT கியர்பாக்ஸ் கொண்ட மாடல் 79 பிஹெச்பி மற்றும் 160 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஹோன்டா அமேஸ் 2018 முற்றிலும் புதிய பிளாட்ஃபார்ம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. புதிய அமேஸ் முந்தைய மாடலை விட எடை குறைவாகவும், 5 மில்லிமீட்டர் நீலமாகவும், 15 மில்லிமீட்டர் அகலமாகவும் உள்ளது.
புதிய ஹோன்டா அமேஸ் 2018 மேனுவல் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19.5 கிலோமீட்டரும், டீசல் இன்ஜின் 27.8 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் CVT பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட் லிட்டருக்கு 19 கிலோமீட்டர் மற்றும் 23.8 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப்புறங்களில் இதன் வடிவமைப்பு ஹோன்டா சிட்டி போன்று காட்சியளிக்கிறது. கூர்மையான வளைவுகள், பிரம்மாண்ட வடிவமைப்பு மற்றும் புதிய க்ரோம் கிரில் மற்றும் ஹோன்டா லோகோ நடுவில் பொருத்தப்பட்டுள்ளது. புதிய ஹெட்லேம்ப்களில் எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமேஸ் மாடலில் 15 இன்ச் அலாய் வீல், சி வடிவம் கொண்ட எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புற பூட் லிட் ஸ்பாயிலர் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய மாடலை விட புதிய அமேஸ் அதிக அகலமாக உருவாக்கப்பட்டு, உள்புறம் அதிக இடவசதியை கொண்டுள்ளது.
உள்புறம் டூயல்-டோன் டேஷ்போர்டு பெய்க் மற்றும் பிளாக் தீம் செய்யப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்த வரை தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கண்ட்ரோலில் டச் பட்டன்கள், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, ஸ்டார்ட், ஸ்டாப் பட்டன், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஹோன்டா அமேஸ் 2018 E, S, V மற்றும் VX என நான்கு வித வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மாடல் விலை ரூ.5.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்குகிறது. ஹோன்டா அமேஸ் 2018 டீசல் இன்ஜின் மாடலின் விலை ரூ.6.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்குகிறது.
மாருதி சுசுகியின் காம்பேக்ட் செடான் மாடல் காரான மாருதி டிசையர் இந்திய விற்பனையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. #MarutiSuzuki #Maruti #Dzire
புதுடெல்லி:
மாருதி டிசையர் காம்பேக்ட் செடான் கார் இந்தியாவில் நல்ல விற்பனையை பதிவு செய்து வருகிறது. ஏப்ரல் 2018 மாதத்தில் மட்டும் சுமார் 25,935 டிசையர் யூனிட்களை மாருதி விற்பனை செய்திருக்கிறது.
டிசையர் மாடலுக்கு அடுத்த இடத்தில் ஸ்விஃப்ட் கார் 22,776 யூனிட்கள் விற்பனையாகி இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதே மாதத்தில் ஆல்டோ 21,233 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இந்தியாவில் 2016-ம் ஆண்டு அறிமுகமான டிசைர் தொடர்ந்து அதிக விற்பனையை பதிவு செய்து வருகிறது.
மாருதி சுசுகி டிசையர் அந்நிறுவனத்தின் HEARTEC வடிவமைப்பை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் முந்தைய மாடல்களை விட மெல்லிய மற்றும் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது. புதிய வடிவமைப்பு காரணமாக காரின் எடை முந்தைய மாடலை விட 105 கிலோ வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதால் புதிய முன்புறம் பெற்றிருக்கிறது. க்ரோம் சரவுண்டு செய்யப்பட்ட புதிய கிரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டேடைம் ரன்னிங் லைட், புதிய பம்ப்பர் உள்ளிட்டவை காரின் தோற்றத்தை ஒட்டுமொத்தமாக வித்தியசமாக வெளிப்படுத்துகிறது.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதால் புதிய முன்புறம் பெற்றிருக்கிறது. க்ரோம் சரவுண்டு செய்யப்பட்ட புதிய கிரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டேடைம் ரன்னிங் லைட், புதிய பம்ப்பர் உள்ளிட்டவை காரின் தோற்றத்தை ஒட்டுமொத்தமாக வித்தியசமாக வெளிப்படுத்துகிறது.
இந்தியாவில் மாருதி டிசையர் விலை ரூ.5.56 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது. #MarutiSuzuki #Maruti #Dzire






