என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Volvo India"

    • இந்தியாவில் 69 kWh NMC பேட்டரி பேக்கை ஒற்றை மோட்டார் மற்றும் இரட்டை மோட்டார் AWD வேரியண்ட்களுடன் வழங்க வாய்ப்புள்ளது.
    • இந்த யூனிட் 427 bhp பவர், ஒருமுறை சார்ஜ் செய்தால் 474 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் தனது கார் மாடல்களை பல்வகைப்படுத்த வால்வோ தயாராகி வருகிறது. இதற்காக அந்நிறுவனம் புதிய மாடல்களை பட்டியலில் கொண்டு வருகிறது. சமீபத்தில், இந்த நிறுவனத்தின் வரவிருக்கும் வாகனமான வால்வோ EX30, இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

    வால்வோ EX300 மிகச்சிறிய மற்றும் மிகவும் மலிவு விலை மின்சார SUV என்று கூறப்படுகிறது. மேலும் இது சர்வதேச சந்தையில் வால்வோ EX40 மற்றும் EC40 மாடல்களின் கீழே வைக்கப்பட்டுள்ளது.

    எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்:

    சர்வதேச சந்தையில் விற்கப்படும் வால்வோ EX30, நிறுவனத்தின் சஸ்டெயினபிள் எக்ஸ்பீரியன்ஸ் ஆர்கிடெக்ச்சர் தளத்தை அடிப்படையாகக் கொண்டது. அதன் சர்வதேச மாடல்கள் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களைப் பெற்றாலும், இந்த நிறுவனம் இந்தியாவில் 69 kWh NMC பேட்டரி பேக்கை ஒற்றை மோட்டார் மற்றும் இரட்டை மோட்டார் AWD வேரியண்ட்களுடன் வழங்க வாய்ப்புள்ளது.



    இந்த யூனிட் 427 bhp பவர், ஒருமுறை சார்ஜ் செய்தால் 474 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    எதிர்பார்க்கப்படும் வடிவமைப்பு:

    வால்வோ EX30 அதன் வடிவமைப்பு அம்சங்களை வால்வோ EX90 எஸ்யூவி-யில் இருந்து பெற்றதாகத் தெரிகிறது. சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட கார் பெரிதும் உருமறைப்பு செய்யப்பட்டிருந்தாலும், நேர்த்தியான LED ஹெட்லைட்கள், சிக்னேச்சர் தோர் ஹேமர் LED DRLகள், பிக்சல்-ஸ்டைல்டு டெயில்-லைட்கள் போன்ற வெளிப்புற சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    எதிர்பார்க்கப்படும் இன்டீரியர்:

    உள்புறத்தில், வால்வோ EX30 சர்வதேச மாடல்களில் காணப்படும் அதே வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 12.3-இன்ச் செங்குத்தாக பொருத்தப்பட்ட டச் ஸ்கிரீனுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட கூகுள் சார்ந்த இன்ஃபோடெயின்மென்ட் ஓஎஸ் உடன் இயக்கப்படுகிறது.

    வெளியீடு மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை:

    வால்வோ EX30 காரை உள்ளூரில் அசெம்பிள் செய்வதற்கான திட்டங்களை நிறுவனம் மதிப்பீடு செய்து வருவதாகவும், இது மலிவு விலையில் கிடைக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மின்சார எஸ்யூவி-யின் வெளியீட்டு தேதியை நிறுவனம் இன்னும் கூறவில்லை. இருப்பினும், பண்டிகை காலத்தில் ரூ.42-45 லட்சம் விலையில் இது அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வால்வோ கார்ஸ் இந்தியா புதிய XC40 காரின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. மேலும் இதற்கான முன்பதிவுகளும் துவங்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் XC40 மாடலை ஜூலை 4-ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் புதிய காரின் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய வால்வோ காரை முன்பதிவு செய்வோர் ரூ.5 லட்சம் முன்பணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் வெளியீட்டு முந்தைய முன்பதிவுகள் முதல் 200 யூனிட்களுக்கு மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வால்வோ XC40 மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு வால்வோ நிறுவனத்தின் XC60 மற்றும் XC90 மாடல்களை தழுவி உருவாக்கப்படுகிறது.

    இந்தியாவில் வால்வோ XC40 இரண்டு வித இன்ஜின்கள்: 188 பி.எச்.பி. பவர், 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் மற்றும் 245 பி.எச்.பி. பவர், 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் யுனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இரண்டு வித இன்ஜின்களும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், மற்றும் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வால்வோ நிறுவனத்தின் காம்பேக்ட் மாட்யூலர் ஆர்கிடெக்ச்சர் தளம் சார்ந்து வெளியாகும் முதல் மாடலாக XC40 இருக்கும். 



    மே 2016-இல் அறிமுகம் செய்யப்பட்ட 40 சீரிஸ் கான்செப்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ள புதிய எஸ்.யு.வி. முன்பக்க கிரில் பார்க்க வால்வோ சமீபத்தில் அறிமுகம் செய்த XC60 போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் எல்இடி ஹெட்லைட் மற்றும் பகலில் எரியும் தார் வடிவிலான மின்விளக்குகள் இடம்பெற்றிருக்கிறது. 

    பின்புறம் ரேக்டு ரியர் விண்ட்ஷீல்டு, இன்டகிரேடெட் ரூஃப் ஸ்பாயிலர், டூயல் டோன் ரியர் பம்ப்பர் மற்றும் ட்வின் க்ரோம் எக்சாஸ்ட், L-வடிவிலான டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகிறது. உள்புறம் 3-ஸ்போக் ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் வழங்கப்படுகிறது. சென்டர் கன்சோலில் க்ரோம் ட்ரிம் மற்றும் செங்குத்தான ஏ.சி. வென்ட் மற்றும் செங்குத்தான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. 

    புதிய வால்வோ XC40 டீசல் D4 மொமன்டம் மற்றும் இன்ஸ்க்ரிப்ஷன் வேரியன்ட்களிலும், பெட்ரோல் T5 சிங்கிள் ட்ரிம், R-டிசைன் வேரியன்ட்களில் கிடைக்கும். இந்த எஸ்.யு.வி. மாடலில் ABS, EBD, ஏர்பேக், ரேடார் சார்ந்த பாதுகாப்பு அம்சங்களான சிட்டி சேஃப்டி, பைலட் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், நேவிகேஷன் மற்றும் பிளைன்ட் ஸ்பாட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    ×