search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹோன்டா அமேஸ் 2018 இந்தியாவில் வெளியானது
    X

    ஹோன்டா அமேஸ் 2018 இந்தியாவில் வெளியானது

    ஹோன்டா நிறுவனத்தின் அமேஸ் 2018 கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய காரின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஹோன்டா நிறுவனத்தின் அமேஸ் 2018 கார் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட அமேஸ் 2018 கார் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் புதிய அம்சங்களை கொண்டுள்ளது. 

    ஹோன்டா அமேஸ் 2018 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 89 பிஹெச்பி @6000 ஆர்பிஎம், 110 என்எம் டார்கியூ @4800 ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் மோட்டார் 99 பிஹெச்பி @3600 ஆர்பிஎம், 200 என்எம் டார்கியூ @1500 ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. இரு இன்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 

    புதிய ஹோன்டா CVT கியர்பாக்ஸ் கொண்ட மாடல் 79 பிஹெச்பி மற்றும் 160 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஹோன்டா அமேஸ் 2018 முற்றிலும் புதிய பிளாட்ஃபார்ம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. புதிய அமேஸ் முந்தைய மாடலை விட எடை குறைவாகவும், 5 மில்லிமீட்டர் நீலமாகவும், 15 மில்லிமீட்டர் அகலமாகவும் உள்ளது.

    புதிய ஹோன்டா அமேஸ் 2018 மேனுவல் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19.5 கிலோமீட்டரும், டீசல் இன்ஜின் 27.8 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் CVT பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட் லிட்டருக்கு 19 கிலோமீட்டர் மற்றும் 23.8 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    வெளிப்புறங்களில் இதன் வடிவமைப்பு ஹோன்டா சிட்டி போன்று காட்சியளிக்கிறது. கூர்மையான வளைவுகள், பிரம்மாண்ட வடிவமைப்பு மற்றும் புதிய க்ரோம் கிரில் மற்றும் ஹோன்டா லோகோ நடுவில் பொருத்தப்பட்டுள்ளது. புதிய ஹெட்லேம்ப்களில் எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய அமேஸ் மாடலில் 15 இன்ச் அலாய் வீல், சி வடிவம் கொண்ட எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புற பூட் லிட் ஸ்பாயிலர் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய மாடலை விட புதிய அமேஸ் அதிக அகலமாக உருவாக்கப்பட்டு, உள்புறம் அதிக இடவசதியை கொண்டுள்ளது.

    உள்புறம் டூயல்-டோன் டேஷ்போர்டு பெய்க் மற்றும் பிளாக் தீம் செய்யப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்த வரை தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கண்ட்ரோலில் டச் பட்டன்கள், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, ஸ்டார்ட், ஸ்டாப் பட்டன், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஹோன்டா அமேஸ் 2018 E, S, V மற்றும் VX என நான்கு வித வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மாடல் விலை ரூ.5.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்குகிறது. ஹோன்டா அமேஸ் 2018 டீசல் இன்ஜின் மாடலின் விலை ரூ.6.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்குகிறது.
    Next Story
    ×