என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் வெளியீட்டு விவரங்கள்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் காரின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் கார் சில மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரண்டாம் தலைமுறை சியாஸ் மாடல் 2020-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் புதிய காரின் சில விவரங்கள் தெரியவந்துள்ளது. 

    புதிய சியாஸ் கார் பிஎஸ் VI ரக எமிஷன் கொண்டிருக்கும் என்றும் பெட்ரோல்-ஹைப்ரிட் மற்றும் டர்போ-சார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய சியாஸ் மாடல் மாருதி சுசுகியின் குஜராத் தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. தற்சமயம் இந்த ஆலையில் 2018 ஸ்விஃப்ட் மாடல்கள் தயாரிக்கப்படுகின்றன.  

    சியாஸ் புதிய மாடல் தற்போதைய மாடலை தழுவி உருவாக்கப்பட்டாலும், இதில் பல்வேறு புதிய அம்சங்கள், உயர் ரக இன்டீரியர் அம்சங்கள் மற்றும் தலைசிறந்த செயல்திறன் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சற்றே அதிக விலை கொண்ட புதிய சியாஸ் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சோதனை செய்யும் பணிகள் துவங்கலாம்.


    கோப்பு படம்

    ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் மாடல் இந்த ஆண்டு ஆகஸ்டு மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை புதிய சியாஸ் மாடலில் ட்வின் ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. டாப்-என்ட் மாடலில் 6 ஏர்பேக் மற்றும் இதர பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுகின்றன.

    சியாஸ் மாடல் 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஹைப்ரிட் அல்லது மைல்டு ஹைப்ரிட் காம்பினேஷன்களில் வெளியிடப்படலாம் என்றும் டீசல் மோட்டார் புதிய 1.5 லிட்டர் யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டீசல் இன்ஜினும் புதிதாய் உருவாக்கப்பட்ட 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×