என் மலர்
கார்
போப் பிரான்சிஸ் பயன்படுத்தி வந்த கஸ்டம் மேட் லம்போர்கினி ஹரிகேன் RWD கூப் மாடல் ஏலத்தில் பல கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது.
கனடா:
போப் பிரான்சிஸ் பயன்படுத்தி வந்த கஸ்டம் மேட் லம்போர்கினி ஹரிகேன் RWD கூப் ஏலத்தில் 7,15,000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.5.76 கோடி) விற்பனையாகியுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தைக்கு இந்த லம்போர்கினி கார் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஆட்டோமொபில் லம்போர்கினி சார்பில் பரிசாக வழங்கப்பட்டது. பரிசை ஏற்றுக் கொண்ட போப் பிரான்சிஸ் காரில் தனது கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மான்ட் கார்லோவில் மே 12-ம் தேதி நடைபெற்ற ஏலம் ஆர்எம் சோத்பி எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. முன்னதாக பலமுறை வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை இந்நிறுவனம் ஏலத்தில் விற்றிருக்கிறது. அந்த வகையில் போப் பிரான்சிஸ் லம்போர்கினி டாப் 10 பட்டியில் இடம்பிடித்துள்ளது.
போப் பிரான்டிஸ் பயன்படுத்தி வந்த லம்போர்கினி ஹரிகேன் மாடல் பியான்கோ மொனோசிரஸ் வைட் ஷேட் நிறம் கொண்டிருக்கிறது. இதில் கியாலோ டிபெரினோ ஸ்டிரைப்கள் மற்றும் வேட்டிக்கன் நகர கொடிகளை தழுவிய நிறங்களில் டீடெயிலிங் செய்யப்பட்டுள்ளது. RWD கூப் மாடலில் டைமன்ட் ஃபினிஷ் செய்யப்பட்ட 20 இன்ச் கியானோ வீல்கள் மற்றும் நீரோ கேலிப்பர்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் இருக்கைகள் பியான்கோ லெடா ஸ்போர்டிவோ லெதர் மூலம் மூடப்பட்டு, ஹெட்ரெஸ்ட்களில் லம்போர்கினி கிரெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. ஆட் பென்சோனம் எனும் லம்போர்கினியின் கஸ்டமைசேஷன் குழுவினரால் உருவாக்கப்பட்ட நிலையில், இதன் ஹூடில் போப் கையெழுத்திட்டிருந்தார்.

மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில், லம்போர்கினி ஹரிகேன் RWD மாடலில் 5.2 லிட்டர் V10 இன்ஜின் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜின் 576 பிஹெச்பி @8000 ஆர்பிஎம், 540 என்எம் டார்கியூ @6500 ஆர்பிஎம் மற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
போப் பயன்படுத்திய இந்த கார் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.4 நொடிகளில் செல்லும் என்பதோடு அதிகபட்சமாக மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
ஏலத்தொகை மொத்தமும் திருத்தந்தை போப் பிரான்சிஸ் இடம் வழங்கப்பட்டு, இவை பல்வேறு நலத்திட்டங்களுக்காக செலவிடப்பட இருக்கிறது. இந்த தொகையின் ஒருபங்கு போப் ஜான் XXIII சமூகத்திற்கு வழங்கப்படும், இந்த சமூகம் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து மீட்கப்பட்ட பெண்களுக்கு உதவி வருகிறது.
டொயோட்டா யாரிஸ் இந்திய வெளியீட்டு தேதியை டொயோட்டா இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
டொயோட்டா இந்தியா நிறுவனம் புதிய யாரிஸ் செடான் மாடலை இந்தியாவில் மே 18-ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. புதிய யாரிஸ் மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில் இவற்றின் விநியோகம் இம்மாத இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய டொயோட்டா யாரிஸ் செடான் வடிவமைப்பு கூர்மையாக உள்ளது. இதன் மெல்லிய ஹெட்லைட், டெயில்லைட், அகலமான கிரில் மற்றும் பின்ச் ரூஃப்லைன் உள்ளிட்டவை புதிய கொரோல்லா மற்றும் கேம்ரி மாடல்களில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது.
உள்புற கேபின் பெரிய இன்ஸ்ட்ரூமென்டேஷன் செய்யப்பட்டுள்ளது.

இதில் அனலாக் கடிகாரங்கள், 4.2 இன்ச் MID, 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் கொண்ட டேஷ், போல்ஸ்டெர் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், மெல்லிய ஏ.சி. வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டையர் பிரெஷர் மானிட்டரிங் சிஸ்டம், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய நெக் ரெஸ்டிரெயின்ட்கள் இடம்பெற்றிருக்கின்றன.
பாதுகாப்பை பொருத்த வரை யாரிஸ் மாடலில் ஏழு ஏர்பேக், ஏபிஎஸ், இபிஎஸ், இஎஸ்பி மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. டொயோட்டா யாரிஸ் மாடலில் 1.5 லிட்டர் VVT-i பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 107 பிஎஸ், 140 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.
இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் செடான் பேஸ் மாடல் விலை ரூ.8.75 லட்சத்தில் துவங்கி, டாப் என்ட் மாடலின் விலை ரூ.14.07 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாருதி சுசுகியின் விடாரா பிரெஸ்ஸா மாடல் இந்திய விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
புதுடெல்லி:
மாருதி சுசுகி நிறுவனத்தின் விடாரா பிரெஸ்ஸா மாடல் கார் இந்திய விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் வெளியானது முதல் இதுவரை சுமார் 2.75 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2016-ம் ஆண்டு வாக்கில் விடாரா பிரெஸ்ஸா வெளியிடப்பட்டது. சமீபத்தில் பிரெஸ்ஸா காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் புதிய மாடலில் AGS கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. புதிய பிரெஸ்ஸா மாடல்களின் விலை ரூ.8.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்கி டாப் என்ட் மாடலின் விலை ரூ.10.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய விற்பனை நிலவரப்படி மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா ஒட்டுமொத்த விற்பனையில் டாப் என்ட் வேரியன்ட்களான ZDi மற்றும் ZDi பிளஸ் மாடல்கள் மட்டும் சுமார் 56% விறபனையாகி இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் 12,300 பிரெஸ்ஸா யூனிட்கள் விற்பனையாகின்றன.

கடந்த மாதம் மட்டும் மாருதி சுசுகியின் ஒட்டுமொத்த விற்பனையில் விடாரா பிரெஸ்ஸா மட்டும் 50% விற்பனையாகியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 20,804 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
மாருதி விடாரா பிரெஸ்ஸா ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மாடலில் டீசன் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. விடாரா பிரெஸ்ஸா மாடலில் DDiS 200, 1.3 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 89 பிஹெச்பி, 200 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கிறது.
இத்துடன் மாருதி விடாரா பிரெஸ்ஸா ஆட்டோமேடிக் மாடலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களான ISOFIX, அதிவேக எச்சரிக்கை. டூயல் ஏர்பேக், ஏபிஎஸ் மற்றும் இபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
மாருதி விடாரா பிரெஸ்ஸா AMT மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
மாருதி விடாரா பிரெஸ்ஸா AMT மாடல் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய விடாரா பிரெஸ்ஸா AMT கார் VDI, ZDI, ZDI+ மற்றும் ZDI+ டூயல் டோன் என மொத்தம் நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது.
புதிய மாருதி விடாரா பிரெஸ்ஸா AMT மாடலில் ஸ்டேனடர்டு பாதுகாப்பு அம்சங்களான டூயல் ஏர்பேக்ஸ் மற்றும் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காம்பேக்ட் எஸ்யுவி மாடலில் டூயல் டோன் ஆட்டம் ஆரஞ்சு - பியல் ஆர்க்டிக், க்ரோம் கிரில் மற்றும் க்ரோம் கார்னிஷ் செய்யப்பட்டிருக்கிறது.
டாப் என்ட் பிரெஸ்ஸா AMT மாடலில் அலாய் வீல் மற்றும் கிளாஸ் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டது. உள்புறத்தில் முழுமையான பிளாக் தீம் மற்றும் பிளாக் டேஷ்போர்டு கொண்டுள்ளது. இதுதவிர ஒட்டுமொத்த வடிவமைப்பு முந்தைய மேனுவல் வேரியன்ட் போன்றே காட்சியளிக்கிறது.

மாருதி விடாரா பிரெஸ்ஸா AMT மாடலிலும் 1.3 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 88.8 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்கியூ மற்றும் AMT கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இதன் மேனுவல் வெர்ஷன் லிட்டருக்கு 24.3 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கு்ம விலையில், இதேபோன்ற மைலேஜ் புதிய AMT வேரியன்ட் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மாருதி விடாரா பிரெஸ்ஸா AMT பேஸ் வேரியன்ட் விலை ரூ.8.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என துவங்குகிறது, இதன் டாப் என்ட் மாடலின் விலை ரூ.10.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் விடாரா பிரெஸ்ஸா மாடல் சமீபத்தில் வெளியிடப்பட்ட டாடா நெக்சன் AMT மாடலுக்கு போட்டியாக அமைந்துள்ளது. டாடா நெக்சன் AMT பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது, இத்துடன் டாப் என்ட் மாடலில் டாடா மோட்டார்ஸ் AMT வசதியை வழங்கியுள்ளது.
நிசான் டெரானோ ஸ்போர்ட் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் வெளியாகியுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
நிசான் டெரானோ ஸ்ரபோர்ட் ஸ்பெஷல் எடிஷன் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. காரின் வெளிப்புறம் மற்றும் உள்புரங்களில் பல்வேறு புதிய அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
நிசான் டெரானோ ஸ்போர்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் டைனமிக் பாடி டீகல்கள், பிளாக் ரூஃப் ரேப், பிளாக் ரேப்டு பில்லர்ஸ் மற்றும் வீல் ஆர்ச்களில் புதிய கிளாடிங்கள் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் பொனேட்டில் ஸ்டிரைப்கள், பின்புற பம்ப்பர், ஃபென்டர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
உள்புறத்தில் நிசான் டெரானோ ஸ்போர்ட் மாடலில் டூயல்-டோன் டேஷ்போர்டு, க்ரிம்சன்-ஸ்டிட்ச் செய்யப்பட்ட சீட் கவர்கள், க்ரிம்சன் அக்சென்ட் செய்யப்பட்ட ஃப்ளோர் மேட்களும், 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கன்ட்ரோல்கள் ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்டுள்ளது.

நிசான் டெரானோ ஸ்போர்ட் மாடலில் நிசான் கனெக்ட் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட்போனில் இணைந்து கொண்டு தேவையான தகவல்களை வழங்கி வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துகிறது. இதன் இன்டெலிஜன்ட் மொபிலிட்டி பேக்கேஜ் 50-க்கும் அதிகமான அம்சங்களை கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை நிசான் டெரானோ ஸ்போர்ட் ஸ்பெஷல் எடிஷனில் டச் லேன் சேஞ்ச் இன்டிகேட்டர், டூயல் ஏர்-பேக், டே-டைம் ரன்னிங் லைட்கள், ஏபிஎஸ், இபிடி மற்றும் பிரேக் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 102 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
இதன் டீசல் இன்ஜின் 84 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்கியூ மற்றும் 108 பிஹெச்பி பவர், 243 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இதன் அதிக செயல்திறன் கொண்ட இன்ஜினில் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது விரும்புவோர் தேர்வு செய்ய 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் நிசான் டெரானோ ஸ்போர்ட் எடிஷன் விலை ரூ.12.22 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை X4 மாடலின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
பிஎம்டபுள்யூ இந்தியா தனது இரண்டாம் தலைமுறை X4 மாடல் 2019-ம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தலைமுறை பிஎம்டபுள்யூ X4 கார் 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்டது, எனினும் இந்த கார் இந்தியாவில் வெளியிடப்படவில்லை.
இந்தியாவில் புதிய பிஎம்டபுள்யூ X4 வெளியானதும், X3 மற்றும் X5 மாடல்களுக்கு மத்தியில் நிறுத்தப்படும். புதிய பிஎம்டபுள்யூ X4 2018 ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய தலைமுறை X4 கார் அந்நிறுவனத்தின் CLAR தளத்தை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய தளம் காரணமாக புதிய பிஎம்டபுள்யூ X4 எடை முந்தைய மாடலை விட 50கிலோ வரை குறைக்கப்பட்டிருக்கிறது.
பிஎம்டபுள்யூ X4 4752மில்லிமீட்டர் அளவு நீலமாகவும், 1918மில்லிமீட்டர் அகலமாகவும், 1621மில்லிமீட்டர் உயரமாக இருக்கிறது. இது புதிய X3 மாடலை விட 44மில்லிமீட்டர் நீலமாகவும், 27மில்லிமீட்டர் அகலமாகவும், 55மில்லிமீட்டர் உயரம் குறைவாக உள்ளது. இதன் வீல்பேஸ் 2864மில்லிமீட்டராக உள்ளது.

புதிய பிஎம்டபுள்யூ X4 வடிவமைப்பு முன்பக்கம் X3 போன்றே காட்சியளிக்கிறது. இதன் முன்பக்கம் பிஎம்டபுள்யூ-வின் கிட்னி கிரில், ஆக்டிவ் ஃபிளாப்களை கொண்டுள்ளது. இருபுறமும் டூயல்-பேரெல் எல்இடி ஹெட்லேம்ப், முன்பக்க பம்ப்பர் புதிய வடிவமைப்புடன் எல்இடி டிஆர்எல்-களை கொண்டுள்ளது.
பின்புறம் பிஎம்டபுள்யூ X4 மாடலில் கூப் போன்ற ரூஃப்லைன் பூட் வழியே செல்கிறது. பின்புற எக்ஸ்டென்ட்கள் பார்க்க X6 மாடலில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது. புதிய பிஎம்டபுள்யூ X4 மாடலில் 19 இன்ச் அல்லது 20 இன்ச் அலாய் வீல்களில் ஒன்றை தேர்வு செய்யும் வசதியை வழங்குகிறது.
உள்புறத்தில் புதிய X4 மாடலின் டேஷ்போர்டு சென்டர் கன்சோல் 6.5 இன்ச் ஃபுளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 3-சோன் கிளைமேட் கன்ட்ரோல், 3-ஸ்போக் ஸ்டீரிங் வீல், 12 இன்ச் ஃபுல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்த வரை புதிய X4 மாடலில் ஃபுல்-கலர் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, ஹார்மன் கார்டன் சரவுன்டு சிஸ்டம், பானரோமிக் சன்ரூஃப் மற்றும் எட்டு ஏர்பேக்களை கொண்டுள்ளது.
கூடுதலாக டிரைவிங் அசிஸ்ட் பிளஸ், ஸ்டீரிங் மற்றும் லேன் கன்ட்ரோல் அசிஸ்ட் மற்றும் 10.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்தியாவில் புதிய பிஎம்டபுள்யூ X4 மாடலில் X3 காரில் வழங்கப்பட்ட இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் 188 பிஹெச்பி, 400 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கிறது.
ஹூன்டாய் நிறுவனத்தின் ஃபேஸ்லெஃப்ட் 2018 கிரெட்டா முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்தியாவில் ஹூன்டாய் கிரெட்டா 2018 ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மும்பையில் உள்ள விற்பனையாளர் முன்பதிவுகளை துவங்கியிருப்பதாக ஓவர்டிரைவ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு குறித்த தகவல்களை ஹூன்டாய் இந்தியா மறுத்திருக்கும் நிலையில், புதிய காருக்கான முன்பதிவு கட்டணமாக ரூ.25,000 நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக விற்பனையாளர் தெரிவித்திருக்கிறார். விநியோகம் மே மாத இறுதியிலோ அல்லது ஜூன் மாத துவக்கத்திலோ துவங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூன்டாய் கிரெட்டா தற்போதைய மாடலை விட அதிக மாற்றங்களை கொண்டிருக்கும் என்றும் இது பிரேசில் நாட்டு கிரெட்டா ஸ்போர்ட் மாடல் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய கிரெட்டா மாடலில் பெரிய க்ரோம் ட்ரிம் செய்யப்பட்ட ஹெக்சாகோனல் முன்பக்க கிரில் கொண்டிருக்கும்.
முன்பக்க பம்ப்பர் பெரிய ஃபாக் லேம்ப்பில் ப்ரோனவுன்ஸ்டு சின் முன்பக்க கிரிலில் இணையும் படி வடிவமைக்கப்படுகிறது. பின்புற பம்ப்பர்களும் மாற்றப்பட்டு டெயில்லேம்ப்கள் ட்வீக் செய்யப்பட்டுள்ளன. புதிய 17 இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் தற்போதைய வடிவமைப்புக்கு மாற்றாக இருக்கும்.

உள்புறத்தில் அதிக மாற்றங்கள் இன்றி் முந்தைய மாடலை விட மென்மையாகவும், கிரே-தீம் செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதே போன்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஹூன்டாய் புதிய எலைட் i20 மாடலிலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹூன்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.4 டீசல் (90PS, 220 Nm), 1.6 டீசல் (128PS, 220 Nm) மற்றும் 1.6 பெட்ரோல் (123PS, 151 Nm) இன்ஜின் ஆப்ஷன்கள் கொண்டிருக்கும். இந்த இன்ஜின்கள் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களை கொண்டுள்ளன.
ஹூன்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக கிரெட்டா இருக்கிறது. அறிமுகமான மூன்று ஆண்டுகளில் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் புதிய மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என ஹூன்டாய் எதிர்பார்க்கிறது.
தற்சமயம் ஹூன்டாய் கிரெட்டா மாடலுக்கு ஜீப் காம்பஸ், ரெனால்ட் கேப்டூர், டாடா ஹெக்சா மற்றும் மஹேந்திரா எக்ஸ்யுவி500 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் மேலும் புதிய கார்கள் இந்த பட்டியலில் இணைந்து கொள்ளும் என கூறப்படுகிறது.
ஹோன்டா கார்ஸ் நிறுவனத்தின் 2018 அமேஸ் கார் தயாரிப்பு பணிகள் ராஜஸ்தானில் உள்ள ஆலையில் துவங்கியுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் ஹோன்டா அமேஸ் 2018 கார் மே 16-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. அந்த வகையில் இரண்டாம் தலைமுறை அமேஸ் மாடலுக்கான தயாரிப்பு பணிகள் ராஜஸ்தானில் உள்ள டபுகாரா தயாரிப்பு ஆலையில் துவங்கியுள்ளது. புதிய அமேஸ் மாடலில் புதிய வடிவமைப்பு மற்றும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹோன்டா அமேஸ் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டுள்ளது. தற்போதைய மாடலை விட பல்வேறு அம்சங்கள் மாற்றப்பட்டுள்ளதால் புதிய மாடல் அதிக பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது.
வெளிப்புறங்களில் இதன் வடிவமைப்பு ஹோன்டா சிட்டி போன்று காட்சியளிக்கிறது. கூர்மையான வளைவுகள், பிரம்மாண்ட வடிவமைப்பு மற்றும் புதிய க்ரோம் கிரில் மற்றும் ஹோன்டா லோகோ நடுவில் பொருத்தப்பட்டுள்ளது. புதிய ஹெட்லேம்ப்களில் எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமேஸ் மாடலில் 15 இன்ச் அலாய் வீல், சி வடிவம் கொண்ட எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புற பூட் லிட் ஸ்பாயிலர் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய மாடலை விட புதிய அமேஸ் அதிக அகலமாக உருவாக்கப்பட்டு, உள்புறம் அதிக இடவசதியை கொண்டுள்ளது.

உள்புறம் டூயல்-டோன் டேஷ்போர்டு பெய்க் மற்றும் பிளாக் தீம் செய்யப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்த வரை தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கண்ட்ரோலில் டச் பட்டன்கள், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, ஸ்டார்ட், ஸ்டாப் பட்டன், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது.
2018 ஹோன்டா அமேஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 88 பிஹெச்பி பவர், 109 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் இன்ஜின் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இந்த இன்ஜின்கள் 5-ஸ்பீடு மேனுவல்ஸ, 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
புதிய ஹோன்டா அமேஸ் E, S, V மற்றும் VX என நான்கு வித வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த காரை முன்பதிவு செய்யும் முதல் 20,000 வாடிக்கையாளர்களுக்கு அறிமுக சலுகையாக சிறப்பு விலை வழங்கப்படும் என ஹோன்டா அறிவித்துள்ளது.
ஹூன்டாய் இந்தியா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட i20 ஆக்டிவ் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஹூன்டாய் இந்தியா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட i20 ஆக்டிவ் காரினை இந்தியாவில் சத்தமில்லாமல் வெளியிட்டுள்ளது. புதிய 2018 ஹூன்டாய் i20 ஆக்டிவ் மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
மேம்படுத்தப்பட்ட ஹூன்டாய் i20 ஆக்டிவ் மாடலில் டூயல் டோன் மரினா புளு மற்றும் போலார் வைட் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இத்துட் பிரவுன்/பிளாக் மற்றும் வைட்/பிளாக் டூயல் டோன் பெயின்ட் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. புதிய பெயின்ட் ஸ்கீம் டாப் என்ட் மாடலான SX வேரியன்ட் இல் வழங்கப்படுகிறது.
இதுதவிர புதிய ஹூன்டாய் i20 ஆக்டிவ் மாடலில் புதிய பூட் லிட் அப்லிக் மற்றும் பின்புற ஆக்டிவ் லேபெள் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த வடிவமைப்பு ஒரே மாதிரி காட்சியளித்தாலும், பாடி கிளாடிங் மற்றும் ரூஃப் ரெயில்கள் காருக்கு ரக்கட் தோற்றத்தை வழங்குகிறது.

உள்புறத்தில் புதிய i20 மாடலில் பெரிய 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்ற அம்சம் எலைட் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கேபின் சீட்டில் பாடி கலர்
அக்சென்ட்கள், டேஷ்போர்டு மற்றும் சீட் லெதரில் புதிய பேட்டன் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் என்ட் மாடலில் குழந்தைகளுக்கென ISOFIX வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஹூன்டாய் i20 ஆக்டிவ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் இன்ஜின் 82 பிஹெச்பி பவர், 114 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் டீசல் இன்ஜின் 89 பிஹெச்பி பவர், 220 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதன் பெட்ரோல் இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டீசல் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட ஹூன்டாய் i20 ஆக்டிவ் மாடலின் விலை மாற்றம் செய்யப்படவில்லை. i20 ஆக்டிவ் பேஸ் வேரியன்ட் விலை ரூ.6.99 லட்சம் மற்றும் டாப் என்ட் மாடல் விலை ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜீப் நிறுவனத்தின் கிராண்ட் கமாண்டர் ஃபிளாக்ஷிப் எஸ்யுவி கார் பீஜிங் நகரில் நடைபெற்று வரும் மோட்டார் விழாவில் வெளியிடப்பட்டுள்ளது.
பீஜிங்:
அமெரிக்க கார் தயாரிப்பு நிறுனமான ஜீப் சமீபத்தில் தனது ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடலான கிரான்ட கமாண்டர் மாடலை அறிமுகம் செய்தது. தற்சமயம் ஜீப் கிராண்ட் கமாண்டர் எஸ்யுவி சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சீன சந்தையில் மட்டும் விற்பனையாக இருக்கும் கிரான்ட் கமாண்டர், விரைவில் மற்ற சந்தைகளிலும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஜீப் கிராண்ட் கமாண்டர் ரேன்ஜ் ரோவர் மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
ஜீப் கிராண்ட் கமாண்டர் முந்தைய கிராண்ட் செரோக்கி மாடலை விட 50மில்லிமீட்டர் நீலமாகவும், 100 மில்லிமீட்டர் குறைவாகவும், 50 மில்லிமீட்டர் மெல்லியதாகவும் உள்ளது. எனினும் உள்புறம் அதிக இடவசதியை கொண்டுள்ளது. மூன்றடுக்கு இருக்கைகள் மொத்தம் ஏழு பேர் வசதியாக அமர்ந்து செல்ல முடியும்.

இதன் வடிவமைப்புகள் தற்போதைய கிராண்ட் செரோக்கி மாடலை தழுவியே உருவாக்கப்பட்டிருக்கிறது. எனினும் அதிகப்படியான ஆடம்பர வசதிகள் காருக்கு ஆடம்பர பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. முன்பக்கம் ஏழடுக்கு ஸ்லாட் கிரில், மெல்லிய ராப்-அரவுன்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது.
பின்புறம் கிராண்ட் கமாண்டர் மாடலில் மெல்லிய டெயில் லேம்ப், மிக நேர்த்தியான வளைவுகளை கொண்டுள்ளது. புதிய கிராண்ட் கமாண்டர் மாடலில் 2.0 லிட்டர், HEMI டர்போசர்ஜ்டு, 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சம் 230 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.
இதன் டிரான்ஸ்மிஷன் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 4-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. புதிய ஜீப் கிராண்ட் கமாண்டர் இந்திய வருகை குறித்து ஜீப் நிறுவனம் எவ்வித தகவலையும் இதுவரை வழங்கவில்லை.
அமெரிக்க கார் தயாரிப்பு நிறுனமான ஜீப் சமீபத்தில் தனது ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடலான கிரான்ட கமாண்டர் மாடலை அறிமுகம் செய்தது. தற்சமயம் ஜீப் கிராண்ட் கமாண்டர் எஸ்யுவி சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சீன சந்தையில் மட்டும் விற்பனையாக இருக்கும் கிரான்ட் கமாண்டர், விரைவில் மற்ற சந்தைகளிலும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஜீப் கிராண்ட் கமாண்டர் ரேன்ஜ் ரோவர் மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
ஜீப் கிராண்ட் கமாண்டர் முந்தைய கிராண்ட் செரோக்கி மாடலை விட 50மில்லிமீட்டர் நீலமாகவும், 100 மில்லிமீட்டர் குறைவாகவும், 50 மில்லிமீட்டர் மெல்லியதாகவும் உள்ளது. எனினும் உள்புறம் அதிக இடவசதியை கொண்டுள்ளது. மூன்றடுக்கு இருக்கைகள் மொத்தம் ஏழு பேர் வசதியாக அமர்ந்து செல்ல முடியும்.

இதன் வடிவமைப்புகள் தற்போதைய கிராண்ட் செரோக்கி மாடலை தழுவியே உருவாக்கப்பட்டிருக்கிறது. எனினும் அதிகப்படியான ஆடம்பர வசதிகள் காருக்கு ஆடம்பர பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. முன்பக்கம் ஏழடுக்கு ஸ்லாட் கிரில், மெல்லிய ராப்-அரவுன்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது.
பின்புறம் கிராண்ட் கமாண்டர் மாடலில் மெல்லிய டெயில் லேம்ப், மிக நேர்த்தியான வளைவுகளை கொண்டுள்ளது. புதிய கிராண்ட் கமாண்டர் மாடலில் 2.0 லிட்டர், HEMI டர்போசர்ஜ்டு, 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சம் 230 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.
இதன் டிரான்ஸ்மிஷன் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 4-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. புதிய ஜீப் கிராண்ட் கமாண்டர் இந்திய வருகை குறித்து ஜீப் நிறுவனம் எவ்வித தகவலையும் இதுவரை வழங்கவில்லை.
ஹோன்டா நிறுவனத்தின் புதிய 2018 அமேஸ் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் விலை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
ஹோன்டா இந்தியா நிறுவனத்தின் 2018 ஹோன்டா அமேஸ் மே 16-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் புதிய அமேஸ் காரினை முன்பதிவு செய்யும் முதல் 20,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சிறப்பு விலை நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 2018 ஹோன்டா அமேஸ் முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டு இருக்கும் நிலையில், வாடிக்கையாளர்கள் ரூ.21,000 மட்டும் செலுத்தி முன்பதிவு செய்யலாம். நாட்டின் அனைத்து ஹோன்டா விற்பனையாளர்களிடம் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், விநியோகம் மே மாத இறுதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமானது முதல் புதிய அமேஸ் மாடலுக்கான வரவேற்பு ஏகபோகமாக உள்ளது. புதிய காரின் விலையை அறிந்து கொள்ளாமல், முன்பதிவு செய்வோருக்கென முதல் 20,000 முன்பதிவுகளுக்கு மட்டும் விசேஷ விலை நிர்ணயம் செய்கிறோம் என ஹோன்டா விற்பனை மற்றும் விளம்ர பிரிவு மூத்த தலைவர் ராஜேஷ் கோயல் தெரிவித்திருக்கிறார்"

இந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் 2018 ஹோன்டா அமேஸ் அறிமுகம் செய்யப்பட்டது. ராஜஸ்தானில் உள்ள ஹோன்டாவின் டபுகாரா தயாரிப்பு ஆலையில் இருந்து முதற்கட்ட அமேஸ் மாடல்கள் வெளியிடப்பட இருக்கின்றன. இதே ஆலையில் ஹோன்டாவின் WR-V, சிட்டி, ஜாஸ் மற்றும் BR-V உள்ளிட்ட மாடல்களை தயாரிக்கிறது.
பழைய அமேஸ் மாடல் 2013-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் இந்த மாடல் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஆலையில் தயாரிக்கப்படுகிறது. 2018 ஹோன்டா அமேஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் வழங்கப்படுகின்றன.
இதன் பெட்ரோல் வேரியன்ட் 88 பிஹெச்பி பவர், 109 என்எம் டார்கியூ, டீசல் இன்ஜின் 100 பிஹெச்பி பவர், 200என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் இரண்டு இன்ஜின்களும் புதிய 5-ஸ்பீு மேனுநவல், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய காம்பேக்ட் யூடிலிட்டி வாகனத்தின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்தியாவில் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காம்பேக்ட் யூடிலிட்டி வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஃபிகோ ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ல புதிய ஃப்ரீஸ்டைல் ஃபிகோ மற்றும் இகோஸ்போர்ட் மாடல்களுக்கு மத்தியில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஆம்பியன்ட், டிரென்ட், டைட்டானியம் மற்றும் டைட்டானியம் பிளஸ் என நான்கு வித வேரியன்ட்களில் கிடைக்கிறது.
ஃப்ரீஸ்டைல் மாடலில் ஃபோர்டின் புத்தம் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதே டிராகன் சீரிஸ் இன்ஜின் ஃபிகோ மற்றும் ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டீல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இவை 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
செயல்திறனை பொருத்த வரை இந்த இன்ஜின் 1194சிசி பெட்ரோல் மோட்டார் 95 பிஹெச்பி @6500 ஆர்பிஎம், 120 என்எம் டார்கியூ @4200 ஆர்பிஎம், 1498சிசி மோட்டார் 99 பிஹெச்பி @3750 ஆர்பிஎம், 215 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதன் ஆட்டோமேடிக் வேரியன்ட் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் மாடலில் கீலெஸ் என்ட்ரி, ஒன்-டச்-டவுன் முன்பக்க கண்ணாடிகள், பின்புற பார்க்கிங் சென்சார் மற்றும் கேமராக்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட் அம்சம், ஓட்டுனர் இருக்கை உயரத்தை மாற்றும் வசதி, ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், ஃபோர்டு மைகீ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ஃப்ரீஸ்டைல் மாடலில் ஏபிஎஸ் மற்றும் இபிடி, முன்பக்கம் டூயல் ஏர்பேக், டாப் என்ட் மாடலில் ஆறு ஏர்பேக் வழங்கப்படுகிறது.
வடிவமைப்பை பொருத்த வரை ஃப்ரீஸ்டைல் முகப்பு பார்க்க ஃபிகோ போன்றே காட்சியளிக்கிறது. எனினும் புதிய கிரில் வித்தியாச தோற்றம் கொண்டிருக்கிறது. இருபுறங்களிலும் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட், காரை சுற்றி கிளாஸ்டிக் கிளாடிங், வீல் ஆர்ச், எஸ்யுவி போன்ற அனுபவத்தை வழங்கும்.
இத்துடன் புதிய மாடலில் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. எட்டு வேரியன்ட்களில் கிடைக்கும் ஃப்ரீஸ்டைல் உள்புறம் ஃபோர்டு இகோஸ்போர்ட் போன்று காட்சியளிக்கிறது. இதன் டைட்டானியம் வேரியன்ட் 6.5 இன்ச் தொடுதிரை வசதி மற்றும் ஃபோர்டு சின்க் 3.0 வசதி கொண்டுள்ளது. இகு ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டியை வழங்குகிறது.
இந்தியாவில் புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஆம்பியன்ட் பெட்ரோல் மாடல் விலை ரூ.5.09 லட்சம், டீசல் வேரியன்ட் விலை ரூ.6.09 லட்சம், ஃப்ரீஸ்டைல் டிரென்ட் பெட்ரோல் விலை ரூ.5.99 லட்சம், டீசல் மாடல் விலை ரூ.6.99 லட்சம், ஃப்ரீஸ்டைல் டைட்டானியம் பெட்ரோல் மாடல் விலை ரூ.6.39 லட்சம், டீசல் மாடல் விலை ரூ.7.35 லட்சம், ஃப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் பெட்ரோல் மாடல் விலை ரூ.6.94 லட்சம், டீசல் மாடல் விலை ரூ.7.89 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






