என் மலர்

  செய்திகள்

  ஹூன்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது
  X

  ஹூன்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹூன்டாய் நிறுவனத்தின் ஃபேஸ்லெஃப்ட் 2018 கிரெட்டா முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
  புதுடெல்லி:

  இந்தியாவில் ஹூன்டாய் கிரெட்டா 2018 ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மும்பையில் உள்ள விற்பனையாளர் முன்பதிவுகளை துவங்கியிருப்பதாக ஓவர்டிரைவ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்பதிவு குறித்த தகவல்களை ஹூன்டாய் இந்தியா மறுத்திருக்கும் நிலையில், புதிய காருக்கான முன்பதிவு கட்டணமாக ரூ.25,000 நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக விற்பனையாளர் தெரிவித்திருக்கிறார். விநியோகம் மே மாத இறுதியிலோ அல்லது ஜூன் மாத துவக்கத்திலோ துவங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூன்டாய் கிரெட்டா தற்போதைய மாடலை விட அதிக மாற்றங்களை கொண்டிருக்கும் என்றும் இது பிரேசில் நாட்டு கிரெட்டா ஸ்போர்ட் மாடல் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய கிரெட்டா மாடலில் பெரிய க்ரோம் ட்ரிம் செய்யப்பட்ட ஹெக்சாகோனல் முன்பக்க கிரில் கொண்டிருக்கும்.

  முன்பக்க பம்ப்பர் பெரிய ஃபாக் லேம்ப்பில் ப்ரோனவுன்ஸ்டு சின் முன்பக்க கிரிலில் இணையும் படி வடிவமைக்கப்படுகிறது. பின்புற பம்ப்பர்களும் மாற்றப்பட்டு டெயில்லேம்ப்கள் ட்வீக் செய்யப்பட்டுள்ளன. புதிய 17 இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் தற்போதைய வடிவமைப்புக்கு மாற்றாக இருக்கும்.  உள்புறத்தில் அதிக மாற்றங்கள் இன்றி் முந்தைய மாடலை விட மென்மையாகவும், கிரே-தீம் செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதே போன்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஹூன்டாய் புதிய எலைட் i20 மாடலிலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  ஹூன்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.4 டீசல் (90PS, 220 Nm), 1.6 டீசல் (128PS, 220 Nm) மற்றும் 1.6 பெட்ரோல் (123PS, 151 Nm) இன்ஜின் ஆப்ஷன்கள் கொண்டிருக்கும். இந்த இன்ஜின்கள் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களை கொண்டுள்ளன.

  ஹூன்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக கிரெட்டா இருக்கிறது. அறிமுகமான மூன்று ஆண்டுகளில் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் புதிய மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என ஹூன்டாய் எதிர்பார்க்கிறது. 

  தற்சமயம் ஹூன்டாய் கிரெட்டா மாடலுக்கு ஜீப் காம்பஸ், ரெனால்ட் கேப்டூர், டாடா ஹெக்சா மற்றும் மஹேந்திரா எக்ஸ்யுவி500 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் மேலும் புதிய கார்கள் இந்த பட்டியலில் இணைந்து கொள்ளும் என கூறப்படுகிறது.
  Next Story
  ×