என் மலர்
கார்
ஹோன்டா நிறுவனத்தின் இரண்டாவது தலைமுறை காம்பேக்ட் செடான் மாடலின் இந்திய வெளியீட்டு தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
ஹோன்டா நிறுவனத்தின் இரண்டாவது தலைமுறை காம்பேக்ட் செடான் மாடலான அமேஸ் மே 16-ம் தேதி இந்தியாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமேஸ் முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான கட்டணம் ரூ.21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹோன்டா அமேஸ் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டுள்ளது. தற்போதைய மாடலை விட பல்வேறு அம்சங்கள் மாற்றப்பட்டுள்ளதால் புதிய மாடல் அதிக பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது.
வெளிப்புறங்களில் இதன் வடிவமைப்பு ஹோன்டா சிட்டி போன்று காட்சியளிக்கிறது. கூர்மையான வளைவுகள், பிரம்மாண்ட வடிவமைப்பு மற்றும் புதிய க்ரோம் கிரில் மற்றும் ஹோன்டா லோகோ நடுவில் பொருத்தப்பட்டுள்ளது. புதிய ஹெட்லேம்ப்களில் எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமேஸ் மாடலில் 15 இன்ச் அலாய் வீல், சி வடிவம் கொண்ட எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புற பூட் லிட் ஸ்பாயிலர் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய மாடலை விட புதிய அமேஸ் அதிக அகலமாக உருவாக்கப்பட்டு, உள்புறம் அதிக இடவசதியை கொண்டுள்ளது.
உள்புறம் டூயல்-டோன் டேஷ்போர்டு பெய்க் மற்றும் பிளாக் தீம் செய்யப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்த வரை தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கண்ட்ரோலில் டச் பட்டன்கள், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, ஸ்டார்ட், ஸ்டாப் பட்டன், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது.
2018 ஹோன்டா அமேஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 88 பிஹெச்பி பவர், 109 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் இன்ஜின் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இந்த இன்ஜின்கள் 5-ஸ்பீடு மேனுவல்ஸ, 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
ஃபோர்டு நிறுவனத்தின் ஃப்ரீஸ்டைல் காம்பேக்ட் எஸ்யுவி இந்தியாவில் அதிகாரப்பூர்வ வெளியீடு மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யுவி இந்தியாவில் ஏப்ரல் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இதன் விலை அறிமுக தினத்தன்று அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டு இருக்கும் நிலையில், இதன் விநியோகம் மே மாத வாக்கில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஏப்ரல் 18-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த கார் ஏப்ரல் 26-ம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வடிவமைப்பை பொருத்த வரை ஃப்ரீஸ்டைல் முகப்பு பார்க்க ஃபிகோ போன்றே காட்சியளிக்கிறது. எனினும் புதிய கிரில் வித்தியாச தோற்றம் கொண்டிருக்கிறது. இருபுறங்களிலும் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட், காரை சுற்றி கிளாஸ்டிக் கிளாடிங், வீல் ஆர்ச், எஸ்யுவி போன்ற அனுபவத்தை வழங்கும்.
இத்துடன் புதிய மாடலில் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. எட்டு வேரியன்ட்களில் கிடைக்கும் ஃப்ரீஸ்டைல் உள்புறம் ஃபோர்டு இகோஸ்போர்ட் போன்று காட்சியளிக்கிறது. இதன் டைட்டானியம் வேரியன்ட் 6.5 இன்ச் தொடுதிரை வசதி மற்றும் ஃபோர்டு சின்க் 3.0 வசதி கொண்டுள்ளது. இகு ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டியை வழங்குகிறது.

ஃப்ரீஸ்டைல் மாடலில் ஃபோர்டின் புத்தம் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதே டிராகன் சீரிஸ் இன்ஜின் ஃபிகோ மற்றும் ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டீல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இவை 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
செயல்திறனை பொருத்த வரை இந்த இன்ஜின் 1194சிசி பெட்ரோல் மோட்டார் 95 பிஹெச்பி @6500 ஆர்பிஎம், 120 என்எம் டார்கியூ @4200 ஆர்பிஎம், 1498சிசி மோட்டார் 99 பிஹெச்பி @3750 ஆர்பிஎம், 215 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதன் ஆட்டோமேடிக் வேரியன்ட் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் மாடலில் கீலெஸ் என்ட்ரி, ஒன்-டச்-டவுன் முன்பக்க கண்ணாடிகள், பின்புற பார்க்கிங் சென்சார் மற்றும் கேமராக்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட் அம்சம், ஓட்டுனர் இருக்கை உயரத்தை மாற்றும் வசதி, ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், ஃபோர்டு மைகீ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ஃப்ரீஸ்டைல் மாடலில் ஏபிஎஸ் மற்றும் இபிடி, முன்பக்கம் டூயல் ஏர்பேக், டாப் என்ட் மாடலில் ஆறு ஏர்பேக் வழங்கப்படுகிறது.
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யுவி இந்தியாவில் ஏப்ரல் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இதன் விலை அறிமுக தினத்தன்று அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டு இருக்கும் நிலையில், இதன் விநியோகம் மே மாத வாக்கில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஏப்ரல் 18-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த கார் ஏப்ரல் 26-ம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வடிவமைப்பை பொருத்த வரை ஃப்ரீஸ்டைல் முகப்பு பார்க்க ஃபிகோ போன்றே காட்சியளிக்கிறது. எனினும் புதிய கிரில் வித்தியாச தோற்றம் கொண்டிருக்கிறது. இருபுறங்களிலும் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட், காரை சுற்றி கிளாஸ்டிக் கிளாடிங், வீல் ஆர்ச், எஸ்யுவி போன்ற அனுபவத்தை வழங்கும்.
இத்துடன் புதிய மாடலில் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. எட்டு வேரியன்ட்களில் கிடைக்கும் ஃப்ரீஸ்டைல் உள்புறம் ஃபோர்டு இகோஸ்போர்ட் போன்று காட்சியளிக்கிறது. இதன் டைட்டானியம் வேரியன்ட் 6.5 இன்ச் தொடுதிரை வசதி மற்றும் ஃபோர்டு சின்க் 3.0 வசதி கொண்டுள்ளது. இகு ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டியை வழங்குகிறது.

ஃப்ரீஸ்டைல் மாடலில் ஃபோர்டின் புத்தம் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதே டிராகன் சீரிஸ் இன்ஜின் ஃபிகோ மற்றும் ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டீல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இவை 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
செயல்திறனை பொருத்த வரை இந்த இன்ஜின் 1194சிசி பெட்ரோல் மோட்டார் 95 பிஹெச்பி @6500 ஆர்பிஎம், 120 என்எம் டார்கியூ @4200 ஆர்பிஎம், 1498சிசி மோட்டார் 99 பிஹெச்பி @3750 ஆர்பிஎம், 215 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதன் ஆட்டோமேடிக் வேரியன்ட் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் மாடலில் கீலெஸ் என்ட்ரி, ஒன்-டச்-டவுன் முன்பக்க கண்ணாடிகள், பின்புற பார்க்கிங் சென்சார் மற்றும் கேமராக்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட் அம்சம், ஓட்டுனர் இருக்கை உயரத்தை மாற்றும் வசதி, ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், ஃபோர்டு மைகீ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ஃப்ரீஸ்டைல் மாடலில் ஏபிஎஸ் மற்றும் இபிடி, முன்பக்கம் டூயல் ஏர்பேக், டாப் என்ட் மாடலில் ஆறு ஏர்பேக் வழங்கப்படுகிறது.
புதிய தலைமுறை மாருதி எர்டிகா 2018 இந்தோனேஷிய சர்வதேச மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தோனேஷியா:
2018 இந்தோனேஷிய சர்வதேச மோட்டார் விழாவில் புதிய தலைமுறை மாருதி எர்டிகா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது இந்த காரில் முற்றிலும் புதிய வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை எர்டிகா மாடல் தற்போதைய மாடலை விட 99 மில்லிமீட்டர் நீளமாகவும், 40 மில்லிமீட்டர் அகலமாகவும், 5 மில்லிமீட்டர் அளவு உயரமாக இருக்கிறது. புதிய எர்டிகா சுசுகியின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்ம்-ஐ தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகியின் தற்போதைய ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் இக்னிஸ் போன்ற மாடல்களும் இதே பிளாட்ஃபார்ம்-ஐ தழுவி உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
புதிய காரின் முன்பக்கம் க்ரோம்-ஸ்டெட் செய்யப்பட்ட கிரில், ஸ்டிரெட்ச் அவுட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப், புதிய முன்பக்க பம்ப்பர், முக்கோன வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப் மற்றும் பின்புறம் புதிய வடிவமைப்பு கொண்ட டெயில்கேட் மற்றும் L-வடிவம் கொண்ட டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளது.
உள்புறம் ஃபாக்ஸ் மரத்தாலான இன்செர்ட், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயியன்மென்ட் சிஸ்டம், ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஏசி வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய மாடலின் பூட் கொள்ளளவு 18 லிட்டர்கள் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட அதிக இடவசதியை வழங்குகிறது.

மற்ற அம்சங்களை பொருத்த வரை தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூடூத் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், புதிய லெதர்-ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், டில்ட் வசதி, புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ் மற்றும் இபிடி, ISOFIX, எலெக்ட்ரானிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் எர்டிகா மாடலில் 1.5 லிட்டர் K15B பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜின் 102 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த இன்ஜின் 5 அல்லது 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இந்த கார் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின், 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
மஹேந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 எக்ஸ்யுவி500 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
புதுடெல்லி:
மஹேந்திரா நிறுவனம் 2018 எக்ஸ்யுவி500 ஃபேஸ்லிஃப்ட் மாடலினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்யுவி500 மாடலின் இரண்டாவது ஃபேஸ்லிஃப்ட் மாடல் இது ஆகும்.
எக்ஸ்யுவி500 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறத்தில் முன்பக்கம் பெரிய கிரில், மேம்படுத்தப்பட்ட ஹெட்லைட், ப்ரோஜெக்டர்கள் மற்றும் டிஆர்எல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பம்ப்பர் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்ட ஃபாக்ஸ் பேஷ் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் செங்குத்தாக பொருத்தப்பட்ட டெயில் லைட்களும், புதிய வடிவமைப்பு கொண்ட டெயில்கேட் காரின் தோற்றத்தை வித்தியாசப்படுத்துகிறது.
புதிய எக்ஸ்யுவி500 ஃபேஸ்லிஃப்ட் மிஸ்டிக் காப்பர் மற்றும் க்ரிம்சன் ரெட் என இருவித நிறங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் கேபின் மேம்படுத்தப்பட்டு புதிய டான் லெதர் சீட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அதிகம் மாற்றப்படவில்லை என்றாலும் புதிய மாடலில் ஸ்மார்ட்வாட்ச் ஆப் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இத்துடன் 2.2 லிட்டர் இன்ஜின் 155 பிஎஸ் மற்றும் 360 என்எம் டார்கியூ 1750-2800 ஆர்பிஎம் செயல்திறன் கொண்டுள்ளது. இந்த மோட்டார் ஆறாம் தலைமுறை eVGT தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதன் மைலேஜ் அளவு ARAI மூலம் சான்றளிக்கப்பட்டு லிட்டருக்கு 15.4 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் பிரீமியம் மாடலின் அம்ங்கள் என்ற வகையில், பேஸ் வேரியன்ட் மாடலில் 140 பிஎஸ் வழங்கப்படுகிறது. எனினும் இதன் 2.2 லிட்டர் பெட்ரோல் ஆப்ஷன் மாற்றப்படவில்லை.
இந்தியாவில் 2018 மஹேந்திரா எக்ஸ்யுவி500 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ.12.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், மும்பை) முதல் துவங்குகிறது. புதிய அப்டேட் மூலம் மஹேந்திரா எக்ஸ்யுவி500 இந்தியாவில் ஜீப் காம்பஸ், ஹூன்டாய் க்ரெட்டா மற்றும் ரெனால்ட் கேப்டூர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியாவில் சற்றே குறைந்த விலையில் புதிய கார்களை வெளியிட இருக்கிறது.
புதுடெல்லி:
ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியாவில் புதிய கார்களை வெளியிட இருக்கிறது. புதிய ஆடம்பர கார்களை ஆடி ஏ3 மற்றும் கியூ3 மாடல்களை விட குறைந்த விலையில் நிர்ணயம் செய்ய ஆடி திட்டமிட்டுள்ளது.
ஆடி கியூ2 கிராஸ்ஓவர் என்ற மாடல் இந்தியாவில் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வெளியிடப்பட இருக்கிறது. இது மட்டுமின்றி எஸ்யுவி, செடான் மற்றும் ஹேட்ச்பேக் மாடல்களை வெளியிட ஆடி திட்டமிட்டுள்ளது.
"எதிர்கால திட்டங்களை வகுப்பதில் கவனம் செலுத்தியுள்ளேன். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆடி ஓ3 மற்றும் கியூ3 மாடல்களை விட சிறிய மாடல்களை அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் வெளியிட இருக்கிறோம்." என ஆடி இந்தியா தலைவர் ரஹில் அன்சாரி தெரிவித்துள்ளார்.

கோப்பு படம்
இந்தியாவில் முன்னணி இடத்தை பிடிக்க ஆடி நிறுவனம் ரூ.22 முதல் ரூ.25 லட்சம் விலையில் புதிய கார்களை ஆடி நிறுவனம் வெளியிடலாம் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இரட்டை இலக்க வாகனங்களை ஆடி வெளியிட இருப்பதாக அன்சாரி மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய ஆடி கியூ2 கிராஸ்ஓவர் மாடல் 4-மீட்டர் அளவில் சிங்கிள்-ஃபிரேம் ஆக்டாகோனல் கிரில் கொண்டிருக்கிறது. இதன் வெளிப்புற வடிவமைப்பு நகரங்களில் பயணிக்க மிகவும் எளிமையானதாக இருக்கும். இதன் உள்புறத்தில் ஆடியின் விர்ச்சுவல் காக்பிட் அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஆடி கியூ2 மாடலில் 2-லிட்டர் டீசல் இன்ஜின் இரண்டு வித பவர் அவுட்புட் வேரியண்ட்களில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் இதே மாடலின் பெட்ரோல் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய மாடல்களில் 7-ஸ்பீடு எஸ்-டிரானிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் அமியோ பேஸ் ஸ்பெஷல் எடிஷன் காரினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
புதுடெல்லி:
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் போலோ பேஸ் மற்றும் வென்டோ ஸ்போர்ட் எடிஷன் மாடல்களை கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில், அமியோ பேஸ் ஸ்பெஷல் எடிஷன் காரினை தற்சமயம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஃபோக்ஸ்வேகன் வலைத்தளத்தின் படி அமியோ பேஸ் எடிஷன் டாப்-எண்ட் மாடல் என குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிப்புறம் மற்றும் உள்புற்தில் சில அம்சங்களை மேம்படுத்தி புதிய அமியோ பேஸ் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் புதிய மாடலில் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட பின்புற ஸ்பாயிலர், பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட வெளிப்புற பக்காவாட்டு கண்ணாடிகள் (ORVM), புதிய அலாய் வீல் டிசைன் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில், அமியோ பேஸ் மாடலில் கிரில் மற்றும் பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. இதன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் மிரர்லின்க், ஆப்பிள் கார் பிளே அல்லது ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படவில்லை.

இதனால் வழக்கமான ஆடியோ சிஸ்டம் ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் ஆக்ஸ்-இன் கொண்டுள்ளது. இதேபோன்று ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரெயின் சென்சிங் வைப்பர்கள் வழங்கப்படவில்லை. எனினும் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமியோ பேஸ் எடிஷனில் 1.5 லிட்டர் TDI டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 108 பிஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்கியூ கொண்டுள்ளது. இந்த மோட்டார் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது DSG ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
இத்துடன் புதிய 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போலோ மாடலில் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய 1.0 லிட்டர் இன்ஜின் 75 பிஹெச்பி பவர், 95 என்எம் டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
வழக்கமான ஃபோக்ஸ்வேகன் அமியோ விலை ரூ.7.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பேஸ் எடிஷன் விலை ரூ.6.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் அமியோ பேஸ் எடிஷன் ஃபோர்டு ஆஸ்பையர், மாருதி சுசுகி டிசையர், டாடா டிகோர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனையாகும் பயனர் வாகனங்களின் டாப் 5 இடங்களை மாருதி சுசுகி பிடித்திருக்கிறது.
புதுடெல்லி:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2017-18 நிதியாண்டில் விற்பனை செய்யப்படும் பயனர் வாகனங்களில் மாருதி சுசுகி டாப் 5 இடங்களை பிடித்திருக்கிறது.
இந்த பட்டியலில் மாருதி சுசுகி ஆல்டோ 2.5 லட்சம் யூனிட்களும், டிசையர் 2.4 லட்சம் யூனிட்கள், பலேனோ 1.9 லட்சம் யூனிட்கள், மாருதி ஸ்விஃப்ட் சுமார் 1.8 லட்சம், வேகன் ஆர் 1.68 லட்சம் யூனிட்கள் வி்ற்பனையாகி இருக்கின்றன.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய அளவில் முன்னணி நிறுவனமாகவும், உலகளவில் ஏழாவது இடத்திலும் இருக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டாப் 10 கார்களில் மாருதி நிறுவன மாடல்கள் கட்டாயம் இடம்பெறுவது வாடிக்கையான ஒன்று தான். அந்த வகையில் சமீப காலமாக ஆல்டோ மற்றும் டிசையர் மாடல்களின் விற்பனை முந்தைய காலத்தை விட குறைந்துள்ளது.

2016-17 நிதியாண்டு வாக்கில் சுமார் 40,000 மாருதி டிசையர் யூனிட்கள் விற்பனையாகி இருந்த நிலையில், தற்சமயம் வெறும் 18,415 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. ஆல்டோ விற்பனை 7% வளர்ச்சியை பதிவு செய்திருக்கும் நிலையில் டிசையர் விற்பனை 20% வளர்ச்சியை பசதிவு செய்துள்ளது.
முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது வேகன் ஆர் விற்பனை 1.72 லட்சம் யூனிட்களில் இருந்து 1.68 லட்சமாக இருக்கிறது. விற்பனை சரிவுக்கு டாடா, ஹூன்டாய் மற்றும் ஹோன்டா நிறுவனங்களின் போட்டியே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தற்போதைய விற்பனையுடன் ஒப்பிடும் போது மாருதி பலேனோ விற்பனை 58% அதிகரித்துள்ளது.
இது ஒரே ஆண்டில் குறிப்பிட்ட மாடல் பதிவு செய்திருக்கும் அதிகபட்ச வளர்ச்சி என கூறப்படுகிறது. இரண்டாவது இடத்தில் மாருதி டிசையர் இருக்கிறது. ஸ்விஃப்ட் விற்பனை 5.4% மற்றும் வேகன் ஆர் விற்பனை 2% வரை குறைந்துள்ளது. டாப் 5 இடங்களை விட மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா மற்றும் செலரியோ உள்ளிட்ட மாடல்கள் டாப் 10 இடங்களில் ஒன்றாக இடம்பிடித்திருக்கிறது.
மஹேந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் பொலேரோ விற்பனையில் புதிய மைல்கல் எட்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனம் பொலேரோ மாடலை அறிமுகம் செய்தது முதல் இதுவரை சுமார் பத்து லட்சம் யூனிட்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி டாப் 10 பயணாளர் வாகனங்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பொலேரோ விற்பனை 23% அளவு வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. அந்த வகையில் பொலேரோ அந்நிறுவனத்தின் வெற்றி பெற்ற மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்திய சந்தையில் மீண்டும் நல்ல வரவேற்பை பொலேரோ பெற்றிருக்கிறது.
மஹேந்திரா நிறுவனம் பொலேரோ பவர் பிளஸ் மாடலினை 2016-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய மாடல் அன்று முதல் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. பொலேரோ பவர் பிளஸ் மாடலில் புதிய mHawkD70 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் முந்தைய மாடலில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஜினை விட 13 சதவிகிதம் கூடுதல் செயல்திறன் மற்றும் ஐந்து சதவிகித்ம வரை எரிபொருள் சிக்கனம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. mHawkD70 இன்ஜின் 1.5 லிட்டர், 3 சிலிண்டர் டீசல் இன்ஜின் ஆகும். இது 70 ஹெச்.பி. பவர் மற்றும் 195 என்எம் டார்கியூ கொண்டிருக்கிறது.
இக்குசன் பொலேரோ பவர் பிளஸ் மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிரைவர் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (DIS), வாய்ஸ் மெசேஜிங் சிஸ்டம், எரிபொருள் மிச்சப்படுத்தும் மைக்ரோ ஹைப்ரிட் தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.
ரெனால்ட் இந்தியா விற்பனையாளர்கள் கேப்டூர் எஸ்யுவி மாடலின் விலையில் இருந்து சுமார் ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி வழங்கி வருகின்றன.
புதுடெல்லி:
ரெனால்ட் இந்தியா விற்பனையாளர்கள் சமீபத்தில் அறிமுகம் செய்த கேப்டூர் எஸ்யுவி மாடலின் விலையில் இருந்து ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி வழங்கி வருகின்றன.
2017-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கேப்டூர் மாடல்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஸ்டாக் இருக்கும் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. முந்தைய ஆண்டு மாடல்களின் விற்பனையை அதிகரிக்க இவ்வாறான சலுகைகளை வழங்குகின்றன. பயனர் மத்தியில் இந்த கார்களை வாங்குவது அதிகப்படியான பணத்தை சேமிக்க வழி செய்யும்.
ரெனால்ட் கேப்டூர் எஸ்யுவி M10 தளத்தை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. 4329 மில்லிமீட்டர் நீளமாகவும், 1813 மில்லிமீட்டர் அகலமாகவும், 1613 மில்லிமீட்டர் உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2673 மில்லிமீட்டர் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 210 மில்லிமீட்டராக உள்ளது.

இதன் பக்கவாட்டுகளில் உறுதியான வெய்ஸ்ட்லைன் மற்றும் உயர்த்தப்பட்ட ஸ்டான்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் எல்இடி டெயில் லேம்ப் மற்றும் சேடின் ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்கிட் பிளேட் மற்றும் கிலீன் டெயில்கேட் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கேப்டூர் இன்டீரியர் அம்சங்களை பொருத்த வரை டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. ரெனால்ட் கேப்டூர் கிராஸ்ஓவர் மாடலில் 1.5 லிட்டர் K9 டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 110bhp செயல்திறன் கொண்டுள்ளது. இதே இன்ஜின் ரெனால்ட் டஸ்டர், நிசான் டெரானோ போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எல்இடி ஹெட்லேம்ப், டேடைம் ரன்னிங் லேம்ப், ஆடி மாடல்களை போன்ற டைனமிக் டர்ன் இன்டிகேட்டர், கீலெஸ் என்ட்ரி அம்சங்களை வழங்க ஸ்மார்ட் அக்சஸ் கார்டு, 17.0 இன்ச் அலாய் வீல், 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் மல்டிமீடியா ஸ்கிரீன், ப்ளூடூத், யுஎஸ்பி, மேப்ஸ் மற்றும் நேவிகேஷன் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ABS, EBD பிரேக் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
ஜீப் இந்தியா சமீபத்தில் அறிமுகம் செய்திருந்த காம்பஸ் மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் சாதனையை படைத்திருக்கிறது.
புதுடெல்லி:
ஜீப் இந்தியா கடந்த ஆண்டு அறிமுகம் செய்தக காம்பஸ் இதுவரை மட்டும் 20,000 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. புதிய காம்பஸ் எஸ்யுவி இந்தியாவில் அதிக விற்பனையாகும் அமெரிக்க மாடலாக இருக்கிறது.
இதுமட்டுமின்றி தயாரிப்புகளில் அந்நிறுவனம் 25,000 யூனிட்களை கடந்திருக்கிறது. இதன் 5000 யூனிட்கள் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. காம்பஸ் மாடலில் உள்ள 65 சதவிகித உள்ளூர் பாகங்களை கொண்டுள்ளதால் இந்திய விற்பனையில் பலத்த போட்டியாக இருக்கிறது.
ஜீப் காம்பஸ் நிறுவனத்தின் ரன்சஞ்கோன் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்படுகிறது. இந்தியா முழுக்க 47 நகரங்களில் 50 விற்பனை மையங்களில் ஜீப் காம்பஸ் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மாடலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தயாரிப்பு பணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன.

ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. இரண்டு வித இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 1.4 லிட்டர் மல்டி-ஏர் டர்போ மோட்டார் 160 bhp செயல்திறன் மற்றும் 250 Nm பீக் டார்கியூ, 6-ஸ்பீடு மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேடிக் கொண்டுள்ளது.
டீசல் பவர் 2.0 லிட்டர் மல்டிஜெட் ஆயில் பர்னர் 170 bhp மற்றும் 350 Nm பீக் டார்கியூ, 6-ஸ்பீடு மேனுவல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் இன்ஜின் 2WD, டீசல் இன்ஜின் 2WD மற்றும் 4WD ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களும் BS-VI வகை எமிஷன் கொண்டுள்ளது.
ஜீப் இந்தியா காம்பஸ் எஸ்.யு.வி. மாடலுக்கு 3 ஆண்டுகள் அதாவது 1,00,000 கிலோமீட்டர் வாரண்டி, மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும் FCA மோபர் கேர் மற்றும் 24x7 ரோடுசைடு அசிஸ்டன்ஸ் வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு ஒரு சர்வீஸ் செய்ய ரூ.15,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஃபோர்டு இந்தியா நிறுவனம் விரைவில் தனது ஃப்ரீஸ்டைல் மாடலை இந்தியாவில் வெளியிட இருக்கிறது.
புதுடெல்லி:
ஃபோர்டு இந்தியா நிறுவனம் விரைவில் ஃப்ரீஸ்டைல் மாடல் காரினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் இந்தியாவின் முதல் காம்பேக்ட் யூடிலிட்டி வாகனமாக (CUV) இருக்கும். புதிய ஃப்ரீஸ்டைல் மாடலுக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் லைவ் செய்யப்பட்டுள்ளது.
ஃப்ரீஸ்டைல் மாடலின் வலைத்தளத்தில் புதிய வாகனத்தின் அம்சங்கள், வேரியண்ட், உதிரி பாகங்கள் மற்றும் மைலேஜ் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது.
ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய டிராகன் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் 94.6 பிஹெச்பி பவர் மற்றும் 120 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இந்த மாடல் லிட்டருக்கு 19 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் இன்ஜின் 98.6 பிஹெச்பி பவர் மற்றும் 215 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் லிட்டருக்கு 24.4 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு இன்ஜின்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

உள்புறத்தில் ஃப்ரீஸ்டைல் மாடலில் 6.5 இன்ச் சின்க் 3 தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதியை வழங்குகிறது. ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் மாடல் நான்கு வித ட்ரிம்கள்: ஆம்பியென்ட், டிரெண்ட், டைட்டானியம், டைட்டானியம் பிளஸ் கிடைக்கிறது.
பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் டூயல் ஏர்பேக்ஸ், ஏபிஸ், இபிடி, இன்ஜின் இம்மொபோலைசர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், கீலெஸ் என்ட்ரி, அப்ரோச் சென்சார்கள், பெரிமீட்டர் தெஃப்ட் அலாரம், சீட்-பெல்ட் ரிமைன்டர், ஆட்டோமேடிக் ரீலாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஆம்பியென்ட் ட்ரிம் தவிர மற்ற மாடல்களில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா வழங்கப்படுகிறது. இதன் டாப்-எண்ட் மாடலில் ஆக்டிவ் ரோல்-ஓவர் ப்ரோடெக்ஷன், பக்கவாட்டுகளில் கர்டைன் ஏர்பேக் மற்றும் எமர்ஜென்சி அசிஸ்டண்ஸ் உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகிறது.
ரேன்ஜ் ரோவர் எவோக் கன்வெர்டிபிள் மாடல் இந்தியாவில் வெளியாகியுள்ளது. புதிய மாடலின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்தியாவின் முதல் ஆடம்பர கன்வெர்டிபிள் எஸ்.யு.வி. மாடல் வெளியிடப்பட்டது.
2015 லாஸ் ஏஞ்சல்ஸ் நிறுவன மோட்டார் விழாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட ரேன்ஜ் ரோவர் எவோக் கன்வெர்டிபிள் மாடல் மார்ச் 27-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய கன்வெர்டிபிள் மாடல் 20 நொடிகளில் அதிகபட்சம் மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கூரை திறக்கும் வசதி கொண்டிருக்கிறது.
இதன் உள்புறம் மென்மையான லெதர் இருக்கைகள், அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட், நேவிகேஷன் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற வசதிகள் இடம்பெறுகிறது.
இதன் ரூஃப் உள்புறத்தில் அகௌஸ்டிக் லைனிங் செய்யப்பட்டு இருப்பதால் வெளிப்புற சத்தம் மற்றும் கேபின் இன்சுலேஷன் உள்ளிட்டவை வெகுவாக குறைக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் மோனோகியூ சேசிஸ் வழங்கப்பட்டு இருப்பதால் வாகனம் ரோல்-ஓவர் ஆகும் போது, பாப்-அப் ரோல்-பார் சிஸ்டம் தானாக வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனோகியூ சேசிஸ் அம்சம் கன்வெர்டிபிள் மாடலின் ரூஃப் திறந்திருக்கும் போதும் உச்சக்கட்ட பாதுகாப்பை வழங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. எவோக் கன்வெர்டிபிள் மாடலில் புதிய ரேன்ஜ் ரோவர் எவோக் மாடலில் 1998சிசி, 4-சிலிண்டர் இன்ஜின் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் 237 பி.ஹெச்.பி. பவர். 340 என்.எம். டார்கியூ மற்றும் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. ரேன்ஜ் ரோவர் எவோக் கன்வெர்டிபிள் மாடலில் 4-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. இந்தியாவில் ரேன்ஜ் ரோவர் எவோக் கன்வெர்டிபிள் விலை ரூ.69.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






