என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய விற்பனையில் டாப் 5 இடங்களில் மாருதி சுசுகி
    X

    இந்திய விற்பனையில் டாப் 5 இடங்களில் மாருதி சுசுகி

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனையாகும் பயனர் வாகனங்களின் டாப் 5 இடங்களை மாருதி சுசுகி பிடித்திருக்கிறது.
    புதுடெல்லி:

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2017-18 நிதியாண்டில் விற்பனை செய்யப்படும் பயனர் வாகனங்களில் மாருதி சுசுகி டாப் 5 இடங்களை பிடித்திருக்கிறது.

    இந்த பட்டியலில் மாருதி சுசுகி ஆல்டோ 2.5 லட்சம் யூனிட்களும், டிசையர் 2.4 லட்சம் யூனிட்கள், பலேனோ 1.9 லட்சம் யூனிட்கள், மாருதி ஸ்விஃப்ட் சுமார் 1.8 லட்சம், வேகன் ஆர் 1.68 லட்சம் யூனிட்கள் வி்ற்பனையாகி இருக்கின்றன. 

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய அளவில் முன்னணி நிறுவனமாகவும், உலகளவில் ஏழாவது இடத்திலும் இருக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டாப் 10 கார்களில் மாருதி நிறுவன மாடல்கள் கட்டாயம் இடம்பெறுவது வாடிக்கையான ஒன்று தான். அந்த வகையில் சமீப காலமாக ஆல்டோ மற்றும் டிசையர் மாடல்களின் விற்பனை முந்தைய காலத்தை விட குறைந்துள்ளது.



    2016-17 நிதியாண்டு வாக்கில் சுமார் 40,000 மாருதி டிசையர் யூனிட்கள் விற்பனையாகி இருந்த நிலையில், தற்சமயம் வெறும் 18,415 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. ஆல்டோ விற்பனை 7% வளர்ச்சியை பதிவு செய்திருக்கும் நிலையில் டிசையர் விற்பனை 20% வளர்ச்சியை பசதிவு செய்துள்ளது.

    முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது வேகன் ஆர் விற்பனை 1.72 லட்சம் யூனிட்களில் இருந்து 1.68 லட்சமாக இருக்கிறது. விற்பனை சரிவுக்கு டாடா, ஹூன்டாய் மற்றும் ஹோன்டா நிறுவனங்களின் போட்டியே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தற்போதைய விற்பனையுடன் ஒப்பிடும் போது மாருதி பலேனோ விற்பனை 58% அதிகரித்துள்ளது. 

    இது ஒரே ஆண்டில் குறிப்பிட்ட மாடல் பதிவு செய்திருக்கும் அதிகபட்ச வளர்ச்சி என கூறப்படுகிறது. இரண்டாவது இடத்தில் மாருதி டிசையர் இருக்கிறது. ஸ்விஃப்ட் விற்பனை 5.4% மற்றும் வேகன் ஆர் விற்பனை 2% வரை குறைந்துள்ளது. டாப் 5 இடங்களை விட மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா மற்றும் செலரியோ உள்ளிட்ட மாடல்கள் டாப் 10 இடங்களில் ஒன்றாக இடம்பிடித்திருக்கிறது.
    Next Story
    ×