என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
குறைந்த விலையில் புதிய கார்களை வெளியிட ஆடி திட்டம்
ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியாவில் சற்றே குறைந்த விலையில் புதிய கார்களை வெளியிட இருக்கிறது.
புதுடெல்லி:
ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியாவில் புதிய கார்களை வெளியிட இருக்கிறது. புதிய ஆடம்பர கார்களை ஆடி ஏ3 மற்றும் கியூ3 மாடல்களை விட குறைந்த விலையில் நிர்ணயம் செய்ய ஆடி திட்டமிட்டுள்ளது.
ஆடி கியூ2 கிராஸ்ஓவர் என்ற மாடல் இந்தியாவில் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வெளியிடப்பட இருக்கிறது. இது மட்டுமின்றி எஸ்யுவி, செடான் மற்றும் ஹேட்ச்பேக் மாடல்களை வெளியிட ஆடி திட்டமிட்டுள்ளது.
"எதிர்கால திட்டங்களை வகுப்பதில் கவனம் செலுத்தியுள்ளேன். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆடி ஓ3 மற்றும் கியூ3 மாடல்களை விட சிறிய மாடல்களை அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் வெளியிட இருக்கிறோம்." என ஆடி இந்தியா தலைவர் ரஹில் அன்சாரி தெரிவித்துள்ளார்.

கோப்பு படம்
இந்தியாவில் முன்னணி இடத்தை பிடிக்க ஆடி நிறுவனம் ரூ.22 முதல் ரூ.25 லட்சம் விலையில் புதிய கார்களை ஆடி நிறுவனம் வெளியிடலாம் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இரட்டை இலக்க வாகனங்களை ஆடி வெளியிட இருப்பதாக அன்சாரி மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய ஆடி கியூ2 கிராஸ்ஓவர் மாடல் 4-மீட்டர் அளவில் சிங்கிள்-ஃபிரேம் ஆக்டாகோனல் கிரில் கொண்டிருக்கிறது. இதன் வெளிப்புற வடிவமைப்பு நகரங்களில் பயணிக்க மிகவும் எளிமையானதாக இருக்கும். இதன் உள்புறத்தில் ஆடியின் விர்ச்சுவல் காக்பிட் அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஆடி கியூ2 மாடலில் 2-லிட்டர் டீசல் இன்ஜின் இரண்டு வித பவர் அவுட்புட் வேரியண்ட்களில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் இதே மாடலின் பெட்ரோல் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய மாடல்களில் 7-ஸ்பீடு எஸ்-டிரானிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Next Story






