search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ford India"

    ஃபோர்டு இந்தியா நிறுவனம் தனது ஸ்பையர் செடான் காரின் புளு எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது.



    ஃபோர்டு இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் செடான் ஆஸ்பையர் காரின் ஸ்பெஷல் புளு எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் ஆஸ்பையர் புளு கார் அழகிய வடிவமைப்பு, சிறப்பான தொழில்நுட்பம், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு என அனைத்து அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இந்தியாவில் ஆஸ்பையர் புளு பெட்ரோல் எடிஷன் விலை ரூ.7,50,900 (எக்ஸ்-ஷோரூம்) என்றும் டீசல் எடிஷன் விலை ரூ.8,30,900 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆஸ்பையர் புளு: வைட், மூன்டஸ்ட் சில்வர் மற்றும் ஸ்மோக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

    ஃபோர்டு ஆஸ்பையர் புளு காரில் 3-சிலிண்டர், 1.2 லிட்டர் TiVCT பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 93 பி.ஹெச்.பி. பவர், 120 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது லிட்டருக்கு 20.4 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 



    ஆஸ்பையர் புளு டீசல் வேரியண்ட் 1.5 லிட்டர் TDCi என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 100 பி.ஹெச்.பி. பவர், 215 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது லிட்டருக்கு 26.1 கிலோமீட்டர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஃபோர்டு ஆஸ்பையர் புளு காரில் பிரீமியம் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், 15-இன்ச் டையர்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் அழகிய புளு தீம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்டீரிங் வீல் லெதர் ராப் செய்யப்பட்டுள்ளது. கேபினில் புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், பின்புற பார்க்கிங் சென்சார் மற்றும் யு.எஸ்.பி. ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை ஃபோர்டு ஆஸ்பையர் புளு காரில் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏ.பி.எஸ்.), இ.பி.டி. உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 7-இன்ச் தொடுதிரை வசதி மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, பின்புற கேமரா, ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், தானியங்கி ஏ.சி. மற்றும் பவர் விண்டோ வழங்கப்பட்டுள்ளது.
    ஃபோர்டு இந்தியா நிறுவனம் 2019 ஃபோர்டு ஃபிகோ காரினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #FordFigo



    ஃபோர்டு இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது 2019 ஃபோர்டு ஃபிகோ காரினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஃபிகோ கார் முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது அதிகளவு மாற்றங்களை பெற்றிருக்கிறது. காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் ரீதியாக மாற்றம் செய்யப்பட்டிருக்கும் புதிய ஃபோர்டு ஃபிகோ துவக்க விலை ரூ.5.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய 2019 ஃபோர்டு ஃபிகோ ஆம்பியன்ட், டைட்டானியம் மற்றும் டைட்டானியம் புளு (BLU) என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. வடிவமைப்பை பொருத்தவரை 2019 ஃபோர்டு ஃபிகோ மாடலில் க்ரோம் சரவுண்ட்கள், புதிய முன்புற கிரில், ஃபாக் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

    காரின் பக்கவாட்டு மற்றும் பின்புறம் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், 2019 ஃபோர்டு ஃபிகோவில் புதிய வடிவமைப்பு கொண்ட அலாய் வீல் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அளவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.



    டாப் எண்ட் டைட்டானியம் புளு வேரியண்ட் அதிக ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது. காரின் முன்புற கிரில் பிளாக்டு-அவுட் செய்யப்பட்டு, ஃபாக் லேம்ப்களை சுற்றி குரோம் சரவுண்ட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் காரின் பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் டீக்கல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஃபிகோ காரின் உள்புறம் ஸ்போர்ட் தீம் பெற்றிருக்கிறது. மூன்று வேரியண்ட்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 96 பி.ஹெச்.பி. பவர், 120 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இதன் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் 100 பி.ஹெச்.பி. பவர், 215 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. டாப் எண்ட் டைட்டானியம் புளு வேரியண்ட் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. இந்த என்ஜின் 123 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
    இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் ஆஸ்பையர் சி.என்.ஜி. கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கார் இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. #FordAspireCNG



    ஃபோர்டு இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது காம்பேக்ட் செடான் மாடலான ஆஸ்பையர் காரின் சி.என்.ஜி. வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது புதிய ஃபோர்டு ஆஸ்பையர் சி.என்.ஜி. கார் ஆம்பினெட் மற்றும் டிரெண்ட் பிளஸ் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.6.27 லட்சம் மற்றும் ரூ.7.12 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஆஸ்பையர் காரின் சி.என்.ஜி. கிட் காரின் என்ஜின் கண்ட்ரோல் யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு சிலிண்டருக்கும் கியாஸ் ஆப்டிமைஸ் செய்யப்பட்டு அதன்பின் அனுப்பப்படுகிறது. ஃபோர்டு ஆஸ்பையர் சி.என்.ஜி. வேரியண்ட் பிரத்யேக என்ஜினீர்டு அம்சங்களுடன் கிடைக்கிறது.



    இதில் காரின் முன்பக்கம் ஸ்டேபிலைசர் பார் சி.என்.ஜி. கியாஸ் சிலிண்டர் எடையை சமாளிக்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளது. சி.என்.ஜி. கிட் தவிர ஃபோர்டு ஆஸ்பையர் காருக்கு இரண்டு ஆண்டு அல்லது 1,00,000 கிலோமீட்டர் வாரண்டியுடன் வழங்கப்படுகிறது. சி.என்.ஜி. ஃபோர்டு ஆஸ்பையர் கார் 10,000 கிலோமீட்டருக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும். 

    இத்துடன் சி.என்.ஜி. கிட்களை ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை அல்லது 20,000 கிலோமீட்டரில் சர்வீஸ் செய்து கொள்ள வேண்டும். இவை தவிர புதிய காரில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 

    சி.என்.ஜி. மூலம் இயங்கும் ஆஸ்பையர் காரில் வழக்கமான ஆம்பியன்ட் மற்றும் டிரெண்ட் பிளஸ் வேரியண்ட்களில் வழங்கப்படும் அதே அம்சங்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஃபோர்டு ஆஸ்பையர் காரில் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ நேவிகேஷன் வசதி வழங்கப்படுகிறது.
    ஃபோர்டு இந்தியா தனது நள்ளிரவு சிறப்பு விற்பனை தேதிகளை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் அந்நிறுவன வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. #Ford



    ஃபோர்டு இந்தியா தனது நள்ளிரவு சிறப்பு விற்பனையை நடத்துகிறது. இந்த சிறப்பு விற்பனையின் போது ஃபோர்டு விற்பனை மையங்கள் நள்ளிரவு வரை திறக்கப்பட்டு இருக்கும். இதில் கலந்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சய பரிசுகளாக- தங்க நாணயங்கள், ஐபோன் X மற்றும் பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

    புதிய வாகனம் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நள்ளிரவு சிறப்பு விற்பனையில் நிச்சய பரிசு வழங்கப்படும். அந்த வகையில் ஃபோர்டு நள்ளிரவு சிறப்பு விற்பனை இன்று (டிசம்பர் 7) துவங்கி, டிசம்பர் 9ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 



    ஃபோர்டு இந்தியா நள்ளிரவு சிறப்பு விற்பனையில் கலந்து கொண்டு புது வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் ரூ.11 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    ஃபோர்டு நள்ளிரவு சிறப்பு விற்பனை சலுகைகள் ஃபோர்டு ஃபிகோ, புதிய ஃபோர்டு ஆஸ்பையர், ஃபோர்டு ஃப்ரீஸ்டைல், ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் ஃபோர்டு என்டேவர் என அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும். 

    மேலும் புது ஃபோர்டு வாகனங்களை டிசம்பர் மாதத்தில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு குலுக்கல் நடத்தப்படுகிறது. குலுக்கலில் வெற்றி பெறும் வாடிக்கையாளருக்கு ஃபோர்டு ஃபிகோ பரிசாக வழங்கப்படுகிறது. #Ford
    ஃபோர்டு இகோஸ்போர்ட் எஸ் மற்றும் சிக்னேச்சர் எடிஷன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய மாடல்களின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஃபோர்டு இகோஸ்போர்ட் எஸ் மற்றும் சிக்னேச்சர் எடிஷன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஃபோர்டு இகோஸ்போர்ட் எஸ் மாடலில் 1-லிட்டர் இகோபூஸ்ட் இன்ஜின் மற்றும் சில காஸ்மெடிக் மாற்றங்ள் செய்யப்பட்டுள்ளது. 

    ஃபோர்டு இகோஸ்போர்ட் எஸ் மற்றும் சிக்னேச்சர் எடிஷன் மாடல்கள் டைட்டானியம் ட்ரிம் மாடலை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இகோஸ்போர்ட் எஸ் மற்றும் சிக்னேச்சர் எடிஷன் மாடல்கள் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    ஃபோர்டு இகோஸ்போர்ட் எஸ் ட்ரிம் மாடலில் 1-லிட்டர் இகோபூஸ்ட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 123 பிஹெச்பி பவர், 170 என்எம் டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் லிட்டருக்கு 18.1 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இகோஸ்போர்ட் எஸ் மாடலில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.



    ஃபோர்டு இகோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிஷன் மாடலில் 1.5 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 121 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்கியூ செயல்திறனும், டீசல் இன்ஜின் 98.6 பிஹெச்பி பவர், 205 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இரு இன்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

    இகோஸ்போர்ட் டைட்டானியம் எஸ் மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் 17 இன்ச் அலாய் வீல், ஸ்மோக் ட்ரீட்மென்ட், HID ஹெட்லேம்ப்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 4.2 இன்ச் MID மற்றும் டையர் பிரெஷர் மானிட்டரிங் சிஸ்டம் கொண்டுள்ளது.

    இந்தியாவில் ஃபோர்டு இகோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிஷன் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடல் விலை ரூ.10.40 லட்சம், டீசல் இன்ஜின் கொண்ட மாடல் ரூ.10.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஃபோர்டு இகோஸ்போர்ட் எஸ் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடலின் விலை ரூ.11.37 லட்சம், டீசல் இன்ஜின் கொண்ட மாடல் ரூ.11.89 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாடல்களின் விலையும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி ஆகும்.
    ×