என் மலர்

  செய்திகள்

  நள்ளிரவில் சலுகைகளை வாரி வழங்கும் ஃபோர்டு இந்தியா
  X

  நள்ளிரவில் சலுகைகளை வாரி வழங்கும் ஃபோர்டு இந்தியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஃபோர்டு இந்தியா தனது நள்ளிரவு சிறப்பு விற்பனை தேதிகளை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் அந்நிறுவன வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. #Ford  ஃபோர்டு இந்தியா தனது நள்ளிரவு சிறப்பு விற்பனையை நடத்துகிறது. இந்த சிறப்பு விற்பனையின் போது ஃபோர்டு விற்பனை மையங்கள் நள்ளிரவு வரை திறக்கப்பட்டு இருக்கும். இதில் கலந்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சய பரிசுகளாக- தங்க நாணயங்கள், ஐபோன் X மற்றும் பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

  புதிய வாகனம் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நள்ளிரவு சிறப்பு விற்பனையில் நிச்சய பரிசு வழங்கப்படும். அந்த வகையில் ஃபோர்டு நள்ளிரவு சிறப்பு விற்பனை இன்று (டிசம்பர் 7) துவங்கி, டிசம்பர் 9ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.   ஃபோர்டு இந்தியா நள்ளிரவு சிறப்பு விற்பனையில் கலந்து கொண்டு புது வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் ரூ.11 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

  ஃபோர்டு நள்ளிரவு சிறப்பு விற்பனை சலுகைகள் ஃபோர்டு ஃபிகோ, புதிய ஃபோர்டு ஆஸ்பையர், ஃபோர்டு ஃப்ரீஸ்டைல், ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் ஃபோர்டு என்டேவர் என அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும். 

  மேலும் புது ஃபோர்டு வாகனங்களை டிசம்பர் மாதத்தில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு குலுக்கல் நடத்தப்படுகிறது. குலுக்கலில் வெற்றி பெறும் வாடிக்கையாளருக்கு ஃபோர்டு ஃபிகோ பரிசாக வழங்கப்படுகிறது. #Ford
  Next Story
  ×