search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெனால்ட் இந்தியா"

    ரெனால்ட் நிறுவனத்தின் 2018 க்விட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய க்விட் விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #RenaultKWID


    ரெனால்ட் நிறுவனம் 2018 க்விட் காரினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய க்விட் மாடலின் ஃபீச்சர் லோடெட்ட ரேன்ஜ் வடிவமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காரின் முன்பக்க ஹெட்லேம்ப்களில் ரெனால்ட் பாரம்பரிய சி-வடிவ லைட்டிங் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ரேசர் ஷார்ப் க்ரோம் முன்பக்க கிரில், நடுவே ரெனால்ட் லோகோ ஹைலைட் செய்யப்பட்டுள்ளது.

    இத்துடன் ஃபாக் லேம்ப்கள், ஃபுல் வீல் கவர்கள் மற்றும் பாடி நிறத்திலான பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய ரெனால்ட் க்விட் எட்டு வெவ்வேறு ட்ரிம்களில் கிடைக்கிறது. முந்தைய மாடலின் விலையில் புதிய காரில் புதிய அம்சங்களை ரெனால்ட் வழங்கியுள்ளது.

    2018 ரெனால்ட் க்விட் மாடலில் இன்டகிரேடெட்ட் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பின்புற ஆம்ரெஸ்ட், 12 வோல்ட் சாக்கெட் பின்புற இருக்கையில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏழு இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்டகிரேட்டெட் நேவிகேஷன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், லேன்-சேஞ்சர் இன்டிகேட்டர் மற்றும் சீட்பெல்ட் ப்ரி-டென்ஷனர்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    டாப்-என்ட் க்விட் மாடலில் கூடுதல் அம்சங்களாக பவர் ஸ்டியரிங், இன்ஜின் இம்மொபைலைசர், மூன்று மற்றும் நான்கு ஸ்பீடு மேனுவல் ஏசி, பவர் விண்டோக்கள், டிராஃபிக் அசிஸ்ட், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் மற்றும் பின்புறம் ELR வழங்கப்பட்டுள்ளது. 

    2018 க்விட் மாடலின் இன்ஜின் முந்தைய மாடல்களில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இருவித இன்ஜின்கள்: 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. சிறிய 800சிசி இன்ஜின் 52 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 72 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.

    இதன் 999சிசி இன்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 91 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இரண்டு இன்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

    இந்தியாவில் 2018 க்விட் பேஸ் வேரியன்ட் விலை ரூ.2,66,700 (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப்-என்ட் வேரியன்ட் விலை ரூ.4,59,500 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுவது சமீபத்திய ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது. புதிய கார் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #KwidFacelift



    இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் மாடல்களில் ஒன்றாக ரெனால்ட் க்விட் இருக்கிறது. அந்த வகையில் அந்நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட்டெட் மாடலை இந்தியாவில் வெளியிட தயாராகி வருகிறது. 

    ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட்டெட் வெர்ஷன் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்களை மோட்டார்ஆக்டேன் வெளியிட்டிருக்கிறது. புதிய புகைப்படங்களில் புதிய கார் விரைவில் வெளியிடப்பட இருப்பது தெரியவந்துள்ளது.



    ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 2018 ரெனால்ட் க்விட் மாடலின் முன்பக்க கிரில் க்ரோம் செய்யப்பட்டு, காரின் பக்கவாட்டில் க்விட் பிரான்டிங் மற்றும் கதவோரங்களில் ஸ்டிரைப் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர காரில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

    புதிய ரெனால்ட் க்விட் மாடலின் பின்புற இருக்கைகளில் 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட், கைப்பிடிகளில் க்ரோம் கார்னிஷ் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 800சிசி மற்றும் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இதன் 1.0 லிட்டர் இன்ஜினில் 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Renault #KwidFacelifet

    புகைப்படம்: நன்றி MotorOctane
    ×