என் மலர்
கார்
இந்தியாவில் தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக மாருதி சுசுகி டிசையர் விற்பனை முன்னணியில் இருக்கிறது.
புதுடெல்லி:
மாருதி டிசையர் விற்பனை பிப்ரவரி மாதத்தில் முன்னணியில் இருந்திருக்கிறது. என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடலான ஆல்டோவை பின்னுக்குத் தள்ளி டிசையர் முதலிடம் பிடித்திருக்கிறது. அந்த வகையில் தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக டிசையர் விற்பனையில் முன்னணியில் உள்ளது.
இந்தியாவில் மூன்றாம் தலைமுறை டிசையர் மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பிப்ரவரி 2018-இல் மட்டும் புதிய டிசையர் விற்பனை 26% அதிகரித்து இருக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் சுமார் 20,941 டிசையர் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய மாதத்தில் 16,613 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.
நீண்ட காலமாக அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஆல்டோ முதலிடம் பிடித்திருந்தது. அந்த வகையில் ஆல்டோ விற்பனை ஒரு சதவிகிதம் மட்டும் அதிகரித்து இருக்கிறது. கடந்த மாதத்தில் மட்டும் 19,760 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டை விட 40% வளர்ச்சியை பதிவு செய்து இருந்தாலும், ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தையே பிடித்துள்ளது.

புதிய தலைமுறை மாருதி சுசுகி டிசையர் அந்நிறுவனத்தின் HEARTEC வடிவமைப்பை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் முந்தைய மாடல்களை விட மெல்லிய மற்றும் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது. புதிய வடிவமைப்பு காரணமாக காரின் எடை முந்தைய மாடலை விட 105 கிலோ வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதால் புதிய முன்புறம் பெற்றிருக்கிறது. க்ரோம் சரவுண்டு செய்யப்பட்ட புதிய கிரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டேடைம் ரன்னிங் லைட், புதிய பம்ப்பர் உள்ளிட்டவை காரின் தோற்றத்தை ஒட்டுமொத்தமாக வித்தியசமாக வெளிப்படுத்துகிறது.
உள்புற அம்சங்களை பொருத்த வரை டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, மிரர்லின்க் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை டூயல் ஏர்பேக்ஸ், EBD கொண்ட ABS (ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்), பிரேக் அசிஸ்ட் மற்றும் ISOFIX உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய சுசுகி டிசையர் 1.2 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின், 1.3-லிட்டர் DDiS டீசல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் மோட்டார் 82 bhp மற்றும் 113 Nm செயல்திறனும், டீசல் மோட்டார் 74 bhp மற்றும் 190 Nm செயல்திறன் கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதியை விரும்பும் வாட்க்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
ஹூன்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
ஹூன்டாய் இந்தியா நிறுவனத்தின் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் மே மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஹூன்டா க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆகஸ்டு மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது.
புதிய க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் பேஸ் மாடல் விலை தற்சமயம் விற்பனையாகும் மாடலை போன்றே நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் டாப் எண்ட் மாடலின் விலை ரூ.80,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூன்டா க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் தற்போதைய மாடலை விட மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய மாடலின் தோற்றத்தில் மாற்ற செய்யப்படிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய காரின் முன்பக்கம் புதிய கிரில் வடிவமைப்பு, புதிய பம்ப்பர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஹெட்லேம்ப் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஃபாக் லேம்ப், பம்ப்பரில் எல்இடி டி.ஆர்.எல். வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஃபேஸ்லிஃப்ட் க்ரெட்டா மாடலில் டூயல் டோன் அலாய் வீல், கண்ணாடியின் கீழ் க்ரோம் பெல்ட் வழங்கப்படுகிறது. பின்புறம் மேம்படுத்தப்பட்ட டெயில் லைட், அப்டேட் செய்யப்பட்ட பம்ப்பர், உள்புறம் மேம்படுத்தப்பட்ட தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படுகிறது.
தற்போதைய மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் A1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 123 பி.ஹெச்.பி. பவர், 151 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர் மற்றொரு 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் 126 பி.ஹெச்.பி. பவர் வழங்கப்படுகிறது. இவை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஹூன்டாய் க்ரெட்டா மாடல் இந்தியாவில் ஜீப் காம்பஸ், ரெனால்ட் கேப்டூர், டாடா ஹெக்சா மற்றும் மஹேந்திரா எக்ஸ்.யு.வி.500 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் முன்பதிவு துவங்கப்பட்டது. முன்னதாக இந்த கார் ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்யப்பட்டது.
புதுடெல்லி:
டொயோட்டா நிறுவனத்தின் புதிய யாரிஸ் முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்யப்பட்ட யாரிஸ் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
ஏப்ரல் மாத இறுதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் டொயோட்டா யாரிஸ் முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் ரூ.50,000 வரை செலுத்த வேண்டும். டொயோட்டா யாரிஸ் மாடல்கள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை. அந்த வகையில் முன்பதிவு செய்வோரும் மாடல்களை தேர்வு செய்ய முடியாது.
எனினும் தற்சமயம் முன்பதிவு செய்வோர், வெளியீட்டிற்கு பின் காரினை சற்றே முன்னதாக பெற்றுக் கொள்ள முடியும். டொயோட்டா யாரிஸ் 1.5 லிட்டர் பெட்போல் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

புதிய டொயோட்டா யாரிஸ் பல்வேறு பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கிறது. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், பம்ப்பரில் பகலில் எரியும் எல்இடி லைட்கள், 15-இன்ச் அலாய் வீல் மற்றும் பின்புற கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ஏழு ஏர்பேக், EBD, டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் முன்பக்கம் பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. உள்புறம் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் மற்றும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் இருக்கையை 8 விதங்களில் மாற்றியமைக்கும் வசதி, ரூஃப்-மவுண்ட் செய்யப்பட்ட ஏ.சி., இன்ஜின் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் ஆப்ஷன்கள் ஆட்டோமேடிக் வேரியண்ட்-இல் வழங்கப்படுகிறது.
மஹேந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.500 மாடலின் இந்திய வெளியீடு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
மஹேந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.500 மாடல் இந்திய வெளியீடு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மேம்படுத்தப்பட்ட எக்ஸ்.யு.வி.500 இந்தியாவில் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட எக்ஸ்.யு.வி.500 மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாலில் மேம்படுத்தப்பட்ட முன்பக்க பம்ப்பர், கிரில், எல்இடி டி.ஆர்.எல். மற்றும் புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
பின்புறம் புதிய எக்ஸ்.யு.வி.500 புதிய பம்ப்பர், மாற்றியமைக்கபட்ட டெயில் லேம்ப் மற்றும் சில எல்இடி-க்கள் வழங்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட எக்ஸ்.யு.வி.500 மாடலில் சக்திவாய்ந்த 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 170 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹேந்திரா சமீபத்தில் எக்ஸ்.யு.வி.500 G9 பெட்ரோல் AT வேரியண்ட் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 2.2 லிட்டர் இன்ஜின் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ரய்டு ஆட்டோ, கனெக்டெட் ஆப்ஸ், இகோசென்ஸ் மற்றும் பல அம்சங்கள் வழங்கப்படலாம்.
எக்ஸ்.யு.வி.500 டாப் வேரியண்ட் மாடலில் பிரீமியம் லெதர் சீட்டிங், டேஷ்போர்டில் சாஃப்ட்-டச் அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடி நிறுவனத்தின் புத்தம் புதிய கியூ 8 எஸ்.யு.வி. இந்திய வெளியீடு குறித்த தகவல்கள் வெளியகி உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் புதிய எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்ய ஆடி திட்டமிட்டிருந்த நிலையில், புதிய ஆடி கியூ 8 சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
2017 டெட்ராயிட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட கியூ8 கான்செப்ட் மாடல் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆடி நிறுவன ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவு தலைவர் பீட்டர் மெர்டென்ஸ் அறிவித்துள்ளார்.
புதிய ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடல் ஷாங்காய் நகரில் நடைபெற இருக்கும் பிரத்யேக விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சீனாவில் ஆடி கார் தயாரிப்பின் 30-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த கார் அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் கார் தயாரிப்பை இரட்டிப்பாக்க முடிவு செய்திருப்பதாக ஆடி தெரிவித்திருக்கிறது.
மெர்டின்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி கியூ8 கூப் போன்ற எஸ்.யு.வி. மாடலாக காட்சியளிக்கிறது. முந்தைய கியூ7 போன்று காட்சியளிக்கும் கியூ8 ஸ்லோவேகியாவில் இயங்கி வரும் ஆடி தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்யப்படும் கியூ8 எஸ்.யு.வி. பி.எம்.டபுள்யூ. எக்ஸ் 6 மற்றும் மெர்சிடிசிஸ் பென்ஸ் GLE கூப் மாடல்கலுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஆடி கியூ8 மாடலின் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் அதிகம் வெளியாகாத நிலையில், இந்த காரில் 3-லிட்டர் வி6 இன்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 350 பி.ஹெச்.பி. பவர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஸ்விஃப்ட் முன்பதிவு ஜனவரி மாத இறுதியில் துவங்கிய நிலையில், தொடர்ந்து அதிகளவு முன்பதிவு காரணமாக காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
மாருதி சுசுகி புதிய ஸ்விஃப்ட் ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்யப்பட்டது. மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் மாடலுக்கான முன்பதிவு ஜனவரி மாத இறுதியில் துவங்கிய நிலையில் இதுவரை மட்டும் சுமார் 75,000க்கும் அதிக முன்பதிவுகளை கடந்திருக்கிறது.
புதிய ஸ்விஃப்ட் முன்பதிவு துவங்கிய இரண்டு மாதங்களுக்குள் அதிகளவு முன்பதிவை கடந்திருக்கும் நிலையில், புதிய கார் வாங்க இரண்டு மாதம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் மாடலாக மாருதி ஸ்விஃப்ட் இருக்கும் நிலையில், புதிய மாடல் அறிமுகம் இதனை மேலும் அதிகரித்துள்ளது. பல்வேறு மாற்றங்கள், புதிய வடிவைப்புடன் மாருதி ஸ்விஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் உள்புறத்தில் பல்வேறு உயர் ரக அம்சங்கள், டூயல்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதுவித ஸ்டீரிங் வீல் காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. இத்துடன் ஸ்மார்ட் பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை டாப் எண்ட மாடலில் வழங்கப்பட்டுள்ளது.
இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை 1.2 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் ரக இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 82 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்கியூவும், 1.3 லிட்டர் DDiS டீசல் இன்ஜின் 74 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்கியூ மற்றும் இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் விலை 4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்ஸ டெல்லி) முதல் துவங்கி டாப் எண்ட் மாடலின் விலை ரூ.7.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டேட்சன் இந்தியா நிறுவனம் டேட்சன் கோ மற்றும் கோ பிளஸ் லிமிட்டெட் எடிஷன் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ ரீமிக்ஸ் லிமிட்டெட் எடிஷன் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ரீமிக்ஸ் எடிஷன் புதிய ஹூட், ரூஃப் ராப்ஸ், கருப்பு நிற இன்டீரியர் மற்றும் டூயல்டோன் காம்பினேஷன் செய்யப்பட்டுள்ளது.
டேட்சன் கோ ரீமிக்ஸ் மாடல் ஓனிக்ஸ் பிளாக் நிறம் மற்றும் ஆரஞ்சு நிற டீக்கல்கள்களை கொண்டிருக்கிறது. டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ ரீமிக்ஸ் மாடல் ஸ்டாம் வைட் மற்றும் டூயல் டோன் சில்வர் நிறங்களிலும் கிடைக்கிறது. லிமிட்டெட் எடிஷன் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கபப்ட்டுள்ளன.
ரிமோட் கீலெஸ் எண்ட்ரி, ஹேன்ட்ஸ்-ஃப்ரீ ப்ளூடூத் ஆடியோ, ட்ரெண்ட் சீட் கவர், முன்பக்கம் கருப்பு நிற கிறில், கருப்பு நிற வீல் கவர், பியானோ பிளாக் இன்டீரியர், ஸ்போர்ட் ஸ்பாயிலர், அழகிய க்ரோம் எக்சாஸ்ட் ஃபினிஷர் மற்றும் க்ரோம் பம்ப்பர் பெசல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் மாடல்களில் 1.2 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் ஃபாலோ மீ ஹெட்லேம்ப், ஸ்பீடு சென்சிட்டிவ் எலெக்ட்ரிக் பவர் ஸ்டீரிகங், முன்பக்கம் பவர் விண்டோ, ஆக்சில்லரி இன், யு.எஸ்.பி. சார்ஜர் போர்ட் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் ரீமிக்ஸ் லிமிட்டெட் எடிஷன் விலை முறையே ரூ.4,21,000 மற்றும் ரூ.4,99,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் விற்பனை ஏற்கனவே துவங்கிவிட்டது.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் மாருதி சுசுகி ஆல்டோ முதலிடம் பிடித்திருப்பதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் என்ட்ரி-லெவல் கார் விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆல்டோ மற்றும் செலரியோ போன்ற மாடல்களின் விற்பனை கொண்டு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி கணிசமான பங்குகளை பெற்றிருக்கிறது. இத்துடன் மாருதி ஆல்டோ இந்திய சந்தையில் புதிய மைல்கல் சாதனையை படைத்திருக்கிறது.
மாருதி ஆல்டோ இந்தியாவில் 35 லட்சம் யூனிட் விற்பனையை கடந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகியின் சமீபத்திய அறிவிப்பின் படி ஆல்டோ மாடலுக்கு இந்தியாவில் அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் ஏற்ற விலை மற்றும் அம்சங்கள் உள்ளிட்டவை ஆல்டோ வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
2017-18 ஆம் ஆண்டில் மாருதி ஆல்டோ விற்பனை ஆறு சதவிகிதம் வரை அதிகரித்து இதே காலகட்டத்தில் சந்தையில் 33 சதவிகித பங்குகளை பெற்றிருக்கிறது. இதில் 44 சதவிகித விற்பனை இளம் வாடிக்கையாளர்கள் (அதாவது 35 வயதுக்குள் உள்ளவர்கள்) என அறிவித்துள்ளது. புதிய வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் இளம் வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறது.
தற்சமயம் மாருதி ஆல்டோ இரண்டு வித இன்ஜின்கள் - 800சிசி மற்றும் 1-லிட்டர் இன்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. 800சிசி பெட்ரோல் இன்ஜின் 47 பி.ஹெச்.பி. பவர், 69 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் 1-லிட்டர் இன்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 90 என்.எம். டார்கியூ மற்றும் 5- ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் பவர் ஸ்டீரிங், முன்பக்கம் பவர் விண்டோ, உள்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ORVM, அழகிய ஹெட்லேம்ப், இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்டீரியோ மற்றும் இதன் டாப் எண்ட் மாடலில் டிரைவர்-சைடு ஏர்பேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜீப் காம்பஸ் 25,000 யூனிட்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஜீப் இந்தியா நிறுவனம் 25,000 ஜீப் காம்பஸ் யூனிட்களை தயாரித்து இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் வெளியான ஏழு மாதங்களில் இத்தனை யூனிட்கள் தயாரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஏற்கனவே விற்பனையாகும் எஸ்.யு.வி. மாடல்களுக்கு போட்டியான விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஜீப் காம்பஸ் அந்நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்தது. பூனே அருகே இயங்கி வரும் ரன்சஞ்கோன் தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படும் ஜீப் காம்பஸ் 65 சதவிகித லோக்கலைசேஷன் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஜீப் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாகனங்களும் மும்பை ஆலையிலேயே தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்தும் வலது புற ஸ்டீரிங் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அருகே அமைந்திருக்கும் ரன்சஞ்கோன் தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படும் வாகனங்கள் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பத்துக்கும் அதிக வேரியண்ட்களில் விற்பனையாகும் ஜீப் காம்பஸ் பல்வேறு உயர் ரக அம்சங்களை கொண்டுள்ளது. ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. இரண்டு வித இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 1.4 லிட்டர் மல்டி-ஏர் டர்போ மோட்டார் 160 bhp செயல்திறன் மற்றும் 250 Nm பீக் டார்கியூ, 6-ஸ்பீடு மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேடிக் கொண்டுள்ளது.

டீசல் பவர் 2.0 லிட்டர் மல்டிஜெட் ஆயில் பர்னர் 170 bhp மற்றும் 350 Nm பீக் டார்கியூ, 6-ஸ்பீடு மேனுவல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் இன்ஜின் 2WD, டீசல் இன்ஜின் 2WD மற்றும் 4WD ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களும் BS-VI வகை எமிஷன் கொண்டுள்ளது.
ஜீப் இந்தியா காம்பஸ் எஸ்.யு.வி. மாடலுக்கு 3 ஆண்டுகள் அதாவது 1,00,000 கிலோமீட்டர் வாரண்டி, மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும் FCA மோபர் கேர் மற்றும் 24x7 ரோடுசைடு அசிஸ்டன்ஸ் வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு ஒரு சர்வீஸ் செய்ய ரூ.15,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜீப் காம்பஸ் பேஸ் மாடல் விலை ரூ.15.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) துவங்குகிறது. இதன் டாப்-எண்ட் மாடல் விலை ரூ.21.37 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய வென்டோ ஸ்போர்ட் மாடல் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
ஃபோக்ஸ்வேகன் இந்தியா விரைவில் வென்டோ ஸ்போர்ட் எடிஷன் மாடலை இந்தியாவில் வெளியிட இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டிருக்கும் வென்டோ ஸ்போர்ட் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.
புதிய வென்டோ ஸ்போர்ட் மாடலுக்கு ஸ்போர்ட் தோற்றம் வழங்குவதற்கான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எனினும் இதன் இன்ஜின்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தற்சமயம் விற்பனை செய்யப்படும் வென்டோ மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் இன்ஜின் வழங்கப்படுகிறது.
ஸ்போர்ட் எடிஷன் மாடலில் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட கிறில், கிளாஸ் பிளாக் ரூஃப் ரேப், ORVM-களில் கார்பன் ஃபைபர் ஃபினிஷ், முன்பக்க ஃபென்டர்களில் க்ரோம் ஸ்போர்ட் பேட்ஜிங், பக்கவாட்டுகள் மற்றும் பின்புற லிப் ஸ்பாயிலர்களில் பிளாக் டீக்கல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் 16 இன்ச் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது.

டாப் எண்ட் மாடலில் ஃபாக்ஸ் லெதர் சீட், லெதர் ரேப்டு ஸ்டீரிங் வீல், கியர் ஷிஃப்ட் நாப், தொடுதிரை டிஸ்ப்ளே கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா மற்றும் மிரர்லின்க் கணெக்டிவிட்டி ஆப்ஷன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் வென்டோ மாடலில் டூயல் ஏர்பேக், ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் இ.எஸ்.பி., எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல். வழங்கப்படுகிறது.
வென்டோ ஸ்போர்ட் மாடலில் 1.2 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜின், 103 பி.ஹெச்.பி. பவர் 7-ஸ்பீடு DSG டிரான்ஸ்மிஷன், 1.6 லிட்டர் MPI பெட்ரோல் இன்ஜின், 103 பி.ஹெச்.பி. பவர் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. டீசல் யூனிட் 1.5 லிட்டர் TDI, 108 பி.ஹெச்.பி. பவர் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது DSG யூனிட் வழங்கப்படுகிறது.
தற்போதைய ஃபோக்ஸ்வேகன் வென்டோ ஹைலைன் பிளஸ் பெட்ரோல் மாடல் விலை இந்தியாவில் ரூ.12.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), டீசல் மாடலின் விலை ரூ.13.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் டஸ்டர் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது.
புதுடெல்லி:
ரெனால்ட் இந்தியாவின் டஸ்டர் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. 2018 ரெனால்ட் டஸ்டர் விலை இந்தியாவில் ரூ.7.95 லட்சம் முதல் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடலின் விலை ரூ.12.79 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
மார்ச் 1, 2018 முதல் மாற்றியமைக்கப்பட்டு இருக்கும் விலை பட்டியலில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை சேமிக்க முடியும். இந்தியாவில் வெளியானது முதல் டஸ்டர் மாடல் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாகவும், காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் அதிகம் விற்பனையாகி வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் ரெனால்ட் டஸ்டர் எஸ்.யு.வி. 1.5 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 104.5 பி.ஹெச்.பி. பவர், 143 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கொண்டுள்ளது.
ரெனால்ட் டஸ்டர் டீசல் வேரியண்ட் மாடலில் 1.5 லிட்டர் இன்ஜின் மற்றும் இருவித டியூனிங் வழங்கப்படுகிறது. 108.5 பி.ஹெச்.பி. பவர், 245 என்.எம். டார்கியூ மற்றும் 84 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 200 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
2012 ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் டஸ்டர் பல்வேறு விருதுகளை வென்றிருக்கிறது. 2018 ரெனால்ட் டஸ்டர் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில் புதிய விலை குறைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் புதிய எடியோஸ் பிளாட்டினம் லிமிட்டெட் எடிஷன் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் புதிய எடியோஸ் பிளாட்டினம் லிமிட்டெட் எடிஷன் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் VX ட்ரிம் மாடலில் வெளியாகியுள்ளது.
புதிய லிமிட்டெட் எடிஷன் எடியோஸ்-இல் வழக்கமான மாடல்களை விட பல்வேறு பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய நிறங்கள், இன்ஃபோடெயின்மென்ட் அம்சங்கள் மற்றும் டூயல்-டோன் சீட் இடம் பெற்றிருக்கிறது. வழக்கமான எடியோஸ் பியல் வைட் நிறத்திற்கு மாற்றாக புதிய லிமிட்டெட் எடிஷன் ஃபேண்டம் பிரவுன் நிறம் கொண்டிருக்கிறது.
2017-ம் ஆண்டு வாக்கில் எடியோஸ் ரக கார்கள் அப்டேட் செய்யப்பட்ட நிலையில், புதிய மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புற வடிவமைப்புகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய லிமிட்டெட் எடிஷன் உள்புறத்தில் டூயல்-டோன் சீட் வெளிப்புறத்துடன் ஒற்றுப்போகும் படி பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் 6.8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதில் AUX, USB, ப்ளூடூத் கணெக்டிவிட்டி, குரல் அங்கீகார வசதி மற்றும் ரிமோட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற அம்சங்கள் வழங்கப்படவில்லை.
எடியோஸ் பிளாட்டினம் லிமிட்டெட் எடிஷன் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 132 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இதன் டீசல் இன்ஜின் 69 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எடியோஸ் பிளாட்டினம் லிமிட்டெட் எடிஷன் பெட்ரோல் மாடல் விலை ரூ.7.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி), டீசல் இன்ஜின் விலை ரூ.8.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






