என் மலர்
கார்
இந்தியாவின் முதல் பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ சென்னை பி.எம்.டபுள்யூ. தயாரிப்பு ஆலையில் இருந்து வெளியிடப்பட்டிருக்கிறது.
சென்னை:
பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் முதல் கார் சென்னை தயாரிப்பு ஆலையில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ மாடலை வெளியிடுவதில் பி.எம்.டபுள்யூ. சென்னை தயாரிப்பு ஆலை பெருமிதம் கொள்கிறது என அந்நிறுவன நிர்வாக தலைவர் ஜோக்கென் ஸ்டால்கேம்ப் தெரிவித்துள்ளார்.
பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ வித்தியாச மாடல் மட்டுமின்றி மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்று்ம் பல்வேறு புதுமைகளை கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு இருப்பதால் இந்திய ஆடம்பர கார்களின் பிரிவில் இந்த மாடல் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்கும். பி.எம்.டபுள்யூ. சென்னை தயாரிப்பு ஆலை வாடிக்கையாளர்கள் விரும்பும் தலைச்சிறந்த பொருட்களை மிகவும் நுனுக்கமாக விநியோகம் செய்ய கடமைப்பட்டிருக்கிறது.
சென்னையில் இயங்கி வரும் பி.எம்.டபுள்யூ. தயாரிப்பு ஆலையில் பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ், பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, பி.எம்.டபுள்யூ. 5 சீரிஸ், பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ், பி.எம்.டபுள்யூ. X3 மற்றும் பி.எம்.டபுள்யூ. X5 உள்ளிட்ட மாடல்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்யப்பட்ட பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ முதல் கார் பெட்ரோல் வேரியண்ட் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் டீசல் வேரியண்ட் மாடல் இந்த ஆண்டின் பிற்பாதியில் வெளியிடப்பட இருக்கிறது. #BMW
பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் முதல் கார் சென்னை தயாரிப்பு ஆலையில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ மாடலை வெளியிடுவதில் பி.எம்.டபுள்யூ. சென்னை தயாரிப்பு ஆலை பெருமிதம் கொள்கிறது என அந்நிறுவன நிர்வாக தலைவர் ஜோக்கென் ஸ்டால்கேம்ப் தெரிவித்துள்ளார்.
பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ வித்தியாச மாடல் மட்டுமின்றி மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்று்ம் பல்வேறு புதுமைகளை கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு இருப்பதால் இந்திய ஆடம்பர கார்களின் பிரிவில் இந்த மாடல் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்கும். பி.எம்.டபுள்யூ. சென்னை தயாரிப்பு ஆலை வாடிக்கையாளர்கள் விரும்பும் தலைச்சிறந்த பொருட்களை மிகவும் நுனுக்கமாக விநியோகம் செய்ய கடமைப்பட்டிருக்கிறது.
சென்னையில் இயங்கி வரும் பி.எம்.டபுள்யூ. தயாரிப்பு ஆலையில் பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ், பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, பி.எம்.டபுள்யூ. 5 சீரிஸ், பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ், பி.எம்.டபுள்யூ. X3 மற்றும் பி.எம்.டபுள்யூ. X5 உள்ளிட்ட மாடல்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்யப்பட்ட பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ முதல் கார் பெட்ரோல் வேரியண்ட் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் டீசல் வேரியண்ட் மாடல் இந்த ஆண்டின் பிற்பாதியில் வெளியிடப்பட இருக்கிறது. #BMW
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் வெளியீட்டை தொடர்ந்து இதுவரை சுமார் 60,000க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி:
மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கபப்ட்ட 2018 ஸ்விஃப்ட் இந்தியாவில் ரூ.4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுவரை 60,000 பேர் புதிய ஸ்விஃப்ட் வாங்க முன்பதிவு செய்திருக்கின்றனர். மேலும் அடுத்த ஒரு மாத காலத்தில் முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஜனவரி 2018 முதல் புதிய ஸ்விஃப்ட் முன்பதிவுகள் துவங்கிய நிலையில், இதன் காத்திருப்பு காலம் ஆறு முதல் எட்டு வாரங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்விஃப்ட் விநியோகம் சமீபத்தில் துவங்கிய நிலையில் இந்தியாவில் மூன்றாம் தலைமுறை வெற்றிகர ஸ்விஃப்ட் மாடலாக அமைந்துள்ளது.
கடந்த மாதம் மட்டும் சுமார் 15,000 பழைய ஸ்விஃப்ட் மாடல்களை மாருதி சுசுகி நிறுவனம் விற்பனை செய்ததாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. புதிய தலைமுறை ஸ்விஃப்ட் விலை முந்தைய மாடலை விட ரூ.20,000 அதிகமாக விலை நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மாடலின் விலைக்கு ஏற்ற கூடுதல் அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட செயல்திறன் மற்றும் இந்திய பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்திற்கு ஏற்ப முந்தைய மாடலை விட கூடுதல் மைலேஜ் வழங்குகிறது.

புதிய ஸ்விஃப்ட் உள்புறத்தில் பல்வேறு உயர் ரக அம்சங்கள், டூயல்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதுவித ஸ்டீரிங் வீல் காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. இத்துடன் ஸ்மார்ட் பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை டாப் எண்ட மாடலில் வழங்கப்பட்டுள்ளது.
இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை 1.2 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் ரக இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 82 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்கியூவும், 1.3 லிட்டர் DDiS டீசல் இன்ஜின் 74 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்கியூ மற்றும் இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் விலை 4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்ஸ டெல்லி) முதல் துவங்கி டாப் எண்ட் மாடலின் விலை ரூ.7.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்விஃப்ட் விநியோகம் இம்மாத இறுதியில் துவங்கலாம் என்றும் முன்பதிவு செய்வோர் ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.எம்.டபுள்யூ. தயாரித்து வெளியிட்ட 5 சீரிஸ் மற்றும் 7 சீரிஸ் கார்களில் சுமார் 11,700 யூனிட்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
பிராங்பர்ட்:
ஜெர்மனியை சேர்ந்த பி.எம்.டபுள்யூ. உலகின் பிரபல நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. பி.எம்.டபுள்யூ. தயரித்து விற்பனைக்கு அனுப்பப்பட்ட 11700 கார்கள் திரும்ப பெறப்பட்டுவதாத அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்ஜின் கட்டுப்பாடு சிஸ்டத்தில் மென்பொருள் தவறாக பொருத்தப்பட்டதே கார்கள் திரும்ப பெறப்பட்டதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மென்பொருள் பிழை காரணமாக அதிநவீன 6 சிலிண்டர் இன்ஜின்கள் சரிவர செயல்படவில்லை.
2012 முதல் 2017-ம் ஆண்டிற்குள் விற்பனை செய்யப்பட்ட பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் ‘ஃபிளாக்ஷிப்- 7 சீரிஸ்’ மற்றும் ‘மிட்ரேஞ்ச்- 5 சீரிஸ் ஆகிய 2 மாடல் கார்கள் திரும்ப பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்களில் அதிக செயல்திறன் கொண்ட டீசல் இன்ஜின்களும் மூன்று டர்போ சார்ஜர்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
முன்னதாக வார இதழ் ஒன்றில் வெளியான தகவல்களில் பி.எம்.டபுள்யூ. கார்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் மென்பொருள் காரில் இருந்து வெளிவரும் கேடு விளைவிக்கும் புகையை மறைக்க உதவியதாக தெரிவித்திருந்தது. இதனை பி.எம்.டபுள்யூ. மறுத்த நிலையில், தற்சமயம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே ஃபோக்ஸ்வேகன் 'டீசல்கேட்' குற்றச்சாட்டில் சிக்கி சுமார் 3170 கோடி அமெரிக்க டாலர்களை அபராதம் மற்றும் இதர தொகையை செலுத்தியது. இவற்றில் இதுவரை சுமார் 2000 கோடிகளை ஃபோக்ஸ்வேகன் செலுத்தி இருக்கிறது.
டாடா நெக்சன் AMT முன்பதிவு இந்தியாவில் இயங்கி வரும் அதிகாரப்பூர்வ டாடா மோட்டார்ஸ் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சன் AMT முன்பதிவு பெங்களூருவில் இயங்கி வரும் டாடா மோட்டார்ஸ் விற்பனையாளர்கள் துவங்கியுள்ளனர். டாடா நெக்சன் AMT வெளியீடு உறுதி செய்யாத நிலையில், முன்பதிவு செய்ய ரூ.11,000 செலுத்த வேண்டும்.
இந்தியாவில் டாடா நெக்சன் AMT வெளியீடு மார்ச் அல்லது ஏப்ரல் மாத முதல் வாரத்தில் துவங்கி அதன் பின் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் நிறத்திற்கு ஏற்ப விநியோகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய நெக்சன் AMT சமீபத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா நெக்சன் AMT ஃபோர்டு இகோஸ்போர்ட் ஆட்டோமேடிக், மஹேந்திரா TUV300 AMT மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. இரண்டு கார்களும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. டாடா நெக்சனில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய AMT கியர்பாக்ஸ் XTA மிட்-வேரியண்ட் மற்றும் டாப் எண்ட் XZA மாடல்களில் வழங்கப்படுகிறது.

புதிய AMT கியர்பாக்ஸ் தவிர எஸ்.யு.வி. மாடலின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. டாடா நெக்சன் AMT மாடலில் 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 108.5 பி.ஹெச்.பி. @5000 ஆர்.பி.எம். மற்றும் 170 என்.எம். டார்கியூ @1750 ஆர்.பி.எம். செயல்திறன் கொண்டுள்ளது.
இதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் யூனிட் 108.5 பி.ஹெச்.பி. @3750 ஆர்.பி.எம். மற்றும் 260 என்.எம். டார்கியூ @1500 ஆர்.பி.எம். கொண்டுள்ளது. இதன் மைலேஜ் விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், இது மேனுவல் வேரியண்ட்களுக்கு ஏற்ப மாறுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெக்சன் AMT விலையை டாடா இதுவரை அறிவிக்காத நிலையில், நெக்சன் AMT மேனுவல் வேரியண்ட் மாடலை விட ரூ.50,000 வரை கூடுதலாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நெக்சன் மேனுவல் வேரியண்ட் விலை ரூ.5.99 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.9.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆடி நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை கியூ5 அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்தில் 500 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி:
ஆடி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இரண்டாம் தலமுறை கியூ5 மாடல் ஒரே மாதத்தில் 500 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் ஜனவரி 18-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட புத்தம் புதிய ஆடி கியூ5 பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது.
தற்சமயம் விற்பனை செய்யப்படும் ஆடி கியூ7 மற்றும் புதிய கியூ5 MLB Evo பிளாட்ஃபார்ம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல்களை விட 100 கிலோ வரை எடை குறைவு ஆகும். இந்தியாவில் ஆடி கியூ5 பி.எம்.டபுள்யூ. X3, மெர்சிடிஸ் பென்ஸ் GLC, லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் புதிய வால்வோ XC60 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
புதிய ஆடி கியூ 5 2.0 லிட்டர் TDI இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 190 பி.எஸ். 400 என்.எம். டார்கியூ மற்றும் 7-ஸ்பீடு எஸ்-டிரானிக் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. புதிய ஆடி கியூ5 மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.9 நொடிகளில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ARAI சான்று பெற்றிருப்பதால் லிட்டருக்கு 17.01 கிலோமீட்டர் செல்லும் என ஆடி தெரிவித்துள்ளது.

இத்துடன் டைனமிக், ஆட்டோ, கம்ஃபர்ட், இன்டிவிடுவல் மற்றும் ஆஃப்ரோடு போன்ற டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. முந்தை ஆடி கியூ 5 மாடலை விட 65 கிலோ எடை குறைவாக இருக்கும் புதிய மாடலில் அடாப்டிவ் சஸ்பென்ஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டும் போது ஹேன்ட்லிங் மற்றும் அனுபவத்தை சிறப்பாக வழங்கும்.
ஆடி கியூ 5 பிரீமியம் பிளஸ் 35 TDI விலை ரூ.53.25 லட்சம் மற்றும் ஆடி கியூ5 தொழில்நுட்பம் TDI விலை ரூ.57.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆடி கியூ5 மாடலில் செவ்வக வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லைட், பக்கவாட்டுகளில் வளைந்த கோடுகளை கொண்டிருக்கிறது.
முந்தைய மாடலை விட பெரிதாக காட்சியளிக்கும் புதிய ஆடி கியூ5 உள்புறத்தில் 12.3 இனஅச் டி.எஃப்டி டிஸ்ப்ளே, 8.3 இன்ச் டிஸ்ப்ளே டேஷ்போர்டில் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் இருக்கைகள் பெய்க்-நிறத்திலான லெதர் மற்றும் பெரிய பானாரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது.
மஹேந்திரா நிறுவனத்தின் பொலேரோ எஸ்.யு.வி. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் விரைவில் வெளியாக இருக்கிறது.
புதுடெல்லி:
மஹேந்திரா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி. மாடலான பொலேரோ விரைவில் புதிய அப்டேட் பெற இருக்கிறது. ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக் உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்த புதிய பொலேரோ விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் வாகன பாதுகாப்பு மதிப்பீடு திட்டத்தின் கீழ் புதிய பொலேரோ அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 2019 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும் புதிய திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
அந்த வகையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கும் அனைத்து கார்களிலும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்ஸ், சீட்பெல்ட் வார்னிங் லைட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை அடிப்படை அம்சங்கள் ஆகிறது.
மஹேந்திரா நிறுவன நிர்வாக இயக்குனர் கூறும் போது, 'பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ஏர்பேக் மற்றும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படாத ஒற்றை மஹேந்திரா வாகனமாக பொலேரோ இருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம், தற்சமயம் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் இது இருக்கிறது, மேலும் 2019 ஜூலைக்குள் இதனை முடிக்க வேண்டும்,' என அவர் தெரிவித்துள்ளார்.

தற்சமயம் விற்பனை செய்யப்படும் பொலேரோவில் ஏர்பேக், ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் மட்டுமே வழங்கப்படாமல் உள்ளது. இவை வழங்கப்பட்டதும் பொலேரோ அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த மல்டி யூடில்லிட்டி வாகனமாக இருக்கும். ஊரக பகுதிகளில் பிரபலமான மாடலாக இருக்கும் பொலேரோ புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் இந்தியாவின் இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய மாடலில் சென்ட்ரல் லாக்கிங், பவர் விண்டோ, கீலெஸ் எண்ட்ரி, சென்டர் ஆம்ரெஸ்ட் உள்ளிட்டவை இரண்டாம் அடுக்கு இருக்கைகளில் வழங்கப்படுகிறது. இத்துடன் ப்ளூடூத் வசதி கொண்ட எம்.பி.3 பிளேயர், ஓட்டுநர் வசதி கொண்ட டிஸ்ப்ளே, மரத்தாலான சென்ட்ரல் பெசல், ரியர் வாஷர் மற்றும் வைப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த அம்சங்களுடன் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஏர்பேக் உள்ளிட்டவை பாதுகாப்பான மல்டி யூடிலிட்டி வாகனமாக (MUV) மாற்றிவிடும்.
மஹேந்திரா பொலேரோ மாடல் 4-மீட்டர் பவர் பிளஸ், மற்றும் ஸ்டான்டர்டு மாடல்களில் கிடைக்கிறது. இந்த மாடல் எம்ஹாக் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் m2DiCR 2.5 லிட்டர் டீசல் யூனிட் கொண்டுள்ளது. 1.5 லிட்டர் இன்ஜின் 70 பி.ஹெச்.பி. பவர், 195 என்.எம். டார்கியூ செயல்திறன், 2.5 லிட்டர் யூனிட் 63 பி.ஹெச்.பி. பவர், 180 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் எடியோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் விரைவில் வெளியாக இருக்கிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மூன்று புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே டொயோட்டா யாரிஸ் பிரீமியம் செடான் மாடலை அறிமுகம் செய்த நிலையில், டொயோட்டா எடியோஸ் பிளாட்டினம் மற்றும் எடியோஸ் லிவா ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை விரைவில் வெளியாக இருக்கிறது.
எடியோஸ் செடான் 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்டு அதன் பின் எடியோஸ் லிவா 2011-ம் ஆண்டு அறிமுகமானது. இதன் முதல் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 2014-ம் ஆண்டிலும், இரண்டாவது ஃபேஸ்லிஃப்ட் மாடல் 2017-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அந்த வகையில் எடியோஸ் மூன்றாவது ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியாக இருக்கிறது.
மேம்படுத்தப்பட்ட மற்றும் தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் புதிய எடியோஸ் மாடல் வெளியிடப்படும் என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன துணை தலைவர் சேகர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். எடியோஸ் மற்றும் லிவா மாடல்களை போன்று சாதாரண ஃபேஸ்லிஃப்ட் மற்றும் சில மாற்றங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக புதிய யாரிஸ் மாடலில் அதிக கவனம் செலுத்துவதால், எடியோஸ் பிளாட்டினம் மற்றும் எடியோஸ் லிவா மாடல்கள் இந்த ஆண்டின் பிற்பாதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா யாரிஸ் மாடலில் போட்டி நிறுவன வாகனங்களில் இல்லாத மற்றும் சந்தையின் முதல் முறை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஹூன்டாய் கிரெட்டா மாடலுக்கு போட்டியாக உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட சிறிய எஸ்.யு.வி. மாடலை வெளியிட டொயோட்டா திட்டமிட்டு வருகிறது. டொயோட்டா தரம் மற்றும் சிறப்பான அம்சங்கள் சந்தையில் எடியோஸ் சீரிஸ் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்திருந்தன.
அந்த வகையில் டொயோட்டாவின் மூன்றாவது ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் பல்வேறு அம்சங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மெக்கானிக்கல் அம்சங்களில் சிறப்பானதாக இருந்தாலும் கூட குறைவான உதிரி பாகங்கள் புதிய வாடிக்கையாளர்களை கவர மறுக்கிறது.
ஹூன்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கோனா எலெக்ட்ரிக் காரின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஹூன்டாய் நிறுவனத்தின் கோனா காம்பேக்ஸ் எஸ்.யு.வி. மாடலின் எலெக்ட்ரிக் பதிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. பிப்ரவரி 27-ம் தேதி வெளியிடப்பட இருக்கும் நிலையில், ஹூன்டாய் கோனா எலெக்ட்ரிக் அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
கோனா எலெக்ட்ரிக் 470 மற்றும் 500 கிலோமீட்டர் என இருவித திறன்களில் வெளியிடப்பட இருக்கிறது. இது குறித்து முழு விவரங்கள் இம்மாத இறுதியில் வெளியிடப்பட இருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிமுகம் ஜெனீவாவில் நடைபெற இருக்கும் மோட்டார் விழாவில் நடைபெற இருக்கிறது.
இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் 2019-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் ஹூன்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களுடன் பாதுகாப்பு மற்றும் டிரைவிங் அசிஸ்டண்ஸ் தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கென ஹூன்டாய் நிறுவனம் எல்ஜியுடன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய எலெக்ட்ரிக் பேட்டரி செவி போல்ட் மாசலில் வழங்கப்பட்டதை போன்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இவ்வாறு இருக்கும் போது 40 கிலோவாட் மற்றும் 64 கிலோவாட் பேட்டரி பேக்களை கொண்டிருக்கும்.
ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய கோனா எஸ்.யு.வி. அமெரிக்காவில் அடுத்த மாதம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார், முன்பக்க வீல்-டிரைவ் (FWD) மற்றும் பின்புற வீல்-டிரைவ் (RWD) ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதன் 2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 147 பி.ஹெச்.பி. பவர், 179 என்.எம். டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
இதன் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் மோட்டார் 175 பி.ஹெச்.பி. பவர், 265 என்.எம். டார்கியூ மற்றும் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் 1.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் 118 பி.ஹெச்.பி. பவர், 172 என்.எம். டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் மிகப்பெரிய நிகழ்வான ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் டாடா நெக்சான் ஏரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாகனங்கள் மற்றும் கான்செப்ட்கள் ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்யப்பட்டது. டாடா புதுவரவுகளில் ஒன்றாக அனைவரையும் ஈர்த்த வாகனமாக நெக்சான் ஏரோ இருக்கிறது. டாடா நெக்சான் ஏரோ டாப்-எண்ட் மாடலில் இரண்டு வித ஸ்டைலிங் ஆப்ஷன்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
டாடா நெக்சான் ஏரோ மாடலில் எஸ்.யு.வி.யின் வடிவமைப்பிற்கு தகுந்த பாடிகிட் அட்டகாசமான வடிவமைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டுகளில் ஸ்கர்ட், சிவப்பு நிறம் அக்சென்ட் கொண்ட பம்ப்பர் புரோடெக்டர்கள் வாகனத்தின் முன்பக்கமும் பின்புறமும் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் பிரத்யேக லிக்விட் சில்வர் நிறம் மற்றும் பியானோ பிளாக் நிற ரூஃப் புதிய ஏரோ மாடலை மற்ற மாடல்களை விட வித்தியாசப்படுத்துகிறது.
நெக்சான் ஏரோ உள்புற கேபினின் சென்ட்டர் கன்சோல், ஸ்டீரிங் வீல் மற்றும் டேஷ்போர்டு உள்ளிட்டவற்றில் அலங்கரிக்கப்பட்ட கிளாஸி பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்டுள்ளது. நெக்சான் ஏரோ போன்றே புதிய நெக்சான் ஆக்டிவ் மாடலில் பிரத்யேக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இரு மாடல்களுடன் புதிய நெக்சானில் பிரத்யேக அக்சஸரீகளை கொண்டு மேலும் அலங்கரிக்க முடியும். கூடுதல் அக்சஸரிக்களை வாடிக்கையாளர்கள் டாடா மோட்டார்ஸ் விற்பனை மையங்களில் பெற முடியுயம்.

மெக்கானிக்கல் அம்சங்களில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில், புதிய நெக்சானிலும் முந்தைய மாடல்களில் வழங்கப்பட்ட இன்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய நெக்சான் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித இன்ஜின்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 108.5 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.
இதன் டீசல் மோட்டார் 1.5 லிட்டர் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 108.5 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 206 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இத்துடன் டாடா நெக்சான் AMT வேரிண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் இந்த ஆண்டின் பிற்பாதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா நெக்சான் ஏரோ விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இதன் விலை முந்தைய மாடலை விட ரூ.30,000 வரை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் பதிப்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் வாகன அறிமுகம் குறித்த தனது திட்டங்களை ரகசியமாக வைத்திருந்த டாடா மோட்டார்ஸ் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் உடைத்திருக்கிறது.
டாடா டியாகோ மற்றும் டிகோர் என இரண்டு வாகனங்களின் எலெக்ட்ரிக் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு வாகனங்களும் ஸ்டான்டர்டு ஹேட்ச்பேக் மற்றும் சப்-காம்பேக்ட் செடான் மாடல்களை போன்று காட்சியளிக்கின்றன. புதிய மாடல்களின் புளூ டீகல்கள் மற்றும் முன்பக்க கிரில் EV பேட்ஜிங் கொண்டிருக்கிறது.
உள்புறத்தில் குமிழ் போன்ற கியர்லீவர் வழங்கப்பட்டிருப்பதே எலெக்ட்ரிக் மற்றும் கம்பஷன் இன்ஜின் வெர்ஷன்களில் இருக்கும் ஒற்றை வித்தியாசமாக உள்ளது. இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை புதிய எலெக்ட்ரிக் டிரைவ் சிஸ்டம் எலெக்ட்ரா இ.வி. மூலம் உருவாக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

டியாகோ மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் மாடல்களில் ஏ.சி. இன்டக்ஷன் மோட்டார் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மோட்டார் அதிகபட்சம் 40 பி.ஹெச்.பி. பவர் கொண்டிருக்கிறது. மற்ற சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகாத நிலையில், விரைவில் இதுகுறித்த முழு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா டியாகோ மற்றும் டிகோர் இ.வி. மாடல்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சனந்த் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்பட்டும் என்றும், இவற்றின் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே துவங்கி சில மாடல்கள் EESL நிறுவனத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு விட்டன. புதிய எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறித்து எவ்வித தகவல்களும் இல்லாத நிலையில், இவற்றின் விலை ரூ.8 முதல் 10 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 ஸ்விஃப்ட் முன்பதிவுகளை கடந்து இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
புதுடெல்லி:
மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கபப்ட்ட 2018 ஸ்விஃப்ட் இந்தியாவில் ரூ.4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுவரை 40,000 பேர் புதிய ஸ்விஃப்ட் வாங்க முன்பதிவு செய்திருக்கும் நிலையில், விநியோகம் செய்யும் பணிகள் துவங்கிவிட்டதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஜனவரி 2018 முதல் புதிய ஸ்விஃப்ட் முன்பதிவுகள் துவங்கிய நிலையில், இதன் காத்திருப்பு காலம் ஆறு முதல் எட்டு வாரங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் விநியோகம் செய்யப்படும் ஸ்விஃப்ட் முன்பதிவு வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் வரை சுமார் 15,000 பழைய ஸ்விஃப்ட் மாடல்களை மாருதி சுசுகி நிறுவனம் விற்பனை செய்ததாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. புதிய தலைமுறை ஸ்விஃப்ட் விலை முந்தைய மாடலை விட ரூ.20,000 அதிகமாக விலை நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மாடலின் விலைக்கு ஏற்ற கூடுதல் அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட செயல்திறன் மற்றும் இந்திய பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்திற்கு ஏற்ப முந்தைய மாடலை விட கூடுதல் மைலேஜ் வழங்குகிறது.

புதிய ஸ்விஃப்ட் உள்புறத்தில் பல்வேறு உயர் ரக அம்சங்கள், டூயல்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதுவித ஸ்டீரிங் வீல் காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. இத்துடன் ஸ்மார்ட் பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை டாப் எண்ட மாடலில் வழங்கப்பட்டுள்ளது.
இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை 1.2 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் ரக இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 82 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்கியூவும், 1.3 லிட்டர் DDiS டீசல் இன்ஜின் 74 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்கியூ மற்றும் இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் விலை 4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்ஸ டெல்லி) முதல் துவங்கி டாப் எண்ட் மாடலின் விலை ரூ.7.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்விஃப்ட் விநியோகம் இம்மாத இறுதியில் துவங்கலாம் என்றும் முன்பதிவு செய்வோர் ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் 2018 ஸ்விஃப்ட் மாடல் இந்தியாவில் நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் அதிகம் எதி்ர்பார்க்கப்பட்ட மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2018 மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்விஃப்ட் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களிலும், முதல் முறையாக டீசல் ஆட்டோமேடிக் மாடல் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புத்தம் புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் அந்நிறுவனத்தின் ஹார்டெக்ட் தளத்தை சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய சேசிஸ் ஹேட்ச்பேக் மாடலை உறுதியுடனும் அதிக திடமாகவும் இருக்கிறது. முற்றிலும் புதிய வடிவமைப்பு, முன்பக்கம் பெரிய கிரில், பக் போன்ற ஹெட்லேம்ப், ப்ரோஜெக்டர் லென்ஸ் மற்றும் எல்.இ.டி. டி.ஆர்.எல். உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டைமண்ட் கட் அலாய் வீல்களும், எல்இடி டெயில் லைட் காரின் தோற்றத்தை முற்றிலும் வித்தியாசமாக வெளிப்படுத்துகிறது.
உள்புறத்தில் பல்வேறு உயர் ரக அம்சங்கள், டூயல்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதுவித ஸ்டீரிங் வீல் காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. இத்துடன் ஸ்மார்ட் பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை டாப் எண்ட மாடலில் வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய மாடல்களை விட பின்புற இருக்கைகளில் கால் வைக்க சிறப்பான இடவசதி வழங்கப்பட்டு இருப்பதால், அகலமாகவும், நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இதன் பூட் கொள்ளளவு 268 லிட்டர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்ஜின்களை பொருத்த வரை 1.2 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் ரக இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 82 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்கியூவும், 1.3 லிட்டர் DDiS டீசல் இன்ஜின் 74 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்கியூ மற்றும் இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் விலை 4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்ஸ டெல்லி) முதல் துவங்கி டாப் எண்ட் மாடலின் விலை ரூ.7.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்விஃப்ட் விநியோகம் இம்மாத இறுதியில் துவங்கலாம் என்றும் முன்பதிவு செய்வோர் ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






