என் மலர்tooltip icon

    கார்

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹூன்டாய் எலைட் i20 ஆட்டோ எக்ஸ்போ 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஹூன்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எலைட் i20 கார் இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோ விழாவான ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய ஹூன்டாய் எலைட் i20 மாருதி பலேனோ மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எலைட் i20 மாடலில் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் வழக்கமான பாதுகாப்பு அம்சங்கள் (டூயல் ஏர்-பேக்) மற்றும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

    ஹூன்டாய் எலைட் மாடலின் பிரீஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்பட்ட இன்ஜின்களையே புதிய எலைட் i20 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்: 83 பி.ஹெச்.பி. பவர் @6000 ஆர்.பி.எம். 115 என்.எம். டார்கியூ @4000 ஆர்.பி.எம். பவர் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த மாடலில் AMT கியர்பாக்ஸ் தேர்வு செய்யும் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




    இத்துடன் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர் @4000 ஆர்.பி.எம்., 219 என்.எம். டார்கியூ @1500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஹூன்டாய் எலைட் i20 மாடலில் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு, கூர்மையான ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டி.ஆர்.எல். வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்த வரை புதிய 2018 எலைட் i20 மாடலில் இரண்டு டெயில் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 இன்ச் அலாய் வீல், ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் மூன்று நிறங்கள் டூயல் டோன் செய்யப்பட்டிருக்கிறது. 

    உள்புற அம்சங்களை பொருத்த வரை புதிய i20 மாடலில் டூயல் டோன் பிளாக் மற்றும் பெய்க் தீம் செய்யப்பட்டுள்ளது. இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதியும், 8 ஸ்பீக்கர் ஆடியோ செட்டப் வழங்கப்பட்டுள்ளது.



    பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை புதிய எலைட் i20 மாடலில் 2 ஏர்பேக், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) உள்ளிட்டவையும், டாப் எண்ட் மாடலில் 6 ஏர்பேக் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3 ஆண்டுகள் / ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி வழங்கப்படுகிறது. 

    ஹூன்டாய் எலைட் i20 பெட்ரோல் மாடலின் துவக்க விலை ரூ.5.34 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.7.90 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹூன்டாய் எலைட் i20 டீசல் மாடலின் விலை ரூ.6.73 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.9.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    ரெனால்ட் இந்தியா நிறுவனம் குவிட் சூப்பர்ஹீரோ எடிஷன் காரினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் குவிட் சூப்பர்ஹீரோ எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய குவிட் சூப்பர்ஹீரோ எடிஷன் டிஸ்னியுடன் இணைந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    ஹாலிவுட்டின் பிரபல அவென்ஜர் சீரிஸ்களில் இடம்பெற்றிருக்கும் சூப்பர்ஹீரோ கதாப்பாத்திரங்கள் காரின் டீகல்களை அலங்கரிக்கின்றன. புதிய லிமிடெட் எடிஷன் இந்தியாவில் ரெனால்ட் குவிட் கேப்டன் அமெரிக்கா எடிஷன் அல்லது ரெனால்ட் குவிட் ஐயன் மேன் எடிஷன் என இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது.

    ரெனால்ட் குவிட் சூப்பர்ஹீரோ எடிஷன் மாடல்களில் 1.0 லிட்டர் RXT ட்ரிம் வேரியண்ட் கொண்டிருக்கிறது. ரெனால்ட் குவிட் RXT ட்ரிம் மாடலை விட புதிய சூப்பர்ஹீரோ எடிஷன் விலை ரூ.29,000 அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சூப்பர்ஹீரோ எடிஷனை வாடிக்கையாளர்கள் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு கட்டணம் ரூ.9,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



    புதிய சூப்பர்ஹீரோ எடிஷன் பிரபல மார்வெல் கதாபாத்திரங்களான ஐயன் மேன் மற்றும் கேப்டன் அமெரிக்காவை பிரதிபலிக்கும் நிறங்களில் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. புதிய RXT ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் நேவிகேஷன் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.

    ரெனால்ட் குவிட் சூப்பர்ஹீரோ எடிஷன் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்குகிறது. இந்த இன்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சுழற்றக்கூடிய 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டுகிறது.

    இந்தியாவில் ரெனால்ட் குவிட் சூப்பர்ஹீரோ எடிஷன் விலை ரூ.4.34 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்விஃப்ட் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் விலை வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் புத்தம் புதிய ஸ்விஃப்ட் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஸ்விஃப்ட் காரினை வாடிக்கையாளர்கள் ரூ.11,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்ய முடியும். 

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஸ்விஃப்ட் விலை இந்தியாவில் ரூ.5.23 லட்சம் முதல் ரூ.5.83 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய மாடல்களை விட ரூ.60,000 வரை அதிகம் ஆகும். 

    இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிகம் விற்பனையாகும் டாப் 5 கார்கள் பட்டியலில் ஸ்விஃப்ட் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. விரைவில் வெளியிடப்பட இருக்கும் புதிய ஸ்விஃப்ட் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு கொண்டிருக்கிறது. புதிய ஸ்விஃப்ட் அந்நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்ம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.



    மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் மாடல் 82 பி.எச்.பி. பவர் மற்றும் 112 என்.எம். டார்கியூ மற்றும் 74 பி.எச்.பி. பவர் மற்றும் 190 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கும். புதிய ஸ்விஃப்ட் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களிலும் 5- ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

    புதிய ஸ்விஃப்ட் CNG மற்றும் LPG போன்று மாற்று எரிசக்தி கொண்ட மாடல்கள் வெளியிடப்படாது என கூறப்படுகிறது. இதன் விலை பலேனோ மற்றும் புதிய டிசையர் போன்ற மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2018 இந்தியாவில் ஹூன்டாய் கிரான்ட் i10, ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூன்டாய் தனது சான்ட்ரோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் சார்ந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூன்டாய் சான்ட்ரோ ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இந்தியா மற்றும் சில நாடுகளில் AH2 என்ற பெயரில் சிறிய கார் ஒன்றை ஹூன்டாய் சோதனை செய்து வருகிறது. புதிய சான்ட்ரோ வெளியீட்டை தொடர்ந்து ஹூன்டாய் சிறிய காரினை ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.6300 கோடியை இந்தியாவில் முதலீடு செய்ய ஹூன்டாய் திட்டமிட்டுள்ளது. 

    முதலீட்டின் முக்கிய அம்சங்களாக புதிய வாகனங்கள், புதிய இன்ஜின்களை உருவாக்குவது மற்றும் குர்கிராமில் அலுவலகம் திறப்பது போன்றவற்றை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2018 முதல் 2020-ம் ஆண்டு வரை வெளியிட இருக்கும் ஒன்பது கார்களில் ஹூன்டாய் சான்ட்ரோ முதல் மாடலாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.



    குடும்ப பயன்பாட்டிற்கென காம்பேக்ட் மாடலாக புதிய சான்ட்ரோ மாடல் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்களின் தொடர் அழுத்தம் காரணமாக சான்ட்ரோ பெயர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக ஹூன்டாய் தெரிவித்துள்ளது. சான்ட்ரோ பிரான்டை திரும்ப கொண்டு வருவது பெரும் நெருக்கடி சூழலை ஏற்படுத்தி உள்ளது என ஹூன்டாய் மோட்டார் நிர்வாக தலைவர் தெரிவித்துள்ளார். 

    புதிய ஹூன்டாய் சான்ட்ரோ தற்போதைய ஹூன்டாய் i10 மாடலை விட உயரமாகவும், அகலமாகவும் இருக்கும் என்றும் இந்த காரில் பெட்ரோல் மற்றும் CNG இன்ஜின் ஆப்ஷன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018 சான்ட்ரோ மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் 2018 ஸ்விஃப்ட் மாடல்கள் இந்திய விற்பனையாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
    புதுடெல்லி:

    இந்தியாவில் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2018 மாடல்களின் முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கிய சில தினங்களில் புதிய கார் விற்பனையாளர்களிடம் காணப்பட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2018 நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய 2018 ஸ்விஃப்ட் பல நிறங்களில் புதிய ஸ்விஃப்ட் கார் வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருக்கின்றன.

    ஆட்டோ எக்ஸ்போவில் விலை மற்றும் விநியோகம் சார்ந்த அறிவிப்புக்கு பின் புதிய ஸ்விஃப்ட் விநியோகம் துவங்க இருக்கின்றன. எனினும் வாடிக்கையாளர்கள் முதற்கட்டமாக ரூ.11,000 முன்பணம் செலுத்தி புதிய ஸ்விஃப்ட் காரினை முன்பதிவு செய்யலாம். இந்தியாவில் 2018 ஸ்விஃப்ட் விலை ரூ.5 முதல் ரூ.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வெளியாகும் முன்பே புதிய ஸ்விஃப்ட் அதிக பிரபலமாகி விட்டதால், புதிய காரின் காத்திருப்பு காலம் மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகியின் ஹார்டெக்ட் தளத்தை சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கும் புதிய ஸ்விஃப்ட் நான்கு வேரியண்ட்களில் வெளியிடப்பட இருக்கிறது.



    மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் மாடல் 82 பி.எச்.பி. பவர் மற்றும் 112 என்.எம். டார்கியூ மற்றும் 74 பி.எச்.பி. பவர் மற்றும் 190 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கும். புதிய ஸ்விஃப்ட் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களிலும் 5- ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

    புதிய ஸ்விஃப்ட் CNG மற்றும் LPG போன்று மாற்று எரிசக்தி கொண்ட மாடல்கள் வெளியிடப்படாது என கூறப்படுகிறது. இதன் விலை பலேனோ மற்றும் புதிய டிசையர் போன்ற மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2018 இந்தியாவில் ஹூன்டாய் கிரான்ட் i10, ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஸ்கோடா ரேபிட் செடான் மாடலில் அந்நிறுவனம் பாதுகாப்பு காரணங்களுக்காக வழக்கத்தை விட இருமடங்கு அதிகமாக நான்கு ஏர்-பேக் வழங்கியுள்ளது.
    புதுடெல்லி:

    ஸ்கோடா இந்தியா சமீபத்தில் அறிமுகம் செய்த ரேபிட் மாடலில் முன்பக்கம் இரண்டு ஏர்-பேக்களை வழங்கியிருந்தது. பயணர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்நிறுவனம் இரண்டு ஏர்-பேக்களை கூடுதலாக வழங்கியுள்ளது. தற்சமயம் நான்கு ஏர்-பேக்கள் ஸ்கோடா ரேபிட் டாப்-எண்ட் மாடலில் மட்டும் வழங்கப்படுகிறது.

    ஹோன்டா சிட்டி மற்றும் ஹூன்டாய் வெர்னா டாப்-எண்ட் மாடல்களில் ஆறு ஏர்-பேக்கள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், ஸ்கோடா புதிய மாற்றத்தை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் ஃபோக்ஸ்வேகன் வென்டோ மற்றும் மாருதி சுசுகி சியாஸ் போன்ற மாடல்களில் இதுவரை இரண்டு ஏர்-பேக் மட்டுமே வழங்கப்படுகிறது. 

    ஸ்கோடா ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ரேபிட் செடான் மாடலை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. ஆக்டிவ், அம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மூன்று வித மாடல்களில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ரேபிட் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் புதிய காரின் அழகை மேம்படுத்தும் விதமான மாற்றங்கள் மற்றும் பல்வேறு புதிய அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. 



    அனைத்து ரேபிட் மாடல்களிலும் இரண்டு ஏர்-பேக்களை ஸ்கோடா வழங்கியிருக்கிறது. எனினும் வளர்ந்து வரும் போட்டி காரணமாக ரேபிட் டாப்-எண்ட் மாடலில் மட்டும் கூடுதலாக இரண்டு ஏர்-பேக்களை ஸ்கோடா வழங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஸ்கோடா மாடல்களில் ரிவர்ஸ் கேமரா அம்சம் மற்றும் 16.0 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டது. மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    பட்டாம்பூச்சி கிரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், பகலில் எரியும் எல்இடி மின்விளக்கு, குரோம் டோர் ஹேன்டிள்கள், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட்லின்க் கனெக்டிவிட்டி மற்றும் ஸ்டீரிங்கில் ஆடியோ மற்றும் டெலிபோன் கண்ட்ரோல்கள், ஃபாக்ஸ் லெதர் இன்டீரியர் போன்ற அம்சங்கள் அப்படியே வழங்கப்பட்டுள்ளன. 

    மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில், 1.6 லிட்டர் MPI பெட்ரோல்-இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் TDI டீசல் மோட்டார் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜின் 104 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 153 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் மற்றொரு மோட்டார் 108 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 250 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கிறது. 

    இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோமேடிக் ஆப்ஷனை பொருத்த வரை பெட்ரோல் மாடலில் 6-ஸ்பீடு டிப்டிரோனிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் டீசல் மோட்டாரில் 7-ஸ்பீடு DSG யூனிட் வழங்கப்பட்டிருக்கிறது.
    ஹூன்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட i20 ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டார் விழாக்களில் ஒன்றான ஆட்டோ எக்ஸ்போ 2018 பிப்ரவரி 9-ம் தேதி துவங்கி பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 

    நொய்டாவில் நடைபெற இருக்கும் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் தங்களது படைப்புகளை அறிமுகம் செய்ய நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும், ஆட்டோமொபைல் நலம்விரும்பிகளும் ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

    ஆட்டோ எக்ஸ்போ 2018 துவங்க இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ளது. இந்நிலையில், ஹூன்டாய் தனது i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட ஹூன்டாய் i20 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.



    புகைப்படம்: நன்றி மோட்டார்பீம்

    புதிய ஹூன்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பெட்ரோல் இன்ஜின், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர்கள், புதிய கிரில் மற்றும் உள்புற கேபினில் புதிய அம்சங்கள் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் மாடல்கள் மற்றும் புதிதாக வெளியாக இருக்கும் மாடல்களுக்கு ஏற்ப புதிய i20 ஃபேஸ்லிஃப்ட் விலையையும் மிகவும் போட்டியளிக்கும் வகையில் ஹூன்டாய் நிர்ணயம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஹூன்டாய் ஐயோனிக் ஹைப்ரிட் செடான் மாடலை இந்தியாவில் வெளியிட இருக்கும் திட்டத்தை ஹூன்டாய் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருந்தது. சர்வதேச சந்தையில் ஹூன்டாய் ஐயோனிக் எலெக்ட்ரிக், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் ஹைப்ரிட் என மூன்று வித மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது.



    எனினும், இந்தியாவில் ஹைப்ரிட் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தியாவில் நிலவும் போட்டி மற்றும் வரி காரணமாக ஐயோனிக் கார்களை ஹூன்டாய் நிறுவனம் இந்தியாவிலேயே தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் ஹூன்டாய் ஐயோனிக் விலை ரூ.25 முதல் ரூ.30 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதிய ஐயோனிக் டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் மற்றும் ஹோன்டா அக்கார்ட் ஹைப்ரிட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் BS-VI ரக ஃபிளாக்ஷிப் வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது.
    புதுடெல்லி:

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் BS-VI ரக மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலாக உருவாகி இருக்கும் எஸ்-கிளாஸ் இந்தியாவில் BS-VI ரகத்தில் தயாரிக்கப்பட்ட முதல் மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. 

    2016-ம் ஆண்டில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் BS-VI ரக வாகனங்களை தயாரிக்கும் முடிவை அறிவித்த கடந்த ஆண்டு வாகனத்தின் வெளியீட்டை உறுதி செய்திருந்த நிலையில், புதிய ஃபிளாக்ஷிப் மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்திருக்கும் புதிய BS-VI ரக மாடல் தற்சமயம் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் BS-IV ரக வாகனங்களின் எரிபொருளை பயன்படுத்தி இயங்கும் என மெர்சிடிஸ் அறிவித்திருக்கிறது. புதிய BS-VI டீசல் இன்ஜின் முந்தைய BS-IV இன்ஜின்களை விட 82% வரை குறைவான PM அளவு கொண்டிருக்கிறது. 

    பெட்ரோல் மற்றும் டீசல் எமிஷன்களிடையே இருக்கும் இடைவெளியை குறைக்க NOx எமிஷன்கள் 68% வரை குறைக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ்-350d மாடல் இவ்வாறான தொழில்நுட்பம் மற்ரும் இன்ஜின் கொண்டிருக்கும் முதல் கார் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

    புதிய 6-சிலிண்டர் இன்ஜினில் ஸ்டெப்டு பவுள் கம்பஷன் வழிமுறையை பெற்றிருக்கிறது. இதனால் இரண்டடுக்கு டர்போசார்ஜிங் மற்றும் CAMTRONIC வேரியபிள் வால்வ் லிஃப்ட் கண்ட்ரோல் பயன்படுத்துகிறது. இந்த வடிவமைப்பு அலுமினியம் இன்ஜின் பிளாக், ஸ்டீல் பிஸ்டன் மற்றும் சிலிண்டர் வால்களில் நானோஸ்லைடு கோட்டிங் பெற்றிருக்கிறது. இதனால் உராய்வு குறைகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் 2018 ஸ்விஃப்ட் மாடல் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கியுள்ளன. 2018 ஸ்விஃப்ட் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் மாருதி சுசுகி 2018 ஸ்விஃப்ட் மாடலுக்கான முன்பதிவுகளை சில விற்பனையாளர்கள் இம்மாத முதல் வாரத்தில் துவங்கியதாக தகவல் வெளியானது. 

    இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஸ்விஃப்ட் 2018 முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. நாடு முழுக்க புதிய ஸ்விஃப்ட் மாடலுக்கான முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் ரூ.11,000 செலுத்த வேண்டும்.

    புதிய 2018 ஸ்விஃப்ட் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத துவக்கத்திலோ விற்பனைக்கு வரும் என்றும் இதற்கான காத்திருப்பு நேரம் 3 அல்லது 4 மாதங்கள் வரை இருக்கும் என எதிர்பார்ப்பதாக சில விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய ஸ்விஃப்ட் மாடல் மாருதி சுசுகியின் HEARTECT வடிவைப்பை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.



    மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் மாடல் 82 பி.எச்.பி. பவர் மற்றும் 112 என்.எம். டார்கியூ மற்றும் 74 பி.எச்.பி. பவர் மற்றும் 190 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கும். புதிய ஸ்விஃப்ட் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களிலும் 5- ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

    புதிய ஸ்விஃப்ட் CNG மற்றும் LPG போன்று மாற்று எரிசக்தி கொண்ட மாடல்கள் வெளியிடப்படாது என கூறப்படுகிறது. இதன் விலை பலேனோ மற்றும் புதிய டிசையர் போன்ற மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2018 இந்தியாவில் ஹூன்டாய் கிரான்ட் i10, ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தியாவில் 2018 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் விலை ரூ.4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்கலாம் என்றும் டாப்-எண்ட் மாடல் ZDi டீசல் விலை ரூ.7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி ஃபியூச்சர்-எஸ் கான்செப்ட் எஸ்.யு.வி. மாடலை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் தனது புதிய கார் ஒன்றை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் ரெனால்ட் குவிட் மாடலுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த வகையில் மாருதி சுசுகி எஸ்.யு.வி. போன்ற வடிவமைப்பு கொண்ட காம்பாக்ட் கார் மாடலின் டீசரை வெளியிட்டுள்ளது. புதிய மாடலில் அதிக இடவசதி மற்றும் பல்வேறு புதிய அம்சங்கள் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபியூச்சர்-எஸ் என்ற பெயரில் மாருதி சுசுகி புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

    புதிய காம்பாக்ட் எஸ்.யு.வி. பிரபலமான விடாரா பிரெஸ்ஸா மாடலின் கீழ் இருக்கும், அந்த வகையில் ஆட்டோமொபைல் சந்தை வளர்ந்து வருவதாக நாங்கள் உணர்கிறோம் என மாருதி சுசுகி நிறுவன நிர்வாக இயக்குனர் சி.வி. ராமன் தெரிவித்துள்ளார். வடிவமைப்பு மற்றும் சமவிகித பாகங்களை பொருத்த வரை இந்த மாடல் புதிய சோதனை போன்று அமைகிறது. காம்பாக்ட் பிரிவில் இது மிகப்பெரும் சவால் ஆகும்.
     


    இந்தியாவில் ரெனால்ட் குவிட் சிறிய கார்களுக்கான பிரிவில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. உள்புறம் அதிகளவு அம்சங்கள் மற்றும் போட்டியளிக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்ட்டிருப்பதே இத்தகைய வரவேற்பிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இத்துடன் எஸ்.யு.வி. போன்ற வடிவமைப்பும் இந்த வரவேற்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

    மாருதி சுசுகி வெளியிட்டிருக்கும் டீசரில் புதிய கார் சிறிய ரக பிரெஸ்ஸா போன்ற வடிவமைப்பு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் புதிய கார் மாருதி ஆல்டோவிற்கு மாற்றாகவும் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மாருதி ஆல்டோ அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது.

    புதிய காரினை மாருதி சுசுகி நிறுவனம் 2019-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என்றும் இந்த கார் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கும் போது இதன் விலை குறைவாக நிர்ணயம் செய்ய முடியும் என்பதோடு சிறப்பான செயல்திறன் மற்றும் எரிபொருள் சேமிப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்த முடியும்.
    இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மூன்று சிறப்பு சலுகைகளை மத்திய அரசு அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் இந்தியாவில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலையை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க நிதி ஆயோக் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    அதன்படி இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பச்சை நிறம் கொண்ட பதிவு எண் கொண்ட பலகை (நம்பர் பிளேட்) வழங்க நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டும் சிறப்பு சலுகைகளை வழங்கவும் நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அவ்வாறு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு இலவச பார்க்கிங் மற்றும் நாடு முழுக்க இயங்கி வரும் சுங்க சாவடி கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை நிறுத்தி வைக்க பிரத்யேக இடம் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. 



    மேற்குறிப்ட்ட சலுகைகள் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை கட்டுப்படுத்தி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்றம் செய்வதன் மூலம் சாலை போக்குவரத்தில் 64 சதவிகித எரிபொருளை சேமிக்க முடியும் என்றும் 2030-ம் ஆண்டிற்குள் 37 சதவிகிதம் வரை காற்று மாசு அளவை குறைக்க முடியும்.

    மேவும் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு மூலம் 2030-ம் ஆண்டு வாக்கில் பெட்ரோல் மற்றும் டீசல் கட்டணங்களில் 6000 கோடி அமெரிக்க டாலர்கள் வரை சேமிக்க முடியும். எனினும் இவை அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெற இந்தியாவில் 2030-ம் ஆண்டிற்குள் அனைத்து வாகனங்களும் எலெக்ட்ரிக் மூலம் இயங்க வேண்டும்.
    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிரபல ஹேட்ச்பேக் கார்களின் விலையில் அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
    புதுடெல்லி:

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிரபல ஹேட்ச்பேக் மாடல்களின் விலை கடந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டது. என்னும் சில விநியோகஸ்தர்கள் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட மாடல்களை விற்று முடிக்க, அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளன. 

    அவ்வாறு இந்தியாவில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் பிரபல ஹேட்ச்பேக் மாடல்களில் சிலவற்றை தொடர்ந்து பார்ப்போம். 

    ஹூன்டாய் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கிரான்ட் i10 டாப் எண்ட் டீசல் மாடல் ரூ.1 லட்சமும், பெட்ரோல் மாடலுக்கு ரூ.90,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.65,000 தள்ளுபடி மற்றும் எக்சேஞ்ச் போனஸ் ரூ.35,000 டீசல் மாடலுக்கு வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் பதிப்பு ரூ.25,000 வரை எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.



    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விலை குறைந்த மாடல் ரூ.70,000 வரை தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் சார்பில் ரூ.50,000 தள்ளுபடி மற்றும் எக்சேஞ்ச் போனஸ் ரூ.10,000 வழங்கப்படுகிறது. இத்துடன் கார்பரேட் சலுகையும் வழங்கப்படுகிறது.

    மாருதி சுசுகி வேகன் ஆர் மாடலின் AMT பதிப்பு ரூ.70,000 தள்ளுபடியில் கிடைக்கிறது. இதில் ரூ.35,000 தள்ளுபடி மற்றும் ரூ.30,000 எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இதேபோல் மாருதி ஆல்டோ 800 மாடலுக்கு ரூ.65,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த மாடலுக்கும் ரூ.35,000 தள்ளுபடி, ரூ.25,000 வரை எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் கார்பரேட் சலுகையும் வழங்கப்படும் என மாருதி தெரிவித்துள்ளது.

    ஹூன்டாய் எலைட் i20 மாடல் தற்சமயம் ரூ.65,000 தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. இதில் ரூ.50,000 வரை தள்ளுபடி மற்றும் ரூ.10,000 எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி டாப் எண்ட் AVN மாடலுக்கு வழங்கப்படுகிறது. பேசிக் மாடலின் விலையில் குறைந்த தொகை தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. 

    ஹோன்டா பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலுக்கு ரூ.57,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹோன்டா ஜேஸ் வாங்குவோருக்கு கூடுதலாக ரூ.30,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும் காரின் டாப் எண்ட் மாடலுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேசிக் மாடல்களுக்கு குறைந்தபட்ச தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    குறிப்பு: இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் சலுகைகள் குறிப்பிட்ட நிறுவனங்களால் எந்நேரத்திலும் மாற்றம் செய்யப்படலாம்.
    ×