என் மலர்
செய்திகள்

புத்தாண்டு சலுகை: ஹேட்ச்பேக் மாடல்களுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிரபல ஹேட்ச்பேக் கார்களின் விலையில் அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புதுடெல்லி:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிரபல ஹேட்ச்பேக் மாடல்களின் விலை கடந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டது. என்னும் சில விநியோகஸ்தர்கள் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட மாடல்களை விற்று முடிக்க, அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளன.
அவ்வாறு இந்தியாவில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் பிரபல ஹேட்ச்பேக் மாடல்களில் சிலவற்றை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூன்டாய் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கிரான்ட் i10 டாப் எண்ட் டீசல் மாடல் ரூ.1 லட்சமும், பெட்ரோல் மாடலுக்கு ரூ.90,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.65,000 தள்ளுபடி மற்றும் எக்சேஞ்ச் போனஸ் ரூ.35,000 டீசல் மாடலுக்கு வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் பதிப்பு ரூ.25,000 வரை எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விலை குறைந்த மாடல் ரூ.70,000 வரை தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் சார்பில் ரூ.50,000 தள்ளுபடி மற்றும் எக்சேஞ்ச் போனஸ் ரூ.10,000 வழங்கப்படுகிறது. இத்துடன் கார்பரேட் சலுகையும் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி வேகன் ஆர் மாடலின் AMT பதிப்பு ரூ.70,000 தள்ளுபடியில் கிடைக்கிறது. இதில் ரூ.35,000 தள்ளுபடி மற்றும் ரூ.30,000 எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இதேபோல் மாருதி ஆல்டோ 800 மாடலுக்கு ரூ.65,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த மாடலுக்கும் ரூ.35,000 தள்ளுபடி, ரூ.25,000 வரை எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் கார்பரேட் சலுகையும் வழங்கப்படும் என மாருதி தெரிவித்துள்ளது.
ஹூன்டாய் எலைட் i20 மாடல் தற்சமயம் ரூ.65,000 தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. இதில் ரூ.50,000 வரை தள்ளுபடி மற்றும் ரூ.10,000 எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி டாப் எண்ட் AVN மாடலுக்கு வழங்கப்படுகிறது. பேசிக் மாடலின் விலையில் குறைந்த தொகை தள்ளுபடியாக வழங்கப்படுகிறது.
ஹோன்டா பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலுக்கு ரூ.57,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹோன்டா ஜேஸ் வாங்குவோருக்கு கூடுதலாக ரூ.30,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும் காரின் டாப் எண்ட் மாடலுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேசிக் மாடல்களுக்கு குறைந்தபட்ச தள்ளுபடி வழங்கப்படுகிறது.
குறிப்பு: இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் சலுகைகள் குறிப்பிட்ட நிறுவனங்களால் எந்நேரத்திலும் மாற்றம் செய்யப்படலாம்.
Next Story






