என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாருதி சுசுகி 2018 ஸ்விஃப்ட்: விலை இவ்வளவா?
    X

    மாருதி சுசுகி 2018 ஸ்விஃப்ட்: விலை இவ்வளவா?

    மாருதி சுசுகி நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்விஃப்ட் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் விலை வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் புத்தம் புதிய ஸ்விஃப்ட் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஸ்விஃப்ட் காரினை வாடிக்கையாளர்கள் ரூ.11,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்ய முடியும். 

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஸ்விஃப்ட் விலை இந்தியாவில் ரூ.5.23 லட்சம் முதல் ரூ.5.83 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய மாடல்களை விட ரூ.60,000 வரை அதிகம் ஆகும். 

    இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிகம் விற்பனையாகும் டாப் 5 கார்கள் பட்டியலில் ஸ்விஃப்ட் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. விரைவில் வெளியிடப்பட இருக்கும் புதிய ஸ்விஃப்ட் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு கொண்டிருக்கிறது. புதிய ஸ்விஃப்ட் அந்நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்ம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.



    மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் மாடல் 82 பி.எச்.பி. பவர் மற்றும் 112 என்.எம். டார்கியூ மற்றும் 74 பி.எச்.பி. பவர் மற்றும் 190 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கும். புதிய ஸ்விஃப்ட் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களிலும் 5- ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

    புதிய ஸ்விஃப்ட் CNG மற்றும் LPG போன்று மாற்று எரிசக்தி கொண்ட மாடல்கள் வெளியிடப்படாது என கூறப்படுகிறது. இதன் விலை பலேனோ மற்றும் புதிய டிசையர் போன்ற மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2018 இந்தியாவில் ஹூன்டாய் கிரான்ட் i10, ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×