search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ரேன்ஜ் ரோவர் எவோக் கன்வெர்டிபிள் இந்தியாவில் வெளியானது
    X

    ரேன்ஜ் ரோவர் எவோக் கன்வெர்டிபிள் இந்தியாவில் வெளியானது

    ரேன்ஜ் ரோவர் எவோக் கன்வெர்டிபிள் மாடல் இந்தியாவில் வெளியாகியுள்ளது. புதிய மாடலின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் ஆடம்பர கன்வெர்டிபிள் எஸ்.யு.வி. மாடல் வெளியிடப்பட்டது.

    2015 லாஸ் ஏஞ்சல்ஸ் நிறுவன மோட்டார் விழாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட ரேன்ஜ் ரோவர் எவோக் கன்வெர்டிபிள் மாடல் மார்ச் 27-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய கன்வெர்டிபிள் மாடல் 20 நொடிகளில் அதிகபட்சம் மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கூரை திறக்கும் வசதி கொண்டிருக்கிறது.

    இதன் உள்புறம் மென்மையான லெதர் இருக்கைகள், அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட், நேவிகேஷன் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற வசதிகள் இடம்பெறுகிறது.

    இதன் ரூஃப் உள்புறத்தில் அகௌஸ்டிக் லைனிங் செய்யப்பட்டு இருப்பதால் வெளிப்புற சத்தம் மற்றும் கேபின் இன்சுலேஷன் உள்ளிட்டவை வெகுவாக குறைக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் மோனோகியூ சேசிஸ் வழங்கப்பட்டு இருப்பதால் வாகனம் ரோல்-ஓவர் ஆகும் போது, பாப்-அப் ரோல்-பார் சிஸ்டம் தானாக வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மோனோகியூ சேசிஸ் அம்சம் கன்வெர்டிபிள் மாடலின் ரூஃப் திறந்திருக்கும் போதும் உச்சக்கட்ட பாதுகாப்பை வழங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. எவோக் கன்வெர்டிபிள் மாடலில் புதிய ரேன்ஜ் ரோவர் எவோக் மாடலில் 1998சிசி, 4-சிலிண்டர் இன்ஜின் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

    இந்த இன்ஜின் 237 பி.ஹெச்.பி. பவர். 340 என்.எம். டார்கியூ மற்றும் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. ரேன்ஜ் ரோவர் எவோக் கன்வெர்டிபிள் மாடலில் 4-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. இந்தியாவில் ரேன்ஜ் ரோவர் எவோக் கன்வெர்டிபிள் விலை ரூ.69.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×