search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hyundai Creta 2018"

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹூன்டாய் கிரெட்டா 2018 வெளியிடப்பட்டது. புதிய கிரெட்டா விலை மற்றும் இதர தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டா 2018 காரினை ஹூன்டாய் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியாகி இருக்கும் புதிய கிரெட்டா ஐந்து ட்ரிம் மற்றும் மூன்று வித இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. 

    புதிய கிரெட்டா காரில் முன்பக்கம் பெரிய கேஸ்கேட் கிரில், முன்பக்க பம்ப்பரில் ஃபாக் லேம்ப் சேர்க்கப்பட்டுள்ளது. பின்புற பம்ப்பர்கள் மற்றும் டெயில்லேம்ப்களில் புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வெளிப்புறத்தில் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு  பின்புறம் முற்றிலும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. 

    உள்புறத்தின் ஹூன்டாய் கிரெட்டா 2018 மாடலில் அதிக மாற்றங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில், டாப் என்ட் மாடலில் மட்டும் சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. பேஸ் இ வேரியன்ட் மாடலில் ஓட்டுனர் இருக்கை உயரத்தை மாற்றும் வசதி வழங்கப்படுகிறது. டாப்-என்ட் SX (O) மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ஓட்டுனர் இருக்கையை ஆறு விதங்களில் மாற்றும் வசதி, ஸ்மார்ட் கீ பேன்ட், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆறு ஏர்-பேக் வழங்கப்பட்டுள்ளது.



    ஹூன்டாய் கிரெட்டா 2018 மாடலில் 1.4 லிட்டர் டீசல், 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 1.54 லிட்டர் டீசல் இன்ஜின் 88.7 பிஹெச்பி பவர், 1.6 லிட்டர் பெட்ரோல் யூனிட் 121 பிஹெச்பி பவர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் யூனிட் 126 பிஹெச்பி பவர் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    1.4 லிட்டர் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 1.6 லிட்டர் இன்ஜின்கள் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளன. டாப்-என்ட் SX (O) வேரியன்ட் மாடலில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் அம்சம் வழங்கப்படவில்லை.



    இந்தியாவில் ஹூன்டாய் கிரெட்டா 2018 பேஸ் வேரியன்ட் விலை ரூ.9.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) துவங்கி டாப் என்ட் வேரியன்ட் விலை ரூ.15.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கிரெட்டா 2018 வைட், ஆரஞ்சு, பிளாக், சில்வர் புளு, ரெட், வைட்/பிளாக் (டூயல்-டோன் ) மற்றும் ஆரஞ்சு/பிளாக் (டூயல்-டோன்) என மொத்தம் ஏழு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது.

    ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூன்டாய் கிரெட்டா 2018 ஜீப் காம்பஸ், ரெனால்ட் கேப்டூர், டாடா ஹெக்சா மற்றும் மஹேந்திரா எக்ஸ்யுவி500 உள்ளிட்ட மாடல்களுடன் அடுத்த சில ஆண்டுகளில் வெளியாக இருக்கும் சில மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    ×