search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    145 நாட்களில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்த ஸ்விஃப்ட்
    X

    145 நாட்களில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்த ஸ்விஃப்ட்

    மாருதி சுசுகி நிறுவனம் சமீபத்திய ஸ்விஃப்ட் மாடல் விற்பனை துவங்கிய 145 நாட்களில் ஒரு லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
    புதுடெல்லி:

    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் விற்பனை துவங்கிய 145 நாட்களில் ஒரு லட்சம் யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. இது இந்தியாவில் அதிவேக விற்பனையை பதிவு செய்த முதல் கார் ஆகும். 2005-ம் ஆண்டில் மாருதி சுசுகி நிறுவனம் முதல் தலைமுறை ஸ்விஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

    அறிமுகமானது முதல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரபல கார்களில் ஒன்றாக மாருதி சுசுகி ஸ்விஃப்ட் இருந்து வருகிறது. 2005-ம் ஆண்டு முதல் ஸ்விஃப்ட் மாடல் 1.89 கோடி யூனிட்கள் விற்பனையாகியிருக்கிறது. 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் ஸ்விஃப்ட் 2018 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் விற்பனை இருபது லட்சங்களை விரைவில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்விஃப்ட் மாடல் புதிய ஹார்டெக்ட் பிளாட்ஃபார்ம்  சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு புதிய அம்சங்களை ஸ்விஃப்ட் கொண்டுள்ளது.

    சமீபத்தில் மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் 20 லட்சம் கார்களை தயாரித்து புதிய மைல்கல் சாதனையை படைத்தது. 20 லட்சமாவது யூனிட் ஆக ஸ்விஃப்ட் ஹேட்ச்பேர் பிரைட் ரெட் மாடல் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    1.2 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் ரக இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 82 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்கியூவும், 1.3 லிட்டர் DDiS டீசல் இன்ஜின் 74 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்கியூ மற்றும் இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×