search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mercedes Benz S63 AMG Coupe"

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிவேக எஸ்-கிளாஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    இந்தியாவில் அதிவேக எஸ்-கிளாஸ் மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது. மெர்சிடிஸ் AMG S 63 கூப் என அழைக்கப்படும் புதிய மாடல் ஸ்போர்ட் தோற்றம், அதிவேக செயல்திறன், பெஸ்போக் லக்சரி அம்சங்களை கொண்டுள்ளது. 

    இதே போன்ற அம்சங்கள் நிறைந்த பென்ட்லி அல்லது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்களின் விலை உயர்ந்த மாடல்களுக்கு மாற்றாக புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை தேர்வு செய்யலாம். இந்தியாவில் ரூ.2.55 கோடி முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதே விலைக்கு கிடைக்கும் மாடல்களுடன் ஒப்பிடும் போது புதிய பென்ஸ் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த மோட்டார் முந்தைய இன்ஜின்களை விட 35 பிஹெச்பி வரை கூடுதல் திறன் கொண்டிருக்கிறது. 4-வீல் டிரைவ் மற்றும் 9 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருப்பதால், வழக்கமான பென்ஸ் AMG கார்களை விட அதிவேகமாக செல்லும் திறன் பெற்றிருக்கிறது. 



    சூப்பர்கார் போன்று புதிய பென்ஸ் மணிக்கு சுமார் 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் படி லாக் செய்யப்பட்டுள்ளது. லாக் செய்யப்படாத பட்சத்தில் டியூனிங்-க்கு ஏற்ப மேலும் அதிவேகமாக செல்லும்.

    இத்துடன் AMG சிலிண்டர் மேனேஜ்மென்ட் சிலிண்டர் டி-ஆக்டிவேஷன் சிஸ்டம், AMG ஸ்பீடு சென்சிட்டிவ் ஸ்டீரிங், AMG ரைடு கன்ட்ரோல் பிளஸ் சஸ்பென்ஷன் மற்றும் வேரியபிள் டேம்ப்பர் கன்ட்ரோல், AMG டைனமிக் செலக் டிரைவிங் மோட்கள்: கம்ஃபர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ் மற்றும் இன்டிவிஜூவல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ஏர்பேக்ஸ், ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல், இஎஸ்பி மற்றும் ரேடர் சார்ந்த லேன் ஹோல்டு, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பிளைன்ட் ஸ்பாட் வாரனிங் அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
    ×