search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Audi Q5 Petrol"

    ஆடி நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. பெட்ரோல் வேரியன்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான ஆடி தனது இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் இன்ஜின் கொண்ட கியூ5 மட்டும் அறிமுகமான நிலையில், ஆடி கியூ5 பெட்ரோல் வேரியன்ட் இன்று இந்தியாவில் அறிமுகமாக செய்யப்பட்டது.

    ஏற்கனவே ஆடி கியூ7 பெட்ரோல் வேரியன்ட் 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 2020-ம் ஆண்டு வாக்கில் அதிக பெட்ரோல் கார்களை விற்பனை செய்ய ஆடி திட்டமிட்டிருக்கிறது. இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. ஆடி 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்த முதல் தலைமுறை மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய ஆடி கியூ 5 டீசல் வேரியன்ட் 2.0 லிட்டர் TFSI பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜின் 248 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்கியூ மற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. 

    முந்தைய மாடலை விட பெரிதாக காட்சியளிக்கும் புதிய ஆடி கியூ5 உள்புறத்தில் 12.3 இனஅச் டி.எஃப்டி டிஸ்ப்ளே, 8.3 இன்ச் டிஸ்ப்ளே டேஷ்போர்டில் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் இருக்கைகள் பெய்க்-நிறத்திலான லெதர் மற்றும் பெரிய பானாரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் டைனமிக், ஆட்டோ, கம்ஃபர்ட், இன்டிவிடுவல் மற்றும் ஆஃப்ரோடு போன்ற டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. புதிய மாடலில் அடாப்டிவ் சஸ்பென்ஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டும் போது ஹேன்ட்லிங் மற்றும் அனுபவத்தை சிறப்பாக வழங்கும். 

    இந்தியாவில் ஆடி கியூ5 பெட்ரோல் வேரியன்ட் விலை ரூ.55.27 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஆடி நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. மாடலின் பெட்ரோல் வேரியன்ட் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.





    ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான ஆடி தனது இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. மாடலை இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் இன்ஜின் கொண்ட கியூ5 மட்டும் அறிமுகமாகி இருக்கும் நிலையில், ஆடி கியூ5 பெட்ரோல் வேரியன்ட் ஜூன் 28-ம் தேதி அறிமுகமாக இருக்கிறது.

    முன்னதாக கியூ7 பெட்ரோல் வேரியன்ட் 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 2020-ம் ஆண்டு வாக்கில் அதிக பெட்ரோல் கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறது. இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. ஆடி 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்த முதல் தலைமுறை மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.

    இரண்டாம் தலைமுறை ஆடி கியூ5 மாடல் MLB இவோ பிளாட்ஃபார்ம் சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் தற்போதைய மாடலை விட இதன் எடை 100 கிலோ வரை குறைக்கப்பட்டிருக்கிறது. புதிய கியூ5 மாடலில் நீண்ட வீல்பேஸ் மற்றும் உயரமாக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்த வடிவமைப்பு கூர்மையாக்கப்பட்டு, முன்பக்கம் சிங்கிள்-ஃபிரேம் கிரில், மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப் மற்றும் ஸ்போர்ட் பொனெட் கொண்டுள்ளது.



    முந்தைய மாடலை விட பெரிதாக காட்சியளிக்கும் புதிய ஆடி கியூ5 உள்புறத்தில் 12.3 இனஅச் டி.எஃப்டி டிஸ்ப்ளே, 8.3 இன்ச் டிஸ்ப்ளே டேஷ்போர்டில் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் இருக்கைகள் பெய்க்-நிறத்திலான லெதர் மற்றும் பெரிய பானாரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆடி கியூ 5 டீசல் வேரியன்ட் 2.0 லிட்டர் TDI இன்ஜின் கொண்டிருக்கிறது. 

    இந்த இன்ஜின் 190 பி.எஸ். 400 என்.எம். டார்கியூ மற்றும் 7-ஸ்பீடு எஸ்-டிரானிக் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. புதிய ஆடி கியூ5 மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.9 நொடிகளில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ARAI சான்று பெற்றிருப்பதால் லிட்டருக்கு 17.01 கிலோமீட்டர் செல்லும் என ஆடி தெரிவித்தது.

    இத்துடன் டைனமிக், ஆட்டோ, கம்ஃபர்ட், இன்டிவிடுவல் மற்றும் ஆஃப்ரோடு போன்ற டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. புதிய மாடலில் அடாப்டிவ் சஸ்பென்ஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டும் போது ஹேன்ட்லிங் மற்றும் அனுபவத்தை சிறப்பாக வழங்கும். 
    ×