search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்கள் திரும்ப பெறப்பட்டன
    X

    இந்தியாவில் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்கள் திரும்ப பெறப்பட்டன

    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்கள் திரும்ப பெறப்படுகிறது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MarutiSuzuki #Dzire



    மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்கள் திரும்பப் பெறப்படுகின்றன. இரண்டு மாடல்களும் ஏர்பேக் பிழை காரணமாக திரும்ப பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 7 முதல் ஜூலை 5 வரை உற்பத்தி செய்யப்பட்ட 566 சுசுகி ஸ்விஃப்ட் யூனிட்களும், 713 டிசையர் யூனிட்கள் என மொத்தம் 1279 யூனிட்கள் திரும்பப் பெறப்பட்டன.

    பாதிக்கப்பட்ட மாடல்களை பயன்படுத்துவோரை மாருதி சுசுகி விற்பனையாளர்கள் மூலம் ஜூலை 25-ம் தேதி முதல் தொடர்பு கொள்ளப்படுவர். இதன் பின் அவை ஆய்வு செய்யப்பட்டு, கோளாறு இருப்பின் இலவசமாக சரி செய்து தரப்படும்.

    பயனர்கள் அவர்களாகவும் மாருதி சுசுகி வலைத்தளம் சென்று தங்களது வாகனத்தில் கோளாறு இருக்கிறதா என்பதை சேசிஸ் நம்பரை பதிவிட்டு தெரிந்து கொள்ள முடியும். மேலும் பயனர்கள் தங்களது விற்பனையாளரை நேரடியாக சென்றும் வாகன கோளாறு குறித்த விவரம் அறிந்து அதனை சரி செய்து கொள்ள முடியும்.



    புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடல் திரும்ப பெறப்படுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக மே மாதத்தில் பிரேக் வாக்யூம் ஹோஸ் கோளாறு காரணமாக 52,000 வாகனங்களை திரும்ப பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் பிப்ரவரி 2018-இல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் செடான் மாடலாக டிசையர் இருக்கிறது. மேலும் வெளியான ஐந்தே மாதங்களில் டிசையர் விற்பனை ஒரு லட்சம் யூனிட்களை கடந்திருந்தது.
    Next Story
    ×