என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் டாடா நெக்சன் XMA அறிமுகம்
    X

    இந்தியாவில் டாடா நெக்சன் XMA அறிமுகம்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சன் XMA பெட்ரோல் வேரியன்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடலின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #tatamotors #nexon



    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சன் XMA  பெட்ரோல் வேரின்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நெக்சன் AMT வேரியன்ட் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது, எனினும் நெக்சன் XZA+ வேரின்ட் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய XMA வேரியன்ட் அறிமுகமாகி இருக்கும் நிலையில், டாடா நெக்சன் AMT விலை மேலும் குறைந்திருக்கிறது. நெக்சன் AMT மாடலில் இகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    நெக்சன் XMA புதிதாக 'ஐவரி வைட்' ரூஃப் கலர் ஆப்ஷனில் கிடைக்கிறது. இதனால் காரின் தோற்றம் மேலும் அழகாகிறது. நெக்சன் AMT அறிமுகத்தை தொடர்ந்து மிட்-ரேஞ்ச் AMT மாடலும் XMA மற்றும் XZA+ வேரியன்ட்களில் கிடைக்கிறது.



    புதிய XMA வேரியன்ட் கனெக்ட்நெக்ஸ்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல், ORVM-கள், ரிமோட் கன்ட்ரோல் லாக்கிங், பவர் டெயில்கேட் மற்றும் ஃபாளோ-மி ஹெட்லேம்ப் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    டாடா நெக்சன் XMA வேரியன்ட் மாடலில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட ரெவோடிரான் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்கியூ மற்றும் டீசல் வேரியன்ட் 108 பி.ஹெச்.பி. பவர், 260 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.

    இந்தியாவில் டாடா நெக்சன் XMA பெட்ரோல் வேரின்ட் விலை ரூ.7.50 லட்சம் மற்றும் டீசல் வேரின்ட் விலை ரூ.8.53 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #tatamotors #nexon
    Next Story
    ×