search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விற்பனையில் புதிய மைல்கல் கடந்து அசத்தும் டாடா நெக்சன்
    X

    விற்பனையில் புதிய மைல்கல் கடந்து அசத்தும் டாடா நெக்சன்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சன் எஸ்.யு.வி. மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. #nexon_hit



    டாடா நெக்சன் காம்பாக்ட் எஸ்.யு.வி. ரக மாடல் இந்தியாவில் 50,000 யூனிட்களை கடந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தினமும் 136 யூனிட்கள் என மாதம் 4,088 யூனிட்களை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. 

    இந்தியாவில் செப்டம்பர் 21, 2017-இல் அறிமுகமான டாடா நெக்சன் இந்தியாவில் 2.5 மாதங்களுக்குள் 10,000 யூனிட்கள் விற்பனையை கடந்தது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 25,000-வது யூனிட்டை வெளியிட்டது. இந்த யூனிட் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பூனே ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது.

    டாடா நெக்சன் XZ+ ட்ரிம் மாடலில் பகலில் எரியும் எல்இடி மின்விளக்குகள், டூயல்-டோன் ரூஃப் விரும்புபவர்கள் தேர்வு செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது. இந்தியாவில் தற்சமயம் நெக்சன் முன்பதிவு செய்வோர் குறைந்த பட்சம் எட்டு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

    இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை டாடா நெக்சன் மாடலில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு ரெவோடிரான் பெட்ரோல் மோட்டார் மற்றும் புதிதாய் உருவாக்கப்பட்டுள்ள 1.5 லிட்டர் ரெவோடார்க் நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் யூனிட் டர்போசார்ஜ்டு மோட்டார் டியாகோ மற்றும் டிகோர் மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது. 



    இந்த இன்ஜின்களில் 108 bhp, 5000 rpm செயல்திறன் மற்றும் 170 Nm டார்கியூ மற்றும் 2000-4000 rpm கொண்டுள்ளது. இதன் டீசல் மோட்டார் 108 bhp, 3750 rpm மற்றும் 260 Nm டார்கியூ மற்றும் 1500-2750 rpm செயல்திறன் கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

    நெக்சன் மாடலில் 6.5 இன்ச் எச்டி ஸ்கிரீன் மற்றும் புத்தம் புதிய நெக்சன் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் ரக ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. இதன் டேஷ்போர்டு டூயல் டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் டாடா நெக்சன் விலை ரூ.6.23 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) துவங்குகிறது. மாருது சுசுகி விடாரா பிரெசா மற்றும் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஃபோர்டு இகோஸ்போர்ட் மாடல்களுக்கு புதிய நெக்சன் போட்டியாக அமைந்துள்ளது. 
    Next Story
    ×