search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்
    X

    ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்

    இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான கார்களில் ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் கார்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம். #cars



    ஒரு காலத்தில் பணக்காரர்கள் தங்களின் அந்தஸ்தை பறைசாற்ற மட்டுமே பயன்படுத்திய கார்கள் இன்று நவீன போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. நடுத்தர பிரிவினரும், மாதாந்திர சம்பளதாரர்களும் வாங்கும் வகையில் கார்கள் இன்று உற்பத்தியாகின்றன.

    டாடா நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய்க்கு நானோ காரை தயாரிக்கத் தொடங்கி, அதுவும் ரூ. 2 லட்சம் வரை சென்றுவிட்டது. தற்போது நானோ கார் உற்பத்தியும் நின்று போய்விட்டது. ஆனால் மாருதி நிறுவனம் உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் ரூ. 5 லட்சத்திற்குள் வசதியான கார்களை தயாரித்து அளிக்கின்றன.

    அவரவர் வசதி, தேவை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு கார்களை வாங்கி பயன்படுத்தலாம். இன்னும் சில கார்கள் ரூ.5 லட்சம் விலையில் உள்ளன. புதிய கார்களும் இதே விலைப் பிரிவில் அறிமுகமாக உள்ளன. 



    ரெனால்ட் க்விட்

    பிரான்ஸைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் சென்னை ஒரகடத்தில் ஆலை அமைத்துள்ளது.இந்நிறுவனத்தின் குறைந்த விலை கார் க்விட். இது ரூ. 2.78 லட்சம் விலையில் கிடைக்கிறது. குறைந்த விலை பிரிவு கார்களில் இது மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது. இதில் பிரீமியம் மாடல் விலை ரூ. 4.71 லட்சமாகும். இது 799 சி.சி. திறன் கொண்டது. இது சோதனை ஓட்டத்தில் 25 கி.மீ. தூரம் ஓடியது. இதில் பெட்ரோல் மாடல் மட்டுமே கிடைக்கிறது. 

    மாருதி ஆல்டோ 800

    மாருதி ஆல்டோ 800, இந்த கார் மாருதி நிறுவனம் நீண்ட காலமாக தயாரித்து வந்த மாருதி 800 மாடலுக்கு மாற்றாக வந்தது. இதன் விலை ரூ 2.72 லட்சமாகும். ஒரு டீசன்ட்டான கார் வாங்க விரும்புவோர், குறைந்த பட்ஜெட்டில் வேண்டுமாயின் இந்தக் கார் நிச்சயம் அவர்களுக்கு போதுமானதாக இருக்கும். பேஸ் மாடல் விலை ரூ. 2.72 லட்சமாகும், டாப் என்ட் மாடல் விலை ரூ. 4.01 லட்சம் வரை கிடைக்கிறது.



    டாடா டியாகோ

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே தனது பிரபல மாடலான இண்டிகா கார் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக அறிவித்துவிட்டது. இந்நிலையில் டியாகோ மாடலைத்தான் டாடா பெரிதும் நம்பியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 3.48 லட்சமாகும். இது 1047 சி.சி. திறன் கொண்டது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் இது கிடைக்கிறது.

    மாருதி வேகன் ஆர்

    மாருதி வேகன் ஆர் மாடலின் பேஸ் மாடல் விலை ரூ. 4.37 லட்சமாகும். இது 998 சி.சி. திறன் கொண்டது. இது சோதனை ஓட்டத்தில் லிட்டருக்கு 26 கி.மீ. தூரம் ஓடியதாக நிறுவனம் தெரிவிக்கிறது. இதிலும் பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி.யில் (நிலைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) இயங்கும் மாடல்கள் வந்துள்ளன. இதில் பிரீமியம் மாடல் விலை ரூ. 5.49 லட்சமாகும். 



    மாருதி இக்னிஸ்

    இந்நிறுவனத்தின் பிரபல கார்களில் இதுவும் ஒன்று. இதன் ஆரம்ப விலை ரூ. 4.79 லட்சமாகும். இது 1197 சி.சி. திறன் கொண்டது. இது சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 26 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. டீசல் மாடல் கார் உற்பத்தியை சமீபத்தில்தான் இந்நிறுவனம் முற்றிலுமாக நிறுத்தியது. இப்போதைக்கு பெட்ரோல் மாடல் மட்டுமே கிடைக்கிறது. 

    டட்சன் கோ

    சிறிய ரகக் கார்களில் மக்களால் பெரிதும் விரும்பப்படுவது. டட்சன் கோ காரின் ஆரம்ப விலை ரூ. 3.50 லட்சமாகும். இதில் 799 சி.சி. என்ஜின் உள்ளது. இதில் இன்னொரு மாடல் 999 சி.சி.யிலும் வெளி வந்துள்ளது. 

    மாருதி ஸ்விப்ட்

    இது 1197 சி.சி. திறன் கொண்டது. ஐந்து பேர் சவுகரியமாக அமர்ந்து செல்லும் வகையில் இட வசதி கொண்டது. பெட்ரோல், டீசல் ஆகிய இரு மாடல்களிலும் இவை வெளி வந்துள்ளன. இதன் ஆரம்ப விலை ரூ. 4.99 லட்சமாகும். சோதனை ஓட்டத்தில் இது லிட்டருக்கு 28 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. 
    Next Story
    ×