search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாடா ஹேரியர் முன்பதிவு விரைவில் துவங்குகிறது
    X

    டாடா ஹேரியர் முன்பதிவு விரைவில் துவங்குகிறது

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் காருக்கான முன்பதிவுகளை விரைவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Tatamotors #Harrier



    டாடா ஹேரியர் மாடலுக்கான முன்பதிவுகள் அக்டோபர் 15-ம் தேதி துவங்க இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய எஸ்.யு.வி. மாடலுக்கு ரூ.30,000 முன்பதிவு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

    மேலும் டாடா ஹேரியர் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் 2019 ஜனவரி மாத வாத்தில் அறிமுகமாகி ஒரு மாதத்திற்குள் ஹேரியர் மாடலுக்கான விநியோகம் துவங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவர் எஸ்.என். பர்மேன் கூறும் போது, "புத்தம் புதிய ஹேரியர் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ.30,000 ஆகும். ஹேரியர் காருக்கான துவக்க விலை நிர்ணயம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம் மேலும் கார் அறிமுகமான ஒரு மாதத்திற்குள் விநியோக பணிகளை துவங்க திட்டமிட்டுள்ளோம்" என தெரிவித்தார்.



    இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்றாக டாடா ஹேரியர் இருக்கிறது. இந்தியாவில் டாடா ஹேரியர் சோதனை செய்யும் படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகியுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலாக இது இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    டாடா ஹேரியர் மாடலில் புதிய 2.0 க்ரியோடெக் இன்ஜின் வழங்கப்படும் என்றும் இது பி.எஸ். VI ரக 4-சிலிண்டர் யூனிட் கொண்டிருக்கும் என டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தெரிவித்தது. இந்த இன்ஜின் ஐந்து பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 140 பி.ஹெச்.பி. பவர் மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 170 பி.ஹெச்.பி. பவர் கொண்டிருக்கும்.
    Next Story
    ×