search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் மஹிந்திரா மராசோ விலை மாற்றம்
    X

    இந்தியாவில் மஹிந்திரா மராசோ விலை மாற்றம்

    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது மராசோ கார் விலையை மாற்றியமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. #Mahindra #Marazzo



    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது மராசோ கார் மாடலின் விலையை மாற்றியமைக்க இருக்கிறது. அதன்படி புதிய மராசோ விலை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை அதிகரிக்கப்படுகிறது. புதிய விலை மாற்றம் ஜனவரி 1, 2019 முதல் அமலாகும் என மஹிந்திரா அறிவித்துள்ளது.

    மராசோ கார் அறிமுகம் செய்யப்படும் போதே புதிய காரின் விலை அறிமுக சலுகை தான் என மஹிந்திரா & மஹிந்திரா அறிவித்து இருந்தது. விற்பனை துவங்கிய நான்கு மாதங்களில், மராசோ கார் விலை ஜனவரி 1, 2019 முதல் அதிகரிக்கப்பட இருக்கிறது.

    இந்தியாவில் மஹிந்திரா மராசோ கார் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பேஸ் வேரியன்ட் மாடலான M2 விலை ரூ.9.99 லட்சம் என்றும் டாப்-என்ட் M8 வேரியன்ட் ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் ஒரே மாதத்தில் 10,000 முன்பதிவுகளை பெற்று இருக்கிறது. சமீபத்தில் மராசோ மாடலில் ஆப்பிள் கார் பிளே சிஸ்டம் வழங்கப்படுகிறது. புதிய மராசோ மாடல் ஏழு மற்றும் எட்டு பேர் அமரக்கூடிய வேரியன்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் பின்புறம் ஏ.சி. வென்ட்கள் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா மராசோ மாடலில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு நான்கு-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 128 பி.ஹெச்.பி. பவர். 320 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மராசோ காரின் பெட்ரோல் வெர்ஷன் மற்றும் AMT வேரியன்ட் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×