search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிசான் கிக்ஸ் வீடியோ டீசர் வெளியானது
    X

    நிசான் கிக்ஸ் வீடியோ டீசர் வெளியானது

    நிசான் இந்தியாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கிக்ஸ் எஸ்.யு.வி. காரின் வீடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. #Nissan #NissanKicks



    நிசான் இந்தியாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கிக்ஸ் எஸ்.யு.வி. கார் புதிய வீடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. தற்போதைய டெரானோ மாடலுக்கு மாற்றாக அமையலாம் என கூறப்படுகிறது.

    புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலின் தயாரிப்பு பணிகள் சென்னையில் இயங்கி வரும் ஆலையில் ஏற்கனவே துவங்கி விட்டது. தற்சமயம் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் வீடியோவில் நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலில் வி-மோஷன் கிரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்., 17-இன்ச் 5-ஸ்போக் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது.

    புதிய நிசான் கிக்ஸ் ஒரு மாதத்திற்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நிசான் விற்பனை எதிர்பார்த்த அளவு அதிகமாக இல்லாத நிலையில், புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. மூலம் நிசான் தனது விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.



    நிசான் கிக்ஸ் மாடல் 4834எம்.எம். நீளமாகவும், 1813 எம்.எம். அகலமாகவும், 1656எம்.எம். உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2,673 எம்.எம். அளவில் சிறப்பான இன்டீரியர் இடவசதியை வழங்குகிறது. கூடுதலாக புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. பிரத்யேக கிராஃபீன் பாடி கொண்டிருக்கிறது. 

    ஐந்து பேர் அமரக்கூடிய எஸ்.யு.வி. மாடலில் அரவுன்ட் வியூ மானிட்டர் என அழைக்கப்படும் 360-டிகிரி கேமரா அருகில் உள்ள அசையும் பொருட்களை கண்டறியும் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்திற்கென காரை சுற்றி மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அம்சம் நிசான் கிக்ஸ் சர்வதேச மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களுடன் நிசான் கிக்ஸ் கிடைக்கிறது. இதன் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுல் அல்லது CVT கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இந்தியாவில் புதிய நிசான் கிக்ஸ் கார் ஹூன்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 உள்ளிட்ட மாடல்களுககு போட்டியாக அமையும்.

    புதிய நிசான் கிக்ஸ் வீடியோ டீசர்:


    Next Story
    ×