search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விற்பனையில் அசத்தும் மஹிந்திரா மராசோ
    X

    விற்பனையில் அசத்தும் மஹிந்திரா மராசோ

    மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ கார் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. #Marasso



    மஹிந்திரா நிறுவனத்தின் சமீபத்திய மராசோ காரின் இந்திய விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிய மராசோ விற்பனை மராது சுசுகி நிறுவனத்தின் எர்டிகாவை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. 

    அக்டோபர் 2018ல் மராசோ கார் மொத்தம் 3,810 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதே மாதத்தில் எர்டிகா கார் வெறும் 1,387 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கிறது. இந்தியாவில் மஹிந்திரா மராசோ கார் சில மாதங்களுக்கு முன் தான் அறிமுகம் செய்யப்பட்டது. 

    அறிமுகமான முதல் மாதத்திலேயே மஹிந்திரா மராசோ சுமார் 10,000 அதிகமான முன்பதிவுகளை பெற்று இருந்தது. மஹிந்திரா மராசோ கார் சமீபத்தில் ஆப்பிள் கார் பிளே வசதியுடன் அப்டேட் செய்யப்பட்டது. முன்னதாக இந்த காரில் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. 



    தற்சமயம் ஆப்பிள் கார் பிளே வசதி கொண்ட முதல் மஹிந்திரா வாகனமாக மராசோ இருக்கிறது. இந்தியாவில் ஏழு மற்றும் எட்டு பேர் வரை பயணிக்கக்கூடிய வகையில இரண்டு வேரியன்ட்களில் மராசோ கிடைக்கிறது. மஹிந்திரா மராசோ பேஸ் வேரியன்ட் விலை ரூ.9.99 லட்சத்தில் துவங்குகிறது.

    புதிய மராசோ மாடலில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா மராசோ லிட்டருக்கு 17.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொனஅ பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
    Next Story
    ×