search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2018 மாருதி எர்டிகா அறிமுக தேதி
    X

    2018 மாருதி எர்டிகா அறிமுக தேதி

    மாருதி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2018 எர்டிகா கார் அறிமுக தேதி மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Maruti #Ertiga



    மாருதி சுசுகி நிறுவனம் சமீத்தில் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்சமயம், மாருதி நிறுவனம் புதிய எர்டிகா 2018 ஃபேஸ்லிஃப்ட் மாடலை நவம்பர் 21ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தசரா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செயய்ப்படலாம் என தெரிகிறது. பண்டிகை காலத்தில் புதிய வாகனம் விரும்புவோருக்கு எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் நல்ல தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எர்டிகா ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய எர்டிகா நெக்சா பிரீமியம் விற்பனை மையங்கள் இன்றி, அரீனா விற்பனை நெட்வொர்க் மூலம் விற்பனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய மாடல் வெளியாக இருக்கும் நிலையில், முதல் தலைமுறை எர்டிகா மாடல் தொடர்ந்து டூர் பேட்ஜிங் உடன் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.



    வெளிப்புறத்தில் மாருதி எர்டிகா மாடலில் முன்புறம் புதிய கிரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக புதிய எர்டிகா பிரீமியம் தோற்றத்தில் தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது அழகாக காட்சியளிக்கிறது.

    பக்கவாட்டில் மிதப்பது போன்ற ரூஃப் வடிவமைப்பு மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. புதிய எர்டிகா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் சியாஸ் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டீசல் மாடலில் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×