என் மலர்tooltip icon

    கார்

    மாருதி சுசுகி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மேம்படுத்தப்பட்ட எர்டிகா காரை ஒரே மாதத்தில் சுமார் 23,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #MarutiSuzuki #Ertiga



    மாருதி சுசுகி நிறுவனத்தின் 2018 எர்டிகா கார் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் பல்வேறு புதிய மாற்றங்களுடன் அறிமுகமான புதிய எர்டிகா கார் முன்பதிவு அறிமுக தினத்தன்றே துவங்கியது. பயனர்கள் ரூ.11,000 கட்டணம் செலுத்தி புதிய காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    அந்த வகையில் முன்பதிவு துவங்கிய ஒரே மாதத்தில் சுமார் 23,000 பேர் புதிய எர்டிகா காரை வாங்க முன்பதிவு செய்துள்ளனர். முன்னதாக முன்பதிவு துவங்கிய ஒரே வாரத்தில் புதிய 2018 எர்டிகா காரை சுமார் 10,000 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் புதிய எர்டிகா காரை முன்பதிவு செய்வோர் காரை பெற இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா முழுக்க இயங்கி வரும் பல்வேறு விற்பனை மையங்களில் மாருதி சுசுகி 2018 எர்டிகா கார் பெட்ரோல் வேரியன்ட் கார் அதிகளவு முன்பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் வேரியன்ட்டில் ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் மாருதி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய எர்டிகா முந்தைய மாடல்களைவிட நீளமாகவும், அகலமாகவும், எடை குறைவாகவும் இருக்கிறது. ஒட்டுமொத்த எர்டிகா கார் 4,395எம்.எம். நீளமாகவும், 1,735 எம்.எம். அகலமாகவும், 1,690 எம்.எம். உயரமாகவும் இருக்கிறது.



    முற்றிலும் புதிய வடிவமைப்புடன், முந்தைய மாடல்களை விட அதிக உபகரணங்களை கொண்டுள்ளது. காரின் முன்பக்கம் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கிரில் டிசைன், ஸ்போர்ட் பம்ப்பர்கள், ஃபாக் லேம்ப்களும், பக்கவாட்டில் 16-இன்ச் அலாய் வீல்கள், ஸ்விஃப்ட் மாடலில் உள்ளதை போன்றே கோடுகள் இடம்பெற்றிருக்கிறது.

    புதிய மாருதி எர்டிகா மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்கள்: 1.5 லிட்டர் பெட்ரோல், 1.3 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் முன்னதாக மேம்படுத்தப்பட்ட சியாஸ் செடான் மாடலில் வழங்கப்பட்டு இருந்தது. புதிய பெட்ரோல் என்ஜின் 1.3 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

    டீசல் என்ஜின் 1.3 லிட்டர் DDiS யூனிட் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய எர்டிகா எம்.பி.வி. மாடல் புதிய பியல் மெட்டாலிக் ஆபன் ரெட், மெட்டாலிக் மேக்மா கிரே, பியல் மெட்டாலிக் ஆக்ஸ்ஃபோர்டு புளு, பியல் ஆர்க்டிக் வைட் மற்றும் மெட்டாலிக் சில்க்கி கிரே என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
    ஹோன்டா நிறுவனம் தனது சி.ஆர்.வி. மாடலில் முகென் என்ற பெயரில் புதிய கான்செப்ட் காரினை அறிமுகம் செய்தது. இதன் சிறப்பம்சங்களை விரிவாக பார்ப்போம். #Honda



    கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக ஹோண்டா இருக்கிறது. இந்நிறுவனம் தனது சி.ஆர்.வி. மாடலில் முகென் என்ற பெரில் புதிய கான்செப்ட் காரை கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் சமீபத்தில் காட்சிப்படுத்தியது.

    புதிய முகென் கார் வடிவமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் காரில் 18 இன்ச் அலாய் சக்கரங்கள் எஸ்.யு.வி. கார்களுக்கே உரிய கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. இது 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் விடெக் (VTEC) டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 193 ஹெச்.பி. திறனோடு 243 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.



    முகென் ரக கார்கள் இதுவரை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. ஆனால் ஜப்பானில் மட்டும் இந்த ரகக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. முன்னதாக ஹோண்டா நிறுவனம் சி.ஆர்.வி. ரக மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த காரில் பெட்ரோல் மாடல் ரூ.28.15 லட்சமாகவும், டீசல் மாடல் ரூ.30.65 லட்சம் விலையில் அறிமுகமானது.

    இது முற்றிலும் சி.கே.டி. (உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, அசெம்பிள் செய்து விற்பது) என்ற அடிப்படையில் இங்கு விற்ப்னை செய்யப்படுகிறது. இந்த மாடலுக்கு இருக்கும் வரவேற்பைப் பொறுத்து அவற்றை இந்தியாவில் தயாரிக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதேபோல முகென் மாடலையும் ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
    இந்தியாவில் நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. காரின் முன்பதிவு துவங்கியது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #NissanKicks



    நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவு இந்தியாவில் துவங்கியது. நிசான் கிக்ஸ் முன்பதிவு கட்டணம் ரூ.25,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நிசான் டெரானோ, ரெனால்ட் டஸ்டர் மற்றும் கேப்டுர் போன்ற மாடல்களில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை நிசான் கிக்ஸ் கொண்டுள்ளது. உள்புறம் கேப்டுர் மாடலில் உள்ள அம்சங்கள் பெரும்பான்மையாக வழங்கப்பட்டுள்ளது.

    ஐந்து பேர் அமரக்கூடிய எஸ்.யு.வி. மாடலில் அரவுன்ட் வியூ மானிட்டர் என அழைக்கப்படும் 360-டிகிரி கேமரா அருகில் உள்ள அசையும் பொருட்களை கண்டறியும் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்திற்கென காரை சுற்றி மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அம்சம் நிசான் கிக்ஸ் சர்வதேச மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.



    பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களுடன் நிசான் கிக்ஸ் கிடைக்கிறது. இதன் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுல் அல்லது CVT கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இந்தியாவில் புதிய நிசான் கிக்ஸ் கார் ஹூன்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 உள்ளிட்ட மாடல்களுககு போட்டியாக அமையும். புதிய நிசான் கிஸ்ஸ் இந்திய விலை ஜனவரி 2019 வாக்கில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நிசான் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை அடுத்த ஆண்டின் துவக்கத்தில் மாற்றுவதாக தெரிவித்துள்ளது. #Nissan



    நிசான் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை ஜனவரி 2019 வாக்கில் நான்கு சதவிகிதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    சர்வதேச சந்தையில் உதிரிபாகங்களின் விலை அதிகரித்து இருப்பதால் கார் மாடல்களின் விலை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிசான் இந்தியா தெரிவித்துள்ளது. புதிய விலை அதிகரிப்பு காரணமாக நிசான் மற்றும் டட்சன் கார்களின் விலை அதிகமாகிறது.



    இந்தியாவில் கார் மாடல்களின் விலை அதிகரிக்க இருப்பதாக ஏற்கனவே மாருதி சுசுகி, ஹூன்டாய், ரெனால்ட், டாடா, பி.எம்.டபுள்யூ. உள்ளிட்ட நிறுவனங்களும் அறிவித்துள்ளன. 

    அடுத்த மாதத்தில் கார் மாடல்களின் விலை அதிகரிக்க இருப்பதாக பல்வேறு நிறுவனங்கள் அறிவித்து இருந்தாலும், தற்சமயம் சில நிறுவனங்கள் தங்களது கார்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவற்றை வழங்குகின்றன. 

    அந்த வரிசையில் நிசான் இந்தியா நிறுவனமும் தனது மைக்ரா ஆக்டிவ் மற்றும் டெரானோ மாடல்களுக்கு அதிகபட்ச சலுகைகளை வழங்குகிறது.
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் குர்கா எக்ஸ்ட்ரீம் மாடலை புதிய என்ஜினுடன் அறிமுகம் செய்தது. #ForceMotors #GurkhaXtreme



    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் குர்கா எக்ஸ்ட்ரீம் மாடலை அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரூ.12.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய 140 பி.ஹெச்.பி. பவர் கொண்ட என்ஜினுடன் குர்கா எக்ஸ்ட்ரீம் அறிமுகமாகி இருக்கிறது.

    இந்திய ஆஃப்-ரோடிங் பிரிவில் ஃபோர்ஸ் குர்கா பிரபல மாடலாக விளங்கி வருகிறது. குர்கா எக்ஸ்ப்ளோரர் மாடலுடன் ஒப்பிடும் போது புதிய எக்ஸ்ட்ரீம் மாடலின் வெளிப்புறம் அதிகளவு மாற்றம் செய்யப்படவில்லை. பெட்டக வடிவமைப்பு, ஒற்றை ஸ்லேட் கிரில், ஸ்கிட் பிளேட் கொண்ட முன்பக்க பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    புதிய மாடலின் சிக்னல் இன்டிகேட்டர்கள் காரின் முன்பக்க ஃபென்டர்களின் மேல்புறம் பொருத்தப்பட்டுள்ளது. காரின் மிகப்பெரும் மாற்றாக புதுவித அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் மாடலில் 2.2 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர், 321 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.



    இந்த என்ஜின் மெர்சிடிஸ் பென்ஸ் OM611 என்ஜினை தழுவி உருவாகி இருக்கிறது. இதே யூனிட் ஃபோர்ஸ் ஒன் எஸ்.யு.வி. மாடலில் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் 4-வீல் டிரைவ் ஆப்ஷனுடன் கிடைக்கிறது.

    இதன் சஸ்பென்ஷனும் மேம்படுத்தப்பட்டு குர்கா எக்ஸ்ட்ரீம் முன்பக்கம் மல்டி-லின்க் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் காரின் இருபுறங்களிலும் ஆண்டி-ரோல் பார்களை பெற்றிருக்கிறது. உள்புறத்திலும் சில மாற்றங்களை ஃபோர்ஸ் எக்ஸ்ட்ரீம் பெற்றுள்ளது.

    அந்த வகையில் உள்புறம் புதிய சென்டர் கன்சோல், புதிய ஷிஃப்ட் லீவர்கள் வழங்கப்பட்டுள் நிலையில் இதன் கேபினில் சில அப்டேட்கள் செய்யப்படும் என தெரிகிறது. இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், குர்கா எக்ஸ்ட்ரீம் சிலருக்கு மட்டும் காண்பிக்கப்படுகிறது. #ForceMotors #GurkhaXtreme
    நிசான் நிறுவனம் கிக்ஸ் எஸ்.யு.வி. காரின் முன்பதிவு விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. #NissanKicks



    நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவுகள் இந்தியாவில் டிசம்பர் 14ம் தேதி துவங்குகிறது. முன்னதாக இந்தியாவுக்கு என நிசான் கிக்ஸ் புது வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் காரின் நீளம் 89 எம்.எம். அளவு இருக்கிறது.

    நிசான் டெரானோ, ரெனால்ட் டஸ்டர் மற்றும் கேப்டுர் போன்ற மாடல்களில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை நிசான் கிக்ஸ் கொண்டுள்ளது. உள்புறம் கேப்டுர் மாடலில் உள்ள அம்சங்கள் பெரும்பான்மையாக வழங்கப்பட்டுள்ளது.

    ஐந்து பேர் அமரக்கூடிய எஸ்.யு.வி. மாடலில் அரவுன்ட் வியூ மானிட்டர் என அழைக்கப்படும் 360-டிகிரி கேமரா அருகில் உள்ள அசையும் பொருட்களை கண்டறியும் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்திற்கென காரை சுற்றி மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அம்சம் நிசான் கிக்ஸ் சர்வதேச மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.



    பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களுடன் நிசான் கிக்ஸ் கிடைக்கிறது. இதன் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுல் அல்லது CVT கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இந்தியாவில் புதிய நிசான் கிக்ஸ் கார் ஹூன்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 உள்ளிட்ட மாடல்களுககு போட்டியாக அமையும். புதிய நிசான் கிஸ்ஸ் இந்திய விலை ஜனவரி 2019 வாக்கில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மராசோ எம்.பி.வி. காரின் சர்வதேச பாதுகாப்பு சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. #Mahindra #Marazzo4safety



    மஹிந்திரா மராசோ பாதுகாப்பு சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. சர்வதேச சந்தையில் வெளியாகும் புது கார்களில் நடத்தப்படும் பாதுகாப்பு சோதனையான NCAP முடிவுகள் மஹிந்திரா மராசோ காருக்கு வெளியாகியுள்ளது. பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்ட மஹிந்திரா மராசோ அதிக பாதுகாப்பு வசதி கொண்ட கார்களில் நான்கு புள்ளிகளை பெற்று இருக்கிறது.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார் சர்வதேச பாதுகாப்பு சோதனையில் நான்கு புள்ளிகள் பெற்று இருப்பது இதுவே முதல் முறை ஆகும். மஹிந்திரா மராசோ கார் வயதானோர் பயணிக்க 17 புள்ளிகளுக்கு 12.85 புள்ளிகளை பெற்றுள்ளது. எனினும் குழந்தைகள் பயணிக்க 49 புள்ளிகளுக்கு 22.22 புள்ளிகளை மராசோ பெற்றுள்ளது. 



    அந்த வகையில் குழந்தைகள் பயணிக்க மராசோ இரண்டு நட்சத்திர புள்ளிகளை பெற்றுள்ளது. நவம்பர் 16, 2018 காலத்தில் தயாரிக்கப்பட்ட அனைத்து மஹிந்திரா மராசோ கார்களுக்கும் இந்த சோதனை முடிவுகள் பொருந்தும். மராசோ கார் பெற்று இருக்கும் பாதுகாப்பு புள்ளிகளை இதுவரை வெளியான எந்த மஹிந்திரா வாகனமும் பெற்றதில்லை.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரெனால்ட் லாட்ஜி, செவர்லே என்ஜாய் மற்றும் மாருதி சுசுகி இகோ உள்ளிட்ட மாடல்கள் சர்வதேச பாதுகாப்பு சோதனையில் வெற்றி பெற்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் புதிய மராசோ மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கி, டாப்-என்ட் மாடலின் விலை ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொன் பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. #Mahindra #Marazzo4safety
    ஃபோர்டு இந்தியா தனது நள்ளிரவு சிறப்பு விற்பனை தேதிகளை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் அந்நிறுவன வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. #Ford



    ஃபோர்டு இந்தியா தனது நள்ளிரவு சிறப்பு விற்பனையை நடத்துகிறது. இந்த சிறப்பு விற்பனையின் போது ஃபோர்டு விற்பனை மையங்கள் நள்ளிரவு வரை திறக்கப்பட்டு இருக்கும். இதில் கலந்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சய பரிசுகளாக- தங்க நாணயங்கள், ஐபோன் X மற்றும் பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

    புதிய வாகனம் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நள்ளிரவு சிறப்பு விற்பனையில் நிச்சய பரிசு வழங்கப்படும். அந்த வகையில் ஃபோர்டு நள்ளிரவு சிறப்பு விற்பனை இன்று (டிசம்பர் 7) துவங்கி, டிசம்பர் 9ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 



    ஃபோர்டு இந்தியா நள்ளிரவு சிறப்பு விற்பனையில் கலந்து கொண்டு புது வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் ரூ.11 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    ஃபோர்டு நள்ளிரவு சிறப்பு விற்பனை சலுகைகள் ஃபோர்டு ஃபிகோ, புதிய ஃபோர்டு ஆஸ்பையர், ஃபோர்டு ஃப்ரீஸ்டைல், ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் ஃபோர்டு என்டேவர் என அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும். 

    மேலும் புது ஃபோர்டு வாகனங்களை டிசம்பர் மாதத்தில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு குலுக்கல் நடத்தப்படுகிறது. குலுக்கலில் வெற்றி பெறும் வாடிக்கையாளருக்கு ஃபோர்டு ஃபிகோ பரிசாக வழங்கப்படுகிறது. #Ford
    ஆண்டு இறுதியை முன்னிட்டு டொயோட்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது. #Toyota



    டொயோட்டா நிறுவன கார் மாடல்களுக்கு ஆண்டு இறுதியை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுக்க இயங்கி வரும் ஜப்பான் நிறுவனத்தின் விற்பனை மையங்களில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 

    பழைய மாடல்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் புது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2019 முதல் டொயோட்டா கார் மாடல்களின் விலை 4 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கும் நிலையில், புது சலுகைகள் புதிய கார் வாங்குவோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிகிறது.



    டொயோட்டா ஃபார்ச்சூனர்

    ஃபார்ச்சூனர் எஸ்.யு.வி. கார் வாங்குவோருக்கு ரூ.1.25 லட்சம் மதிப்பிலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலில் 2.8-லிட்டர் டீசல் மோட்டார் கொண்ட மாடலுக்கு அதிகபட்ச தள்ளுபடி வழங்கப்படுகிறது, இதே போன்று 166 பி.ஹெச்.பி. பவர் கொண்ட 2.7-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடலுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

    டொயோட்டா யாரிஸ்

    இந்தியாவில் மாருதி சுசுகி சியாஸ், ஹோன்டா சிட்டி மற்றும் ஹூன்டாய் வெர்னா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா யாரிஸ் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்டெப் சி.வி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. புது யாரிஸ் மாடலுக்கு அதிகபட்சம் ரூ.1.1 லட்சம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகிறது.



    டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இன்னோவா மாடலுக்கு நேரடி போட்டியாக எந்த மாடலும் இல்லை என்றாலும், இரண்டாம் தலைமுறை மாருதி சுசுகி எர்டிகா மற்றும் மஹிந்திரா மராசோ உள்ளிட்டவை விற்பனையில் போட்டி போடுகின்றன. டொயோட்டா எம்.பி.வி. மாடலில் 150 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.4 லிட்டர் டீசல், 174 பி.ஹெச்.பி. வழங்கும் 2.8 லிட்டர் டீசல், 168 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. 

    வாடிக்கையாளர்கள் டீசல் என்ஜின் கொண்ட மாடல்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலான சலுகைகளுடன், எக்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. பெட்ரோல் மாடல்களுக்கு அறிவிக்கப்படாத மறைமுக சலுகை வழங்கப்படுகிறது என்றாலும், இந்த கார் பெற இரண்டு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

    டொயோட்டா எடியோஸ்

    டொயோட்டா எடியோஸ் செடான், ஹேட்ச்பேக் (எடியோஸ் லிவா) மற்றும் கிராஸ்-ஹேட்ச் (எடியோஸ் கிராஸ்) என மூன்று வித வேரியன்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியன்ட்களும் பெட்ரோல் மற்றும் டீசன் என்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. அவ்வாறு 68 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.4-லிட்டர் டீசல் என்ஜின், செடான் மற்றும் கிராஸ் ஹேட்ச் மாடலில் 90 பி.ஹெச்.பி., 1.5 லிட்டர் பெட்ரோல், ஹேட்ச்பேக் மாடலில் 80 பி.ஹெச்.பி., 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதி வரை டொயோட்டா எடியோஸ் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தள்ளுபடி மற்ரும் சலுகைகள் வழங்கப்படுகிறது.



    டொயோட்டா கொரோலா ஆல்டிஸ்

    ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் ஹூன்டாய் எலான்ட்ரா மாடல்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட கொரோலா ஆல்டிஸ் 140 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.8-லிட்டர் பெட்ரோல் என்ஜின், 88 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் வேரியன்ட்களில் கிடைக்கிறது. கொரோலா ஆல்டிஸ் வாங்கும் வாடிக்கையாளர்கள் கார் விலையில் இருந்து அதிகபட்சம் ரூ.75,000 வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை பெற முடியும்.
    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. பெயர் அறிமுக தேதி மாற்றப்பட்டுள்ளது. புதிய தேதி குறித்த விவரங்களை பார்ப்போம். #mahindra



    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. மாடலின் பெயர் நேற்று (டிசம்பர் 1) அறிமுகம் செய்யப்பட இருந்த நிலையில், புதிய காரின் பெயரை பின்னர் அறிவிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

    “தவிர்க்க முடியாத காரணங்களால் நேற்று நடைபெற இருந்த பெயர் அறிமுக விழா தள்ளிவைக்கப்படுகிறது. பெயர் அறிமுக விழாவிற்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேதி தள்ளிவைக்கப்பட்டதால் ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்,” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. எஸ்201 என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடல் சங் யோங் டிவோலி காம்பாக்ட் எஸ்.யு.வி. மாடலை தழுவி உருவாகியிருக்கிறது. மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. கார் இந்தியாவில் மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்சான் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

    மஹிந்திரா எஸ்201 மேட்டுப்பாளையம், உதகமண்டலம் போன்ற பகுதிகளில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இதேபோன்று லெ, லடாக் போன்ற பகுதிகளில் உள்ள சாலைகளிலும் இந்த கார் சோதனை செய்யப்பட்டது. எஸ்201 கார் எக்ஸ்.யு.வி.300 என அழைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


    புகைப்படம் நன்றி: Motorbeam

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 சன்ரூஃப், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் டேடைம் ரன்னிங் லேம்ப்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ரேக் வின்ட்ஷீல்டு, எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், ஸ்டாப் லேம்ப், பம்ப்பரின் இருமுனைகளிலும் ரிஃப்லெக்டர்கள் வழங்கப்படுகிறது.

    புதிய எக்ஸ்.யு.வி.300 மாடலின் உள்புறம் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகாத நிலையில், இந்த அம்சங்கள் பெரும்பாலும் சங் யோங் டிவோலி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். அந்த வகையில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், பிரீமியம் இருக்கைகள் வழங்கப்படலாம்.

    புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 123 பி.எஸ். பவர் @3500 ஆர்.பி.எம். 300 என்.எம். டார்கியூ @1,750-2500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் (AMT) டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.

    இதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் புதிய எஸ்.யு.வி. மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. விலை ரூ.7.00 முதல் ரூ.10.00 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். #mahindra
    மாருதி சுசுகி நிறுவனத்தின் 2018 எர்டிகா கார் புதுவித என்ஜின் ஆப்ஷனுடன் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. #MarutiSuzuki #Ertiga
    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எர்டிகா கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ.7.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாருதி எர்டிகா காருக்கான முன்பதிவு கடந்த வாரம் துவங்கியது. பத்து வேரியன்ட்களில் கிடைக்கும் புதிய எர்டிகா டாப் என்ட் வேரியன்ட் விலை ரூ.10.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து மாருதி சுசுகி புதிய எர்டிகா மாடலின் சி.என்.ஜி. வேரியன்ட்டை ஆறு மாதங்களுக்குள் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மாருதி எர்டிகா வெற்ற பெற்ற பிராண்டு ஆகியிருக்கும் நிலையில், மேம்படுத்தப்பட்ட புதிய எர்டிகா முன்பதிவு துவங்கிய ஒரே வாரத்தில் சுமார் 10,000-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

    முந்தைய எர்டிகா மாடலும் சி.என்.ஜி. வேரியன்ட் கொண்டிருந்தது. இந்த மாடலில் வழங்கப்பட்ட ஐ-ஜி.பி.ஐ. (இன்டெலிஜென்ட் கேஸ் போர்ட் இன்ஜெக்‌ஷன்) டூயல் என்ஜின் கன்ட்ரோல் யூனிட் காரின் செயல்திறனை பாதிக்காமல், அதிக மைலேஜ் வழங்க உதவியது. முந்தைய எர்டிகா சி.என்.ஜி. வேரியன்ட் லிட்டருக்கு அதிகபட்சம் 23 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.



    புதிய சி.என்.ஜி. வேரியன்ட் மூலம் மாருதி எர்டிகா விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018 மாருதி எர்டிகா சி.என்.ஜி. அந்நிறுவனத்தின் SHVS மைல்டு-ஹைப்ரிட் 1.5-லிட்டர் K15 பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும்.

    புதிய எர்டிகாவின் சி.என்.ஜி. வேரியன்ட் குறைந்த செயல்திறன் வழங்கினாலும், அதிக மைலேஜ் வழங்கும். அதேபோன்று இதன் விலையும் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பொதுவாக சி.என்.ஜி. ஆப்ஷன் LXi மற்றும் VXi வேரியன்ட்களில் மட்டுமே வழங்கப்படும்.

    புதிய 2018 எர்டிகா பெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) வேரியன்ட் லிட்டருக்கு 19.34 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அறிமுகமாக இருக்கும் சி.என்.ஜி. வேரியன்ட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்காது என கூறப்படுகிறது. #MarutiSuzuki #Ertiga
    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபிளாக்ஷிப் மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலான அல்டுராஸ் ஜி4 இந்தியாவில் வெளியிடப்பட்டது. #AlturasG4



    இந்தியாவில் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 வெளியிடப்பட்டது. புதிய அல்டுராஸ் ஜி4 மஹிந்திரா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலாக அமைந்திருக்கிறது. புதிய எஸ்.யு.வி. 2WD AT மற்றும் 4WD AT என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது. அல்டுராஸ் ஜி4 டாப்-என்ட் வேரியன்ட் விலை ரூ.29.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 சங்யோங் ரெக்ஸ்டான் நான்காம் தலைமுறை மாடல் ஆகும். காரின் வெளிப்புறம் ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், 18-இன்ச் 5-ஸ்போக் அலாய் வீல்கள், மஹிந்திரா லோகோ கொண்ட கிரில் கொண்டிருக்கிறது. 

    மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உயர் ரக 4WD மாடலில் டூயல் சோன் கிளைமேட் கன்ட்ரோல் வசதி, டூயல் டோன் இன்டீரியர், குவில்டெட் நேப்பா லெதர், பவர் டிரைவர்சீட், மெமரி அம்சம், 7-இன்ச் TFT டிஸ்ப்ளே, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காரினுள் 8-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருக்கிறது. 



    இத்துடன் ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதி, 360 டிகிரி கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. இந்த எஸ்.யு.வி. இரண்டு வேரியன்ட்களில், ஐந்து வித நிறங்களில் வெளியிடப்படுகிறது.

    புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 178 பி.ஹெச்.பி. / 420 என்.எம். டார்கியூ செயல்தின் மற்றும் 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய எஸ்.யு.வி. 2WD மற்றும் 4WD என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    புதிய அல்டுராஸ் ஜி4 ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலை ரூ.50,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள முடியும். புதிய அல்டுராஸ் ஜி4 புதிய பியல் வைட், நபோளி பிளாக், லேக்சைடு பிரவுன், டிசட் சில்வர் மற்றும் ரீகல் புளு என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்.யு.வி. மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு என்டேவர் மற்றும் ஹோன்டா சி.ஆர்.-வி. உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய அல்டுராஸ் ஜி4 கார் இந்தியாவின் சக்கன் தயாரிப்பு ஆலையில் அசம்பிள் செய்யப்படுகிறது. #AlturasG4 #Mahindra
    ×