search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு சோதனையில் அசத்திய மஹிந்திரா மராசோ
    X

    பாதுகாப்பு சோதனையில் அசத்திய மஹிந்திரா மராசோ

    மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மராசோ எம்.பி.வி. காரின் சர்வதேச பாதுகாப்பு சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. #Mahindra #Marazzo4safety



    மஹிந்திரா மராசோ பாதுகாப்பு சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. சர்வதேச சந்தையில் வெளியாகும் புது கார்களில் நடத்தப்படும் பாதுகாப்பு சோதனையான NCAP முடிவுகள் மஹிந்திரா மராசோ காருக்கு வெளியாகியுள்ளது. பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்ட மஹிந்திரா மராசோ அதிக பாதுகாப்பு வசதி கொண்ட கார்களில் நான்கு புள்ளிகளை பெற்று இருக்கிறது.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார் சர்வதேச பாதுகாப்பு சோதனையில் நான்கு புள்ளிகள் பெற்று இருப்பது இதுவே முதல் முறை ஆகும். மஹிந்திரா மராசோ கார் வயதானோர் பயணிக்க 17 புள்ளிகளுக்கு 12.85 புள்ளிகளை பெற்றுள்ளது. எனினும் குழந்தைகள் பயணிக்க 49 புள்ளிகளுக்கு 22.22 புள்ளிகளை மராசோ பெற்றுள்ளது. 



    அந்த வகையில் குழந்தைகள் பயணிக்க மராசோ இரண்டு நட்சத்திர புள்ளிகளை பெற்றுள்ளது. நவம்பர் 16, 2018 காலத்தில் தயாரிக்கப்பட்ட அனைத்து மஹிந்திரா மராசோ கார்களுக்கும் இந்த சோதனை முடிவுகள் பொருந்தும். மராசோ கார் பெற்று இருக்கும் பாதுகாப்பு புள்ளிகளை இதுவரை வெளியான எந்த மஹிந்திரா வாகனமும் பெற்றதில்லை.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரெனால்ட் லாட்ஜி, செவர்லே என்ஜாய் மற்றும் மாருதி சுசுகி இகோ உள்ளிட்ட மாடல்கள் சர்வதேச பாதுகாப்பு சோதனையில் வெற்றி பெற்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் புதிய மராசோ மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கி, டாப்-என்ட் மாடலின் விலை ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொன் பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. #Mahindra #Marazzo4safety
    Next Story
    ×