என் மலர்

  நீங்கள் தேடியது "Scorpio S9"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஸ்கார்பியோ எஸ்9 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்ப்போம். #Mahindra #Scorpio  மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ எஸ்9 வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கார்பியோ வேரியன்ட் இந்தியாவில் டாப் என்ட் வேரின்ட்டான எஸ்11 மாடலுக்கு கீழ் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் புதிய காரில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

  புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்9 வேரியன்ட் விலை ரூ.13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கார்பியோ இந்தியா முழுக்க அனைத்து மஹிந்திரா விற்பனை மையங்களிலும் துவங்கியது.

  புதிய ஸ்கார்பியோ எஸ்9 மாடலில் ஸ்டாடிக் பென்டிங் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், முன்பக்கம் ஃபாக் லேம்ப்கள், எல்.இ.டி. கைடு லைட்கள், ஹைட்ராலிக் அசிஸ்ட் செய்யப்பட்ட பொனெட், இன்டெலிபார்க் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட டர்ன் இன்டிகேட்டர்களுடன் ORVMகள் வழங்கப்பட்டுள்ளது.   ஸ்கார்பியோ எஸ்9 மாடலின் உள்புறம் 5.9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபடெயின்மென்ட் சிஸ்டம், 10 மொழிகளில் ஜி.பி.எஸ். நேவிகேஷன், வாய்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் டெம்ப்பரேச்சர் கன்ட்ரோல், ஸ்டீரிங் வீலில் ஆடியோ மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளது.

  மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்9 வேரியன்ட்டில் 2.2 லிட்டர் டர்போ டீசல் எம்ஹாக் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர், 320 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. 

  பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ்., ஆன்டி-தெஃப்ட் வார்னிங், பேனிக்-பிரேக் இன்டிகேஷன் மற்றும் என்ஜின் இம்மொபைலைசர் வழங்கப்படுகிறது.
  ×